Wednesday, April 1, 2020

கார்ட்டர் - கியூபா - கொரோனா

தோழர் யமுனா ராஜேந்திரன் அவர்களின் முக நூல் பதிவு. இன்று அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியும் கூட . . .


ஜிம்மி கார்ட்டர் பற்றி இடதுசாரிகளிடம் எப்போதுமே நல்ல அபிப்ராயம் உண்டு. ஜிம்மி கார்ட்டர் காலத்தில் பயோ டெக்னாலஜி ஆய்வில் ஈடுபட்ட ஒரு அமெரிக்க ஆய்வாளர் கியூபா வருகிறார். கியூப பயோ டெக்னாலஜி ஆய்வகத்துக்குப் போய்விட்டு அவர் பிடலைச் சந்திக்கிறார். அமெரிக்க ஆய்வாளர் கியூப ஆய்வகத்திலிருந்து ஒரு ஆய்வாளரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல விருப்பம் தெரிவிக்கிறார். 

பிடல் இருவருக்காக கோரிக்கை வைக்கிறார். இருவர் அமெரிக்கா போகிறார்கள். அமெரிக்க ஆய்வாளர் இவர்களை ஒரு பின்லாந்து நாட்டு பயோ டெக்னாலஜி ஆய்வாளரிடம் அறிமுகப்படுத்துகிறார். கியூப ஆய்வாளர்கள் பின்லாந்து செல்கிறார்கள். அந்த பின்லாந்து ஆய்வாளர் கியூபா வருகிறார். இன்று கொரானோக்கு மருந்தாகப் பாவிக்கும் கியூபத் தயாரிப்பான ‘இன்ட்டர் பரான் ஆல்பா-2பி’ (Interferon Alfa-2B) இப்படித்தான் உருவானது. சே, பிடல், அமெரிக்க, பின்லாந்து, கியூப ஆய்வாளர்கள் தமது கூட்டுச் சிந்தையில் மருத்துவ உலகுக்கு வழங்கிய கொடை இது.

நூலை வாசிக்கிறபோது இந்தச் செய்தியைப் படித்து உடைந்து போனேன் : கம்யூனிஸ்ட் கலைஞர்களை வேட்டையாடிய கொடுங்கோலன் நிக்சன் காலத்தில், அமெரிக்க விஞ்ஞான சஞ்சிகைகளுக்கு கியூபர்கள் சந்தா செலுத்தினால் அதனை ஏற்கக் கூடாது என்று அறிவித்தாராம் அந்த ஜென்டில்மேன்..

No comments:

Post a Comment