Showing posts with label சுய விளம்பர மோகம். Show all posts
Showing posts with label சுய விளம்பர மோகம். Show all posts

Wednesday, August 14, 2024

உன் மூஞ்சிக்கும் வெறியேற்றவும் நாங்களா மோடி?

 


இன்று காலை அலுவலகத்திற்குள் நுழையும் போதே கோபம் தலைக்கேறியது.

 “PARTITION HORRORS REMEMBERENCE DAY” என்ற எழவு பெயரில் சில பேனர்களை கண்காட்சியாக அமைத்துக் கொண்டிருந்தார்கள்.

 தெய்வக்குழந்தை உத்தரவின் பெயரில் கலாச்சார (????) அமைச்சகம், மற்ற எல்லா அமைச்சகங்களுக்கும் சொல்ல, அவை பொதுத்துறை நிறுவனங்களுக்கு உத்தரவிட மேலிடத்து உத்தரவு அமலாகிக் கொண்டிருந்தது. சங்கமாக எங்கள் அதிருப்தியை நிர்வாகத்திடம் பதிவு செய்தோம் என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.

 இந்த எழவு தினம் இரண்டு வருடங்களாகவே அமலாகிக் கொண்டிருக்கிறது. பிரிவினையின் கொடூரங்களை இந்துக்கள், முஸ்லீம்கள் என இருவருமே அனுபவித்தார்கள். இரு பக்கங்களிலும் இருந்த கொடியவர்கள், வெறியர்களின் தாக்குதல்களுக்கு இரு தரப்பிலும் சேதம் இருந்தது.

 அதிலே இந்துக்கள் பட்ட துயரங்களை மட்டும் செலக்டிவாக காட்சிப்படுத்துவது அயோக்கியத்தனமான மத வெறி அரசியல். அதிலும் முதல் பேனரில் மோடியின் மூஞ்சிதான் இருக்கிறது.

 “இறப்பதற்காக பிறந்தவை” என்று முதலாளிகள் கூட்டத்தில் பேசிய முரடன் மோடியே, உன் மூஞ்சியை காண்பிக்கவும், உன் மத வெறி அரசியலை முன்னெடுக்கவும் மட்டும் நாங்கள் வேண்டுமா?

 எதிர்க்கட்சிகள் நாளை ஆட்சிக்கு வந்ததும் நினைத்து பார்க்க ஏராளமான தினங்கள் இருக்கின்றன. அந்த தருணம் வந்தால்தான் இந்த அற்ப ஜந்துவிற்கும் அதை ஆதரிக்கும் அரைவேக்காடுகளுக்கும் புத்தி வரும்.

 பிகு: நான் வேறு அந்த மூஞ்சியை காண்பிக்க வேண்டுமா என்ன? அதனால்தான் கருப்பு மை பூசி விட்டேன்.

 

Tuesday, January 3, 2023

எல்லாம் ஒரு விளம்பரம்தான் . . .

 


கீழேயுள்ள பதிவை படிக்கையில் மேலே உள்ள காட்சிதான் நினைவுக்கு வந்தது.



அந்த இல்லத்தரசியின் குடும்பத்திற்குள் குழப்பம் வராமல் இருந்தால் சரி. 

Friday, September 24, 2021

அவங்களுக்கு மோடி அவ்ளோ வொர்த்தில்லையோ?

 


கரடியே  . . . . .... . . . . . . . . .. கதையாக



"அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸை சந்தித்ததாக மோடிதான் ட்வீட்டிட்டு பெருமை பேசுகிறாரே தவிர அவர்கள் மோடியுடனான சந்திப்பு குறித்து எதுவும் ட்வீட்டவில்லை. மாறாக மோடிக்குப் பிறகு சந்தித்த ஆப்பிரிக்க தலைவர் பற்றி ட்வீட்டியுள்ளார்"

என்று சுனா.சாமி

கூறியுள்ளார்.

அவர் சொன்னது சரிதானா என்று பார்க்க

திருமதி கமலா ஹாரீஸின் ட்விட்டர் பக்கம் சென்றேன்.

சுனா.சாமி சொன்னது

சரிதான்.



ஜாம்பியா நாட்டு ஜனாதிபதி ஹிசீலிமா வை சந்தித்தது, தேர்தலில் அவர் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்தியது, பெருந்தொற்று சூழலில் இரு நாடுகளும் சுகாதாரப் பாதுகாப்பு குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி பேசியது 

என்று ஒற்றை ட்வீட்டில் அனைத்தையும் எழுதியுள்ளார்.

ஆனால் மோடியுடனான சந்திப்பு பற்றி எதுவுமே இல்லை.

ஒரு ட்வீட் அளவிற்குக் கூட மோடி வொர்த் இல்லை என்று அவர்கள் நினைத்திருப்பார்களோ!

ட்ரம்பிற்கு தேர்தல் பிரச்சாரம் செய்த ஆசாமி என்பதை மறந்திருப்பார்களா என்ன!

Wednesday, April 28, 2021

பொதுத்துறை பணமே! மோடியின் முகமே!

 



அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் கொரோனா விழிப்புணர்வு பேனர்களை வைக்க வேண்டும் என்று மத்தியரசு அறிவுறுத்தி உள்ளது. அதற்கான மாதிரி பேனர்களையும் அவர்களே வடிவமைத்து அனுப்பி உள்ளனர்.

 அனைத்திலும் முகமுடி அணிந்த மோடியின் புகைப்படம் இருக்கிறது.

 “பொதுத்துறை நிறுவனங்கள் இறப்பதற்காகவே உருவானது, யாருக்கோ செல்லப்பிள்ளை என்பதால் நாங்கள் வளர்க்க முடியுமா” என்று சொன்னவர் மோடி.

 பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு சுமை என்று சொன்னவர் நிர்மலா அம்மையார்.

 தடுப்பூசி தயாரிப்புக்கு பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்த வேண்டும் என்ற குரலை உதாசீனம் செய்பவர்கள் இவர்கள்.

 ஆனால் இவர்களுக்கு ஓசி விளம்பரம் செய்ய மட்டும் பொதுத்துறை நிறுவனங்கள் வேண்டுமா?

 அம்பானி, அதானியிடம் போய் சொல்லுங்களேன். உதை விழும். அவர்களுக்கு தேவை என்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்வார்களே தவிர உங்களின் தேவைக்கு அவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.

 பிகு: இந்த பேனர்கள் குறித்து நாங்கள் பேசுகையில் எங்கள் பொதுச்செயலாளர் தோழர் குணாளன் ஒரு கேள்வி எழுப்பினார். தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கான சான்றிதழ்களில் மோடியின் புகைப்படம் அச்சடித்துத் தருகிறார்கள். கொரோனா காரணமாக இறந்து போகின்றவர்களுக்கு தரும் இறப்புச் சான்றிதழிலும் மோடியின் புகைப்படம் போட்டு அச்சடித்து தருவார்களா?

 மிகச் சரியான கேள்வி இது. மோடி வகையறாக்கள் ஆவன செய்வார்களா?

 பிகு 2 : பேனரில் இருந்த மோடி புகைப்படத்தை, நாமும் எதற்கு ஓசி விளம்பரம் தர வேண்டும் என்பதால் மறைத்து விட்டேன்.

Thursday, February 25, 2021

மோடி ஸ்டேடியம் – விடாது கருப்பு

 

மூன்று பதிவுகளுக்கான கண்டெண்ட்டாக இருந்தாலும் ஒரே பதிவாக மாற்றிவிட்டேன்.

 

அதானி, அம்பானி  என்ன நினைப்பார்கள்?

 ஒரு சின்ன கற்பனை

 


மோடி தன் பெயரை வைத்துக் கொண்டது கூட ஹிட்லரிடமிருந்து காப்பி அடித்ததுதானாம். 



சுய புத்தியே கிடையாது.

 

ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரனின் பக்கத்தில் நேரு பெயரில் இல்லையா? இந்திரா பெயரில் இல்லையா? ராஜீவ் பெயரில் இல்லையா என்றெல்லாம் ஒரு சங்கி ஒரு பட்டியல் கொடுத்திருந்தார்.

 அவரும் பொறுமையாக

 “இந்த பெயர்களை அவர்களே சூட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் இறந்ததும் அவர்களுக்கு பின் வந்தவர்கள்தான் சூட்டினார்கள். அதிலும் கூட இப்படி வெட்கமில்லாமல் ஒரு தலைவர் பெயரை அகற்றி மாற்றப்படவில்லை”

என விளக்கம் கொடுத்தார்.

 “அப்படியென்றால் சங்கிகள் தங்கள் தலைவர்கள் பெயரை எதற்காவது சூட்ட  வேண்டுமென்றால் அவர்கள் இறந்து போகும் வரை காத்திருக்க வேண்டுமா என்று ஒருவர் கேட்டார்.

அவருக்கு நான் அளித்த பதில்

"அதிகாரம் இல்லையென்றால் தன்னை யாரும் சீண்ட மாட்டார்கள் என்று அத்வானியை ஓரம் கட்டிய மோடிக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் பதவியில் இருக்கும்போதே தன் பெயரை சூட்டி விட்டார். இது தொடக்கமே. இன்னும் வரும்"