Showing posts with label மத வெறி. Show all posts
Showing posts with label மத வெறி. Show all posts

Thursday, April 9, 2026

திருப்பரங்குன்றம் - தீர்ப்புகள் திசை மாறுது

 


திருப்பரங்குன்றத்தை முன்வைத்து தமிழ்நாட்டை கலவர பூமியாக்க சங்கிகள் எடுத்த முயற்சிகள் மதுரை மக்கள் மத்தியில் எடுபடவில்லை. மோடி திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நடத்திய போட்டோ ஷூட் கூட வழக்கம் போல காமெடி ஷோ வாகத்தான் முடிந்து போயிருந்தது.

ஆனாலும் தன் முயற்சியில் சற்றும் தளராத தீர்ப்பாளர் மட்டும் அவ்வப்போது மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

நேற்றும் இன்றும் அதே உயர் நீதி மன்றத்தில் வந்த தீர்ப்புகள், அந்த மிரட்டலுக்கும் இனி அவசியம் இருக்காது என்பதை உணர்த்தியுள்ளது.

நேற்று வந்த தீர்ப்பு, தீர்ப்பாளர்  இனிமே வழக்கை விசாரிக்க தடை போட்டு விட்டது, அவர் கொடுத்த தீர்ப்புக்களுக்கும் கூட. . .


தீபத்தூணில் விளக்கேற்ற வேண்டும் என்று தொடுக்கப்பட்ட புது வழக்கை "வேற பிழைப்பே உங்களுக்கு இல்லையாடா" என்ற ரேஞ்சில் திட்டி ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்து துரத்தி விட்டு விட்டார்கள். இது நடந்தது இன்று.


திருப்பரங்குன்றத்தை இன்னொரு அயோத்தி ஆக்கும் முயற்சியை இனியாவது சங்கிகள் கை விடுவார்கள். உடனடி வாய்ப்பு இல்லை என்று தெரிந்ததால்தான் திருப்பரங்குன்றம் தொகுதியில் பாஜக போட்டியிடவில்லை. எப்போதும் போல தோற்கப் போகும் போலிப் பேராசிரியன் காம.சீனிவாசனுக்குக் கூட திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் தைரியம் இல்லை.

ஆனாலும் சங்கிகள் மீண்டும் முயற்சிப்பார்கள்.

மீண்டும் தோற்றுப் போவார்கள்.

Wednesday, April 1, 2026

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்யுங்கள்

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவை தடை செய்வது தமிழ்நாட்டிற்கு நல்லது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதற்கும் நல்லது.

அந்த குழுவின் சிகண்டி பதிவர் (பெண் பெயரில் செயல்படும் போலிப் பதிவர்) திங்களன்று போட்ட ஒரு பதிவையும் அதற்கு முட்டு கொடுக்கும் மாடரேட்டரின் பதிலையும் பாருங்கள்.




ஒரு வழியாக அந்த பதிவு நீக்கப்பட்டது. ஆனால் செவ்வாய்க் கிழமை அன்று அதே பதிவை வேறு ஒருவர் பதிவு செய்கிறார்.

என்னய்யா நியாயம் என்று கேட்டால் பதில் இல்லை.

தேர்தல் வரைக்கும் இந்த குழுவில் உள்ள சங்கி வெறியர்கள் என்னென்ன பொய்களை பரப்புவார்களோ! அந்த பொய்கள் தமிழ்நாட்டின் சமூக அமைதியை பாதிக்கும். சட்டம் ஒழுங்கை பாதிக்கும்.

அதனால் இந்த குழுவை தடை செய்வது நல்லது.

பிகு: இந்த குழுவை பற்றி இன்னும் ஒரு பதிவை மட்டும்தான் எழுத முடியும். ஏன்? அது நாளை . . .

Tuesday, March 31, 2026

மீண்டும் கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம்

 


பதினோரு வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவை முதலில் படியுங்கள்.


Tuesday, December 22, 2015

கீர்த்தி ஆஸாதின் அதிரடி ஆட்டம் - ஜெய்ட்லி அவுட்


கிரிக்கெட் வாழ்க்கையில் அவ்வளவாக பிரகாசிக்காதவர் கீர்த்தி ஆஸாத். அரசியலில் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் அவ்வளவு பிரபலமான அரசியல்வாதி என்றும் சொல்ல முடியாது.

கிரிக்கெட்டில் அவர் கையாண்ட அதிரடி பாணியை இப்போது அவர் தனது சொந்தக்கட்சி பிரபலம் மீதே கையாள எப்படி மீள்வது என்று தெரியாமல் பாஜக தடுமாறுகிறது.

அசிங்கப்படுத்த முயல்பவர்களே அசிங்கப் படுவார்கள்  என்று சில தினங்கள் முன்பு நான் எழுதிய பதிவு நிஜமாகிக் கொண்டிருக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக மோடி வகையறாக்கள் செய்த முயற்சி இப்போது அருண் ஜெய்ட்லிக்கு எதிராகவே திரும்பி விட்டது. 

டெல்லி கிரிக்கெட் அசோசியேஷனின் தலைவராக அருண் ஜெய்ட்லி இருந்த போது கோடிக்கணக்கில் ஊழல் நடந்துள்ளது என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் குற்றச்சாட்டிற்கு எதிராக அவதூறு வழக்கு போட்ட ஜெய்ட்லி அதே குற்றச்சாட்டுக்களை கீர்த்தி ஆஸாத் சொல்கிற போது வாய் திறக்க மறுக்கிறார்.

முடிந்தால் என் மீதும் வழக்கு தொடுங்கள் என்று கீர்த்தி ஆஸாத் சொல்லும் போது இந்தியாவின் மிகப் பெரிய சட்ட நிபுணர் அருண் ஜெய்ட்லி ஏன் பதில் பேசவில்லை?

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, அருண் ஷோரி போன்றவர்களை ஒதுக்கித் தள்ளிய அமித் ஷா, மோடி கும்பல் ஏன் இப்போது மௌனமாக உள்ளது?

மொத்தத்தில் கீர்த்தி ஆஸாத்தின் அதிரடி ஆட்டத்தில் அருண் ஜெய்ட்லி இப்போது தடுமாறிக் கொண்டிருக்கிறார்.

அடுத்த பந்தில் அவுட்டாகி பெவிலியனுக்கு திரும்பி விடுவார் போல!

**********************************************************************************************

இப்போது தற்போதைய பிரச்சினைக்கு வருவோம்.

பீகாடின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் பகவத் ஜா ஆசாதின் மகனும் மூன்று முறை பாஜக எம்.பி ஆக இருந்து பின் காங்கிரஸ் சென்று தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி யாக உள்ள கீர்த்தி ஆஸாத், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீதும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக அமித்ஷாவின் மகன் என்ற ஒரே தகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெய்ஷா மீதும் கடுமையான தாக்குதலை தொடுத்துள்ளார்.

இந்தியா டி-20 உலகக் கோப்பையை வென்றதும் ஜெய்ஷா, பயிற்சியாளர்  சங்கி கவுதம் கம்பீர் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவோடு அகமதாபாத்தில் உள்ள ஹனுமான் கோயிலுக்கு கோப்பையுடன் சென்று வழிபட்டுள்ளார்.

"இந்திய வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனால் அந்த கோப்பையுடன் சர்ச்சிற்கு செல்ல முடியுமா? முகமது சிராஜால் அந்த கோப்பையை ஒரு மசூதிக்கு எடுத்துச் செல்ல முடியுமா இல்லை அர்ஷ்தீப் சிங்கால் ஒரு குருத்வாராவுக்கு கோப்பையை கொண்டு போக முடியுமா? இந்த உலகக் கோப்பை என்பது பல்வேறு நம்பிக்கைகளை பின்பற்றும் நூற்றி நாற்பது கோடி இந்தியர்களுக்கும் சொந்தமானது. அதை ஒரு நம்பிக்கையை பின்பற்றுபவர்களோடு சுருக்குவது மோசமான செயல். விளையாட்டில் மதத்தை கொண்டு வராதீர்கள்."

கீர்த்தி ஆசாதின் கேள்வி மிகவும் சரியானது என்பதற்கு அக்கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் "யார் இந்த கீர்த்தி ஆசாத்" என்று கேட்டு கம்பீரும் வேறு சிலரும் திசை திருப்பியதே சான்று. 

பிகு: இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் மோடி என்பதை ஏன் யாருமே சொல்லவில்லை என்பது புதிராக உள்ளது. மோடி போட்டியை பார்க்க வந்திருந்தால் அதுவே இந்திய வீரர்களுக்கு பெரும் அழுத்தத்தை கொடுத்து அவர்களின் விளையாட்டை பாதித்திருக்கும். 

50 ஓவர்கள் உலகக் கோப்பையில் இந்தியா தோற்க மோடியின் வருகைதானே முக்கியக் காரணம்!

பிகு 2 : டெல்லியில் உள்ள ஃபெரோட்ஷா கோட்லா மைதானத்திற்கு அருண் ஜெய்ட்லி ஸ்டேடியம் என்று பெயர் வைத்ததையும் கீர்த்தி ஆசாத் கண்டித்தார். அவரை விட மிகக் கடுமையாக கண்டித்தவர் முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி. அப்படி அருண் ஜெய்ட்லி பெயரை வைக்க வேண்டுமென்றால் ஒரு ஸ்டாண்டிற்கு வைக்கப்பட்டிருந்த தன் பெயரை நீக்கி விடுங்கள் என்றார். டெல்லி கிரிக்கெட் வாரியம் பேடியின் பெயரை நீக்கி விட்டது.


புதிய பின் குறிப்பு : எழுதி நீண்ட நாட்களாக ட்ராப்டிலேயே இருந்த பதிவு இது. 

Wednesday, March 4, 2026

சஞ்சு சாம்சனும் சங்கி கம்பீரும்

 


இந்தியாவும் மேற்கிந்தியத்தீவுகள் அணியும் விளையாடிய டி-20 போட்டியை என் மக்னோடு நானும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கேரளாவின் சஞ்சு சாம்சன் போட்டியில் வென்ற பின் மண்டியிட்டு சிலுவை போட்டு கடவுளை வணங்கினார்.   மத வெறி கிரிக்கெட்டிலும் ஊடுறுவிய காலத்தில் இப்படி செய்கிறாரே என்று எனக்கு தோன்றியது. போச்சு அவரை ட்ரால் பண்ணி நோகடிச்சுடுவாங்க என்று மகனும் சொன்னான்.

அன்றை போட்டியின் வெற்றிக்கு காரணமான சஞ்சு சாம்சனின் சாதனையை இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எப்படி சிறுமைப்படுத்துகிறார் பாருங்கள்.


பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தசங்கி கம்பீரால் எப்படி அவருக்கு பிடிக்காத செயலை செய்த சாம்சனை எப்படி பிடிக்கும்!

நல்ல வேளை இந்த போட்டி அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நடக்கவில்லை. மத வெறியர்கள் இந்த ஸ்டேடியத்தில் ஏற்கனவே இந்தியாவிற்கு இழிவை தேடிக்கொடுத்துள்ளார்.

விளையாட்டும் சங்கிகளுக்கு அரசியல் . . .

Friday, February 20, 2026

புதிய பாபர் மசூதியைக் கூட . . .


 சங்கிகளால் அயோத்தியில் இடிக்கப்பட்ட பாபர் மசூதியைப் போல ஒரு மசூதியை மேற்கு வங்கத்தில் உருவாக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ ஹுமாயுன் கபீர் அறிவித்து அந்த பணிகள் துவங்கியுள்ளன. அவரை மம்தா கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்துள்ளார். மம்தாவிற்கு விழும் முஸ்லீம் வாக்குகளை திசை திருப்ப சங்கிகளால்  ஏவி விடப்பட்டுள்ளவர் ஹுமாயுன் கபீர் என்பது அவரது சந்தேகம்.  ஒவைஸி உதாரணம் வேறு இருக்கிறதல்லவா! ரகசியம் விரைவில் தெரிய வரும்.

நிற்க

மேற்கு வங்கத்தில் கட்டப்படும் மசூதிக்கு பாபரின் பெயரை வைக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றத்தில் தேவகி நந்தன் பாண்டே என்றொருவர் பொது நல வழக்கு தொடுக்க இன்று அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோதமாக பாபர் மசூதியை இடித்த கூட்டத்திற்கு பாபரின் பெயரில் இந்தியாவின் வேறு மூலையில் இன்னொரு மசூதி ஏற்படுவதை ஏற்க முடியவில்லை போல . . .

பிகு: புதிய மசூதி கட்ட அயோத்தியில் இடம் ஒதுக்கப்பட்டதே, அங்கே புதிய மசூதி கட்டியுள்ளார்களா? நாளை பார்ப்போம்.

Thursday, February 19, 2026

C.B.I கரடியே காரி உமிழ்ந்த . . .

 


நான்காண்டுகளுக்கு முன்பாக ஆட்டுக்காரன் ஒரு மாணவியின் தற்கொலையை மத மாற்றத்தினால் நிகழ்ந்தது என்று கொளுத்திப் போட்டு கலவரத்துக்கு அடி போட, சங்கிகள் அனைத்து வித பொய்களையும் கட்டவிழ்த்து விட, திருப்பரங்குன்றம் தீர்ப்பாளர் வழக்கம் போல சங்கிகள் விருப்பத்திற்கேற்ப சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

கடைசியில் சி.பி.ஐ விசாரித்து முடித்து அறிக்கையும் கொடுத்து விட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறிக்கை விபரத்தைச் சொல்கிறது.


ஆனால் ஆட்டுக்காரனெல்லாம் மன்னிப்பு கேட்பான் என்றெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. ஏனென்றால் சங்கிகளுக்கு வெ.மா.ரோ.சூ.சொ எதுவும் கிடையாது.

பிகு : அந்த சமயத்தில் நான் எழுதிய மூன்று பதிவுகள் கீழே உள்ளது.

அண்ணாமலையை கைது செய்யவும் என்ற பதிவின் இணைப்பு இங்கே

அண்ணாமலை, வானதி, சங்கிகள் கவனத்திற்கு என்ற பதிவின் இணைப்பு இங்கே

பொய் சொல்லி, பயந்தாங்குளி வானதி அம்மையார் என்ற பதிவின் இணைப்பு இங்கே

Tuesday, February 10, 2026

மூவரைப் பெற்றால் சர்சங்சாலக் சோறு போடுவாரா?

 


இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத, அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் உதிர்த்த முத்து கீழே உள்ளது.


அவர் சொல்லும் முதல் விஷயம் விஷம். வழக்கமான விஷம். மத வெறியை தூண்டுவதை மட்டுமே நூறாண்டுகளாக செய்து கொண்டிருக்கும் கேவலமான அமைப்பு இது.

கடந்த பல பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் சிறுபான்மையினரின் சதவிகிதம் அதிகரிக்கவே இல்லை என்பதுதான். அது மட்டுமல்ல, கடைசி இரண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புக்கள் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இந்துக்களை விட குறைவாகவே இருந்திருக்கிறது. 

2021 ல் எடுக்கப்பட வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பை இதுவரை துவக்காமல் இருப்பது கூட ஆர்.எஸ்.எஸ் அளந்து கொண்டிருக்கும் கட்டுக்கதை அவர்கள் ஆட்சியிலேயே அம்பலமாகி விடும் என்பதுதான்.

நிற்க

மூன்று பேரை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்கிற மோகன் பகவத் திருமணமாகாதவர். அவருக்கு குடும்பத்தை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தெரியாது. வெங்காயம் சாப்பிடாதாதால் எனக்கு வெங்காய விலை உயர்வு பற்றி தெரியாது என்று சொன்ன நிர்மலா அம்மையார் கேடகிரிதான் இவர்.

இவருக்கு குழந்தைகளை வளர்ப்பதற்காக ஆகும் உணவுச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு, திருமணச் செலவு ஆகியவற்றைப் பற்றி தெரியுமா?

வேலையின்மை பிரச்சினையைப் பற்றி தெரியுமா?

குடும்ப பாரம் சுமக்காத இவருக்கு குடும்பத்தை பெருக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

மூன்று குழந்தைகளுக்கான செலவுகளை அரசு கொடுக்குமா? இது என்ன பழைய சோவியத் யூனியன் அரசா?

கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி கொழுத்துப் போயிருக்கும் பாஜக அளிக்குமா?

முடியாது அல்லவா?

SO SHUT UP MR MOHAN BHAGAWATH

Monday, February 9, 2026

அஸ்ஸாம் முதல்வருக்கு கருணை கூடாது



 ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா - அஸ்ஸாமின் முதலமைச்சர், 2015 ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர். முதல்வர் கனவிலும் இருந்தவர். ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாஜக முன் வைக்க, பாஜகவிலேயே சேர்ந்து மோடி வாஷிங் மிஷின் மூலமாக புனிதராக மாறி பாஜக சார்பிலேயே முதலமைச்சராக ஐந்தாண்டுகளாக குப்பை கொட்டிக் கொண்டு இருப்பவர்.

அஸ்ஸாம் பாஜக நேற்று ஒரு காணொளி வெளியிட்டது. அந்த காணொளியில் ஹி.பி.சர்மா துப்பாக்கியால் சுடுகிறார். அவர் குறி பார்ப்பது இஸ்லாமியர்களை. NO MERCY கருணையே கிடையாது என்ற வாசகத்துடன் காணொளி முடிகிறது.



அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடான இந்த காணொளியை அஸ்ஸாம் பாஜக இப்போது நீக்கி விட்டது.

இப்படிப்பட்ட காணொளி மூலம் ஹி.பி.சர்மா தன் தொ/குண்டர்களுக்கு என்ன சொல்கிறார்?

இஸ்லாமியர்களை அழித்தொழியுங்கள் என்பதைத்தான் மிகவும் வெளிப்படையாக சொல்கிறார்.

இப்படிப்பட்ட முதல்வர் மீது மோடி நடவடிக்கை எடுக்க மாட்டார்.

தெருநாய் பிரச்சினை போல உச்ச நீதிமன்றமும் தன்னியல்பாக நடவடிக்கை எடுக்காது.

அஸ்ஸாம் மக்கள்தான் தெருவில் இறங்கி போராட வேண்டும்,  பதவி விலகும் வரை போராட வேண்டும். ஹி.பி,சர்மாவுக்கு அவசியமே இல்லை, கருணை . . .

Friday, January 23, 2026

நீதிபதியிடம் சில கேள்விகள்

 


சனாதன ஒழிப்பு என்றால் சனாதனத்தை பின்பற்றும் அனைவரையும் கொன்று விடுவது என்று புதிய அர்த்தம் சொல்லியுள்ள நீதியரசியால் என்னுடைய சில கேள்விகளுக்கு விளக்கம் அளிக்க முடியுமா?

"காங்கிரஸ் முக்த் பாரத்" என்பதை பாஜக பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

அதாவது காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதை இலக்கு என்று சொல்கிறது. அப்படியென்றால் பாஜக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அனைவரையும் கொன்று விட திட்டமிட்டுள்ளது என்று சொல்லலாமா?

கழகங்கள் அற்ற தமிழகம் என்பதை கொஞ்ச நாட்களுக்கு முன்பாக தமிழ்நாட்டு பாஜக சொல்லிக் கொண்டிருந்தது.

அப்படியென்றால் திமுக மற்றும் இப்போது பாஜகவின் அடிமையாக மாறியுள்ள அதிமுக ஆகிய இரண்டு கட்சி உறுப்பினர்களையும் ஒழித்து விட வேண்டும் என்று பாஜக சொன்னதா?

சனாதனம் என்பது ஒரு கருத்தியல்.  பிறப்பில் வேற்றுமை கற்பிக்கிற பிற்போக்குக் கருத்தியல், பெண்களை அடிமைகளாக அடக்கியாள துடிக்கும் கருத்தியல், மாற்று மதங்களுக்கு எதிரான கருத்தியல்.

சனாதனம் என்ற கருத்தியலை ஒழிப்போம் என்றால் அதனை சனாதனத்தை பின்பற்றுபவர்களை ஒழிப்பது என்ற புனிதமான புரிதல் உங்களுக்கு எந்த போதிமரம் கொடுத்தது?

உங்களுக்குத் தெரியுமா?

ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் கோட்பாடுகளை உருவாக்கிய கோல்வால்கரின் படி திரிசூலத்தின் மூன்று முனைகள் அழிக்க வேண்டியவர்கள் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று எழுதியே வைத்துள்ளார் என்று.

அவரது சடலத்தை தோண்டி எடுத்து நடவடிக்கை எடுப்பீர்களா? 

நீதிபதிக்கு மாறுதல் மட்டுமே என்று மகிழுங்கள்

 


நவம்பர் 2024 ல் உத்திர பிரதேசத்தில் சம்பல் என்ற இடத்தில் ஒரு கலவரமும் துப்பாக்கி சூடும் நடந்தது.

ஐநூறு ஆண்டு பழமையான ஒரு மசூதி, கோயிலை இடித்து கட்டப்பட்டதாக சங்கிகள் சர்ச்சை எழுப்ப, ஆதித்ய சிங் மாவட்ட நீதிபதி அந்த மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். 

அந்த ஆய்வு செய்ய மசூதி நிர்வாகத்தினர் எதிர்த்த போது, சங்கிகள் கலவரம் செய்தனர். போலீஸ் மசூதியை பாதுகாக்க நின்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். மூன்று இஸ்லாமியர்கள் கொல்லப் பட்டனர். ஏராளமானவர்கள் காயப்பட்டனர்.

துப்பாக்கிச்சூட்டில் இறந்த ஒருவரின் தந்தை தொடுத்த வழக்கின் அடிப்படையில் மாவட்ட நீதிபதி, போலீஸாரின் வெறித்தனமான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய அனுஜ் சவுத்ரி என்ற ஏசிபி மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யச் சொல்லி மாவட்ட நீதிபதி சுதீர் என்பவர் உத்தரவிடுகிறார்.

காவல்துறை அதை ஏற்க முடியாது என்ற நிலை எடுக்கிறது. திருப்பரங்குன்றம் தீர்ப்பாளருக்காக ஒப்பாரி வைத்த சங்கிகள் இந்த விஷயத்தில் என்ன செய்தார்கள் தெரியுமா?

நீதிபதி சுதீரை இட மாற்றம் செய்து விட்டார்கள்.

நீதிபதி லோயாவிற்கு நிகழ்ந்தது இவருக்கு நடக்காதது மகிழ்ச்சியே.

மாட்டுக்குண்டர்களால் கொல்லப்பட்ட முகமது அக்லக் வழக்கில் உண்மையை பதிவு செய்த இன்ஸ்பெக்டர் போல கொல்லப்படாமல் மாறுதலோடு நிறுத்திக் கொண்டது மொட்டைச்சாமியார் ஆட்சி.

இன்னொரு செய்தி தெரியுமா?

சுதீர் இடத்திற்கு வந்தது யார் தெரியுமா?

மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட்ட  அதே ஆதித்ய சிங் தான் . . .



Thursday, December 25, 2025

மோடிக்கும் வெட்கமில்லை, சங்கிகளுக்கும் . . .

 


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சங்கிகள் பல இடங்களில் தங்கள் புத்தியை காண்பித்துள்ளார்கள். 

கேரளா போன்ற மாநிலங்களில் கூட அவர்களின் மிரட்டல்களுக்கு பயந்து சில கல்வி நிறுவனங்கள் அவர்கள் வழக்கமாக நடத்தும் கிறிஸ்துமஸ் விழாக்களை ரத்து செய்து விட்டன. இத்தனைக்கும் கேரளாவில் சில கிறிஸ்துவ அமைப்புக்கள் பாஜகவைத்தான் ஆதரிக்கின்றன. அதை சங்கிகள் பெருமையாகவும் பீற்றிக் கொண்டிருக்கின்றனர். 

பாஜக ஆளும் பல மாநிலங்களில் இன்று கிறிஸ்துவர்கள் தாக்கப்பட்டுள்ளனர். ஒடிஷா, உத்தர்கண்ட், மத்தியப் பிரதேசம், டெல்லி, உ.பி என்று சொல்லிக் கொண்டே போகலாம். 


உத்திரப்பிரதேசத்தில் கிறிஸ்துமஸ் விடுமுறையை ரத்து செய்து விட்டார் மொட்டைச் சாமியார். 

இவ்வளவு அக்கிரமங்களை சங்கிகள் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் இன்றைய போட்டோ ஷூட்டுக்காக ஒரு சர்ச்சிற்கு சென்று அவர் பதிவு போட, மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் அதை பாராட்டி பதிவு போடுகிறார்.




தன் ஆட்கள்  அயோக்கியத்தனம் செய்யும் வேளையில் அமைதி, நல்லெண்ணம் என்று கதை விட மோடிக்கும் வெட்கமில்லை.

மோடியின் பொய்யான பதிவை பாராட்ட சங்கிகளுக்கும் வெட்கமில்லை.

பிகு : எதிரொலி திரைப்படத்தில் சிவாஜி சாட்சியை முறைத்துக் கொண்டே நிற்க, அந்த பார்வையை தாங்க முடியாமல் சாட்சி உண்மையை சொல்லி விடுவார். 



Sunday, December 21, 2025

என்னடா இது கந்தன்மலைக்கு வந்த சோதனை?

 


ஐகோர்ட் எச்.ராசா கதாநாயகனாக நடிக்க கந்தன்மலை என்றொரு படத்தை தயாரித்துள்ளார்கள். 

பாவம் அது விலை போகவில்லை போல.

அதனால் ஒரு யூட்யூப் சேனலில் வெளியிட்டுள்ளார்கள். 



மொக்கைப் படங்களைக் கூட பார்க்கும் சினிமா வெறியர்கள் கூட ராசா நடித்த படத்தை பார்க்க துணிய மாட்டார்கள்.

பாவம் அந்த தயாரிப்பாளர்கள்!

"காக்கா பிரியாணி துன்னா உண்ணிகிருஷ்ணன் குரலா வரும்" என்பது போல  கந்தன்மலை என்ற பெயரில் ராசா நடித்தால் மத வெறி பிரச்சாரம் இல்லாமல் வேறென்ன படத்தில் இருக்கப் போகிறது!

அதற்கு சென்சார் அனுமதி கிடைத்ததா?

எனக்கு இன்னொரு அச்சமும் இருக்கிறது.

காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா டைரி போன்ற மத வெறி குப்பைகள் போல மோடி அரசு இந்த படத்திற்கும் தேசிய விருது கொடுத்து விடுமோ என்பதுதான் அந்த அச்சம். 


Saturday, December 20, 2025

இது இன்னொரு விருது சர்ச்சை

 


சாகித்ய அகாடமி விருது சர்ச்சை நடப்பில் இருக்கும் போதே அடுத்த விருது சர்ச்சை வந்து விட்டது.

மியூசிக் அகாடமி இந்த ஆண்டு சங்கீத கலாநிதி விருது வயலின் இசைக் கலைஞர் ஸ்ரீராம்குமார் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

அவருக்கு விருதளிக்கப்பட்டதில் எந்த சர்ச்சையும் வந்ததாக நான் படிக்கவில்லை.

பின்?

விருது கொடுத்தவரை வைத்துதான் சர்ச்சையே!

யார் கொடுத்தது?

ஏ.ஆர்.ரஹ்மான்.

மியூசிக் அகாடமியின் அழைப்பிதழை முகநூலில் பார்த்த போதே சிக்கல் வரும் என்று எதிர்பார்த்தேன். அது போலவே நடந்து விட்டது.

மியூசிக் அகாடமி கம்மிகளின் கையில் போய் விட்டது, நாத்தீகர்கள் கையில் போய் விட்டது. ரஹ்மானுக்கு கர்னாடக இசை பற்றி தெரியுமா? கர்னாடக இசையின் அடிப்படை பக்தி. ரஹ்மானுக்கும் பக்திக்கும் என்ன தொடர்பு?

இதெல்லாம்தான் நான் பார்த்த கருத்துக்கள்.

முதல் கருத்து அபத்தம். மியூசிக் அகாடமியின் தலைவர் என்.முரளி ஒன்றும் அவரது சகோதரர் என்.ராம் போல இடதுசாரி சித்தாந்தம் கொண்டவர் கிடையாது.  அதனால் முதல் இரண்டு கருத்துக்களும் அபத்தம்.

"கண்ணோடு காண்பதெல்லாம்" "சௌக்கியமா கண்ணே சௌக்கியமா" ஆகிய இரண்டு பாடல்கள் போதும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கர்னாடக இசை தெரியுமா இல்லையா என்று சொல்ல . . .

ஆஸ்கர் விருது மேடையில் "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொன்னவருக்கா இவர்கள் பக்தி பற்றி பாடம் எடுக்கிறார்கள்!

பிறகு உண்மையில் என்ன பிரச்சினை?

திருவையாறு தியாகராஜர் ஆராதனையின் போது கே.ஜே.யேசுதாஸ் பாட வருகையில் மக்கள் திரள்கையில் ஒரு கூட்டம் "கிறிஸ்துவன் பாடறதை கேட்க இப்படி போறாங்களே" என்று திட்டிக் கொண்டு வெளியேறும். இது நான் நேரடியாக பல வருடங்கள் பார்த்த அனுபவம். முன்பே இதனை எழுதியிருக்கிறேன்.

இப்போது புரிகிறதா?

பிரச்சினை ரஹ்மானின் கர்னாடக இசை ஞானமோ, பக்தியோ கிடையாது. 

அவரது மதம்தான் பிரச்சினை. 

பிகு 1 : கடந்த வருடம் விருது பெற்றமைக்காக கடுமையாக திட்டப்பட்ட டி.எம்.கிருஷ்ணாவிற்கு பல கச்சேரிகளில் பக்க வாத்தியமாக வயலின் வாசிப்பவர் ஸ்ரீராம்குமார்.

பிகு 2 : கடந்த வருடம் பிரச்சினையை முதலில் உருவாக்கிய ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் ஏதாவது சொல்லியுள்ளார்களா என்று அவர்களின் முக நூல் பக்கம் பார்த்தேன். ராமர் கோயிலில் காவிக் கொடி ஏற்றுகையில் பாட வாய்ப்பு கிடைத்தமைக்காக புளகாங்கிதமடைந்திருந்தார்கள். அவர்கள் டி.எம்.கிருஷ்ணாவை எதிர்ப்பது இயல்பானது, சங்கி இயல்பானது.

பிகு 3 : தோழர் தமிழ்ச்செல்வனுக்கு இன்னும் விருது அறிவிக்கப்படவே இல்லை. அதற்குள்ளாகவே வன்ம வாந்திகளை எடுக்கத் தொடங்கி விட்டனர். அவர்கள் ஆசானின் அல்லக்கைகளாகவே இருப்பது யதேச்சையானதாக தெரியவில்லை. 

Friday, December 5, 2025

திருப்பரங்குன்றமும் மத்தவிலாசப் பிரகசனமும்

 


தோழர் பிரளயன் 2018 ல் நடத்திய நாடகமான "மத்தவிலாச பிரகசனம்" படித்துக் கொண்டிருக்கிறேன். 

அதில் ஒரு வசனத்தையும் பாடலையும் படித்த போது இன்றைய திருப்பரங்குன்றம் நிலைமைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளதால்  அதனை பகிர்ந்து கொள்கிறேன்.


பொறுப்பில்லாத மனிதர் மூட்டும் பகை நெருப்பு இன்னமும் பரவிக் கொண்டிருப்பதுதான் இந்தியாவின் துயரம். 

Thursday, December 4, 2025

நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால் ????


 தமிழ்நாட்டின் கலவர மையமாக திருப்பரங்குன்றத்தை மாற்ற சங்கிகள் முயற்சிக்கின்றனர். ராமரை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது என்பதால் முருகரை கையில் எடுத்துள்ளனர். வேல் யாத்திரை, முருகர் மாநாடு ஆகியவை காமெடிகளாக முடிந்து போனதால் ரத யாத்திரை என்ற பெயரில் ரத்தத்தை ஓட விட்டது போல இங்கேயும் கலவரத்தை தூண்டி மக்களை மத ரீதியில் மோத வைக்க முயல்கிறார்கள்.

திருப்பரங்குன்றம் கோயில் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. அதை அங்கே உள்ள தர்காவின் வாசலில் உள்ள தூணில்தான் ஏற்றுவோம் என்று கலவர நோக்கில் சங்கிகள் பிரச்சினை எழுப்பி வருகின்றனர். அதை தீபத்தூண் என்று சொல்வதே தவறு, நில அளவைக் கல் என்று பலரால் சொல்லப்படுகிறது.

இப்போது பிரச்சினை ஏன் தீவிரமானது? கலவரம் வெடிக்கும் சூழல் யாரால் உருவானது?

சாமி படத்தில் விக்ரம் பேசும் பிரபலமான வசனம் ஒன்று உண்டு. அதையே "நான் நீதிபதி இல்லை சங்கி" என்று பேசுவதற்குப் பதிலாக நடவடிக்கைகளில் காண்பித்துக் கொண்டிருக்கிற ஒருவர். அந்த மனிதருக்கு என் அப்பாவின் பெயர். எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் பெயரும் அதுதான். அவர்களால் சுவாமிநாதன் என்ற பெயருக்கு பெருமை. இவராலோ?

கார்த்திகை தீபத்தை கலவர தீபமாக மாற்ற அவர் வழி வகுக்கிறார். தர்காவின் வாசலில் உள்ள தூணில் இன்று முதல் தீபம் ஏற்றுங்கள் எம்று தீர்ப்பளிக்கிறார். தர்கா வழிபாட்டை எல்லாம் முஸ்லீம்கள் ஏற்றுக் கொள்ளலலாமா? அது குரானுக்கு முரணானது இல்லையா என்றும் முஸ்லீம்களுக்குள் சிண்டு முடிய முயற்சி செய்தார்.

அவர் அளித்த தீர்ப்புக்கு எதிராக மாநில அரசு மேல்முறையீடு செய்தது. வழக்கின் நோக்கமும் தீர்ப்பின் நோக்கமும் பக்தியின் அடிப்படையில் ஆனது என்ற தெளிவு இருந்ததால் அத்தீர்ப்பை அமலாக்கவில்லை. தமிழ்நாட்டை குஜராத் ஆக மாற்ற நடந்த முயற்சியும் வெற்றி பெறவில்லையும்.

அதனால் வெகுண்டெழுந்து வழக்கு போட்டவர் பத்து பேரோடு போய் மத்திய தொழிற்சாலை காவல் படையின் துணையோடு அந்த தூணில்தான்  விளக்கேற்ற வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். 144 தடை உத்தரவு இருந்ததால் அந்த முயற்சி வெற்றி பெறவில்லை.

மத்திய , மாநில காவல் படைகளுக்குள் மோதலை உருவாக்க நினைத்ததும் நடக்கவில்லை. 

"நான் மட்டும் நீதிபதியாக இல்லாமல் இருந்திருந்தால் நானே அங்கே தீபமேற்றியிருப்பேன்" என்று வஜனம் பேசியதாக வேறு சொல்கிறார்கள். 

அவருக்கு சிலவற்றை பணிவோடு சொல்ல ஆசைப்படுகின்றேன்.

நீங்கள் நீதிபதியாக இல்லாதிருந்தால்

144 தடைச்சட்டத்தின் படி நீங்கள் கைது செய்யப்பட்டிருக்கலாம்.

மத மோதல்களை தூண்டிய குற்றத்திற்காக உங்களைப் போல அல்லாமல் வேறு நியாயமான நீதிபதி முன்பாக நிறுத்தப்பட்டிருந்தால் சிறைத் தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கலாம்.

உங்களை பாதுகாத்து வருவது உங்கள் நீதிபதி பதவிதான், அதற்கு நீங்கள் கொஞ்சமும் அருகதை அற்றவர் என்ற போதிலும் . . . .



Tuesday, November 18, 2025

காலிஃப்ளவரும் கொலைகார சங்கிகளும்

 


"காலிஃப்ளவர் சாகுபடிக்கு பீகார் ஒப்புதல் அளித்து விட்டது" 


இதன் அர்த்தம் என்ன தெரியுமா?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்களின்  கண்டன அறிக்கைதான் அந்த காலிஃப்ளவர் சாகுபடியின் விபரீத அர்த்தத்தை உணர்த்தியது.


பீகார் மாநிலம் பகல்பூரில் 1989 ல் நடைபெற்ற கலவரம் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களின் உயிரை குடித்தது. அதில் 90 % மேற்பட்டவர்கள் இஸ்லாமியர்கள். அங்கே லோகைன் என்ற கிராமத்தில் 116 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களுடைய சடலங்களை புதைத்து அந்த இடத்திற்கு மேல் சங்கி வெறியர்கள் காலிஃப்ளவரையும் முட்டைக் கோஸையும் பயிரிட்டு கொலைகளுக்கான தடயத்தை மறைத்துள்ளனர். 

இஸ்லாமியர்களை கொன்றதற்கும் அவர்கள் சடலங்கள் புதைக்கப்பட்ட இடத்தை காலிஃப்ளவர் பயிரிட்டு மறைத்தமைக்கும் பீகார் மக்கள் ஒப்புதல் அளித்து விட்டார்கள் என்று தேர்தல் முடிவுகளுக்கு விபரீத அர்த்தம் சொல்லும் அந்த சங்கி ஒரு சாதாரண முரட்டு, முட்டாள் சங்கி மட்டுமல்ல, அஸ்ஸாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர்.

தாங்கள் செய்யும் கொலைகளுக்கு காலிஃப்ளவரை சங்கிகள் இழுப்பது இது முதல் தடவை அல்ல.

மாவோயிஸ்டு முத்திரை குத்தி போலி மோதல்கள் மூலம்  சத்திஸ்கர் மாநிலத்தில் மனித வேட்டை நடந்த போது கர்னாடக பாஜக ட்விட்டரில் ஒரு பதிவு போடுகிறது. அதிலே கொலைகார அமித்ஷா கையில் காலிஃப்ளவர். 


அராஜகக் கொலைகளை நியாயப்படுத்த காலிஃப்ளவரை பயன்படுத்துவது ஒரு புறம் இருக்கட்டும், 

தங்களின் அரசியல் எதிரிகளை கொலை செய்து அதை பெருமையாக சொல்லிக் கொள்ளும் போக்கு இருக்கிறதே, அது மிகவும் மோசமானது, அபாயகரமானது, அனைவரையும் அச்சுறுத்துவது.

சங்கிகள் கொலை பாதகப்பாவிகள் என்பதற்கு அவர்களே தொடர்ந்து ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களை வெறுத்து ஓதுக்கித் தள்ள வேண்டிய மக்கள் ஓட்டு போட்டு ஆட்சியில் உட்கார வைக்கிறார்கள் என்பதுதான் இந்தியாவின் பெரும் துயரம். 

Saturday, August 16, 2025

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை . . .

 


சென்னை ராஜ்பவன் மக்கள் விரோதியின், மனித குல விரோதியின் வசிப்பிடமாகி விட்டது. ஆளுனர் பதவியில் அமர்ந்துள்ள ரெவி எனும் நச்சுப்பாம்பு தொடர்ந்து விஷத்தை கக்கிக் கொண்டிருக்கிறது. 

சுதந்திர தினத்திற்கு முன்பாக ட்விட்டரில் ஒரு பதிவு போட்டுள்ளது. அதை இங்கே பகிர்ந்து கொள்ள எனக்கு மிகவும் கூச்சமாக இருக்கிறது.

இஸ்லாமியர்கள் மீது வெறுப்பைத் தூண்டும் விஷ(ம)ப் பிரச்சாரம் அது. பொய் மூட்டையை அவிழ்த்து விட்டு இன்று ஏதாவது கலவரத்தை தூண்ட முடியுமா என்று செய்துள்ள சிறு மதி கொண்டவனின் சில்லறைச் செயல்.

ராஜ்பவனை இழுத்து மூடி ரெவியை பீகாருக்கு துரத்தாவிட்டால் ரெவியின் எண்ணம் பலித்து தமிழ்நாடு கலவரக்காடாகும்.

தூய்மைப் பணியாளர்களை ஒடுக்குவதிலும் அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவதிலும் காண்பித்த வீரத்தில் நூறில் ஒரு பங்கையாவது திமுக உடன் பிறப்புக்கள் ரெவி மீது காண்பிக்கட்டும். ஒரு மாணவியின் வீரம் மற்றவர்களுக்கு எப்போது வரும்?


Friday, April 18, 2025

தேச விரோதி - செல்லம், மிகவும் சிறப்பு

 



சங்கி அரசால் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித் பற்றி திரைக்கலைஞர் எழுதிய அருமையான கட்டுரை நேற்றைய ஆங்கில இந்து இதழில் வெளியாகியிருந்தது. அதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இரா.சிந்தன் தமிழாக்கம் செய்துள்ளார். அதனை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

 

சமூகப் பொறுப்பும் தேசப்பற்றும் உள்ள கலைஞர் பிரகாஷ்ராஜ் என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது.

 

 

இந்த தேச விரோதியின் போராட்டம் இன்னும் முடியவில்லை!

 

- நடிகர் பிரகாஷ் ராஜ் தி இந்து நாளிதழில் எழுதிய கட்டுரை

 


ஒரு சினிமா படப்பிடிப்புக்காக தில்லிக்கு சென்றிருந்தேன். என்னுடைய படப்பிடிப்பு இரவில் நடந்ததால், பகலில் நேரம் கிடைத்தது. தில்லி அப்போது கோடையில் தகித்துக் கொண்டிருந்தது. புதிதாக மாநில அரசாங்கம் தேர்வாகியிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் இருந்தார்கள்... இப்போது சட்டமாகிவிட்டுள்ள, வக்பு திருத்த மசோதாவால் நாடாளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

 

உமர் காலித்தை நினைத்துக் கொண்டேன். அவர் சிறையிலடைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகப்போகிறது. திகார் சிறைக்குள் இருந்தபடி, இரக்கமற்ற இந்த வெப்பத்தை அவர் எப்படி சமாளித்துக் கொண்டிருப்பார்? என நினைத்தேன். அவருடைய பெற்றோரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்திக்க உடனே புறப்பட்டேன்.

 

தேச விரோதி எனப்படும் உமர் காலித்தை நீங்கள் அறிவீர்களா? அவரைப் பற்றி காண்பதற்கு முன் தேச விரோதி என்பவர் யாரென்று நாம் புரிந்துகொள்ள முயல்வோமா? அதை தெரிந்துகொள்ளாமல், தேச விரோதிக்கும், தேச பக்தருக்குமான வேறுபாட்டை எப்படி கண்டுகொள்ள முடியும்?

 

இதற்காக நாம் கடந்த காலத்திற்கு மிக அதிக காலம் பின் நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. அண்மைக்கால வரலாற்று உதாரணத்தை கவனிப்பதே போதுமானதுதான்.

 

அஹிம்சையை நோக்கி, நாட்டை ஒற்றுமைப்படுத்திய மனிதரான மகாத்மா காந்தி, மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தேசம் என்பது எல்லைக் கோடுகளால் ஆன ஒரு படம் அல்ல என்றும், (தேசம் என்பது) அதில் வாழு மக்களே என்றும் அவர் நம்பினார்

 

நாட்டின் எல்லா மக்களும் தம் விருப்பத்திற்குரிய மதத்தை பின்பற்றும் உரிமை உள்ளது என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த மக்கள் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை சார்ந்திருந்தாலும், எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், தேசம் அவர்களை சகோதர உறவில் பிணைக்கிறது என்றே அவர் நம்பினார். பிரிட்டிஷ் இந்தியாவைச் சமாளித்து எதிர்கொண்ட அந்த மனிதர், சுதந்திர இந்தியாவில் அவரின் மேற்கண்ட கருத்துக்களுக்காக நாதுராம் கோட்சே என்ற மத அடிப்படைவாதியால் கொள்ளப்பட்டார் என்பதுதான் முரண் நகை.

 

நமது நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே, காந்தி தேச விரோதியாகவும், கோட்சே தேச பக்தராகவும் மாறிவிட்டார். சமூகத்தை பிளவுக்குள்ளாக்கவும், மத அடிப்படையில் வெறுப்பை விதைப்பதையுமே தம் வரலாற்றுத் திட்டமாகக் கொண்ட நபர்கள் தம்மை தேச பக்தர்களாக முன்னிருத்துகிறார்கள். தேச பக்தர்களாக சுய பிரகடனம் செய்துகொள்ளும் இந்த நபர்கள் தம்முடைய வகுப்புவாதத் திட்டத்தை எதிர்த்து நிற்கும் எவரையும் தேச விரோதிகள் என்ற முத்திரையைக் குத்துகிறார்கள். இப்படித்தாம் நம் காலத்தின் பிரகாசமான உள்ளம் கொண்டதொரு இளைஞர் உமர் காலித், தேச விரோதியாக மாற்றப்பட்டார்.

 

வழக்கின் நிலை என்ன?

 

உமர் காலித் செய்த குற்றங்கள்தான் என்ன? பன்முகத்தன்மையை தமது இதயத் துடிப்பாகவும், ஆன்மாவாகவும் கொண்டுள்ளதாக நம்பப்படும் நமது அரசியலமைப்பினை அழிக்க முயற்சிப்போருக்கு எதிராகச் சண்டையிட்டது. சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக முழங்குவது. இனவாத வெறுப்பை பரப்பி, அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவிகளை பலியெடுப்போருக்கு எதிராக தெருவில் இறங்குவது.

 

ஒரு மீன் தன் உயிரை இழந்த பின்னரும் ஆற்றின் போக்கில் மிதந்துகொண்டே பயணிக்கும். நீரோட்டத்தை எதிர்த்து முன்னேற மீன்களுக்கு உயிர் இருக்க வேண்டும், உமர் காலித் போல. பொய்களும், வெறுப்பும் வெள்ளமெனப் பாய்ந்துகொண்டிருக்க, அவைகளுக்கு எதிராக அவர் அச்சமின்று நீச்சலிக்கிறார். காந்தியத்தின் உண்மையான வாரிசுகளிடம் இதைத் தவிர குறைவாக எதிர்பார்க்க முடியுமா? “சர்வாதிகாரத்தை எதிர்த்து நாங்கள் மட்டுமே இந்த போராட்டத்தை தொடங்கிடவில்லை, எங்களைக் கொல்வதால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிடாதுஎன்று பகத் சிங் கூறினார். அந்த மரபைத்தான் உமர் காலித் சுமந்துகொண்டுள்ளார்.

 

மாணவர் தலைவர் என்ற முறையில், உமர் காலித் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 எதிராக கடுமையாகப் போராடினார். சி.. சட்டம் நமது நாட்டை பிளவுபடுத்துவதையும், சகோதரத்தை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. முஸ்லிம்களுக்கு குடியுரிமை மறுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டத்திற்கு எதிராக, பிப்ரவரி 2020, தலைநகர் தில்லி போராட்டங்களில் ஈடுபட்டது. சட்டத்தை ஆதரிப்போரும் இந்த களத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, நிகழ்வுப் போக்குகள் வன்முறையாகின. அமைதியாக நடந்த சி.. எதிர்ப்பு போராட்டங்கள் சீர்குலைக்கப்பட்ட்டன. கும்பல் வன்முறை நடந்தது. இந்த வன்முறைகளில் கொல்லப்பட்ட 53 பேரில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.

கும்பல் வன்முறையை தூண்டிய ஆளும் கட்சி தலைவர்கள் தொடர்ந்து சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள். ஆனால் கும்பல் வன்முறையைத் தூண்டிய குற்றச்சாட்டில், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார் உமர் காலித்.

 

அவருடைய ஜாமீன் மனுக்களை அமர்வு நீதிமன்றமும், தில்லி உயர் நீதிமன்றமும் நிராகரித்துள்ளன. 2023 ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜாமீன் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை, விசாரணை கூட நடக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் ஐந்து ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருப்பது, அந்த அளவிலேயே சட்டவிரோதமானது , மனித உரிமைகளுக்கு எதிரானது.

 

"உமர் காலித் நிரபராதியே என்று நீருபிக்க உச்ச நீதிமன்றத்தில் இருபது நிமிட விசாரணை மட்டுமே எங்களுக்கு தேவை" என்று அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தில், 2023 முதல் இப்போது வரை, அவரின் ஜாமீன் மனுவை விசாரிக்க அந்த 20 நிமிடங்களை ஒதுக்க முடியவில்லை.

 

உமர் காலித்தின் வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரது நண்பர்கள் சிலர் என்னுடன் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும், சிறையில் உமரை அவர்கள் தவறாமல் சந்திப்பதாக என்னிடம் கூறப்பட்டது. “வேலை நெருக்கடியான சூழலில் அதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?” என்று நான் கேட்டேன்

உமரின் நண்பர், சிறையில் இருந்த அமீர் என்பவரின் கதையை என்னிடம் கூறினார். அமீர் சிறையில் அடைக்கப்பட்ட முதல் மூன்று மாதங்களில், அவரது பெற்றோர்களும் நண்பர்களும் அடிக்கடி வருகை தந்தனர். அவர்களுடைய வறுமையும், வாழ்க்கை சிக்கல்களும் காரணமாக அமீரின் வலிமையை சிதைத்தன, மெல்ல மெல்ல உடையத் தொடங்கினார். எளிதாக ஜாமீன் பெற்றிருக்க முடியும் என்றாலும், அவர் 10 ஆண்டுகள் சிறையில் வாடினார்.

 

அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிவின் வலி ஒருபுறம் இருக்க, சிறை ஒரு நபரின் தன்னம்பிக்கையை சிதைத்து, மனித ஆன்மாவை உடைக்கிறது.

 

அமீரின் துயர அனுபவமே உமரின் நண்பர்கள் ஒவ்வொரு வாரமும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற உறுதியை வலுப்படுத்தியது. ஒவ்வொரு சந்திப்பின் போதும் "நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று சொல்ல அவர்கள் மாறி மாறி உமரை சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் தோழனுடைய உள வலிமையை, இரக்கமற்ற சூழ்நிலையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் இந்த இளைஞர்களைக் கண்டு நான் பெருமிதமும் நெகிழ்ச்சியும் அடைந்தேன்.

 

உமரின் தாயார் என்னை அன்புடன் வரவேற்றார். அவரது தந்தை வக்பு (திருத்த) மசோதா மீதான விவாதத்திற்கு சென்றிருந்தார். விரைவில் திரும்புவார் என்றனர். பக்ரீத் பண்டிகை முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தது.

 

தாயார் எங்களுக்கு இனிப்புகளைக் கொண்டு வந்து புன்னகையுடன் பரிமாறினார், அதே நேரத்தில் அவளுடைய மகன் இல்லாத வலி அவரின் கண்களில் ஆழமாக பதுங்கியிருந்தது. "என் மகன் விரைவில் விடுதலையாவான். நீதித்துறை மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளதுஎன்றபடி எங்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவர் சொன்ன வார்த்தைகள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தன. இதற்கிடையில், திரும்பி வந்துவிட்ட உமரின் தந்தை, தேநீர் தயாரித்து, எங்களுக்கு பரிமாறியபடி எங்களோடு அமர்ந்து பேசினார்.

 

நான் அவரிடம், "உங்கள் மகன் தனியாக இல்லை. நாங்கள் அவருடன் இருக்கிறோம்" என்று சொன்னேன்.

 

"அவர் எந்த காரணத்திற்காக போராடி சிறைக்குச் சென்றார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்களும் அவருடன் இருக்கிறோம்" என்று அவர் எங்களிடம் சொன்னார். நான் நெகிழ்ந்து போனேன்.

 

உமரின் நண்பர் ஒருவர் உமரின் தந்தையிடம், "பாபா, உமர் ஜாமீனில் வெளியே வந்ததும், அவரை பிரகாஷ் சாருடன் தென்னிந்தியாவுக்கு அனுப்புவோம். அங்கு அவர் பாதுகாப்பாக இருப்பார்என்றார்.

 

உமரின் தந்தை இறுக்கமான பார்வையுடன், "அவர் முன்னெடுத்த சண்டைக்கான காரணிகள் இங்கே தில்லியில் உள்ளது. வேறு எங்காவது போய் ஏன் அவர் அமைதியாக உட்கார்ந்திருக்க வேண்டும்?" என்று கேட்டார்.

அவ்வளவுதான்.

 

நாம் உயிருடன் இருக்கிறோம் என்பதற்கு போராட்டமே சான்று. மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் போராட வேண்டும். உயிருடன் இறந்து கிடப்பதால் என்ன பயன்?

 

மக்களும், உரிமைகளும்

 

உமர் காலித்தும், அவரது பெற்றோர்களும்தான் உண்மையான தேசபக்தர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும். உமர் காலித் என்ற ஒரு நபர் மட்டும் ஐந்து ஆண்டுகளாக சிறையில் வாடவில்லை. அது ஒவ்வொரு குடிமகனின் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையும் வாடுகிறது; நம் மதிப்புமிக்க வாழ்க்கைக்காக உரிமையும், அதை உறுதி செய்திடும் அரசியலமைப்பும் சிறையில் வாடுகிறது.

 

தமிழில் : இரா.சிந்தன்

 

பிகு: பிரகாஷ்ராஜ், ரோகினி, மாரி செல்வராஜ், சமுத்திரக்கனி. விஜய் சேதுபதி, சசிக்குமார் போன்ற சில திரைக் கலைஞர்கள் மீது சமீபத்தில் சங்கிகள் வெறுப்பைக் கக்கியிருந்தனர்.

 

ஏன்?

 

விரைவில் விரிவாக . . .