வாட்ஸப்பில் வந்த படம். தமிழக மக்களின் பொறுப்புணர்வைப் பற்றி வேதனையோடு பகிர்ந்து கொண்டிருக்கிற படம். நதி நீர் பிரச்சினை என்று மட்டுமல்ல, எத்தனையோ அத்தியாவசியமான மக்கள் கோரிக்கைகளுக்காக ஆர்ப்பாட்டமோ, மறியலோ, தர்ணாவோ நடந்து கொண்டிருக்கும். ஆனால் நம் மக்களோ கொஞ்சம் கூட சலனமில்லாமல் கடந்து போய்க் கொண்டே இருப்பார்கள். இந்த போக்குதான் ஊழல் அரசியல்வாதிகளின் மூலதனம்!
