பண்டிட் ரவிசங்கரின் 100 வது பிறந்த நாளை ஒட்டி அவரது மகளும் மற்ற சீடர்களும் அளித்த ஒரு இசை விருந்தை காலையில் பகிர்ந்து கொண்டிருந்தேன்.
அதைப் பார்த்து விட்டு எங்கள் புதுவை கிளை 1 தோழர் ஆர்.மனோகர் கீழே உள்ள காணொளியை வாட்ஸப்பில் அனுப்பி இதுவும் உங்களுக்கு பிடிக்கும் என்று சொல்லி அனுப்பியிருந்தார்.
அந்த அற்புதமான காணொளியை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். காணொளிக்கு கீழே பகிர்ந்து கொண்டுள்ள சில கருத்துக்களையும் பார்த்து விடுங்கள்.
இந்த இசை நிகழ்ச்சி 1967 ல் அமெரிக்காவில் நிகழ்ந்தது. முழுமையாக பார்ப்பதற்கான காணொளி இணைப்பு இங்கே உள்ளது
இந்த நிகழ்வில் ரவிசங்கருக்கு தபேலா வாசிப்பது உஸ்தாத் அல்லா ரக்கா. ஜாகீர் உசேனின் தந்தை மற்றும் குரு என்றால் இன்றைய தலைமுறைக்கு எளிதாய் புரியும்.
இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உதாரணமாக இதைப் பார்க்கிறேன். இந்தியாவின் இரண்டு ஒப்பற்ற கலைஞர்கள் மதம் கடந்து இசைக்க, அமெரிக்கர்கள் அதிலே கட்டுண்டு கிடக்கிறார்கள். நிகழ்வு முடிந்ததும் ஒரு நிமிடத்திற்கும் மேல் நீடிக்கிற ஆரவாரம் அதற்கு உதாரணம்.
எவ்வளவு கோடி பணம் கொடுத்தாலும் விஸ்வநாதரும் கங்கையும் இருக்கிற வாரணாசியை விட்டு வெளியே என் இருப்பிடத்தை மாற்றிக் கொள்ள மாட்டேன் என்ற ஷெனாய் இசை மேதை உஸ்தாத் பிஸ்மில்லா கானை நம்மால் மறக்க இயலுமா?
இந்த ஒற்றுமையை, இந்த பன்முகத் தன்மையை இந்த சோதனைக் காலத்திலும் சிதைக்க முயல்கிற காவிகளின் வெறியூட்டலுக்கு நாம் இரையாகப் போகிறோமா?
இந்திய மக்கள் சிந்திக்க வேண்டும்.
No comments:
Post a Comment