Showing posts with label காக்கி டவுசர்கள். Show all posts
Showing posts with label காக்கி டவுசர்கள். Show all posts

Thursday, October 29, 2015

காளை மாடு ஓகேயா? ஒரு டவுட்டு



மாட்டுக்கறி கூடாது என்று காக்கி டவுசர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். புது டெல்லியில்  உள்ள கேரளா இல்லத்தில் சோதனை போட்டு மூக்கை உடைத்துக் கொண்டார்கள். அங்கே உள்ளது எருமை மாட்டின் கறி என்று சொல்லி அசடு வழிந்தார்கள்.

எனக்கு ஒரு டவுட்டு.

மாட்டுக் கறி கூடாது என்று சொல்பவர்கள் பசு என்பது கோமாதா. "கோமாதா எங்கள் குலமாத" என்று ஏ.பி,என் படப்பாடலையெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.

எனக்கு என்ன சந்தேகம் என்றால்

பசு மாட்டை உண்ணக் கூடாது என்றால் காளை மாட்டுக் கறியை சாப்பிடலாமா? ஏனென்றால் பசு வதை கூடாது என்றுதான் சொல்கிறார்களே தவிர, காளை வதை பற்றி எதுவும் பேசுவதில்லை. 

இல்லை காளை என்றால் சாதாரணமில்லை. அது சிவனின் வாகனம், ரிஷப தேவர், நந்தி தேவர் என்று அதற்கும் கதை கண்டு பிடிப்பீர்களா?

சரி காளை மாட்டுக்கறி உங்களுக்கு பிரச்சினை இல்லையென்றால் எது பசு மாட்டுக்கறி, எது காளை மாட்டுக்கறி என்று எப்படி கண்டுபிடித்து பிரச்சினை  செய்வீர்கள்?

சரி எருமை மாடு மட்டும் என்ன பாவம் செய்தது? எருமை மாடு பால் தருவதில்லையா? எருமை மாட்டுப் பாலில் சத்து கிடையாதா? உங்கள் புராணங்கள்படியே தர்மத்தை நிலைநாட்டுகிற தர்மதேவனான எமதர்மனின் வாகனமாயிற்றே எருமை. அதை தின்றால் பாபமில்லை என்று சொல்கிறீர்களே?  இல்லை தர்மத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையென்பதால் எருமை வதையை கண்டு கொள்வதில்லையா? 

சொல்லுங்க பாய்ஸ், சொல்லுங்க 

Sunday, October 25, 2015

புடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவங்களை!



யாருக்கும் அடங்காத வெறி பிடித்த கும்பல் நாங்கள் என்று காவி டவுசர்கள் காண்பித்துள்ளார்கள்.

விஜயதசமி அன்று  காக்கி டவுசர் அணிந்து கையில் துப்பாக்கியோடும் வாள்களோடும் ஜம்மு நகரில் பேரணி என்ற பெயரில் மக்களை மிரட்டி இருக்கிறார்கள்.

பேரணிதானே போனார்கள், இதிலென்ன தவறு என்று கேட்பவர்களுக்கு ஆயுதச் சட்டம் என்று ஒன்று இருப்பதை நினைவுபடுத்த வேண்டியுள்ளது. சட்டத்தின்படி இப்படி ஆயுதங்களோடு வெளிப்படையாக அலைவது என்பது குற்றம். கடுமையான தண்டனைக்குரிய குற்றம். அப்படி ஆயுதங்களோடு அலைபவர்களை குண்டர்கள் சட்டத்தின்படி கைது செய்ய வேண்டும்.

இப்படி ஆயுதங்களோடு அலைபவர்களை யாராவது தட்டிக் கேட்டால், இவர்கள் என்ன நல்ல பிள்ளையாக அவற்றை கீழே போடுவார்களா அல்லது ஆயுதங்களை எதிரே உள்ளவர்கள் மீது பிரயோகிப்பார்களா?

இத்தனை நாள் இல்லாத தைரியம் இப்போது மட்டும் எங்கே இருந்து வந்தது காவிக்கும்பலுக்கு?

பிரதமர் மற்றும் அனைத்து மந்திரி பிரதானிகளும் காவி டவுசர் அணிந்த சேவக்குகளாக இருக்கும் போது, பிரதமரும் குடியரசுத் தலைவரும் மட்டுமே நேரலையில் பேச வேண்டிய உரிமையை ஆர்.எஸ்.எஸ் சர்சங்சாலக் மோகன் பகவத்திற்கு தாரைவார்க்கும் அரசு இருக்கும் போது காக்கி டவுசர்கள் இதையும் செய்வார்கள், இதற்கு மேலும் செய்வார்கள்.

பாஜகவோடு கூட்டணி வைத்துக் கொண்டாலும் அவர்களின் தில்லாலங்கடி வேலைகளையெல்லாம் அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் முப்தி முகமது சையது செய்ய வேண்டிய முதல் வேலை,

துப்பாக்கியோடும் வாள்களோடும் பவனி போன காக்கி டவுசர்களை பிடித்து ஜெயிலில் போட வேண்டியதுதான்.

ஆனால் சந்தர்ப்பவாதி முப்தி முகமது சையது அதைச் செய்ய மாட்டார் என்பதுதான் யதார்த்தம்.

அதனால் அடுத்த வருடம் காக்கி டவுசர்கள், ஏ.கே 47, கையெறி குண்டுகள், ராக்கெட் லாஞ்சர்களோடு ஊர்வலம் போகலாம் என்று திட்டமிட்டுள்ளார்களாம்.