Showing posts with label ஊதாரித்தனம். Show all posts
Showing posts with label ஊதாரித்தனம். Show all posts

Tuesday, December 6, 2022

மோடியால முடியும்யா. உங்களுக்கென்ன

 


மோடி தன் வழக்கமான செட் ப்ராப்பர்டியான தன் அம்மாவோடு போட்டோ செஷன் நடத்திய போது அவர் அணிந்திருந்த சால்வை கண்ணைக் கவர்ந்தது. அதன் விலை 1650 டாலர் என்றும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1,36,000 என்று தகவலும் இருந்தது.

மோடியின் மதிப்பை குறைக்கவே இப்படி செய்கிறார்கள் என்று சந்தேகம் வந்ததால் மோடி அணிந்து கொண்ட சால்வை பற்றி நானும் கொஞ்சம் இணையத்தில் தேடினேம்.

நான் நினைத்தது சரிதான்.

மோடியின் மதிப்பை குறைக்கும் முயற்சிதான்.

ஆம்,ஜெண்டில்மேன் & வுமன்,

அந்த சால்வையின் விலை ரூபாய் 2,26,000 தான்.



15 லட்ச ரூபாய்க்கு கோட்டு வாங்கிக் கொடுத்த முதலாளிங்க, ரெண்டே கால் லட்சத்துக்கு சால்வை வாங்கித் தர மாட்டாங்களா!

இந்தியாவையே மோடி மூலமா வாங்கி கல்லா கட்டும் முதலாளிங்க, காஷ்மீர் சால்வை கூட வாங்கித் தர மாட்டாங்களா!

நாம நம்ம வீட்டுல வேலை பாக்கறவங்களுக்கு தீபாவளிக்கு புதுத்துணி வாங்கிக் கொடுப்போம். 

அது மாதிரி அதானியோ, அம்பானியோ அவங்க வீட்டு மாட்டுத் தொழுவத்துல வேலை பார்க்கிற மோடிக்கு புது சால்வை வாங்கிக் கொடுத்திருக்காங்க,

உங்களுக்கென்னய்யா பொறாமை!

Wednesday, July 13, 2016

ஊர் சுத்திக் கொண்டே இருந்தா, இப்படித்தான்



நரேந்திர மோடியின் அடங்காத உலகம் சுற்றும் பயணத்தை நக்கலடிக்கும் சமீபத்திய மீம்கள்.

என்னைப் போல நீங்களும் ரசிப்பீர்கள், கண்டிப்பாக.





Saturday, July 18, 2015

எட்டு லட்சம் பேருக்கு கேஸ் மானியம் கொடுத்திருக்கலாம்ல மோடி

கீழேயுள்ள செய்தி இன்றைய தீக்கதிர் நாளிதழில் வெளியானது. நரேந்திர மோடியின் நடக்காத கூட்டத்திற்காக ஊதாரித்தனமாக விரயமாக்கப்பட்ட  அந்த பதினேழு  கோடி ரூபாயை கணக்கு போட்டால் எட்டு லட்சம் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு மானியம் கொடுக்கலாம். 

அடுத்தவருக்கு Give it up  என்று உபதேசம் கொடுப்பதப்பதற்கு முன்பாக நீங்கள் சிக்கனத்தைக் கற்றுக் கொள்ளலாமே மோடிஜி.

தீக்கதிர் செய்தி கீழே

வாரணாசி நடக்காத நிகழ்ச்சிக்கு வீணடிக்கப்பட்ட ரூ.17 கோடி மோடியின் கழிப்பறைகளுக்குக் கூட ஏ.சி.
 

வாரணாசி, ஜூலை 17
-பிரதமர் நரேந்திர மோடியால், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்ட வாரணாசி நிகழ்ச்சிக்கு, 17 கோடி ரூபாய் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது.பிரதமர் நரேந்திரமோடி, வெளிநாட்டு பயணங்களிலேயே பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர், சொந்தத் தொகுதியான வாரணாசியைக் கண்டுகொள்ளவில்லை என்று விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, தனது 8 நாடுகள்சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு, இந்தியா திரும்பிய மோடி, ஜூலை 16-ஆம் தேதி வாரணாசி நிகழ்ச்சிக்கு செல்வதாக இருந்தது.இதற்காக கடந்த பல வார காலமாகவே, வாரணாசியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கும் பணிகளும், அதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வந்தன.


மோடி பயன்படுத்துவதற்காக 3 குளிரூட்டப்பட்ட கழிப்பறை கள் மேடைக்கு அருகிலேயே அமைக் கப்பட்டிருந்தன. அத்துடன் வாரணாசியில் நிலவும் தட்ப வெட்ப மாற்றத்தை சமாளிக்க, நிகழ்ச்சி நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் சுமார் 100 டன் அளவுடைய குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருந்தது. 100 கூலர்ஸ் மற்றும் 2000 மின் விசிறிகளும் அமைக்கப் பட்டிருந்தன. இதற்காக 10 அதி நவீன ஜெனரேட்டர்கள் பொருத்தப்பட்டிருந்தன. மோடி நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அதி நவீன ஜெனரேட்டர்கள் மூலம் மட்டும் 1000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதவிர மோடியின் பேச்சை சுமார் 20 ஆயிரம் பேர் நேரடியாக பார்க்கும் வகையில், 15 அதி நவீன எல்.ஈ.டி ஒளித் திரைகளும் அமைக்கப்பட்டிருந்தன.மோடியுடன் வரும் பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசுஅதிகாரிகள் ஆகியோரின் பய ணம் மற்றும் தங்கும் விடுதிக ளுக்கு மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் செலவிடப்பட்டு இருந்தது.இவ்வளவு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில், மழையைக் காரணம் காட்டி ஒருநொடியில் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

மோடி கலந்து கொள்ளாதஇந்த நிகழ்ச்சிக்கு செலவிடப்பட்ட பணம் மட்டும் 17 கோடி ரூபாய். அத்தனையும் வீண். மோடிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சிக்கு மட்டும் செலவு ரூ. 17 கோடிஎன்றால், இதுதான் அவர் நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லும் லட்சணமா? என்ற கேள்வி எழுகிறது.