சிங்காரப் பேட்டையிலிருந்து செங்கம் செல்லும் வழியில் ஒரு மலை அடிவாரத்தில் உள்ள ஏரியின் அழகிய தோற்றம் புகைப்படங்கள் வாயிலாக உங்கள் பார்வைக்கு
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, October 8, 2022
Thursday, August 25, 2022
தரையில் தோன்றிய அழகு நட்சத்திரங்கள்
ரெய்ப்பூரிலிருந்து சென்னை திரும்புகையிலும் ஜன்னலோர இருக்கையே கிடைத்தது. இரவு நேரத்தில் விமானத்திலிருந்து பார்க்கையில் ரெய்ப்பூர் நகரிலும் சென்னை மாநகரிலும் ஒளி வீசிய மின் விளக்குகள் ஏதோ நட்சத்திரக் கூட்டமே தரையில் தெரிவது போல அவ்வளவு அழகாக அருமையாக இருந்தது.
அந்த
அற்புதக் காட்சிகள் உங்களுக்காக.
முதலில்
பார்க்கும் படங்கள் ரெய்ப்பூர் நகரம்.
அடுத்து பிரம்மாண்டமான நட்சத்திரக் கூட்டமாக தெரிவது சென்னை மாநகரம்.
Saturday, August 20, 2022
மேகத்திற்கும் மேலே . . .
கடந்த மாதம் ரெய்ப்பூரில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. ஜன்னலோர இருக்கை கிடைத்ததால் மேகக் கூட்டங்களுக்கு மேலே விமானம் பறக்கையில் அந்த அழகிய காட்சியை புகைப்படங்கள் எடுக்க முடிந்தது.
Friday, June 3, 2022
மழை வருவது மயிலுக்கு தெரியும். மயில் வருவது . . .
கொடைக்கானலில் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் மயில்கள் அகவும் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் கண்ணில் எப்போதாவதுதான் தென்படும்.
அப்படி தென்பட்டு தோகை விரித்தாடிய தருணத்தை அலைபேசியில் கைப்பற்றி வலைப்பக்கத்தில் விடுவிக்கிறேன்.
மயிலைப் பார்த்த போது "மழை வருவது மயிலுக்குத் தெரியும்" என்ற ரிஷிமூலம் படப்பாட்டு மனதுக்குள் ஒலித்தது.
அப்பாடல் காட்சியை முகப்புப் படமாக வைக்க யூட்யூபரை நாடினேன். 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி, கிழக்கே போகும் ரயிலில் ராதிகா ஆகியோர் ஓடி, ஆடி, குதித்தது போல இப்பாடலில் கே.ஆர்.விஜயாவை ஓடி, ஆடி, குதித்து நடனமாடவைத்து அவரை டார்ச்சர் செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.
பிகு: கிட்டத்தட்ட மூன்று வாரமாக ட்ராப்டிலிருந்த பதிவுக்கு இன்று விடுதலை.
Friday, May 13, 2022
ஏரிக்கரை குளிர்க்காற்றே!
கொடைக்கானல் ஏரியில் காலைப் பொழுதில் ஏரியின் அழகை கரையிலிருந்து குளிர்க்காற்றை அனுபவித்தபடி எடுத்த படங்கள் இங்கே.
பிகு: பதிவுக்கு தலைப்பு கொடுத்த "ஏரிக்கரை பூங்காற்றே" பாடல் காட்சி.
Thursday, May 12, 2022
கோடைக்கானல், குறிஞ்சி மலரின் . . .
கடந்த வாரம் மூன்று நாட்கள் கொடைக்கானலில் ஒரு பயிலரங்கம். ஓய்வுக்காக அளிக்கப்பட்ட நேரத்தில் வேகம் வேகமாக சென்று கொடைக்கானலின் இயற்கை அழகை கண்களால் பருகியது மட்டுமல்ல, அதனை உங்களுக்கும் தவணை முறையில் பரிமாறுகிறேன். இப்பதிவு முதல் தவணை
பிகு: முகப்பில் எதற்கு அந்த படம்?
வாகனத்தில் செல்கையில் இரண்டு தோழர்கள் "அன்புக்கு நான் அடிமை" படத்தில் வரும் "காத்தோடு பூவா ராசா" பாடலின் வரும் "கோடைக்கானல் குறிஞ்சி மலரின் ஜாதி" என்ற வரிகளை இரு வேறு சந்தர்ப்பங்களில் பாட, அது மனதில் ஒட்டிக் கொண்டது. அதனால்தான் அது இங்கே
Saturday, March 12, 2022
இயற்கை அளித்த எழில் ஓவியங்கள்
பயணங்கள் பல சந்தர்ப்பங்களில் இயற்கை எனும் அற்புதக் கலைஞன் வரையும் ஓவியங்களைப் பார்ப்பதற்கான வாய்ப்பைத் தரும்.
Saturday, February 5, 2022
இரவும் பகலும் உரசிக் கொள்ளும் . . .
வேலூர் திரும்புகையில் புதுவை எல்லையை கடக்கையில் பார்த்த காட்சி
அலைகள் ஓய்வதில்லை படத்தின்
"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே"
பாடலில் வரும்
"இரவும் பகலும் உரசிக் கொள்ளும் அந்திப் பொழுதின் போது"
வரிகள் நினைவுக்கு வர அலைபேசியில் பதிவு செய்து கொண்டேன்.
இயற்கை அளித்த அழகுப் பொக்கிஷம் உங்களின் பார்வைக்காக . . .