Showing posts with label காதலர் தினம். Show all posts
Showing posts with label காதலர் தினம். Show all posts

Saturday, February 11, 2023

பாவம்யா முட்டுச் சங்கிகள்

 


அதானி ஊழல் தொடர்பாக மோடி நாடாளுமன்றத்தில் கள்ள மௌனம் சாதித்ததை திசை திருப்ப பசு கட்டிபிடி தினத்தை அறிவித்தார்கள்.

அதானி பிரச்சினையையும் மூடி மறைக்க முடியவில்லை. பசு கட்டிப்பிடி தினமும் பயங்கர கேலிக்கூத்தாக உலக அளவில் மாறி விட்டது.

அதனால் அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டு விட்டது.


பெரும்பாலான சங்கிகள் அடக்கித்தான் வாசித்தார்கள். மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகள் எல்லாம் காணாமல் போயிருந்தார்கள்.

சில முரட்டு சங்கிகள் மட்டுமே முட்டு கொடுத்திருந்தார்கள். மூத்த்த்த மாலன் மட்டும் வாங்கிய காசுக்கு மேலேயே கூவி ஏதோ எழுதியிருக்கிறார் என்பது மட்டும் அவரை பலர் கழுவி ஊற்றியதால் தெரிந்தது. அவர்தான் தன் பக்கத்தை திண்டுக்கல் பூட்டு போட்டு பூட்டியிருக்கிறாரே!

அது மாதிரி முட்டு கொடுத்த சங்கிகளுக்குத்தான் இப்போது பரிதாப நிலை.

ஆனாலும் ஒன்று . . .

இத்தினம் திரும்பப் பெறப்பட்டதில் எனக்கு என்னமோ வருத்தம்தான்.
எத்தனை கூத்து நடந்திருக்கும்!
மிக முக்கியமாக பசுவைக் கட்டிக் கொண்ட மோடியின் போட்டோ . . .
கடைசியில் "வட போச்சே"

Wednesday, February 8, 2023

பசு மாட்டை கட்டிப்பிடிக்கனுமா?

 


மனிதர்கள்  காதலர் தினம் கொண்டாடும் பிப்ரவி 14 ம் தேதி அன்று பசு மாட்டை கட்டிப்பிடியுங்கள்  என்று விலங்குகள் நல வாரியம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஒன்றிய  அமைச்சகம் சொன்னதால் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாம்.

 


பசு மாட்டை கட்டிப் பிடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டு என்று வேறு அந்த சுற்றறிக்கை சொல்கிறது.

 ஆக, காதலர் தினம் அன்று சங்கிகள் கையில் தாலியை வைத்துக் கொண்டு திரிவதற்குப் பதிலாக பசு மாடுகளை கட்டிப் பிடிக்க அலைவார்கள்.

 தமிழ்நாட்டு சங்கிகள் ராமராஜன் பாடல்களான “செண்பகமே செண்பகமே” “பேச்சி, பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி”  போன்ற  பாடல்களை பாடி மாடுகளை    கவர்வதற்கு முயற்சி செய்வார்கள். மற்ற மாநிலத்துக்காரர்கள்       என்ன செய்வார்கள்?

 மோடி கட்டிப்பிடிப்பதற்கும் மோடி கட்டிப் பிடிப்பதை போட்டோ எடுப்பதற்கும் ஒத்துழைக்கக் கூடிய ஒரு மாட்டை கண்டுபிடிக்க வேண்டிய ஒரு வேலை அவரது அதிகாரிகளுக்கு இருக்கிறது.

 யப்பா! பசு மாட்டு உரிமையாளர்களே,  உங்கள் பசு மாடுகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். பாலை திருடினால் கூட பரவாயில்லை, சங்கிகள் உங்கள் பசு மாட்டை கட்டிப் பிடிப்பதோடு நிற்காமல் ஓட்டிக் கொண்டு போய் விடப் போகிறார்கள். அண்டாவோடு பிரியாணியை திருடுபவர்கள் அவர்கள்.

 பிகு 1 : காதலர் தினத்தை பசுவோடு கொண்டாடும் சங்கிகள் அடுத்து பசுவை கல்யாணமும் செய்து கொண்டு குடும்பமும் நடத்துவார்களா?

 பிகு 2 : பசு மாட்டோடு நிறுத்திக் கொள்ளாமல் ஆடுகளையும் இணைத்திருந்தால் ஆட்டுக்காரன் குஷியாகி இருப்பான் அல்லவா!

 பிகு  3 : ஒன்றிய அரசு வழி காட்டி விலங்குகள் நல வாரியம் வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கைக்கு “மத்யமர் ஆட்டுக்காரன்” குழு சங்கிகள் என்ன முட்டு தரப்போகிறார்கள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

Saturday, February 13, 2021

காதலின் மணம் பீட்சா போலவா?

 


நேற்று ஸ்விக்கி அனுப்பிய குறுஞ்செய்தி கீழே உள்ளது.



இந்த பரிசை காதலர் தினத்திற்கு அளியுங்கள் என்று இப்படி ஒரு வீடியோ வந்ததென ஒரு தோழர் அனுப்பியிருந்தார்.



சரி, பரவாயில்லை. இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாம். 

ஆனால்

இன்று காதலர் தினம் கொண்டாடுபவர்களே, இன்றுதான் பகத்சிங் தூக்கில் போடப்பட்ட நாள் என்பது நினைவில் உள்ளதா என்று பழைய புரளியை பரப்பாமல் இருந்தால் சரி.


Wednesday, February 14, 2018

பிப்ரவரி 14 வேண்டாமென்றாலும் கூட ?????


காவிக்கூட்டத்திற்கு ஓர் அன்பு வேண்டுகோள்

பிப்ரவரி மாதம் பதினான்காம் நாள் வந்தாலே உங்கள் அட்டூழியத்திற்கு அளவில்லாமல் போய் விடுகிறது.

காதல் மீதும் காதலர்கள் மீதும் காதலர் தினம் மீதும் ஏன் உங்களுக்கு இப்படி ஒரு வெறுப்பு?

ரோமாபுரிப் பாதிரியார் வாலண்டைன் கொல்லப்பட்ட நாளை, அன்னிய நாட்டைச் சேர்ந்தவர் நினைவாகக் கொண்டாடப்படுவது உங்களுக்கு உவப்பில்லையென்றால் நீங்களே ஒரு நாளை கண்டுபிடிக்கலாமே!

சிக்காகோ நகரத்துத் தொழிலாளர்கள் செங்குருதி சிந்திய நாள் உலகெங்கும் உழைப்பாளர்கள் தினமாகக் கொண்டாடப்படுவதை, தேவலோகத் தச்சன் விஸ்வகர்மாவின் பிறந்த நாளன்றுதான் இங்கே தொழிலாளர்கள் தினமாக கொண்டாட வேண்டும் என்று மாற்ற முயற்சி செய்தீர்களே !

செப்டம்பர் ஐந்தாம் நாள் கொண்டாடப்படுகிற ஆசிரியர் தினத்தை வியாசர் பிறந்த நாளன்றுதான் அனுசரிக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தீர்களே!

அது போல காதலர் தினத்திற்கும் ஒரு மாற்றைக் கண்டு பிடிக்க முயற்சி செய்யலாமே!

எங்கள் நம்பிக்கைதான் எங்களுக்கு முக்கியம் என்று சொல்லி

பாபர் மசூதியை இடித்தீர்கள்.

சேது சமுத்திரத் திட்டத்தை அமலாக்க விடாமல் இன்று வரை தடுத்து வருகிறீர்கள்.

நீங்கள் நம்பிக்கையாக கருதுகிற இதிகாச புராணங்களிலேயே காதலுக்கு என்று தனி இடம் உள்ளதே!

அதிலே ஏதேனும் ஒரு நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு நீங்களும் காதலர் தினத்தை கொண்டாடலாமே!

கொஞ்சம் நினைவு படுத்தவா?

எண்­ணரு நலத்­தினால் இனை­யள்­நின்­றுளி
கண்­ணொடு கண்­ணினை கவ்வி ஒன்­றையொன்(று)
உண்­ணவும் நிலை­பெ­றாது உணர்வும் ஒன்­றிட
அண்­ணலும் நோக்­கினான் அவளும் நோக்­கினாள்.

என்று கம்பர் அழகு தமிழில் பரவசப்பட்டு எழுதினாரே, அந்த நாள் எதுவென்று அறிந்து அந்நாளை தேர்ந்தெடுக்கலாமே?

ரங்க மன்னாரை “கைத்தளம் பற்ற கனாக் கண்டேன் தோழி” என்று ஆண்டாள் காதலில் கசிந்துருகிய மார்கழி மாதம் கூட பொருத்தமானது அல்லவா?

புள்ளி மேயாத மானாம் வள்ளியின் கரம் பற்ற வேடனாய், வயதில் முதியவனாய் தானும் வேடம் அணிந்து தன் அண்ணனையும் உருமாற்றிய முருகனிடம் கேட்டால் தக்கதொரு நாள் கிடைக்காதா என்ன?

“சுடுகாட்டுச் சாம்பலை அணிந்து திரியும் சிவனோ என் மருமகன்” என்ற தந்தை தட்சனை புறம் தள்ளி கயிலை நாதனோடு தாட்சாயணி சென்ற நாள் கூட சரியான நாள்தானே?

சங்கிலி நாச்சியார் மீது கொண்ட காதலை தெரிவிக்க சுந்தருக்காக சிவனே தூது போனதை சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் படிக்கவில்லையா நீங்கள்?

சுபத்திரையின் காதலை நிறைவேற்ற அர்ஜூனனை சன்னியாசி வேடத்தில் தங்க ஆலோசனை வழங்கிய கண்ணனே ஒரு காதல் மன்னன்தானே!

இப்படி இன்னும் ஏராளமாய் அடுக்கிக் கொண்டே போகலாம்.

எனவே பிப்ரவரி 14 உங்களுக்கு உவப்பில்லையென்றாலும் ஏதாவது ஒரு நாளை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

காதலைக் கொண்டாடுங்கள்.
காதலர் தினத்தையும் கொண்டாடுங்கள்


Saturday, February 14, 2015

காதலர் தினத்திற்கு நான் என்ன எழுதுவது?

இன்று எங்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் திருவண்ணாமலையில் நடைபெற்றது. வேலூரிலிருந்து வேனில் செல்லும் போதும் போளூர் தோழர்களை வழியில் ஏற்றிக் கொண்டோம். போளூர் கிளைச்செயலாளர் தோழர் சங்கர் எனது பதிவுகளை அன்றாடம் பார்ப்பவர். முகநூலில் அது பற்றிய கருத்துக்களை பகிர்ந்து கொள்பவர்.

வேனில் செல்கிற போது காதலர் தினம் பற்றிய உங்கள் அனுபவத்தைப் பற்றி ஏன் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கேட்டார். அப்படிப்பட்ட அனுபவமே இல்லையே தோழர் என்றாலும் அதை அவர் ஒப்புக்கொள்ள தயாராக இல்லை.

கல்லூரியில் படிக்கும் போது, எல்.ஐ.சி யில் சேர்ந்த போது என்றெல்லாம் மீண்டும் வேறு கேட்டார்.

அவருக்கு விளக்கமாக பதில் சொல்ல வேண்டியிருந்தது.

கல்லூரில் படிக்கும் காலத்தில் நாங்கள் இறுதியாண்டு முடிக்கும்வரை ஆண்கள் கல்லூரியாக இருந்தது நாங்கள் படித்து முடித்ததும் இரு பாலர் கல்லூரியாக்கி விட்டார்கள்.

அதே போல எல்.ஐ.சி யில் பணியில் சேர்ந்த போது மிகவும் இளையவன் நான்தான். 

இப்படியெல்லாம் அவருக்குச் சொன்னாலும் கூட உண்மையான காரணம் என்பது ஒன்றுதான். 

அன்றிருந்த பொருளாதாரச் சுமையில் காதல் என்ற உண்ர்வு தோன்றுவதற்கான சூழலே இல்லை என்பதுதான் அது.

அப்படி இருக்கையில் காதலர் தின அனுபவம் என்று எதை நான் எழுத முடியும்?