Showing posts with label ஆட்டுக்கார அண்ணாமலை. Show all posts
Showing posts with label ஆட்டுக்கார அண்ணாமலை. Show all posts

Wednesday, August 27, 2025

காட்டிக் கொடுக்க அழைக்கும் ஆட்டுக்காரன்

 


காதல் திருமணங்கள் செய்து கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு வாருங்கள் என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் கூறிய பிறகு, ஆட்டுக்காரனும் பாஜக அலுவலகங்களுக்கும் வரலாம் என்று சொல்ல ஒரே கன்ப்யூசன்.

"போட்டிக்கு பிள்ளை பெறுகிறார்"  என்றுதான் முதலில் நினைத்தேன். அந்தாள் பேசியதன் முழு விபரங்களை மாலை மலர் வெளியிட்டிருந்ததை வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் பகிர்ந்து கொண்டிருந்ததை படித்த பின்புதான் தெளிவு கிடைத்தது.


ஆக ஆட்டுக்காரன் காதலர்களை பாஜக அலுவலகத்திற்கு அழைப்பது திருமணம் செய்து வைக்க அல்ல. அப்பா அம்மாவிற்கும் போலீஸிற்கும் தகவல் கொடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்த.

அதெப்படி ஆட்டுக்காரன் காதல் திருமணங்களை எல்லாம் ஆதரிப்பான்! பிற்போக்குத்தனமான பாஜக ஆளுங்க எல்லாம் திருந்துவாங்களா என்ன!!

Friday, April 18, 2025

மோடியை காப்பியடிக்கறியா ஆட்டுக்காரா?

 


மோடியைப் போலவே ஆட்டுக்காரனும் போட்டோகிராபருடனே

 தலைவர் பதவியிலலிருந்து நீக்கப்பட்டாலும் ஆட்டுக்காரன் கண்டெண்ட் கொடுப்பதை நிறுத்தவில்லை.

 இமயமலைக்கு சென்று ரஜினி போல, மோடி போல குகைக்குள் போல் தியானம் செய்வது போல நடித்தாலும் போட்டோ எடுத்து பகிர்ந்து கொள்ள மறக்கவில்லை.

 


மோடி மாதிரி நீயும் போட்டோகிராபருடன் தான் சென்றாயா ஆட்டுக்காரா? என்னையே காப்பியடிக்கறியா என்று மோடி கோபமடையப் போகிறார். ஜாக்கிரதை.

Sunday, April 13, 2025

அடிச்சு துரத்தலைன்னா ஆட்டுத்தாடி???

 


உனக்கொன்றும் வானளாவிய அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதி மன்றம் சவுக்கடி தீர்ப்பு கொடுத்து விட்டது.

வெட்கம், மான,. ரோஷம், சூடு, சொரணை உள்ள ஆளாக இருந்திருந்தால் ஆரெஸெஸ்.ரெவி எனும் அந்த அற்ப ஜந்து, இந்நேரம் ராஜ் பவனை காலி செய்து விட்டு பீகாருக்கு ஓடி, பால்ய விவாகம் செய்த மனைவியோடு குடித்தனம் செய்து கொண்டிருக்கும்.

ஆனால் இதுதான் அப்படிப்பட்ட விழுமியங்கள் எதுவும் இல்லாத ஜந்து அல்லவா!

அதனால்தான் நரபலி கேட்கும் காபாலிகர்களின் புதிய முழக்கமான "ஜெய்ஸ்ரீராம்" முழக்கத்தை கல்லூரி விழாவில் எழுப்பியுள்ளது. இன்னும் சில நச்சுக்கருத்துக்களை வேறு கக்கியுள்ளது.

அடித்து துரத்தும் நிலைக்கு அது தள்ளிக் கொண்டிருக்கிறது. அது வரை இன்னும் அதிகமான விஷத்தனங்களைக் கூட செய்யும்.

அதற்காக நாம் பொறுமை இழக்கக் கூடாது. 

ஆட்டுக்காரன் இல்லாத குறையை ஆட்டுத்தாடி ரெவியால் மட்டும்தான் போக்க முடியும். அது கக்கும் விஷமெல்லாம் விழிப்புணர்வை தூண்டும் அமிர்தம்.

பிகு" கல்கி அவர்களின் பார்த்திபன் கனவு நாவலில் நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் முழக்கமிடுவதாக எழுதியிருப்பார்கள். சில ஆண்டுகள் வரை நவீன காபாலிகர்களான சங்கிகளும் "ஓம் காளி, ஜெய் காளி" என்றுதான் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போதுதான் "ஜெய்ஸ்ரீராம்" என்று மாற்றியுள்ளார்கள். 

Friday, April 11, 2025

ஆட்டுக்காரனுக்கு பாத்து ஏதாவது செய்யுங்கய்யா

 


பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப் பட்டு விட்டார். ஆட்டுக்காரன் இல்லாதது உண்மையிலேயே வருத்தம்தான்.  அவருக்கு புடிக்காத அதிமுகவோட கூட்டணி வேற. 




புள்ள மூஞ்சியை பாருங்க! எப்படி சோகத்துல இடிஞ்சு போயிருக்கு பாருங்க! பதிவுகள் எழுத, மீம்கள் உருவாக்க தொடர்ந்து கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த  ஒரு ஆள் இனி இல்லை என்றால் வருத்தம் இருக்காதா என்ன?

 ஏதாவது செய்யுங்கய்யா!

 எல்.முருகனுக்கு கொடுத்த மாதிரி, ஆட்டுக்காரனுக்கும் ஏதாவது மந்திரி பதவி கொடுத்து அதில் அவரது குணாம்சத்தின் படி சொதப்பி முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி வழக்கம் போல் கண்டெண்ட் கொடுக்க வழி செய்யுங்கய்யா.

 ஏதாவது பாத்து போட்டு கொடுங்க . . .

Tuesday, April 8, 2025

சீமான், ஆட்டுக்காரன், வடிவேலு, மனோபாலா

 


சமீபத்தில் சீமானும் ஆட்டுக்காரனும் ஒரே மேடையில் பேசியுள்ளார்கள்.  அதிலே ஆட்டுக்காரன் சீமான் பற்றி ஆட்டுக்காரன் பேசியதுதான் மேலே உள்ளது. அந்த பேச்சை கேட்ட போது நினைவுக்கு வந்த காட்சிதான் மேலே உள்ளது. 

சீமானும் ஆட்டுக்காரனும் நிறைய மேடைகளில் ஒன்றாக பேச வேண்டும். அப்போதுதான் நிறைய காமெடி காட்சிகள் கிடைக்கும் .. .

Saturday, April 5, 2025

இதெல்லாம் மோடியால் முடியாது . . .

 



மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் எடுக்கப்பட்ட காணொளி கீழே.

 


மாநாட்டில் பங்கேற்றுள்ள கேரள மாநில பிரதிநிதிகளோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் வருகிறார்.

 அவரும் இயல்பாக வருகிறார். கருப்பு பூனை பாதுகாப்பு, சுற்றி பத்து அல்லக்கைகள் என்று யாரும் கிடையாது.  அவர் வகுகையை கேரள மாநில பிரதிநிதிகளும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். வெட்டி பந்தாவோ, முகத்தில் பிரமிப்போ,  ஆரவாரமோ இல்லை.

 இதுதான் கம்யூனிஸ்டுகளின் இயல்பு.

மோடியால் இது போல எளிமையாக நடமாட முடியுமா? ஆட்டுக்காரனால் கூட முடியாது. 

Friday, April 4, 2025

ஆட்டுக்காரனை தூக்காதீங்கய்யா . . .

 


ஆட்டுக்காரன் பாஜக மாநிலத் தலைவர் பதவியிலிருந்து செல்வது அந்த கட்சிக்கு இழப்பா, வரமா என்று எனக்கு தெரியாது. மத்யமர் ஆட்டுக்காரன் குழு சங்கிகளீலேயே பாதி பேர் ஆட்டுக்காரனுக்காக புலம்புவதையும் பாதி பேர் மௌனமாக வேடிக்கை பார்ப்பதுமாக நிலைமை உள்ளது. அதனை பாஜகவிற்குள்ளே நடக்கும் ஆரிய-திராவிட மோதலாகக் கூட சொல்ல முடியும்.

ஆனால் சமூக ஊடகங்களுக்கு ஆட்டுக்காரன் செல்வது மிகப் பெரிய இழப்பு.

அபத்தமாக உளறிக் கொண்டு, சாட்டையடி மாதிரி காமெடிகள் செய்து கொண்டு  திரிகிற ஒரு முட்டாள் இல்லாமல் கண்டெண்ட் கொடுக்க ஆட்டுக்காரன் மாதிரி வருமா?

இனி புதிதாக வரக்கூடிய மாநிலத் தலைவரும் ஆட்டுக்காரன் போல முட்டாளாக, வெட்டி உதார் செய்யும் ஒருவராக இருந்தால் நலம்.

Sunday, March 30, 2025

ஆட்டுக்காரன் சொன்னது கரீக்டுதான் . . .

 


இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவிற்கு மகாத்மா காந்திக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று ஆட்டுக்காரன் சொன்னது சரியான தகவல்தான்.

என்ன!

இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட 26,ஜனவரி, 1950 க்கு இரண்டு ஆண்டுகள் முன்மே ஆட்டுக்காரனின் முன்னோர்களான கோழை சாவர்க்கர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்சின் படி கோட்சே 30,ஜனவரி,1948 அன்று மகாத்மாவை கொன்று விட்டான் என்ற தகவலை மட்டும் 20,000 புக் படித்த ஆட்டுக்காரன் மறந்து விட்டான்.

எப்படி இருந்தாலும்

மகாத்மா காந்திக்கு முதல் குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழ் அளிக்கப்படவில்லை என்று ஆட்டுக்காரன் சொன்னது கரீக்ட்தானே!

Saturday, March 29, 2025

அந்த 36 % எங்கடா?

 


அடுத்த முதலமைச்சர் யார் என்றொரு கருத்துக் கணிப்பு நடந்ததாக ஒரு தகவலை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது.


இதுதான் ஊடக தந்திரம்.

நால்வருடைய வாக்குகளை கூட்டிப்பார்த்தால் 64 % தான் வருகிறது. மீதமுள்ள 36 % எங்கே போனது? இறுதி முடிவு முன்னே பின்னே வந்தால் அதை சமாளிப்பதற்காக இவர்கள் விட்டு வைத்துள்ளதுதான் அந்த 36 %.

இந்த கருத்து கணிப்பை மட்டும் ஆட்டுக்காரன் கண்களில் காண்பித்து விடாதீர்கள். முதல்வர் கனவில் மிதப்பவனின் இதயம் நொறுங்கி விடப் போகிறது.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் சிகண்டிகள்,  புதிய தலைமுறைக்கு (பாஜக கூட்டணியில் பச்சைமுத்து எனும் பாரிவேந்தர் இருந்த போதிலும் கூட)  என்ன முத்திரை குத்தப் போகிறார்களோ!

Wednesday, March 26, 2025

ஆட்டுக்காரன் நிலைமை பரிதாபம் . . .

 


நேற்று எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு நடந்துள்ளது. மோசடி வழக்கில் சிக்கிக்கொண்ட உறவினரை பாதுகாக்கவே இந்த சந்திப்பு என்று ஊடகங்கள் சொன்னாலும் கூட்டணி பேச்சுவார்த்தை பற்றியும் பேசப் பட்டுள்ளதாக சங்கிகள் நம்புகிறார்கள்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி போட்டுள்ள பதிவு கீழே.


அதிமுக கூட்டணிக்காக சங்கிகள் ஏங்குவது நன்றாக தெரிகிறது. அப்படி ஒரு கூட்டணி நிகழாது என்றும் நாம் சொல்ல முடியாது. 

அதிமுக- பாஜ்க கூட்டணி உருவானால் 

முன்பு அந்த கூட்டணி முறிய காரணமாக இருந்த ஆட்டுக்காரன் நிலைமை என்னாகும்?

அழகி படத்தில் மந்திரி பதவியையும் இழந்து ஆடைகள் கிழியும் அளவிற்கு அடி வாங்கிய பாண்டுவின் கதிதான் ஏற்படும்.

பாவம் ஆட்டுக்காரன் . . .

Tuesday, March 25, 2025

தனியார் பள்ளிகளோடு நிறுத்தாதே ஆட்டுக்காரா

 


திருச்சியில் ஆட்டுக்காரன் பேசியது கீழே உள்ளது.

எதுக்கு ஆட்டோக்காரா, தனியார் பள்ளிகளுக்கு அனும்தி தர மாட்டோம் என்பதோடு நிறுத்திக் கொண்டாய்?

ஏற்கனவே உள்ள தனியார் பள்ளிகளை அரசுடமையாக்குவோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தனியார் கல்லூரிகள் (பொறியியல், மருத்துவக் கல்லூரிகள் உட்பட)  இருக்காது.

தனியார் பேருந்துகள் இருக்காது,

தனியார் மருத்துவமனைகள் இருக்காது.

இப்படியெல்லாமும் அளந்து விட வேண்டியதுதானே!

எப்படியும் ஆட்சிக்கு வரப் போவதில்லை, அதனால் வாக்குறுதி கொடுக்க கஞ்சத்தனம் ஏன்?

ஆட்சிக்கு வந்தாலும் தனியாரை பாதிக்கும் எந்த முடிவையும் பாஜக எடுக்காது. ஏனென்றால் பாஜக தனியார்களின் தரகர்கள். 

Friday, February 21, 2025

இரண்டு கெட் அவுட்டும் ஒன்றா? ?

 


 

இன்றைக்கு மத்யமர் ஆட்டுக்காரன் குழு பக்கம் போகவே முடியவில்லை. கெட் அவுட் ஸ்டாலின் என்பது ட்விட்டரில் வைரலாவதால் வெறித்தனமாக இருக்கிறார்கள். 2026 சட்டமன்ற தேர்தல் ட்விட்டரின் நடைபெறப் போவதான ஒரு நெனப்பில்  ஆட்சியைப் பிடுத்தது போன்ற தெம்பில் இருக்கிறார்கள்.

 இந்த பிரச்சினை எங்கே துவங்கியது?

 தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை அளிக்காமல் அடாவடி செய்யும் மத்தியரசை கண்டித்த உதயநிதி ஸ்டாலின் “இனி மோடி தமிழ்நாட்டிற்கு வந்தால் கோ பேக் மோடி என்று சொல்லாமல் கெட் அவுட் மோடி என்று சொல்வோம்” இதற்குத்தான் ஆட்டுக்காரன் அப்படி கொதித்தான். கெட் அவுட் மோடின்னு சொல்வியா? வெளியே போடான்னு சொல்வியா என்றெல்லாம் கேட்டவடன் :கெட் அவுட் மோடி என்று பதிவு போடத்தொடங்கி விட்டார்கள். ட்ரெண்டிங்கும் ஆகி விட்டது.

 அதனால் வேறு வழியில்லாமல் ஆட்டுக்காரனும் “கெட் அவுட் ஸ்டாலின்” என்று தொடங்க, பாஜகவின் ஒட்டு மொத்த ஐ.டி விங்கும் நாடு தழுவிய அளவில் பதிவுகள் போட அதுவும் ட்ரெண்டிங் ஆகி விட்டது.  சங்கிகள் திட்டமிட்டு செய்தது இது. சர்க்கார் படத்தில் யோகிபாபு ஆயிரம் கள்ள வோட்டு போட்டதாக புளிச்ச மாவு ஆஜான் வஜனம் எழுதியிருப்பார்.  அது சாத்தியமில்லை. ஆனால் ஒரு சங்கியால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்வீட்டுகளை போட முடியும்.

 அதனால் அதன் எண்ணிக்கை கூடுதலாக இருப்பதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஆனால் இதை வைத்து 2026 ல் ஆட்டுக்காரனே முதல்வர் என்பதெல்லாம்

 சிறுபிள்ளைத்தனம் . . .

 பிகு: மோடியை நிஜமாகவே அசிங்கப்படுத்தியது வேறொரு ஆள். அதற்கு சங்கிகள் பொங்கினார்களா?

 நாளை பார்ப்போம்.

 

Thursday, February 20, 2025

ஆட்டுக்காரனின் தரங்கெட்ட பேச்சு

 


பார்த்தாலே எரிச்சலூட்டுபவன் ஆட்டுக்காரன் என்று போன வாரம்தான் ஒரு பயணத்தின் போது ஒரு தோழரிடம் சொன்னேன். அதனால் அந்தாளின் காணொளிகளையெல்லாம்  பார்ப்ப்தில்லை. இன்று மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி (பெண் பெயரில் உலவும் போலி ஐடி) ஒரு பேச்சை ரொம்பவும் விதந்தோந்தி எழுத அப்படி அதில் என்ன இருக்கிறது என்ற பார்த்தால் …

துணை முதல்வர்  உதயநிதி  ஸ்டாலின் மீது தரக்குறைவான தாக்குதல், கேவலமான மொழியில் பேசுகிறார். ஒருமையில் பேசுவது மட்டுமல்ல, ஒரு மட்டமான வதந்தியை வைத்து வேறு பேசுகிறார்,

விதை ஒன்று போட்டால் சுரை ஒன்றா வரும்!

ஆபாசமாகவும் அசிங்கமாகவும் பேசும் மோடி கட்சியின் மாநிலத் தலைவன் பேச்சு என்ன இலக்கியத்தரமாகவா இருக்கும்!

தரங்கெட்டுத்தான் இருக்கும்!

Thursday, February 13, 2025

இதுதான் ஒரிஜினல் தொழிலா ஆட்டுக்காரா?

 


அண்ணா அறிவாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் உருவாமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என்று சொல்லியுள்ள ஆட்டுக்காரா, இதற்கு முன்பும் கோவையில் லூலூ மாலில் ஒரு செங்கல்லைக் கூட விட மாட்டேன் என்று சொல்லியிருந்தாய்.

 


அப்படியென்றால் நீ

அரசியல் காமெடியன் கம் வில்லனாகும் முன்பு

அதற்கு முன்பு

ஆடு வளர்ப்பதாக சீன் போடும் முன்பு

அதற்கும் முன்பு

சிரிப்பு போலீஸாகும் முன்பு

 

வீடுகளில் கன்னக்கோல் வைத்து கொள்ளையடிக்கும் கூட்டத்தில் இருந்தாயோ நீ?

அந்த பழைய நெனப்பில்தான் செங்கல்லை உருவுவேன், ஒரு செங்கல்லை கூட விட மாட்டேன் என்று பிதற்றிக் கொண்டிருக்கிறாயோ!



Saturday, February 8, 2025

ஆட்டுக்காரனை நம்பிய சீமானின் நிலை

 


ஆட்டுக்காரன் பேசியது கீழே உள்ளது.



வழக்கம் போல டெபாசிட் இழக்கும் பயிற்சியை செய்த சீமானின் மனநிலை, ஆட்டுக்காரனின் பேச்சை கேட்டதும் எப்படி இருந்திருக்கும் என்பதை மேலே உள்ள படம் சொல்கிறது.

Monday, February 3, 2025

இது செம காமெடி

 


கீழேயுள்ள பதிவை படியுங்கள்.

நீங்களும் என்னை மாதிரி சிரிப்பீர்கள்.



Sunday, February 2, 2025

உணர்ச்சிகளை தூண்டுவதே காவிக்கயவர்கள்தானே!

 


விமான நிலையத்திற்காக பரந்தூரில் நிலம் கையகப்படுத்தும் பிரச்சினை தொடர்பாக “அரசியலுக்காக மக்களின் உணர்ச்சிகளை தூண்டுபவர்களை மக்கள் நம்பக்கூடாது” என்று தவெக விஜய்க்கு ஆட்டுக்காரன் அறிவுரை சொல்லியுள்ளான.


 
அடப்பாவி ஆட்டுக்காரா! இப்படி சொல்ல உனக்கு வெட்கமே கிடையாதா?

 உன் பாஜக கட்சி, அதன் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் ம் அரசியல் நடத்துவதே மக்களிடம் மத உணர்வை, மத வெறியைத் தூண்டித்தானே! உங்கள் அரசியலுக்காக எத்தனை பொய்களை பேசுகிறீர்கள்! மாற்று மதத்தவர்களை எப்படியெல்லாம் எதிரிகளாக நிறுத்துகிறீர்கள்?

 இப்படிப்பட்ட கீழ்த்தரமான அரசியல் செய்யும் காவிக்கயவர்களுக்கு அடுத்தவர்களுக்கு உபதேசம் செய்யும் அருகதை இருக்கிறதா?

 நீ சொல்வதை வைத்து பார்க்கும் போது மக்கள் உன்னைத்தான், உன் கட்சியைத்தான், பெரும் டுபாக்கூர் மோடியைத்தான்  நம்பக்கூடாது என்பதை நீயே சொல்லி விட்டாய்.

பிகு: எழுதி ஒரு வாரமாச்சு . . .

Saturday, February 1, 2025

வித்தை காட்டறியா ஆட்டுக்காரா?

 


வெட்டி உதார் வேண்டாம் ஆட்டுக்காரா

 

ஆட்டுக்காரனின் லேட்டஸ்ட் வஜனம் கீழே . . .

 


அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனின் தொலைபேசி பதிவு விபரங்கள் இருந்தால் அதனை உடனே வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டியதுதானே!

 பாம்புக்கும் கீரிக்கும் சண்டை விடப் போவதாக சொல்லிக் கொண்டே இருக்கும் மோ(ச)டி மஸ்தான் கடைசி வரை இரண்டு பெட்டிகளையும் திறக்கவே மாட்டான்.

 அது போலத்தான் ஆட்டுக்காரனும். ஒரு போதும் அந்த தகவல்களை வெளியிட மாட்டான். எதுக்குடா இந்த வெட்டி உதார்.

ஆமாம், இந்த வீடியோ, ஆடியோ க்களை எல்லாம் உங்கள் கட்சிக்காரர்களை மிரட்டத்தானே எடுத்து வைத்திருப்பாய் ஆட்டுக்காரா? அப்போ ஞானசேகரன் பாஜககாரனா?

Friday, January 24, 2025

உன் டூப்பா நாற வாய் ஆட்டுக்காரா?

 



முதலில் இந்த காணொளியை பாருங்கள்.

 நேற்று காலையில் எழுதிய பதிவில்தான் டங்கஸ்டன் சுரங்கத் திட்டத்தை “செத்ததுக்கு செல்லாமல் பத்துக்கு போன” ஆட்டுக்காரனால்தான் நிறுத்தப்பட்டது என்று அயோக்கிய, அடி முட்டாள் சங்கிகள் விதந்தோந்திக் கொண்டிருப்பதாக எழுதினேன்.



 இப்போது இந்த காணொளி வெளி வருகிறது.

 டங்க்ஸ்டன் திட்டத்தை ஆதரித்து விட்டு, மக்களை வெளியேறச் சொல்லி விட்டு, வேண்டுமானால் சில எலும்புத் துண்டுகளை பொறுக்கிக் கொள் என்பது தெனாவெட்டோடு பேசியவனா  திட்டம் ரத்தை செய்ய  வாயை திறந்திருக்கப் போகிறான்!

 மார்க்சிஸ்ட் கட்சி வழி நடத்திய மக்களின் போராட்டம், தமிழக சட்டசபைத் தீர்மானம் ஆகியவை உருவாக்கிய அழுத்தம் காரணமாக திட்டத்தை திரும்பப் பெறுவது என்ற முடிவு எடுக்கப்பட்ட பின்பே ஆட்டுக்காரன் டெல்லிக்கு அழைக்கப்பட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்க வைத்துள்ளார்கள்.

 முதல் காணொளி உண்மையா அல்லது திட்டத்திற்கு எதிரான ஆட்டுக்காரன் உண்மையா?

 டங்க்ஸ்டன் திட்டத்திற்கு ஆதரவாக முழங்கிய ஆட்டுக்காரந்தான் நிஜம். கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எவன் இறந்தாலும் கவலையில்லை, நாடு நாசமானாலும் கவலையில்லை என்பதுதான் பாஜகவின் கொள்கை. இப்போது பரந்தூர் விமான நிலையம் வேண்டும் என்று குரல் கொடுக்கும் ஆட்டுக்காரனா வேதாந்தா நிறுவனத்தின் லாபத்துக்கு எதிராக பேசுவான்?

 வேறு வழியில்லாமல் திட்டத்தை ரத்து செய்வது என்ற சூழ்நிலை வந்த பின்பு அரசியலுக்காக போட்டோஷூட்  நாடகம் நடத்தினார்கள். அவ்வளவுதான்.

 ஆட்டோ ஓட்டுனர் வடிவேலுவுக்கு வேண்டுமானால் “வேற வாய், நாற வாய்” என்று இரண்டு வாய்கள் இருக்கலாம். லாப வெறி பிடித்த முதலாளிகளுக்கு ஆதரவான ஆட்டுக்காரன் போன்ற சங்கிகளுக்கு இருப்பது ஒரு வாய்தான். அது எப்போதுமே “நாற வாய்”

 

Wednesday, January 22, 2025

இப்பத்தான் பாக்கறியா ஆட்டுக்காரா?

 


பொங்கல் போயிடுச்சு ஆட்டுக்காரா . . .  என்று 21.01.2025 எழுதிய பதிவை படியுங்கள்.

மத்திய சுரங்க மந்திரி 17.01.2025 அன்று மதுரை வந்து ட்ங்க்ஸ்டன் சுரங்கம் ரத்து என அறிவிப்பார் என்று 10.01.2025 அன்று ஆட்டுக்காரன் அளந்து விட்டதை நக்கலடித்து எழுதியிருந்தேன்.

நேற்று ஆட்டுக்காரனின் ட்விட்டர் பக்கம் பார்த்த போதுதான் ஒரு உண்மை தெரிந்தது. நேற்று 22.01.2025 அன்றுதான் ஆட்டுக்காரனும் மற்றவர்களும் டெல்லிக்கு போய் சுரங்க மந்திரியை பார்த்திருக்கிறார்கள்.



கிட்டத்தட்ட இருபத்தி ஐந்து நாட்களுக்கு முன்பே தோழர் சு.வெங்கடேசன் மந்திரியை பார்த்துள்ளார். அதற்கு முன்பே மக்களவையிலும் பேசியுள்ளார். தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது, மேலூர் பகுதியில் பிரம்மாண்டமான இயக்கம் நடந்துள்ளது.

"செத்ததுக்கு வா என்றால் பத்துக்கு வந்திருக்கியே" என்று கேட்பது போல இவர்கள் நிதானமாக  நேற்றுதான் டெல்லிக்கு போயுள்ளார்கள்.

ஆனால் வெற்றுக்கூச்சலுக்கு மட்டும் குறைவில்லை.

வெட்கங்கெட்ட கயவர்கள் . . .