Showing posts with label மயில். Show all posts
Showing posts with label மயில். Show all posts

Friday, June 3, 2022

மழை வருவது மயிலுக்கு தெரியும். மயில் வருவது . . .

 


கொடைக்கானலில் நாங்கள் தங்கியிருந்த இடத்தில்  மயில்கள் அகவும் குரல் கேட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் கண்ணில் எப்போதாவதுதான் தென்படும்.

அப்படி தென்பட்டு தோகை விரித்தாடிய தருணத்தை அலைபேசியில் கைப்பற்றி வலைப்பக்கத்தில் விடுவிக்கிறேன்.







மயிலைப் பார்த்த போது  "மழை வருவது மயிலுக்குத் தெரியும்" என்ற ரிஷிமூலம் படப்பாட்டு மனதுக்குள் ஒலித்தது.

அப்பாடல் காட்சியை முகப்புப் படமாக வைக்க யூட்யூபரை நாடினேன். 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவி, கிழக்கே போகும் ரயிலில் ராதிகா ஆகியோர் ஓடி, ஆடி, குதித்தது போல இப்பாடலில் கே.ஆர்.விஜயாவை ஓடி, ஆடி, குதித்து நடனமாடவைத்து  அவரை டார்ச்சர் செய்துள்ளார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்.

பிகு: கிட்டத்தட்ட மூன்று வாரமாக ட்ராப்டிலிருந்த பதிவுக்கு இன்று விடுதலை. 

Sunday, August 23, 2020

டெல்லி மயில்களும் மீட்கப்படுமா?



 2017 ம் வருடம் நடந்த சம்பவம் இது. 

பூனாவில் உள்ள ஆதி நாத் ஹவுசிங் சோஸைட்டி என்ற குடியிருப்பில் மயில் ஒன்று வளர்க்கப்படுவதாக அறிந்து மஹாராஷ்டிர மாநில வனத்துறை அதிகாரிகள் அந்த மயிலை விடுவித்து காட்டில் விட்டு விட்டனர்.


மயில் இந்தியாவின் தேசியப் பறவை என்பதாலும் பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள், பறவைகள் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரனம் என்பதால் மயிலை வீட்டில் செல்லப் பறவையாக வளர்ப்பது சட்ட விரோதம் என்பதாலும் அந்த நடவடிக்கை என்று வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பூனாவில் நடந்தது போல டெல்லியில் ஒரு பெரிய மனிதர் போஸ் கொடுத்த போட்டோவில் உள்ள மயில்களும் மீட்கப்படுமா? அவர் மீது வழக்கு பதியப் படுமா?


அதெப்படி அவர் கையிலெடுக்கும் அனைத்துமே தேவையில்லாத ஆணிகளாகவே இருக்கிறது?

பிகு: ஒரு மாறுதலுக்காக 16 வயதினிலே மயிலின் படத்தை முகப்பில் பகிர்ந்து கொண்டேன்.