Showing posts with label கிறுக்கர்கள். Show all posts
Showing posts with label கிறுக்கர்கள். Show all posts

Saturday, October 9, 2021

உங்க வீட்டிலேயே கூடாது பேங்க் மேனேஜர்.

 


மதுரை எம்.பி தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் முக நூல் பக்கத்தில்தான் இந்த சுற்றறிக்கையை பார்த்தேன்.

மத வெறி தலைக்கேறிப் போன ஒரு மனிதனின் அபத்தமான உத்தரவு இது. நவராத்திரியை ஒன்பது நாளும் அவர் கொண்டாட வேண்டுமென்றால் அதை அவர் வீட்டில் கொண்டாடிக் கொள்ளட்டும். 

ஒவ்வொரு நாளைக்கும் ஒரு வண்ணம் என்ற உத்தரவெல்லாம் அவர் வீட்டிலேயே செல்லாது. "போய்யா வேலையை பாத்துக்கிட்டு" என்று சொல்லி விடுவார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர் வீட்டு ஆட்களுக்குக் கூட என்ன வண்ணத்தில் ஆடை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டால் அது கூட தவறுதான்.

இந்த உத்தரவின்படி ஆடை அணியாவிட்டால் அபராதமாம். அந்த வண்ணத்தில் உடை இல்லாவிட்டால் வங்கி வாங்கித் தருமா?

மூடச்சங்கிகள் இப்படித்தான் பொதுத்துறை நிறுவனங்களை நாசம் செய்கிறார்கள்.

இந்த உத்தரவிட்ட ராகவேந்திரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அங்கே உள்ள வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் போராட வேண்டும். 

Monday, June 21, 2021

ஒட்டக வதை - பீட்டா தூங்குதா?

 



ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நிறுவன சர்சங்க்சாலக் ஹெட்கேவரின் நினைவு நாளை முன்னிட்டு நேற்று நடைபெற்ற யோகாசன சீன்களில் ஒன்றுதான் மேலே இருப்பது.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் எல்லை பாதுகாப்புப் படையின் சார்பில் நடைபெற்ற நிகழ்வில்தான் இப்படி ஒட்டகத்தை படுக்க வைத்து அதன் மீது யோகா செய்து காண்பித்துள்ளார்கள். 

மோடியிடம் சபாஷ் வாங்க எப்படிப்பட்ட கிறுக்குத்தனம் வேண்டுமென்றாலும் செய்வார்கள் போல!  பாம்பின் கால் பாம்பறியும் !

ஆமாம். எல்லை பாதுகாப்பு படையின் சீருடையில் காவி நிறம் எப்போது வந்தது?

இவ்வளவு சீன் போடுபவர்கள் ஒட்டகங்களின் கால்களை கட்டாமல் இருந்திருக்கலாமே! வீரர்கள்தானே?

இது மிருக வதை இல்லையா?

ராதா ராஜன் எனும் சங்கியின் தலைமையில் செயல்படும் இந்திய பீட்டா என்ன செய்கிறது?

உறங்குகிறதா? அல்லது சொந்த கட்சி ஆட்சிக்கு எதிராக எப்படி பேசுவது என்று பயப்படுதா?