Friday, October 31, 2014

நல்ல அப்பாக்கள் இவங்க! பாவம் அந்த அம்மாக்கள்!

மின்னஞ்சலில் வந்த படங்கள் இவை. 

பாவம் அந்த அம்மாக்கள்.

இந்த அப்பாக்களை நம்பி குழந்தைகளை ஒப்படைத்துள்ளார்களே

நான் இவ்வளவு மோசமில்லைப்பா







 

Thursday, October 30, 2014

ஞான தேசிகானந்த ஸ்வாமிகளுக்கு ஞானம் வந்ததாம்!



 http://www.kayalconnection.com/wp-content/uploads/2014/04/kayalconnection-3115.jpg

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில ஒற்றுமையை ஏற்படுத்தவே முடியாது என்ற ஞானம் பாவம் நம்ம ஞானதேசிகானந்த ஸ்வாமிகளுக்கு மூன்று வருடத்திற்குப் பிறகு வந்து ராஜினாமா கடிதத்தை அளித்து விட்டார்.

ரொம்பவே லேட்ஜி.

முதல் சட்டை கிழியும் போதே இதெல்லாம் கதைக்கு ஆகாது என்று புரிஞ்சு அப்பவே கால் கடுதாசி கொடுத்திருக்கனும். சட்டைங்களாவது மிஞ்சி இருக்கும். 

சிக்கன் பிரியாணிக்கு தடை வருகிறது...........



அசைவ உணவுக்கு இனி ஐ.ஐ.டி யில் அனுமதி கிடையாதா?

மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த எஸ்.ஜெயின் என்ற ஆர்.எஸ்.எஸ் காரர் ஒருவர் ஐ.ஐ.டி நிறுவன விடுதிகளில் அசைவம் வழங்குவதை தடை செய்ய வேண்டும் என்று மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வெங்காயம், பூண்டு மற்றும் மாமிசம் போன்ற உணவுகளை உண்பதால் மாணவர்கள் கெட்டுப் போய் விடுகிறார்கள். இந்த உணவுக் கலப்பால்தான் முஸ்லீம்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆகவே அவற்றை ஐ.ஐ.டி யில் தடை செய்ய வேண்டும் என்றும் பாஜக அரசாங்கம் இப்பிரச்சினையை புரிந்து கொண்டு நடவடிக்கை எடுக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார். அசைவ உணவின் மூலம் மோசமான கலாச்சாரத்தை ஐ.ஐ.டி வளர்க்கிறது என்பது அவரது குற்றச்சாட்டு.

ஆர்.எஸ்.எஸ் ஆட்களின் மூளை இப்படித்தான் அபத்தமாக சிந்திக்கும் என்பது புதிதல்ல. ஆனால் அதை அமலாக்க மோடி அரசு முயற்சி எடுக்கிறது என்பதுதான் இங்கே விஷயம்.

மனித வள மேம்பாட்டுத்துறை இந்த மனிதர் அனுப்பிய கடிதத்தை இந்தியாவில் உள்ள பதினாறு ஐ.ஐ.டி நிர்வாக இயக்குனர்களுக்கும் அனுப்பி நடவடிக்கை எடுக்குமாறு சொல்லியுள்ளது. என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

சைவமா அல்லது அசைவமா என்பது அவரவர் உணவுப்பழக்கம். உரிமை. இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை. கடிதம் எழுதும் உரிமை அந்த மனிதருக்கு இருக்கலாம். அதை எல்லா ஐ.ஐ.டி க்கும் அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? ஏற்கனவே டெல்லி ஐ.ஐ.டி விடுதிகளில் அசைவ உணவு நிறுத்தப்பட்டு விட்டதாம்.

இவர்களை இதை ஐ.ஐ.டி யோடு நிறுத்த மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்.

நான் என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பதை முடிவு செய்ய அரசாங்கத்திற்கு என்ன உரிமை உள்ளது?

பாரதீய ஜனதா திணிக்க விரும்பும் ஒற்றைக் கலாச்சார முறையில் உணவுப் பழக்கமும் ஒன்று என்பதை மறந்து விடாதீர்கள்.


லைகா பற்றி ஒரு தகவல்

முக நூலில் மூத்த  தோழர் எஸ்.ஏ.பெருமாள் அவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்



லைக்கா லைக்கா
--------------------------------
சோவியத் யூனியன் இருந்தபோது 1965ம் ஆண்டு விண்வெளிக்கு
ஒரு ஏவுகணையை அனுப்பியது.அதில் ஒரு நாயையும் அனுப்பி
வைத்தனர்.அந்த நாயின் பெயர்தான் லைக்கா.
எந்த ஏவுகணை திரும்ப வரும்படி அமைக்கப்பட்டதல்ல.அது சந்திரனின் வட்டப்பாதையைச் சுற்றிவிட்டு விண்ணிலேயே வெடித்துச் சிதறியது.
அத்தோடு லைக்காவும் சமாதியானது.------தகவலுக்காக..



கீழே அந்த லைகாவின் படத்தைப் பார்க்கலாம்

 
http://www.rocketcityspacepioneers.com/img/first-dog-in-space-laika.jpg

Wednesday, October 29, 2014

இப்படி விவரமில்லாம இருக்கீங்களே ஜட்ஜய்யா?



ஸ்விஸ் வங்கியில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ள  627  பேருடைய பட்டியலை வேறு வழியில்லாமல் மோடி அரசு உச்ச நீதி மன்றத்திடம் அளித்து விட்டது. 

வழக்கு நடக்கும்போது அரசு வக்கீலைப் பார்த்து நீதிபதிகள் ஒரு கேள்வியை எழுப்பியுள்ளனர். 

"கறுப்புப் பணத்தை பதுக்கியுள்ளவர்களை பார்ப்பதில் ஏன் அரசு இவ்வளவு அக்கறை செலுத்துகிறது?"

இதுதான் அக்கேள்வி.

என்ன கேள்விங்க இது யுவர் ஹானர்?

ஏழை விவசாயிகளைப் பாதுகாக்கவா இந்த அரசு  இருக்கு?
கூலித் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை வழங்கவா இந்த அரசு இருக்கு?
பெட்டிக் கடை முதல் மளிகை கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளின் நலனை பாதுகாக்கும் அரசா இது?
சிறுபான்மை மக்கள் மீது எந்த தாக்குதலும் நிகழாமல் தடுக்கும் ஆட்சியாளர்களா இவர்கள்?
பெண்கள் மீது நிகழும் கொடுமைகளுக்கான மௌன சாட்சிகளாகவும் இன்னும் கொஞ்சம் மேலே போய் கொடுமைகளை நிகழ்த்துபவர்களை பாதுகாக்கும் அரசுதானே இது?
இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டுக் கம்பெனிகள் சுரண்டாமல் தடுக்கிற அரசா இது?
இந்தியப் பொருளாதாரத்தை உருவாக்கிய பொதுத்துறை நிறுவனங்கள் நாசமாக போகாமல் தடுக்கும் அரசா இது?
இந்திய மக்களின்  சேமிப்பு சர்வதேச நிதிமூலதனத்தின் கைகளுக்குச் செல்லாமல் தடுக்கும் அரசா இது?

கோடீஸ்வரர்களால், கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் கோடீஸ்வரர்களின் அரசு, கறுப்புப் பண முதலைகளை பாதுகாக்காமல் வேறு யாரை பாதுகாப்பார்கள். 

இந்த விவரம் கூட தெரியாதுங்களா ஜட்ஜய்யா?

Tuesday, October 28, 2014

இரானில் பிறந்ததுதான் அப்பெண்ணின் தவறோ?




தன்னை பாலியல் கொடுமை செய்ய முன்வந்தவனை தற்காப்பிற்காக கொன்ற காரணத்திற்காக  இரான் நீதி மன்றம்  ரெஹானா ஜப்பாரி என்ற பெண்ணை தூக்கிலிட்டுள்ளது. 

தன்னை கெடுக்க வந்தவனிடம் மண்டியிட்டு  அண்ணா என்றழைத்து சரஸ்வதி மந்திரம் சொல்லியிருக்க வேண்டும் என்று போக்கிரிச் சாமியார் ஆசாராம் பாபு சொன்னான்.

தன்னை கெடுத்தவனிடமிருந்து தப்பிக்க போராடியது தவறு என்று சொல்லியுள்ளது இரான் நீதிமன்றம்.

அடிப்படைவாதிகள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் பெண்களுக்கு எதிரானவர்களே.

அப்படிப்பட்ட அடிப்படை வாத நாட்டில் பிறந்ததுதான் அப்பெண் செய்த மிகப் பெரிய தவறு போலும்.

அந்தப் பெண் தனது தாய்க்கு எழுதிய கடிதம் நம் உள்ளத்தை உருகச் செய்யும். அப்பெண் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு   இரான் அரசு என்ன பதில் சொல்லும்?

கேன்ஸர், இதய நோயாளிகள் படிக்க வேண்டாம்

மோடி அவர்களுக்கு அளித்துள்ள பரிசு இது.


சமீபத்தில் மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ்பஸ்வான் அளித்த ஒரு பேட்டியில் மக்களுக்கு மருந்துகள் மற்றும் மருத்துவ சேவைகள் இலவசமாக அளிக்கப்படும் என்றும், அத்தியா வசிய மருந்துகளின் விலைகள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ளப்படும் என்று கூறியுள்ளார். இவர் சொன்னதற்கும், அவர் அங்கம் வகிக்கும் தேசிய ஜன நாயக கூட்டணி அரசு செய்கின்ற செயலுக்கும் சம்பந்தமே இல்லை.


கடந்த செப்டம்பர் 22ஆம் தேதியன்று மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையின் மூலம் ஏற்கனவே விலை நிர்ணய கட்டுப்பாட்டிற்குள் இருந்த 108 மருந்துகளின் விலைகளை சந்தையும், மருந்து நிறுவனங்களும் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று அனைத்து தடைகளையும் நீக்கியது.
இந்த அறிவிப்பு ஓர் தொடர்ச்சியாகவே காணப்படுகிறது. ஏற்கனவே மருந்துகளின் விலைகள் உயர்ந்து கொண்டுதான் உள்ளது. உதாரண மாக இருதய நோய்க்காக பொருத்தப் பட்ட `ஸ்டெண்ட்’ எனும் இருதயகருவியை அபாட் எனும் பன் னாட்டு நிறுவனம் ரூ.40,700 க்கு இறக்குமதி செய்து ரூ.1,20,000 க்கு இந்திய மக்களுக்கு விற்கிறது. என்ன விலை வித்தியாசம் பாருங் கள். கிட்டத்தட்ட மூன்று மடங்கு லாபம்.இந்திய நாட்டில் 4.1 கோடி மக்கள் சர்க்கரை நோயாலும், 6கோடி பேர் ரத்த அழுத்த நோயினாலும், 5.7 கோடி பேர் இருதய நோயினாலும் 22லட்சம் பேர் காச நோயினாலும், 11லட்சம் பேர் புற்றுநோயாலும், 22 லட்சம் பேர் எயிட்ஸ் நோயினாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய நாட்டில் அரசு மருத்துவ மனை களில் போதுமான தரமான மருத்துவசேவைகள் இல்லாத காரணத்தி னால், மக்கள் தனியார் மருத்துவ மனைகளை நாடிச் செல்கின்றனர். தனி நபர் ஒருவர் தன்னுடைய வருமானத்தில் 36 சதவீதம் மருத்துவத் திற்காக செலவு செய்கிறார். 
 


2004ல் இந்த செலவு மாதம் ரூ. 391 ஆக இருந்தது. 2012ல் ரூ. 1083 ஆக உயர்ந்துள்ளது. அரசு முறையான மக்கள் நலக் கொள்கைகளை அமல் படுத்தி இருந்தால் இத்த கைய செலவுகளை தவிர்த்திருக்கலாம். குறிப்பாக சுகாதார மேம்பாடு, நோய் தடுப்பு திட்டங்கள், மருத்துவ உயர் சிகிச்சை, நவீன மருத்துவம் போன்றவற்றை நடை முறைப்படுத்தியிருக்க வேண்டும். இவற்றை அமல் படுத்திட 10.7 லட்சம் கோடி தேவைப்படுகிறது. ஆனால் இந்திய அரசு 12வது ஐந்தாண்டு திட்டத்தில் வெறும் 3.8 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டு அதுவும் சரிவர பயன்படுத்தப்படவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றது.

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் மோடி எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் இந்தியாவை மாற்றுகின்றேன் என்று கூறி வந்தார்.
இந்திய பன்னாட்டு முதலாளிகளும் இவருக்கு ஆதரவாக களம் இறங்கிவெற்றி பெறச் செய்து ஆட்சி பீடத்தில் அமர்த்தினர். அமர்த் திய 6 மாதங்களில் மக்களின் வாழ்க் கையில் விளையாட தொடங்கி விட்டார். தன்னை ஆட்சியில் அமர்த்திய, முதலாளிகளுக்கு ஆதரவாக கொள்கைகளை திட் டங்களை தொடர்ந்து அமல்படுத்தி வருகிறார்.உதாரணமாக கடந்த பல ஆண்டுகளாக இடது சாரிகள், முற்போக்கு அமைப்புகள் போராடி உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பின்னர் மருந்து விலை நிர்ணய ஆணை அமலுக்குவந்தது. அதாவது உயிர் காக்கும் மருந்துகளின் விலைகளை அரசே நிர்ண யிக்கும் என்பதுதான்.2014 மே மாதத்தில் 489 மருந்துகள் மருந்துவிலை நிர்ணய கட்டுப்பாட்டிற்குள் இருந்து வந்தது. கடந்த ஜூலை மாதத்தில் சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம், இருதய நோய், தடுப்பூசி போன்ற 108 மருந்துகளின் விலை களை மருந்து விலை நிர்ணய கட்டுப்பாட்டிற்குள் வரும் என்று அரசு அறிவித்து அதன்படி விலை களும் குறைக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் செலவு குறையும் என்று எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அறிவிப்பு வந்தவுடன் பன்னாட்டு இந்திய நாட்டு மருந்து நிறுவன பெரும் முதலாளிகள் புலம்பினர்.

இந்திய பார்மசிட்டுகள் அலையன்ஸ் அமைப்பின் தலைவர் கே.கே.ஷா அவர்கள் இந்த விலை குறைப்பினால் 5500 கோடி ரூபாய்மருந்து நிறுவனங்களுக்கு இழப்புஏற்படும் என்றும், மொத்த வர்த்த கத்தில் 12 சதவீதம் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறியுள்ளார். இதைக்கேட்ட மோடி அரசு தனது எஜமானர்களுக்கு விசுவாசம் காட்டும் விதமாக உடனடியாக கடந்த 2014 செப்டம்பர் மாதம் 108 மருந்துகளின் விலைகளை அரசு நிர்ணயிக்காது என்றும், மருந்து நிறுவனங்களே விலையை நிர்ணயித்துக் கொள்ளும் என்று அறிவித்தார். இந்த செயலின் அர்த்தம் என்னவெனில் இழப்பு ஏற்படும் என்று சொன்ன ரூ.5500 கோடியை மருந்துகளின் விலைகள் ஏற்றத்தின் மூலமாக ஏழை, எளிய மக்களின் தலையில் சுமத்தப்படும் என்பதுதான். அறிவிப்பு வந்தவுடன் மருந்து நிறுவனங்கள் விலைகளை பல மடங்கு உயர்த்தியுள்ளது. விபரங்கள் அட்டவணைக்குள்மருந்து நிறுவன முதலாளி களுக்கு இந்த சலுகை மட்டும் போதவில்லையாம் மேலும் பல்வேறு சலுகைகள் அரசு செய்து தர வேண்டும் என்று பிரமல் லபேராட்டரிஸ் இயக்குநர் அஜய் பிரமல் கூறுகிறார். 

அவர் இந்திய காப்புரிமை சட்டம் முழுமையாக திருத்தப்பட வேண்டும், மருந்து பரிசோதனைகளில் உள்ள தடை களை நீக்க வேண்டும் , மருந்துகளை பரிந்துரைக்க மருத்துவர்களுக்கு அளிக்கும் லஞ்ச லாவண்யங்களை அரசு கண்டு கொள்ளக்கூடாது என்று வெட்ட வெளிச்சமாக கூறி யுள்ளார்.இந்த (மத்திய அரசு ஏழை, எளிய மக்களின் நலனை காக்கும் கொள்கைகளை வகுக்கும் அர சாக இல்லை மாறாக பெரும் முத லாளிகளின் லாபத்தை பெருக்கும் ஆணைகளை பிறப்பிக்கும் அரசாக உள்ளது) இந்திய மக்களின் நலனை பாதுகாத்திட அரசு முன் வர வேண்டும். அதற்கான இயக்கங்களை, போராட்டங்களை அனைத்து பகுதி மக்களும் நடத் திட வேண்டும்.கே.சி.கோபிகுமார்.

நன்றி தீக்கதிர் 28.10.2014
 

Monday, October 27, 2014

மண் சோறு சாப்பிட்ட வேலூர் மேயரின் கவனத்திற்கு

















மேலே உள்ள புகைப்படங்கள் எங்கள் வீடு அமைந்துள்ள தெருவில் இருந்து பிரதான சாலைக்கு செல்லும் சாலை. வெறும் இருநூறு மீட்டரில் எத்தனை குழிகள் என்பதைப் பாருங்கள். இந்த சாலை அமைக்கப்பட்டு மூன்று வருடங்கள்தான் ஆகிறது. அதற்குள் இவ்வளவு லட்சணமாக உள்ளது.

இது வெறும் மாதிரி மட்டுமே. பெரும்பாலும் வேலூர் முழுதுமே இந்த நிலையில்தான் உள்ளது. வேலூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப் பட்டதே தவிர பணிகள் தரம் மிகவும் மோசமாகவே உள்ளது.

ஆனால் இதையெல்லாம் கவனிக்க எங்கள் மேயருக்கு எங்கே நேரம் இருக்கிறது. அம்மாவின் விடுதலைக்காக உண்ணாவிரதம், கடைகளை அடைக்கச் சொல்வது, மனிதச் சங்கிலி ஆகியவற்றுக்கே நேரம் கிடைக்கவில்லை. இதிலே மண் சோறு சாப்பிட்ட ஒரே பெருமையும் அவருக்கே உண்டு.

சரி அம்மாதான் ஜாமீனில் வெளியே வந்து விட்டீர்களே, இனியாவது மாநகராட்சிப் பணிகளை பார்ப்பார்கள் என்று நம்பிக்கையோடு இருந்தால், வழக்குகளிலிருந்து விடுதலை பெற மீண்டும் பூஜை, புனஸ்காரங்களை தொடர வேண்டும் என்று வேறு தலைமைக் கழகம் சொல்லி விட்டது.

ஆக அம்மா நிரபராதி என்று தீர்ப்பு வரும் வரை நாங்கள் இந்த சாலையில் செல்வதற்கு சபிக்கப்பட்டவர்கள்.

மேயருக்கு ஒரு ஆலோசனை. இந்த சாலையை சரி செய்தால் அடுத்த முறை நீங்கள் மண் சோறு சாப்பிட இந்த இடம் கூட பொருத்தமாக இருக்கும்

Sunday, October 26, 2014

படங்களோடு ஒரு கதை



தீக்கதிர் ஞாயிறி இணைப்பிதழான வண்ணக்கதிரில் இன்று பிரசுரமான எனது சிறுகதை. இக்கதைக்கான ஓவியங்களை தீட்டியது தோழர் ஸ்ரீரசா




“பிறந்த நாள், இன்று பிறந்த நாள்
வேலூர் சுரா

அதிகாலை ஐந்து மணிக்கு அலைபேசி “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்று அழைக்கும் போதே எனக்கு தெரிந்து போனது அது அமெரிக்காவில் இருக்கும் மகள் சௌந்தர்யாவின் அழைப்புதான் என்று. குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே முதலில் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்பவள் அவள்தான். திருமணமாகி அமெரிக்கா சென்ற பின்பும் கூட  காலை நான் எழுந்து கொள்ளும் ஐந்து மணிக்கு சரியாக தொலைபேசியில் கூப்பிடுவாள்.

ஆம், சௌந்தர்யாதான். “ஹேப்பி பர்த்டே டாடி என்றுதான் ஆரம்பித்தாள். அம்மாவின் உடல் நலன் குறித்த விசாரித்தல், அமெரிக்க குளிர் என்றெல்லாம் பேசி விட்டு மாப்பிள்ளையின் வாழ்த்தைப் பெற்று குட்டிப் பேரனின் மழலை மொழி வாழ்த்தை மனம் குளிர கேட்டு மனைவியிடம் போனை கொடுத்து விட்டு பல் துலக்கச் சென்றேன். திரும்பி வந்த போது பார்த்தால் அம்மாவும் பெண்ணும் இன்னும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இதோ ஐந்தே நிமிடம், காபி ரெடி பண்றேன், அத குடிச்சுட்டு வாக்கிங் போங்க” என்ற குரல் மனைவியிடமிருந்து வர

“நான்தான் இன்னிக்கு வாக்கிங் போகப் போறதில்லையே, நீ நிதானமா வா என்று சொல்லி பேப்பர் வந்து விட்டதா என்று பார்க்க வீட்டுக்கு வெளியே வந்தேன். மார்கழி மாதக் குளிர் காற்று சில்லென்று மேலே பட்டு புத்துணர்ச்சி தந்தது. பேப்பர் இன்னும் வந்திருக்கவில்லை. அலைபேசி வாயிலாக முகநூல் சென்றால் இரண்டு நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார்கள்.

முன்பு சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பாகும் “பிறந்த நாள், இன்று பிறந்த நாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் நீங்கி மலர்ந்த நாள் என்ற பாடல் மனதிற்குள் ஒரு முறை ஓலித்து ஓய்ந்தது. போன வருட பிறந்த நாள் நினைவுக்கு வந்தது. மறக்க முடியுமா அந்த நாளை?

பொதுத்துறை வங்கியில் கிளார்க்காக பணியில் சேர்ந்த நான் படிப்படியாக பதவி உயர்வு பெற்று பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் சொந்த ஊரான திருச்சி மண்டலத்திற்கே பொது மேலாளராக வந்து சேர்ந்தேன். பள்ளியில் சேர்க்கும்போது கொடுத்த பிறந்த நாள் ஒன்று. நான் நிஜமாகவே பிறந்த நாள் ஒன்று. என்னுடைய ஒரிஜினல் பிறந்த நாள் என் குடும்பத்தவரைத் தவிர அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது. முக நூலில் இணைந்த போது என்னுடைய நிஜமான பிறந்த நாளான டிசம்பர் இருபத்தி ஐந்து என்பதை பதிவு செய்திருந்தேன்.

அதுதான் கடந்த ஆண்டு பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டது. 

வழக்கம் போல காலையில் மகளோடு பேசி விட்டு வாக்கிங் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த போதுதான் எனது பி.ஏவும் இன்னும் இரண்டு ஊழியர்களும் உள்ளே வந்தனர்.

“ஹேப்பி பர்த் டே சார்” என்று சிரித்தபடியே உள்ளே வந்தார்கள். பிஏ சத்யன் கையில் வைத்திருந்த ரோஜாப்பூ மாலையை கழுத்தில் போட இன்னொருவர் சால்வை அணிவிக்க மற்றொரு ஊழியர் பளபளக்கும் காகிதத்தில் பேக் செய்யப்பட்ட ஒரு பரிசை கொடுத்தார். அது ஒரு புத்தகம் என்பதை பேக்கிங்கைப் பார்த்தே  தெரிந்து கொள்ள முடிந்தது.

“இன்னிக்கு என் பிறந்தநாள்னு உங்களுக்கெல்லாம் எப்படிப்பா தெரியும் என்று ஆச்சர்யத்தோடு நான் கேட்க, அதான் பேஸ்புக்கில பார்த்தோமே என்று சத்யன் பதிலளித்தான். அவன் கையில் வைத்திருந்த  அலைபேசியில் என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டு அப்போதே முகநூலில் அதை பதிவும் செய்தான்.

பிறகு கொஞ்சம் தயக்கத்தோடு

“சார், இன்னிக்கு உங்க பிறந்த நாள்னு எல்லா ஆபிசருங்களுக்கும் தெரியும், ஒவ்வொத்தரா வருவாங்க, நீங்க கொஞ்சம் குளிச்சிட்டு ஃபிரஷ்ஷா ரெடியாயிடுங்களேன்

“எதுக்குப்பா இதெல்லாம் என்று வாய் கேட்டாலும் மனசு என்னமோ சந்தோஷமாகத்தான் இருந்தது. என்னுடைய அந்தஸ்தைப் பார்த்தாயா என்று கண்களாலேயே மனைவியிடம் கேட்டேன். அவளும் புன்முறுவலோடு அதை அங்கீகரித்தாள். கொஞ்சம் உள்ளே வரச் சொன்னாள்.

“என்னங்க, உங்களைப் பார்க்க எல்லோரும் வந்தால் அவர்களுக்கு கொடுக்க டிபன் ஏதாவது ரெடி பண்ணட்டுமா? என்று அவள் கேட்க நான் சத்யனை அழைத்தேன்.

சத்யன் புத்திசாலி. “மேடம், நீங்க எதுவும் சிரமப்பட வேண்டாம். நான் ஏற்பாடு செஞ்சுடறேன். சார் நீங்க முதல்ல ரெடியாகுங்க என்றான்.

நான் குளித்து விட்டு புதிதாக வாங்கிய சந்தனக் கலர் சபாரியை அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தால் ஹால் முழுதும் நிரம்பி இருந்தது. என்னுடைய துணைப் பொது மேலாளர் ஒரு பிரம்மாண்டமான மலர்க் கொத்து ஒன்றை கையில் கொடுத்து ‘ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே என்று வாழ்த்தினார். வராக்கடன்களை  வசூலிப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்று நேற்று  அவரை வறுத்தியெடுத்திருந்தேன். அந்த சாயலே அவரது முகத்தில் தெரியவில்லை.

வழக்கமாக அலுவலக நிகழ்வுகளுக்கு உணவு சப்ளை செய்யும் ஹோட்டலில் இருந்து கேசரி, பூரி, பொங்கல், காபி என்று வந்து இறங்கியிருந்தது. ஹோட்டல் ஆட்களும் இரண்டு கடைநிலை ஊழியர்களும் எல்லோருக்கும் உணவு பறிமாறினர். ஒரு ஒன்பது மணிக்குள் ஒரு எழுபத்தி ஐந்து பேர் வந்திருப்பார்கள்.

ஒரு அரை மணி நேரத்துல வந்திடறேன் என்று சொன்ன சத்யன் திரும்பி வரும் போது கையில்  ஒரு பெரிய அட்டை டப்பா இருந்தது. ஹாலின் நடுவில் ஒரு டேபிளைப் போட்டு அந்த பெட்டியை பிரித்தான். அலங்காரங்களோடு ஒரு பெரிய கேக். நடுவில் “ஹேப்பி பர்த்டே சுந்தர வரதன் சார்” என்று எழுதியிருந்தது. என் மக்ளுக்கும் பேரனுக்கும் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறேனே தவிர நான் முதன்முதலாக அன்றுதான் கேக் வெட்டினேன்.

தஞ்சை, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை என்று என் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ஒரே ஒரு யூனியன் ஆட்கள் மட்டும் வரவில்லை. அவங்களுக்கு விஷயம் தெரியாதா என்று  வாய் விட்டே கேட்டு விட்டேன்.

“சார் இன்னிக்கு வெண்மணி தினமில்லையா, அதனால் காலையிலேயே கிளம்பி திருவாரூர் போயிட்டாங்க” என்று சத்யன் பதில் சொல்ல, “ஊர்ல இருந்தா மட்டும் வந்திருக்கவா போறாங்க என டிஜிஎம் பதில் சொன்னது சரியாக இருக்கும் என்று தோன்றியது.

எல்லாம் ஓய்ந்து வீட்டை சுத்தம் செய்யும் போது என் மனைவி சொன்னாள், “நீங்க ஒரு சால்வைக் கடையே வைக்கலாம். அத்தனை சால்வை

மூன்று மாதத்தில் நான் பணி ஓய்வு பெறும் போது சத்யன் சொன்னான்

“ஏசு நாதர் அவதரித்த நாளில் நம்ம சாரும் பிறந்தார். அதனாலதான் அவர் மிகவும் கனிவாக இருக்கார். கிறிஸ்துமஸ் அன்று மத்தவங்க சர்ச்சுக்கு போறாங்களோ இல்லையோ சாரோட ஆசிர்வாதம் வாங்க நான் அவர் வீட்டுக்கு கண்டிப்பாக போவேன்”  மற்றவர்களும்  அதை வழி மொழிந்தார்கள்.

தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்த ஒலி என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. என்னிடம் டிஜிஎம்மாக இருந்து இப்போது என்னுடைய இடத்திலிருப்பவர்தான் குறுஞ்செய்தியில் வாழ்த்து அனுப்பியிருந்தார். “நேரில் வர முடியலனாக்கூட ஒரு போன் செஞ்சு பேச முடியாதா? அவனுக்கு தெரிஞ்ச மரியாதை இவ்வளவுதான்” என்று மனதிற்குள் பொருமிக் கொண்டே குளிக்கச் சென்றேன்.

மனைவி வாங்கிக் கொடுத்த பட்டு வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து நண்பர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினேன். கடந்தாண்டு போல ஹோட்டலிலிருந்து வரவழைக்காமல் நேற்றே கடைக்குச் சென்று ஸ்வீட், மிக்ஸர், குளிர்பானம் எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். சொத்து, சொந்த வீடு, கார், வைப்புத்தொகை, ஷேர் என்று என்ன இருந்தாலும் பென்ஷன் வாங்குபவன்தானே.

ஒரு ஒன்பது மணி இருக்கும். சத்யனிடமிருந்து தொலைபேசி வந்தது. குழந்தைகளின் தொல்லை தாங்காமல் சுற்றுலா சென்றுள்ளதாகவும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பணிவோடு சொல்லி வாழ்த்துக்களைச் சொன்னான். அதனாலென்ன, பரவாயில்லை என்று நானும் பெருந்தன்மையாக சொன்னாலும் “அடப்பாவி என்னவெல்லாம் அளந்து விட்டான் என்று கோபம் கோபமாக வந்த்து.

நேரம் ஓடிக்கொண்டே இருந்த்து. அவ்வப்போது சில குறுஞ்செய்திகள் மட்டும் வந்து கொண்டிருந்த்தே தவிர யாரும் வீட்டிற்கு வரவில்லை. முக நூல் நண்பர்களின் வாழ்த்துச் செய்திகள் மட்டுமே ஏதோ கொஞ்சம் ஆறுதல் அளித்த்து. பிறந்த நாள் ஸ்பெஷலாக மனைவி செய்திருந்த பால் பாயசம் நன்றாக இருந்தாலும் ஏனோ ருசிக்கவில்லை. நான் அப்படியொன்றும் மோசமான அதிகாரியாக இல்லையே, என்னால் முடிந்தவரை நல்லதுதானே செய்தேன். ஆனாலும் இப்படி ஒதுக்கி வைத்து விட்டார்களே என்று வருத்தமாக இருந்த்து.

வாங்கி வைத்த ஸ்வீட்டுக்களும் மிக்ஸரும் என்னை பார்த்து ஏளனம் செய்த்து போலவே தோன்றியது. தூக்கி குப்பைத் தொட்டியில் எரியலமா என்று நினைத்து கடைசி நிமிட்த்தில் மனம் மாறி காரில் அந்த பார்சலை வைத்தேன். மனைவியை அழைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் விடுதிக் குழந்தைகளுக்கு வினியோகம் செய்தோம். அந்த குழந்தைகள் எல்லாம் ஒன்று சேர “ ஹேப்பி பர்த் டே தாத்தா “ என்று சொன்னதில் மனது கொஞ்சம் லேசானது. மலைக்கோட்டைக்குப் போய் அங்கிருந்து மின் விளக்குகளால் மின்னுகிற திருச்சி நகரின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்த்தில் ஏமாற்றம் சுத்தமாக விலகி பழைய உற்சாகத்துடன் வீடு திரும்பினோம்.

மறு நாள் காலை பார்க்குக்கு வாக்கிங் செல்கையில் எனக்கு முன்பே அங்கு வந்திருந்த எனது கல்லூரி சீனியரும் பெல்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற விக்டர் “என்னப்பா சுந்தர வரதன், பிறந்த நாளெல்லாம் நல்லா போச்சா “ என்று கேட்ட்தும் அவரிடம் பொறிந்து தள்ளி விட்டேன்.

“பிறந்த நாள் கொண்டாடுங்கனு இவங்களையெல்லாம் போன வருஷம் நானா கேட்டேன். இந்த வருஷம் இப்படி அநியாயமா ஒதுக்கிட்டாங்களே!

அவர் மிகுந்த நிதானத்துடன் சொன்னார்.

“அவங்க போன வருஷம் உன்னோட பிறந்த நாளை கொண்டாடல, அவ்ங்களோட ஜெனரல் மேனேஜரோட பிறந்த நாளை