Showing posts with label அதிகார துஷ்பிரய்ப்கம். Show all posts
Showing posts with label அதிகார துஷ்பிரய்ப்கம். Show all posts

Friday, September 4, 2020

போலீஸானாலும் உண்மைக்கு தண்டனைதான்...

  


ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி வருண்குமார் அங்கிருந்து அதிரடியாக தூக்கப்பட்டுள்ளார்.  அவருக்கு புதிய பணியிடம் எதுவும் அளிக்கப்படவில்லை.

 காரணம் என்ன தெரியுமா?

 எச்.ராசாவின் பிண அரசியல் பற்றி முந்தைய பதிவில் எழுதியிருந்தேன்.

 ராமநாதபுரம் காவல்துறை அந்த சங்கியின் கொலையில் மதப் பின்னணி எதுவும் கிடையாது என்று அறிக்கை வெளியிட்டதையும் குறிப்பிட்டிருந்தேன்.



 வருண்குமார் மாவட்ட காவல்துறை அறிவிப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டு, பார பட்சமில்லாமல் விசாரணை செய்து உண்மையான குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என்று எழுதியதோடு வதந்திகளை நம்பாதீர்கள் என்ற வேண்டுகோளோடு தேசியக்கொடியின் பின்னணியில் அனைத்து மதத்தவரும் கரம் கோர்த்து நிற்பது போன்ற படத்தையும் போட்டுள்ளார்.

 கலவரத்தை தூண்ட எச்.ராசா போன்ற காவிக்கயவர்கள் மேற்கொண்ட முயற்சியை முறியடித்ததோடு மத நல்லிணக்கத்தை வேறு வலியுறுத்தி விட்டார்.

 பொறுக்குமா  சங்கிகளுக்கு?

மத்தியரசின் தலையீட்டில் எஸ்.பி யை காத்திருப்போர் பட்டியலில் வைத்து விட்டார்கள்.

பாஜக - அதிகமுக மோதல் எல்லாம் வெறும் நாடகம் என்பதும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

வால்டர் வெற்றிவேலை செருப்பை எடுத்து வரச் சொன்ன ராயப்பன் போன்றுதான் பெரும்பாலான ஆட்சியாளர்கள் போலீஸை நடத்துகிறார்கள். அவர்களும் அதை மௌனமாக ஏற்பதும் அந்த கடுப்பை அப்பாவி மக்களிடம் காண்பிப்பதும்தான் கொடுமை.