Showing posts with label ஆட்டு அண்ணாமலை. Show all posts
Showing posts with label ஆட்டு அண்ணாமலை. Show all posts

Friday, October 8, 2021

அண்ணாமலைடா, உளறல் மோடி சிஷ்யன்டா?

 


அந்த கட்சியில் சேரும் போதே பாரதிராஜா கட்சி என்று சொன்ன மனிதன். மாண்புமிகு பாரதப் பிரதமர் மகாத்மா காந்தி என்று சொன்னவர் ஒரு முன்னூறு வருடத்தை மாற்றிச் சொன்னதில் அதிசயம் என்ன இருக்கிறது. என்ன இருந்தாலும் மோகன்லால் கரம்சந்த் காந்தி என்று சொன்ன மோடியின் சிஷ்யனல்லவா?

 நிஜமாகவே சத்ரபதி சிவாஜி காளிகாம்பாள் கோயிலுக்கு வந்தாரா என்பதே ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயம் என்று சென்னையின் வரலாற்று பற்றி பல கட்டுரைகளும் ஆரம்ப கால வெள்ளைக்காரர்கள் பற்றி வலம் எனும் நாவலையும் எழுதிய எழுத்தாளர் வினாயக முருகன் சொல்லியுள்ளார்.

 அண்ணாமலை சொன்ன காலகட்டத்தில் ஒரு வேளை “ராமன் எத்தனை ராமனடி?” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்திருக்கலாம். அந்த படத்தில் ஒரு காட்சியில் சத்ரபதி சிவாஜியாகவே வரும் நடிகர் திலகம் அக்காட்சிக்காக செய்து கொண்ட உடையலங்காரம், ஒப்பனையோடு காளிகாம்பாள் கோயில் போயிருக்கலாம். அது செவி வழிச் செய்தியாக ஆட்டுக்காரரின் காதிற்கும் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது..

 பிகு  1 : மாலன் பதுங்கிக் கொண்டதால் கண்டெண்ட் இல்லாமல் போய் விடுமே என்ற அச்சத்தை போக்கியவர் அண்ணாமலை. நாளை இன்னும் இரண்டு பதிவுகள் உள்ளன.

பிகு 2 : புளிச்ச மாவு ஆஜானைத்தான் உளறு வாயன் என்று தோழர் ஆதவன் தீட்சண்யா கூறுவார். அந்த பட்டத்தை அண்ணாமலைக்கும் கொடுக்கலாமே.

Saturday, September 18, 2021

ஆளுனர் அவ்வளவு வொர்த்தில்லையாமே!

 


 கனவுகள், கற்பனைகளில் மிதக்கும் சங்கிகளின் லேட்டஸ்ட் கனவு தமிழகத்திற்கு புதிதாக வரப் போகிற ஆளுனர் ரவி.



பாஜக மாநிலத் தலைவர் ஒரு ஐ.பி,எஸ், ஆளுனர் ஒரு ஐ.பி,எஸ். எனவே ரெண்டு ஐ.பி.எஸ் களும் சேர்ந்து தமிழ்நாட்டு அரசை ஒரு கை பார்த்து அடக்கி ஒடுக்கி விடுவார்கள் என்று கனவுகளில் மிதக்கத் தொடங்கி விட்டனர்.

ஒட்டு மொத்த மீடியோவையும் ஆறு மாதத்தில் ஒடுக்கி விடுவேன் என்று சவால் விட்ட ஆட்டுக்காரர் இன்று ஒரே ஒரு வீடியோவால் ஒடுங்கிப் போய் உட்கார்ந்து கொண்டுள்ளார்.

 வரப்போகும் ஆட்டுத்தாடி இவர்கள் தம்பட்டம் அடிப்பது போல  நாகாலாந்தில் அப்படி  ஒன்றும் கிழிக்கவில்லை.  மேலும் டெல்லி போகும் போதெல்லாம்  சுக போக வாழ்வு நடத்த முந்தைய காலத்தில் ஒதுக்கப்பட்ட பங்களாவை காலி செய்யாமல் அதற்கு ஈடாக இரண்டு விதவை ஊழியர்களை நடுத்தெருவில் நிறுத்திய புண்ணியவான் என்றும் தெரிகிறது.

 தங்கள் மனைவிகளிடம் அடி வாங்கும்  சகலைகளான ஆர்.சுந்தரராஜனும் வடிவேலுவும் ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வது போன்ற காட்சி ஒன்று வி.சேகர் படமொன்றில்  வரும்.

 அது போல ஆட்டுத்தாடியும் ஆட்டுக்காரரும் பரஸ்பரம் ஆறுதல் சொல்லும் காட்சியை வேண்டுமானால் சங்கிகள் கற்பனை செய்து கொள்ளட்டும். அதற்குத்தான் வாய்ப்பு உள்ளது.

பிகு: எழுதி ஒரு வாரம் ஆனது. இன்று ஆளுனர் பதவியேற்பதை முன்னிட்டு அவரை வரவேற்கவே இந்த பதிவு.

 

Friday, July 16, 2021

அசிங்கப்படாதே ஆட்டு அண்ணாமலை

 


ஆறு மாதங்களில் ஊடகங்களை ஒன்றியஅமைச்சர் எல்.முருகன் அடக்கி விடுவார் என்ற ஆட்டு அண்ணாமலையின் திமிர்த்தனமான, அதே நேரம் முட்டாள்தனமா பேச்சிற்கு ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் கொடுத்த சூடு கீழே.

சிரிப்பு போலீஸ்
இன்று சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு நான் அளித்த சிறு பேட்டியில் சொன்னது:
முருகன் செய்தி ஒளிபரப்புத் துறை அமைச்சராகி இருப்பதால் ஊடகங்களை நாம் 6 மாதத்திற்குள் கட்டுப்படுத்தலாம், கையிலெடுக்கலாம் என்று பிஜேபி தலைவர் அணணாமலை பேசியிருக்கிறார்.

முருகனின் அப்பா சிவபெருமானையே எதிர்த்துக் கேள்வி கேட்ட நக்கீரன் பரம்பரையில் வந்த பத்திரிக்கையாளர்களை இப்படி இவர் ‘மிரட்டுவது’ சிறுபிள்ளைத் தனமானது. சினிமாவில் வரும் சிரிப்பு போலீஸ் கூட இப்படிப் பேச மாட்டார்கள். வேலூர் ஜெயில வெள்ளையடிச்சு வாடகை விட்ட பரம்பரை நான் என்கிற சினிமா வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

இப்படி அசிங்கப்படுவதை விட அண்ணாமலை மீண்டும் ஆடு வளர்க்கவே சென்று விடலாம்.