Showing posts with label மன்னிப்பு. Show all posts
Showing posts with label மன்னிப்பு. Show all posts

Sunday, March 30, 2025

சங்கிகளுக்கு மன்னிப்பெல்லாம் சாதாரணமப்பா . . .

 


கீழேயுள்ள செய்தியை படியுங்கள்.


கோழை சாவர்க்கர் காலம் தொடங்கி இன்றைய நாள் வரை மன்னிப்பு கேட்பதெல்லாம் சங்கிகளுக்கு சாதாரணமான விஷயம். சொல்லப் போனால் மன்னிப்பு கேட்பது என்பதுதான் சங்கிகளின் பாரம்பரியம் . . .

Friday, December 2, 2022

அது சாவர்க்கர் மன்னிப்பல்ல . . .

 


மோடி விளம்பரம் செய்த, மொட்டைச்சாமியார் உள்ளிட்ட பாஜக முதல்வர்கள் வரி விலக்கும் விடுப்பும் கொடுத்த "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தை கழுவி கழுவி ஊற்றிய கோவா சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குழுவின் தலைவர் நடவ் லேபிட் மன்னிப்பு கேட்டு விட்டார் என்று சங்கிகள் புளகாங்கிகத்தோடு ஒரு செய்தியை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அச்செய்தி உண்மையா?

அம்பாள் என்றைக்கடா பேசியிருக்கிறாள்? என்பது போல சங்கிகள் என்றைக்கடா உண்மை பேசியிருக்கிறார்கள் என்ற உங்கள் குரங்குக் குளியல் எனக்கு கேட்டு விட்டது.

அவர் சங்கிகளின் பிதாமகர்கள் செல்ஃபி சாவர்க்கரோ, ஆர்.எஸ்.எஸ் தேவரஸோ இல்லை, சர்வ சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கேட்க . .

"காஷ்மீரில் பாதிக்கப்பட்ட பண்டிட்டுகள் யாருக்காவது நான் சொன்னது மனதை புண்படுத்தி இருக்குமானால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

அதே நேரம் "காஷ்மீர் ஃபைல்ஸ்" திரைப்படத்தைப் பற்றிய எங்கள் தேர்வுக் குழுவின் கருத்தின் எந்த மாற்றமும் இல்லை. வெறுப்புணர்வை தூண்டும் இழிவான பிரச்சாரப் படம் அது என்பதில் உறுதியாக இருக்கிறோம்" 

என்றுதான் அவர் கூறியுள்ளார்.

சர்ச்சையே அவர் திரைப்படம் பற்றி கூறியதுதான். அந்த கருத்தில் மாற்றம் இல்லை என்று சொல்கிற போது மன்னிப்பு கேட்டார் என்பதே அபத்தமானதல்லவா!

என்ன! தாங்கள் அடி முட்டாள்கள் என்பதை சங்கிகள் மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளார்கள். அவ்வளவுதான் . . .


Monday, March 14, 2022

சாவர்க்கரின் சிஷ்யை ஒரு பிக்பாக்கெட்

 


ரூபா தத்தா ஒரு பெங்காலி திரைப்பட, தொலைக்காட்சி நடிகை. சங்கிகளின் ஒரு ரௌடிகள் பிரிவான கர்னி சேனாவின் மேற்கு வங்கத் தலைவரும் கூட. 

அவர் பெயர் நேற்று எல்லா ஊடகங்களிலும் அடிபட்டது.

ஏன்?

கொல்கத்தாவில் நடைபெற்று வருகிற சர்வதேச புத்தகக் கண்காட்சியில் அவர் பிக்பாக்கெட் அடித்த போது சிக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஒரு பையை அவர் குப்பைத் தொட்டியில் வீசியெறிய காவலர்கள் அதை பார்த்துள்ளார்கள். அந்த பைக்குள்ளாக ஏராளமான பர்ஸ்கள். இதற்கு அவரால் விளக்கம் சொல்ல முடியாத காரணத்தால் கைது செய்யப் பட்டுள்ளார். நீதிமன்றத்தால் பிணையும் மறுக்கப்பட்டு விட்டது.

சாவர்க்கரை வணங்குபவருக்கு அவர் பாணியில் மன்னிப்பு கேட்டு தப்பிக்கத் தெரியாதா என்ன?



மன்னிப்பு கொடுக்கத்தான் மேற்கு வங்க ஆட்டுத்தாடியும் கூடவே இருக்கிறாரே!



Friday, November 6, 2020

மண்டியிட்டு மன்னிப்பு கேள் திருப்பதி நாராயணா!

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்களின் முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

இன்று News18 Tamil Nadu தொலைக்காட்சி விவாதத்தில் பாஜகவின் திரு.நாராயணன் Narayanan Thirupathy தாங்கள் கடந்த காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதே இல்லை என்றார்
கடந்த 2017, ஜூன் மாதம் 22ந் தேதியன்று பாஜகவின் இராமநாதபுரம் நகர நிர்வாகி அஸ்வின் குமார் மற்றும் அவரது தந்தை கடுமையாக தாக்கப்பட்டனர். இது குறித்து எச்.ராஜா வெளியிட்ட பத்திரிகைச் செய்தியில் அஸ்வின்குமார் மற்றும் அவரது தந்தை “முஸ்லீம் பயங்கரவாதிகளால் மிருகத்தனமாக தாக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என்று கூறியிருந்ததையும் . இதேபோன்று நாராயணன் “தமிழக காவல்துறை தலிபான்கள் அதிகம் உள்ள இராமநாதபுரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். சிரமம் இருப்பின் இந்த மாவட்டத்தை மத்திய அரசின் பொறுப்பில் விட்டுவிட்டால் ஒரே மாதத்தில் பயங்கரவாதத்தை வேரோடு அறுக்கும்” என்று தனது பதிவிட்டிருந்த்தையும் சுட்டிக்காட்டினேன்..ஆனால் அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் யாருமே இஸ்லாமியர்கள் இல்லை.பாஜகவின் நோக்கம் மதமோதலை உருவாக்கி அதில் பலனடைவதுதான் என்றேன்.

திரு நாராயணன் தான் அப்படிச் சொல்லவில்லை என மறுத்ததோடு அதை நிரூபித்துவிட்டால் நான்சொல்கிறபடி அவர் கேட்பதாகவும் இல்லையென்றால் அவர் சொல்கிறபடி நான் கேட்கவேண்டும் என்றும் சொன்னார். நான் ஏற்றுக்கொண்டேன்.

அவர் ட்விட்டரில் 24/6/2017 இல் பதிவிட்டிருந்ததாகச் சொன்னேன். ட்விட்டரில் அந்த செய்தி இல்லை. நல்வாய்ப்பாக 22/6/2017 தேதியிட்ட முகநூல் பதிவாக உள்ளது.



என்ன நாராயணா, தோழர் கனகராஜ் ஆதாரம் கொடுத்துட்டாரு! என்ன செய்யப் போற? பொய் சொல்வதும் அம்பலமானாலும் பல்டி அடிப்பதும்தானே உங்கள் பாரம்பரியம்!

பேசாமல் தோழர் கனகராஜ் காலில் மண்டியிட்டு விழுந்து மன்னிப்பு கேள். போனா போகுது காமெடி பீஸ் என்று உன்னை மன்னித்து போய்த்தொலை என்று விட்டு விடுவார்.

பிகு: இந்த பதிவை எழுதும் முன் இந்த தரமான சம்பவம் குறித்து நாராயணன் அறிக்கை ஏதாவது உண்டா என்று பார்க்கப் போனேன். மனுஷன் வாய் திறக்கவே இல்லையே! காமெடி பீஸ் பயந்து பம்மி விட்டது.

Monday, October 22, 2018

கமல் வசனமே காரணம் . . .


மன்னிப்பு – அவங்களுக்கு பிடிச்ச வார்த்தை



ஹைகோர்ட்டாவது !  . . . . . . . .வது என்று பேசியதற்கு எச்.ராசா இன்று நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார்.

அது என் குரல் இல்லை, யாரோ எடிட் செய்து விட்டார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

ஆமாம், அது ஒன்றும் அவர் குரல் இல்லை என்று பொன்னார் உள்ளிட்ட பிற காவிகளும் அதையே சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

கோர்ட் அனுப்பிய நோட்டீஸை பெற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பி இதுதான் வீரம் என்று வேறு முழங்கினார்கள்.

ஆனால்  “உணர்ச்சிவசப்பட்டு பேசிட்டேன். மன்னிச்சுக்கோங்க” என்று இப்போது   மன்னிப்பு கேட்டு விட்டார்.

இவர்கள் வெட்டி வீரம் பேசுவதும் கைது, சிறை என்றால் நடுநடுங்கி மன்னிப்பு கேட்பதும் புதிதா என்ன?

மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு அடிபணிந்து நடப்பேன் என்று மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு அந்தமான் சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியே வந்து அதன் பிறகு கம்முனே இருந்தார், பெயரில் மட்டும் வீரத்தை ஏந்திய சவர்க்கர்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்ட வீரர்களை காட்டிக் கொடுத்து பிற்காலத்தில் பிரதமராகவே ஜம்முனு இருந்தார் வாஜ்பாய்.

அவசரநிலைக்காலத்தில் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு இந்திரா அம்மையாரிடம் சரணாகதி அடைந்தவர் காவி குருபீடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அன்றைய “சர்ங்க்சாலக்”  மதுகர் தத்தாத்ரேய தேவரஸ்.

“மன்னிப்பா? மானங்கெட்டவனே, எதற்கு கேட்க வேண்டும் மன்னிப்பு’ என்பது கட்டபொம்மன் திரைப்பட வசனம்.

“தமிழில எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு” என்பது ரமணா திரைப்பட வசனம்.

காவிகளுக்கு எல்லா மொழிகளிலும் பிடித்த வார்த்தை “மன்னிப்பு” என்பது நிஜ வாழ்வின் யதார்த்தம்.

இவர்கள் இப்படி மன்னிப்பு கேட்டு மானங்கெட்ட பிழைப்பு நடத்துவதற்கு கமலஹாசனின் விருமாண்டி பட வசனம்தான் காரணம்.

"மன்னிக்கறவன் மனுசன்"
"மன்னிப்பு கேக்கறவன் பெரிய மனுசன்"

என்ற வசனத்தின் அடிப்படையில் 

மன்னிப்பு கேட்டாலாவது பெரிய மனுசனாக முடியுமா என்று முயற்சிக்கிறார்கள், பாவம்!!!!