Showing posts with label உச்ச நீதிமன்றம். Show all posts
Showing posts with label உச்ச நீதிமன்றம். Show all posts

Saturday, August 23, 2025

அரசியல் காரணமெனில் ஆளுனருக்கு அருகதையில்லை

 


நேற்று காலை ஆங்கில இந்துவில் வெளியான செய்திதான் மேலே உள்ளது. 

ஜனாதிபதி, ஆளுனர்கள் மசோதா மீது முடிவெடுக்க கால அவகாசம் நிர்ணயம் செய்வதற்கு எதிராக ஜனாதிபதி கருத்து கேட்பது என்ற அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் தலைமை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஒரு வாதம் வைக்கிறார்.

"அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது வேறு ஜனநாயகக் காரணங்களுக்காகவோ ஒரு ஆளுனர் மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க கால தாமதம் செய்யலாம்."  என்று அவர் ஆளுனர்களை நியாயப் படுத்துகின்றார்.

ஆளுனர் என்பவர் அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அரசியல் சாசனத்திற்கு மட்டுமே விசுவாசமாக இருக்க வேண்டியவர். அரசியல் காரணத்திற்காக அவர் மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்க தாமதிக்கிறார் என்றால் அவர் அந்த பதவிக்கு அருகதையே இல்லாதவர்.

அப்படிப்பார்த்தால் எதிர்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஆளுனர்கள் அனைவரும் அந்த பதவிக்கு அருகதையற்ற பொறுப்பற்றவர்கள்.

அப்படிப்பட்ட ஆட்களை துரத்தி விடவும் உச்ச நீதிமன்றம் ஏதாவது வழி செய்தால் நல்லது. . . .



Friday, July 18, 2025

நீங்களாவது மாற்றுங்கள் நீதியரசர் கவாய் அவர்களே

 


மேலே உள்ளது உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தாவே கூறியது. 

"மோடி பிரதமரான் பின்பு தொடர்ந்து வந்த ஒவ்வொரு தலைமை நீதிபதிகளும் மோடியின் செல்வாக்கினால் நூற்றுக்  கணக்கான வழக்குகளில் சமரசம் செய்து கொண்டு நீதித்துறையை வீழ்த்தி விட்டனர். இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி சீர்குலைந்தமைக்கு நீதித்துறை ஒரு முக்கியக் காரணம்."

அவர் சொன்னது துயரமான உண்மை.

தற்போதைய தலைமை நீதிபதியான திரு பி.ஆர்.கவாய் அவர்களாவது விதி விலக்காக அமைந்து சிதைந்து கிடக்கும் நீதித்துறைக்கு உயிர் கொடுக்க வேண்டும்.

Thursday, April 17, 2025

கூமுட்டையெல்லாம் ஆட்டுத்தாடியானால் ????

 


தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி அநியாயமாக நிறுத்தி வைத்திருந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் கொடுத்தமைக்கு கேரளாவின் புதிய ஆட்டுத்தாடி பொங்கியுள்ளது.

 


நீதிமன்றம் முடிவெடுத்தால் சட்டமன்றம் எதற்கு, நாடாளுமன்றம் எதற்கு என்று அறிவிலித்தனமாக கேள்வி எழுப்பியுள்ளது.

 சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆட்டுத்தாடிகள் அயோக்கியத்தனமாக, அராஜகமாக இழுத்தடிப்பதற்கு முற்றுப் புள்ளி வைப்பதாகத்தான் தீர்ப்பு அமைந்துள்ளது.

 ஆக உச்ச நீதிமன்றம் சட்டமன்றத்தின் மாண்பைத்தான் காப்பாற்றி உள்ளதே தவிர சட்ட மன்றத்தின் பணியையோ, அதிகாரத்தையோ எடுத்துக் கொள்ளவில்லை.

 இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் நீதிமன்றம் செய்தது ஆட்டுத்தாடிகளின் வேலையைத்தான். அதை சொல்ல இந்த ஆட்டுத்தாடிக்கு தெரியவில்லை.

கூமுட்டைகளையெல்லாம் ஆட்டுத்தாடியாக்கினால் அவை இப்படித்தான் அபத்தமாக உளறும்.

 

Tuesday, April 8, 2025

மொட்டைச்சாமியார் ஆட்சியும் தலைமை நீதிபதியும்

 


சமீப காலமாக உச்ச நீதிமன்றம் மொட்டைச்சாமியாரின் ஆட்சியை தொடர்ந்து கண்டித்துக் கொண்டே இருக்கிறது. புல்டோசர் இடிப்புக்களுக்கு இழப்பீடு கொடுக்கச் சொன்னது.

இப்போது ஒரு சிவில் வழக்கை கிரிமினல் வழக்காக மாற்றியதை கண்டிக்கையில்


உத்திரப் பிரதேச மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி சீரழிந்து விட்டதாக கண்டித்துள்ளார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

வெ.மா.ரோ.சூ.சொ உள்ளவராக மொட்டைச்சாமியார் இருந்தால் இந்நேரம் ராஜினாமா செய்து கோரக்நாதர் கோயிலுக்கு பூசாரியாகி இருப்பார்.

அதெல்லாம்  இல்லாததால் தலைமை நீதிபதிக்கு லோயா சிகிச்சை கொடுக்கலாமா  என்று சிந்தித்துக் கொண்டு இருப்பார்.



Monday, March 24, 2025

நீங்களும் ஒன்றும் செய்யவில்லையே யுவர் ஆனர்

 


நேற்று ஆங்கில இந்துவில் படித்த செய்தி கீழே . . .

"இந்திய குடிமக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். ஏராளமான வழ்க்குகள் காலம்காலமாக நிலுவையில் உள்ளது. அதை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. நீதித்துறை இந்தியமயமாக்கப் பட வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நீதிமன்றத்தின் மொழி அந்தந்த பகுதிகளின் மொழியாக இருக்க வேண்டும், வழக்காடிகளுக்கு தங்கள் வழக்கில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. முக்கியமான பல வழக்குகள் எடுக்கப்படுவதே இல்லை."

இவற்றைச் சொன்னது 24,பிப்ரவரி 2021 முதல் 26 ஆகஸ்ட், 2022 வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த திரு என்.வி.ரமணா. 17.02.2014 லில் இருந்தே அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார்.  அதனால் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் "கோலோஜியம்" உறுப்பினராகவும் நீண்ட காலம் இருந்திருப்பார்.

எனது கேள்வி எளிமையானது.

நீதித்துறையின் குறைகள் என்று பட்டியல் போடுகிற பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?

வழக்கு மொழி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருந்தும் ஏன் அதனை பயன்படுத்தவில்லை?

சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகளை நியமிக்க கொலோஜிய உறுப்பினராக என்ன செய்தீர்கள்?

தேங்கிக் கிடக்கும் வழக்குகளை பட்டுவாடா செய்ய எந்த நடவடிக்கையும் உங்களால் எடுக்கப்படவில்லையே, ஏன்?

தேர்தல் பத்திரம், காஷ்மீர் சிறப்புப்பிரிவு 370, உள்ளிட்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டிய 53 முக்கிய வழக்குகளை தொடாமல் அப்படியே ஓய்வில் சென்று விட்டீர்களமே, ஏன்?

பதில் சொல்வீங்களா யுவர் ஆனர்?

இன்று விழித்துக் கொண்டுள்ள உங்கள் மனசாட்சி, பதவியில் இருக்கும் போது ஏன் உறங்கியது? 


Friday, March 21, 2025

நேற்று நாக்பூர், இன்று அலகாபாத்


அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி கொடுத்த தீர்ப்பு கடும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.


இப்படி ஒரு கேவலமான தீர்ப்பை ஒரு நீதிபதி அளிக்கிறார் என்றால் அவர் நிச்சயம் சங்கியாக மட்டுமே இருக்க முடியும். பெண்களை வெறும் போகப் பொருளாக அவர்கள் மட்டும்தான் பார்ப்பார்கள்.

இது போன்ற தீர்ப்பு இதற்கு முன்பாக வந்துள்ளது.

காவிகளின் தலைமையகம் நாக்பூரில் அமைந்துள்ள பம்பாய் உயர்நீதி மன்றத்தின் நாக்பூர் பெஞ்சில் ஒரு நீதிபதி இது போன்றதொரு தீர்ப்பை அளிக்க அதனை உச்ச நீதிமன்றம் அகற்றி விட்டது, அபத்தமான தீர்ப்பு என்று கண்டித்து அந்த நீதிபதி நிரந்தர நீதிபதியாவதையும் ரத்து செய்து விட்டது.

இந்த மனிதனை நீதிபதி பதவியிலிருந்து நீக்குவதுதான் சரியாக இருக்கும்.

முந்தைய வழக்கு பற்றி அப்போது எழுதப்பட்ட பதிவு கீழே உள்ளது.


அபத்தமான தீர்ப்பு அகற்றப்பட்டது

 19, நவம்பர், 2021


கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு அபத்தமான  தீர்ப்பை அளித்தது.

 ஒரு சிறுமியை ஒரு கிழவன் பாலியல் சீண்டல் செய்தான் என்று போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில்

 அந்த சிறுமி ஆடைகள் அணிந்திருந்ததால், நேரடியான தொடுதல்  இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி. 

 நல்ல வேளையாக அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தற்காலிக நீதிபதியாக இருந்த அந்த அம்மையாரை நிரந்தர  நீதிபதியாக்காமல் பதவியிலிருந்து அகற்றினர்.

 நேற்று உச்ச நீதிமன்றம் நாக்பூர் தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அது  அபத்தமான ஒன்று என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 "ஆடைகள் இருந்ததா, நேரடி தொடுதல் இருந்ததா இல்லையா என்பதெல்லாம் முக்கியமே இல்லை, பாலியல் சீண்டல் நோக்கம்   இருந்ததா என்பது மட்டுமே முக்கியம்"

 என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

 குற்றவாளிகள் சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிக்க அனுமதிக்கப் படக் கூடாது.  



Tuesday, March 4, 2025

சீமான் -உச்ச நீதிமன்றம்- பழைய தீர்ப்பு



 சீமான் மீதான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம், சீமானுக்கு ஆதரவான நிலை எடுத்து கட்டப் பஞ்சாயத்து செய்யச் சொல்லியுள்ளது. மறைமுக சங்கியான சீமானுக்கு சாதகமான நிலை ஏற்பட்டதில் மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் ஆச்சர்யப்படவோ, அதிர்ச்சியடையவோ ஏதுமில்லை. இது போன்ற தீர்ப்பு புதிதுமல்ல.

2021 ம் ஆண்டு எழுதிய பதிவொன்றே அதற்கு சான்று

02, மார்ச், 2021 அன்று எழுதிய பதிவு கீழே

விவேக் தீர்ப்பே மேல் ஜட்ஜய்யா

 


 

மைனர் பெண்ணை பாலியல் கொடுமை செய்தவனுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை தருவதற்குப் பதிலாக அந்தப் பெண்ணுக்கு 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொண்டால் உதவ தயாராக இருப்பதாக கீழ் மட்டத்தில் இருக்கிற மாஜிஸ்டிரேட் சொன்னாலே அது மிகப் பெரிய அராஜகம். ஆலமரத்தடி கட்ட பஞ்சாயத்தை விட மோசமான ஒன்று.

  ஆனால் அதையே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே சொன்னால் கேட்பதற்கே அது எவ்வளவு நாராசமாக உள்ளது!

  ஒரு பாலியல் குற்றவாளிக்கு தலைமை நீதிபதி சட்டத்தை மீறி இரக்கம் காண்பிக்க வேண்டிய தேவை என்ன?

 


 மகாபாரதக் கதையே உங்களால் மாறி விடும் போல இருக்கே யுவர் ஆனர்!

  இப்படிப்பட்ட தீர்ப்பிற்கு விவேக் அளித்த தீர்ப்பே மேல் என்று சொல்ல வைத்து விட்டீர்களே யுவர் ஆனர்.

  ஒரு சின்ன டவுட் ஜட்ஜய்யா

  உங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயை பாலியல் புகாரில் விடுவித்ததால் மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கும் அதே சலுகையை காண்பிக்கிறீர்களோ?

 

Tuesday, November 26, 2024

இந்தியா “மதச்சார்பற்ற, சோஷலிச” க்குடியரசுதான்.

 


நேற்று உச்ச நீதிமன்றம் ஒரு நல்ல தீர்ப்பை அளித்துள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பிலிருந்து “மதச்சார்பற்ற, சோஷலிச” என்பதை அகற்ற வேண்டும் என்று சுனா சாமி தொடுத்த  வழக்கில் “அதெல்லாம் முடியாது போடா” என்று உச்ச நீதிமன்றம் சொல்லி விட்டது.

அனைத்து மதங்களையும் சமமாக கருத வேண்டும் என்பதால் மதச்சார்பு என்பது பொருத்தமானதே என்று விளக்கமளித்து விட்டார்கள்.

சோஷலிசம் என்றால் அது இடதுசாரி பொருளாதரமோ இல்லை வலதுசாரி பொருளாதாரமோ  கிடையாது. மக்கள் நல அரசு என்று பொருள்.

அதனால் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பில் “மதச்சார்பற்ற, சோஷலிஸ”  என்ற வார்த்தைகள் தொடரும்     என்று சொன்ன நீதிபதிகள் நாற்பத்தி ஐந்துவ் வருடங்களுக்கு பிறகு வழக்கு தொடுப்பதே உள் நோக்கம் கொண்டது என சுனாசாமியையும் கண்டித்துள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்ற வெறியை மனதுக்குள் வைத்துக் கொண்டு, அரசியலமைப்பு தினம் எனும் நாடகம் நடத்தும் மோடி வகையறாக்களுக்கு சரியான சவுக்கடிதான் இந்த தீர்ப்பு.

Friday, November 15, 2024

புல்டோசர் அராஜகத்திற்கு தடை

 



 உச்ச நீதிமன்றம் உருப்படியானதொரு தீர்ப்பை அளித்துள்ளது.

 அரசு யாரையாவது குற்றவாளி என்று கருதி கைது செய்தால் அவருடைய வீட்டை புல்டோசர் கொண்டு இடிப்பது என்பது மொட்டைச்சாமியார் துவக்கி வைத்த அராஜகச் செயல். குற்றவாளியாகவே இருந்தாலும் அந்த குற்றவாளியின் வீட்டை இடிப்பது என்பதெல்லாம் சமஸ்கிருத பெயரில் மோடி கொண்டு வந்த மூன்று சட்டங்களில் கூட இல்லாத ஒன்று. அப்படி இடிக்கப்படும் வீடுகளில் பெரும்பாலானவை இஸ்லாமியர்களுடையது என்பதை தனியாக சொல்ல வேண்டுமா என்ன!

 மொட்டைச்சாமியார் உ.பி யில் செய்யும் அராஜகத்தை பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் ஆகிய மாநிலங்களும்  செய்யத் தொடங்கின.

 தங்கள் குற்றச்செயலை நியாயப்படுத்த அவை அனுமதி பெறாத கட்டுமானங்கள் என்று கட்டுக்கதை சொல்லத் தொடங்கின. அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் வரை அவை அனுமதி பெறாதவை என்று தெரியாதா அல்லது இடிப்பதற்கு முன்பு நோட்டீஸ்  தர மாட்டீர்களா என்றெல்லாம் கேள்விகள் எழுந்தாலும் அக்கேள்விகளை சங்கி அரசுகள் புறம் தள்ளினர்.

 இப்போது உச்ச நீதிமன்றம் புல்டோஸர் அராஜகத்திற்கு பிரேக் போட்டுள்ளது. எந்த ஒரு க்லட்டுமானத்தை இடிக்கும் முன்பும் சம்பந்தப்பட்டவர்களுக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் தரப்பு நியாயத்தை கேட்டு பரிசீலித்த பின்புதான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளது.

 மொட்டைச்சாமியார் வகையறாக்களின் முரட்டு அராஜகத்திற்கு உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டுள்ளது நல்லது.

 இதனை சங்கி அரசுகள் மதிப்பார்களா இல்லை எச்.ராசா போல உச்ச நீதிமன்றமாவது ஹைகோர்ட்டாவது என்று அராஜகத்தை தொடர்வார்களா?

Saturday, May 18, 2024

அமித்தை கவனியுங்கள் ஜட்ஜய்யா

 


அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிணை கொடுத்ததை விமர்சித்துள்ளார் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளியான அமித்ஷா.

என்னவென்று தெரியுமா?

கேஜ்ரிவாலுக்கு மட்டும் சிறப்புச் சலுகை கொடுத்துள்ளார்கள் (Special Treatment) .தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கெல்லாம் பிணை கொடுப்பது என்பது ரொம்ப ஓவர். நீதிபதிகள் அவருக்கு பிணை கொடுத்தது இதுவரை நீதித்துறையில் காணாத ஒன்று. 

நீதிபதிகளின் தீர்ப்பிற்கு உள்ளர்த்தம் கற்பிப்பது நீதிமன்ற அவமதிப்பில் வராதா ஜட்ஜய்யாக்களே?

கொஞ்சம் சுமோட்டாவாக அமித்ஷாவை கவனியுங்களேன்.

Tuesday, April 2, 2024

இப்படி செஞ்சிட்டீங்களே ஜட்ஜய்யா . . .

 


உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய பல தீர்ப்புக்கள் நன்றாக இருக்கிறதே என்று நேற்றுதான் நினைத்தேன். ஒரு நம்பிக்கையும் வந்தது.

இன்று காலை செய்தித்தாளைப் பார்த்தால் நம்பிக்கையில் ஒரு ஓட்டை.

வாரணாசி ஞானவாபி மசூதியின் ஒரு அறையில் லிங்கம் என்று சொல்லப்படுகிற நீரூற்று மையத்தை  இந்துக்கள் வழிபடலாம் என்று பணி ஓய்வு நாளன்று தீர்ப்பு அளித்து அடுத்த பதவியை ஒரு நீதிபதி பெற்றது நினைவில் உள்ளதா?

அந்த தீர்ப்பின் படி அந்த வழிபாடு தொடரலாம் என்று நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.

இது நியாயமாரே?


Friday, March 22, 2024

அசிங்கமா போச்சே ரெவி

 


பெரிய வீராதி வீரன் மாதிரி ஆட்டுத்தாடி ரெவி சீன் போட்டுக் கொண்டு சனாதனப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும் “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்” என்பதை அவ்வப்போது பல சம்பவங்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

அப்படித்தான் இப்போது பொன்முடி விஷயத்திலும் அசிங்கப்பட்டு நிற்கிறது ஆட்டுத்தாடி.  உச்ச நீதிமன்றம் சூடு கொடுத்த பின்பு அவருக்கு வேறு வழியில்லை.

முதல்வரும் பொன்முடியும் ரெவியை பார்த்த பார்வை அருமை. ரெவியின் அந்த வருத்தமான புன்னகை அருமையிலும் அருமை . . . ரெஸ்ட் ரூம் போவது உட்பட தான் செய்யும் எல்லாவற்றையும் ட்விட்டரில் பதிவு செய்யும் இந்த நிகழ்ச்சி பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை.



இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் அரசியல் சாசனம்தான் எல்லாமும். அதை மீற யாருக்கும் உரிமை கிடையாது என்பதைத்தான் உச்ச நீதிமன்றம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

இதை ரெவி உள்ளிட்ட சங்கி வகையறாக்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆனால் திருந்த மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்,,,,

 

Wednesday, March 6, 2024

இறப்பதற்கு முன் விடுதலை செய்யுங்கள்

 


சக்கர நாற்காலியில் வாழும் பேராசிரியர் சாய்பாபா உள்ளிட்ட சிலரை மோடி அரசு போட்ட ஆள்தூக்கிச் சட்டமான UAPA சட்ட வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ள உச்ச நீதிமன்றத்துக்கு இன்னொரு வேண்டுகோள்.

தரங்கெட்ட மோடியை கொலை செய்ய திட்டமிட்டார்கள் என்று பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளப்பட்ட பிமா கொரேகான் வழக்கின் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் அவர்கள் இறப்பதற்கு முன்பாக விடுதலை செய்யவும்.

ஒரு பிரதமரை கொல்ல முயற்சி என்றால் அவர்கள் மீது வழக்கு தொடுத்து தண்டனை வாங்கித்தர வேண்டும். ஆனால் இந்த வழக்கை கிடப்பில் போட்டு விட்டார்கள். அதுவே மோடி அரசு போட்டது அயோக்கியத்தனமான பொய் வழக்கு என்பதன் சான்று.

ஸ்டான் சுவாமி போல இல்லாமல் மற்றவர்களாவது இறப்பதற்கு முன்பு விடுதலை செய்யவும்.


Tuesday, February 6, 2024

ஜட்ஜய்யா, கொலை செய்ய தூண்டிய குற்றவாளியை???

 



சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் முறைகேடு செய்து பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்ததன் மூலம் மாநகராட்சி அதிகாரி ஜனநாயகத்தை படுகொலை செய்துள்ளதாக மிகச்சரியாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டித்துள்ளார்.

 அதெல்லாம் சரிதான் ஜட்ஜய்யா, அந்த அதிகாரி தானாகவே அந்த படுகொலையை செய்திருப்பார்னு நினைக்கறீங்களா?

 பதவியோ, பணமோ, மதமோ, ஏதோ ஒரு எழவை காண்பித்து அந்த ஜனநாயக படுகொலையை செய்ய யார் தூண்டினார்கள் என்பது பற்றியும் நீங்கள் பேச வேண்டாமா? ஜனநாயகப் படுகொலை என்று கண்டித்த பின்னும் அத்தேர்தலை ரத்து செய்திருக்க வேண்டாமா?

அதையெல்லாம் செய்யவில்லையென்றால், அதெல்லாம் இறுதித்தீர்ப்பில் வரவில்லையென்றால் “பேசும் போது நல்லா இலக்கணமா பேசு, பாட்டு எழுதற போது மட்டும் கோட்டை விட்டுடு” என்று தருமி சிவபெருமானிடம் சொல்வது போல “வழக்கு நடக்கற போது மட்டும் கண்டிங்க, ஆனா தீர்ப்பெழுதுபோது மட்டும் கோட்டை விடுங்க” என்று உங்களைப் பார்த்தும் காலம் சொல்லும். காஷ்மீர் வழக்கிலும் அப்படித்தானே நடந்தது!

Tuesday, January 9, 2024

பில்கிஸ் பானு - நீதி நிலைக்கட்டும்

 


டிமோ நடத்திய காட்டுமிராண்டித்தனமான கலவரத்தில் குடும்பத்தினரை கண் முன்னே இழந்து கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளான பில்கிஸ் பானுவின் துயரத்துக்கு காரணமான கயவர்களை விடுதலை செய்தது குஜராத் பாஜக அரசு.

அந்த முடிவு செல்லாது என்றும் அந்த அயோக்கியர்கள் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பில்கிஸ் பானு, மார்க்சிஸ்ட் கட்சித்தலைவர் தோழர் சுபாஷினி அலி உள்ளிட்ட ஐவர் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இது.

நீதிபதிகள் குஜராத் அரசை கடுமையாக சாடியுள்ளனர். இறுதியாக நீதி கிடைத்தது மகிழ்ச்சி.

ஒரே ஒரு நெருடல் இருக்கிறது.

மகாராஷ்டிராவில் வழக்கு நடந்ததால் முடிவெடுக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்குக் கிடையாது என்ற ஒற்றை வரியை பயன்படுதி, கட்சி மாறி ஏக்நாத் ஷிண்டேவை பயன்படுத்தி மீண்டும் கயவர்கள் விடுதலையாகக் கூடாது.

கயவர்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால்தான் நீதி நிலைக்கும் ..

Friday, November 24, 2023

ரம்மி ரவி இனி டம்மி ரவி

 


பஞ்சாப் ஆளுனருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது.

மாநில சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை நிராகரிக்கும் வீட்டோ உரிமையெல்லாம் ஆளுனருக்குக் கிடையாது. ஆளுனர் ஒரு அலங்கார அடையாளம் மட்டுமே. அவர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப் பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவற்றை ஏற்பதைத் தவிர வேறு எந்த வழியும் அவருக்குக் கிடையாது.

ஆக தமிழ்நாட்டின் ஆட்டுத்தாடி ரம்மி ரவி இனிமேல் டம்மி ரவி. அதை புரிந்து கொண்டு ஒழுங்காக நடக்க வேண்டும். இல்லையென்றால் மேலும் மேலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும். . . .

Monday, November 6, 2023

சங்கி(புதிய) தலைமுறையா?

 


சங்கிகள் சூழ் ஆட்டுக்காரன் அரசியல் குழுவில் பார்த்த பதிவு கீழே உள்ளது. புதிய தலைமுறை செய்தியை முன்வைத்து ஆர்.எஸ்.எஸ்.ரெவிக்கு துதி பாடிக் கொண்டிருந்தார்கள்.



 டெல்லி துணை நிலை ஆளுனருக்கான அதிகாரம் குறித்து தெளிவான தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம் ஏன் பஞ்சாப் விஷயத்தில் பல்டி அடித்தது என்று தேடிப்பார்த்தால் கிடைக்கும் உண்மை வேறு.

 


பஞ்சாப் ஆளுனருக்கு உச்ச நீதிமன்றம் குட்டுதான் வைத்துள்ளது.

 “நீங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் கிடையாது.  மாநில அரசுகள் நீதிமன்றத்திற்கு வரும் வரை ஆளுனர்கள் ஏன் மசோதாக்களை கிடப்பில் போட்டு வைத்திருக்கிறீர்கள்?”

 என்று சூடாக கேட்டுள்ளார்கள்.

 இந்த செய்தியை திரித்து எழுதியதன் மூலம் புதிய தலைமுறை தன்னுடைய பெயரை சங்கித் தலைமுறை என்று மாற்றிக் கொண்டுள்ளது.

 

Tuesday, October 31, 2023

கோபம் வரவழைக்கும் காமெடி

 


மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு காமெடி செய்துள்ளார். சிரிப்பு வரவில்லை, எரிச்சல்தான் வந்தது.


தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை நேர்மையான முறையில் வழங்கப்படுகிறதாம். சுத்தமான பணமாம்.

யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று அறிய தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் வரம்பில் கொண்டு வர வேண்டும் என்ற வழக்கில்

"மக்கள் எல்லாமும் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் அவசியமில்லை"

என்று ஆணவமாக பேசிய பின்புதான் இந்த காமெடி வஜனத்தை பேசி உள்ளார்.

பாஜகவுக்கு எலும்புத்துண்டுகளை வீசும் முதலாளிகளைப் பற்றி சொல்ல மாட்டோம் என்று வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக ஏன் இந்த கோபமூட்டும் காமெடி மிஸ்டர் அட்டர்னி ஜெனரல்?

பிஎம் கேர்ஸ் நிதி பற்றியே சொல்ல மறுப்பவர்களா, தேர்தல் பத்திரம் பற்றி வாய் திறப்பார்கள்!

ஆனாலும் சில முட்டாள்கள் பாஜகவை நேர்மையான கட்சி என்று இன்னும் ந்ம்பிக் கொண்டிருக்கிறார்கள். 


Tuesday, August 22, 2023

என்ன நடக்குது குஜராத் ஹைகோர்ட்டில்?

 


குஜராத்தில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளான ஒரு பெண், அக்கொடுமை மூலம் உருவான கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரிய வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. கருவின் தன்மை குறித்தும் கருக்கலைப்பு பாதுகாப்பானதா என்று அறியவும் மருத்துவ சோதனைக்கும் ஆணையிட்டது. 

அப்பெண்ணின் மனு மீதான விசாரணையை தள்ளிப் போட்டு பின்பு நிராகரிக்கவும் செய்திருந்தது குஜராத் உயர் நீதிமன்றம்.

அதனால்தான் பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்கும் வந்தது.

உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கு வந்ததும் குஜராத் உயர் நீதிமன்றம் தானாகவே அந்த வழக்கை எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை "குழந்தை பிறந்ததும் அதை நீ வளர்க்கிறாயா அல்லது அரசின் பொறுப்பில் கொடுக்கிறாயா? " என்று கேட்டுள்ளது.

"பாலியல் வங்கொடுமைக்கு ஆளான பெண் அந்த கர்ப்பத்தை சுமக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வலி தெரியுமா! என்னதான் நடக்குது குஜராத் உயர் நீதிமன்றத்தில்?"

என்று உச்ச நீதிமன்றம் குஜராத் உயர் நீதிமன்றத்தை சாடியுள்ளது.

பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் மாநிலம் பிற்போக்குத்தனமாகத்தானே இருக்கும்!

Friday, July 28, 2023

ஏமாந்துட்டீங்க ஜட்ஜய்யா

 


அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவோட பணிக்காலம் 31.07.2023 க்கு மேல் தொடரக்கூடாது, இது வரைக்கும் இருந்ததே சட்ட விரோதம்னு சொல்லிட்டு மறுபடியும் செப்டம்பர் 15 வரைக்கும் பணி நீடிப்பு கொடுத்திட்டீங்களே ஜட்ஜய்யா.

இந்தாளைத்தவிர அமலாக்கப்பிரிவில வேலை பார்க்கற யாருக்குமே திறமையில்லையா? இந்தாள் மட்டும்தான் இயக்குனரா இருக்கனும்னா மற்ற அதிகாரிகள் எல்லாம் சோர்வடைய மாட்டாங்களா என்று சரியா கேள்வி கேட்டு கடைசியில சொதப்பிட்டீங்களே!

ஏதோதோ காரணம் சொன்னாலும் இந்தியா வில் இருக்கிற கட்சித் தலைவர்களை மிரட்ட சரியான அடியாள் இந்தாள் என்பதற்குத்தானே தொடர்ந்து பணி நீட்டிப்பு கொடுத்துக்கிட்டே இருக்காங்க.

செப்டம்பர் 15 க்கு பிறகும் பணி நீட்டிப்பு கேட்டு உங்க கிட்ட வருவாங்க. அப்போ என்ன செய்வீங்க?