Showing posts with label மாட்டிறைச்சி. Show all posts
Showing posts with label மாட்டிறைச்சி. Show all posts

Monday, January 20, 2025

கோமியமா மாட்டிறைச்சியா?

ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பதிவை சுட்டு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 



சென்னை ஐஐடியின் இயக்குனர் காமகோடி கோமியத்தின் மருத்துவப் பயன்கள் குறித்துப் பேசியது தனியான செயல் அல்ல. 2016ஆம் ஆண்டு டெல்லி ஐஐடி ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தியது. என்ன தலைப்பு தெரியுமா? பஞ்சகவ்யாவின் பலன்களை அறிவியல் பூர்வமாக நிறுவது. இந்த பஞ்சகவ்யா கோமியத்தின் ஒரு உன்னத வடிவம். சுதேசிப் பசுவின் சாணம், மூத்திரம், பால், நெய் தயிர் ஆகியவற்றைக் குழைத்து தயாரிக்கப்படும் சாறுதான். அதனை விவசாயம் மற்றும் மருத்துவத்தில் பயன்படுத்த முடியுமா என்று ஆராய்ச்சி செய்வதுதான் நோக்கம். பூச்சி மருந்தடித்து விளைவிக்கப்பட்ட புல் வகைகளை உண்ணும் மாட்டின் இறைச்சியை உண்பதால் உடல்நலம் பாதிக்கப் படுமா என்பதும் ஆராய்ச்சிகளின் நோக்கம். (நம் மேல்தான் எவ்வளவு அக்கறை?)

இந்த ‘ஆராய்ச்சிக்கான’ 50 ஆலோசனைகள் அடுத்த சில ஆண்டுகளில் குவிந்தன. இந்தியாவிலிருக்கும் ஐஐடிகள், ஐ ஐ எம் கள், CSIR, ICMR போன்ற பொதுப் பணத்தில் நடத்தப்படும் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள்தான் போட்டி போட்டுக் கொண்டு இந்த ‘ஆராய்ச்சி’ ஆலோசனைகள் வந்தன. இந்த ஆராய்ச்சிக்கான தேசிய வழிநடத்தும் குழுவை அமைத்திருப்பது ஒன்றிய அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்.

ஒரு டம்ப்ளர் கோமியத்துக்கே இவ்வளவு ‘பவர்’ என்றால் மாட்டிறைச்சிக்கு எவ்வளவு பவர் இருக்குமென்று நேற்று இரவு பீஃப் + பரோட்டா சாப்பிட்டுக் கொண்டே ஒரு கூகுள் ஆய்வைச் செய்தேன். அதன் முடிவு கீழே.





காமகோடி அவர்களே இதற்கும் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்துங்கள்.

Tuesday, September 3, 2019

ஜெர்மனி போனாலும் திருந்த மாட்டானுங்க . . .



ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகம் இந்திய உணவுத் திருவிழா ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

ஜெர்மனியில் செயல்படும் பல மாநிலங்களைச் சேர்ந்த அமைப்புக்கள் தங்கள் மாநிலத்தின் சிறப்பு உணவுகளை தயாரிக்க முன் வந்துள்ளன. 

அதிலே கேரள சமாஜம் என்ற அமைப்பு, கேரள மாநிலத்தின் சிறப்பு உணவுகள் அடைந்த ஒரு பட்டியலை தயாரித்துள்ளது. அதிலே "பரோட்டா மற்றும் மாட்டுக் கறி" யும் இருந்துள்ளது.

அதைப் பார்த்து ஜெர்மன் வாழ் சங்கிகள் கலாட்டா செய்துள்ளனர். ஜெர்மனி போலீஸ் அங்கே வந்து "இது ஜெர்மனி, இங்கே எல்லா உணவுகளும் சாப்பிடலாம். நீங்கள் கலாட்டா செய்ய இது ஒன்றும் இந்தியா அல்ல, உள்ளே தூக்கிப் போட்டு விடுவோம்" என்றதற்குப் பிறகு அவர்கள் கலைந்து சென்றுள்ளனர்.

ஆனாலும் கூட ஜெர்மனிக்கான இந்தியத் தூதர் கேட்டுக் கொண்டதால் கேரள சமாஜம் தங்களின் பட்டியலில் இருந்து "பரோட்டா - மாட்டுக் கறி" யை நீக்கி விட்டது. அமைதியை விரும்பும் கேரள மக்கள் அவசியமற்ற பிரச்சினையை விரும்பவில்லை என்றும் வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் எங்கள் சித்தாந்தம் என்றும் கூறி சங்கிகள் முகத்தில் அடித்து விட்டது. 

சங்கிங்கள் ஜெர்மனிக்குப் போனாலும் கலவர மோடில்தான் எப்போதும் இருப்பார்கள் என்பதை இச்சம்பவமும் நிரூபித்து விட்டது.


Wednesday, July 19, 2017

மாட்டிறைச்சியை உறுதி செய்யும் பாஜக சி.எம்




என்ன?

நம்ப முடியவில்லையா?

உண்மை. சத்தியமாய் நான் சொல்வதெல்லாம்  உண்மை.

ஆம். கோவா மாநில பாஜக முதல்வர் மனோகர் பாரிக்கர், அம்மாநில சட்டப் பேரவையில் பேசுகையில்

“கோவாவில் மாட்டிறைச்சிக்கு தட்டுப்பாடு வராமல் அரசு பார்த்துக் கொள்ளும். தேவைப்பட்டால் அருகில் உள்ள கர்னாடக மாநிலம் பெல்காமிலிருந்து மாட்டிறைச்சியாகவே வரவழைப்போம். பக்கத்து மாநிலங்களிலிருந்து மாடுகளைக் கொண்டு இங்கே உள்ள அரசு மாடு வெட்டும் நிலையத்தில் வெட்டுவதிலும் அரசுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை”

ராஜஸ்தான், உ.பி, ம.பி, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் மாட்டுக்குண்டர்கள் தொடர்ந்து மாட்டரசியல் நடத்தி கொலை வேட்டை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது கோவாவில் மட்டும் மாட்டிறைச்சிக்கு ஏன் தடை விதிக்க அம்மாநில பாஜக முதல்வரால் முடியவில்லை?

அது அம்மாநில மக்களின் மிக முக்கியமான உணவு.

கோவாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளுக்கும் கூட.

ஆக, மாட்டுக் குண்டர்களுக்கு கோவாவில் வேலை கிடையாது.

ஒரே நாடு, ஒரே உணவு என்ற அபத்தமான பாஜக முழுக்கமும் கோவாவிற்கு பொருந்தாது.

பாஜக விற்கு கொள்கை என்று ஒரு புடலங்காயும் கிடையாது. அவ்வளவுதான்.

மாட்டிறைச்சியும் அவர்கள் அரசியல் சூதாட்டத்தில் ஒரு பகடைக்காய்தான்.

மனிதர்களையே நேசிக்காத அவர்களால் எப்படி மாடுகளை மட்டும் நேசிக்க முடியும்?

Tuesday, August 30, 2016

பீஃப் சாப்பிடுங்க, உசைன் போல்ட்டாகுங்க



மேலே உள்ள படம்  கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் உலாவிக் கொண்டிருக்கின்ற ஒன்றுதான். 

அதை பாஜக எம்.பி உதித் ராஜூம் பார்த்திருப்பார் போல. இந்தியாவிற்கு பதக்கங்கள் குறைவாக கிடைத்ததால் ஏதோ உணர்ச்சி வசப்பட்டு உசைன் போல்ட்டின் வெற்றிக்கு மாட்டிறைச்சியும் ஒரு காரணம் என்ற உண்மையை சொல்லி விட்டார். 

பாஜகவில் உள்ள ஒருவர் உண்மையைப் பேசலாமா? அவர் பதவி எப்போது பறி போகப் போகிறதோ?