Showing posts with label ஒலிம்பிக். Show all posts
Showing posts with label ஒலிம்பிக். Show all posts

Tuesday, December 31, 2024

ஒலிம்பிக்கில் வென்றாலும் NO விருது

 


பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய பதக்கப்பட்டியலை போணி செய்தவர் ஹரியானாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீரர் மனு பாக்கர். அவர் பெற்ற வெண்கல பதக்கமே இந்தியாவுக்குக் கிடைத்த முதல் பதக்கம். அவர் இன்னொரு வெண்கலப் பதக்கத்தையும் வென்றார்.

அப்போது மோடி அந்த இளம் பெண்ணோடு வீடியோ காலெல்லாம் பேசி அதை ட்விட்டரில் எல்லாம் பகிர்ந்து கொண்டு சீன் போட்டார். அவர் பகவத் கீதை பற்றி குறிப்பிட்டார். அதனால் இந்துத்தவ பெண் என்று சங்கிகளும் சீன் போட்டார்கள்.

இந்திய அரசின் இளைஞர் நலத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் அந்த குறிப்பிட்ட ஆண்டில் விளையாட்டுத்துறையில் சாதனை செய்த இளைஞர்களுக்கு கேல்ரத்னா விருது கொடுக்கும். 25 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் அடங்கியது இந்த விருது.

1991ல் நரசிம்மராவ் அரசால் ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது என்று அறிவிக்கப்பட்டு கொடுக்கப்பட்ட விருதின் பெயரில் மோடி அரசு ராஜீவ்காந்தியின் பெயரை அகற்றி தயான்சந்த் கேல்ரத்னா விருது என்று மாற்றி விட்டார்கள் என்பது தனிக்கதை.

இப்போதைய பிரச்சினைக்கு வருகிறேன்.

இந்த வருட கேல் ரத்னா விருதுப் பட்டியலில் மனு பாக்கரின் பெயர் இடம் பெறவில்லை. அவர் விண்ணப்பிக்கவில்லை என்று அமைச்சகம் காரணம் சொன்னது. “நான் உரிய முறையில்தான் விண்ணப்பித்தேன். பிச்சை எடுத்தால்தான் விருது கிடைக்கும் என்றால் எதற்கு பதக்கங்களை வெல்ல வேண்டும்” என்று அவரின் அப்பா கோபமாக கேட்டுள்ளார்,

பின் என்ன காரணம்?

ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு அவர் சோனியா காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இது ஒன்று போதாதா? அற்பர்கள் அரசு அற்பத்தனமாக முடிவெடுத்து விட்டது.

கடைசிச் செய்தி

நான் விண்ணப்பித்த முறையில் ஏதாவது தவறு இருக்கலாம். அதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன் என்று மனு பாக்கர் ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். இந்த அரசினை முறைத்துக் கொண்டால் தன் எதிர்காலம் என்னவாகும் என்பதை அறியாதவரா அவர்! வினேஷ் போகத் பதக்கம் வெல்ல முடியாமல் நடந்த சதி பற்றி அவருக்கும் தெரிந்திருக்குமல்லவா!

ஒரு கேள்வி

ஒரு சாதனையாளர் தனக்கு விருது வேண்டுமென்று அவர்தான் விண்ணப்பிக்க வேண்டுமா? அந்த வேலையைக்கூட தானாக செய்ய முடியவில்லை என்றால் பின் என்ன எழவுக்கு ஒரு அமைச்சகம், அமைச்சர் மற்றும் அரசு?

Tuesday, October 8, 2024

வென்றாலும் மோடிக்கு தோல்விதான் . . .

 


ஊடகங்களின் கருத்துத் திணிப்பு முடிவுகள் பாதி சரி, பாதி தவறு என்றாகி விட்டது. ஹரியானாவில் பாஜக ஜெயித்து விட்டது. ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ்- சி.பி.எம் கூட்டணி வென்றுள்ளது.

வாக்கு எண்ணிக்கையில் காண்பித்த அநியாய கால தாமதம், பாஜக வழக்கமான மோசடிகளை அரங்கேற்றியதா என்ற சந்தேகத்தை உருவாக்கியது.

ஜம்மு காஷ்மீரில் பாஜக தோற்றது மகிழ்ச்சியான ஒன்று. காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் வெற்றி பெற முடியாது என்பதற்காக இந்து மத உணர்வுகளை உசுப்பேற்றி வெற்றி பெறலாம் என்பதால் மறு சீரமைப்பு என்ற பெயரில் ஜம்மு பகுதியில் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகமாக்கியது. ஆனால் அந்த சதி வெற்றி பெறவில்லை.

அரசியல் சாசனப் பிரிவு 370 ஐ நீக்கியதை காஷ்மீர் மக்கள் ஏற்கவில்லை என்பதுதான் தேர்தல் முடிவு சொல்லும் தீர்ப்பு. அதனால் இது மோடிக்கு மிகப் பெரிய தோல்வி.

அதனை விட மோடியை மன ரீதியாக பாதிக்க வைக்கும் தோல்வி மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் வெற்றி. நாட்டின் பெருமையை விட காம வெறியனே முக்கியம் என்று மோடி வகையறாக்களால் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பறிக்கப்பட்ட வினேஷ் போகத் ஹரியானா சட்ட மன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சட்ட மன்ற உறுப்பினராகியுள்ளார். 

மக்கள் பிரதிநிதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். 

 பிகு: ஒரு அனாமதேய அறிவு கெட்ட முண்டம் பாஜகவிற்கு பாதகம் என்றாலும் அது எப்படி கருத்து திணிப்பு என்று கேட்டிருந்தது.  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் எல்லாமே மோடி மீடியாக்களால் மோடிக்கு ஆதரவான மன நிலையை மக்கள் மனதில் உருவாக்குவது என்று அந்த தத்திக்கு புரியவில்லை. இந்த தத்தி முட்டாள்கள் எல்லாம் பெயர் சொல்ல தைரியமில்லாத கோழைகள். அடையாளம் தெரிந்தால் அடி வாங்கி மிதி படுவோம் என்ற அச்சத்தில் ஒளிந்து கொள்ளும் இரண்டு கால் தெரு, சொறி நாய்கள். 

Tuesday, August 20, 2024

ரொம்பவுமே பயந்துட்டீங்களா மோடி?

 


கீழேயுள்ள பதிவை பாருங்கள்.

வினேஷ் போகத்தை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்க்க, அவர் இந்தியா வருவதற்கு முதல் நாளே ஒலிம்பிக் சென்ற வீரர்களை சந்திக்கும் நிகழ்வை நடத்தி விட்டார் என்று சொல்கிறது அந்த பதிவு,

நூறு சதவிகிதம் உண்மைதான்.

ஏனென்றால் மோடி 56 இஞ்ச் கோழை, வடி கட்டிய கோழை.... வாய் மட்டும்தான் காது வரை . .  

Monday, August 12, 2024

என்ன "தி இந்து" நக்கலா?

 


இன்றைய ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்கத்தில் மேலே உள்ள செய்தி " அமன் செஹாவரத்" இந்தியாவின் நாற்பத்தி ஒன்றாவது பதக்கத்தை வென்றார்" என்று தொடங்குகிறது.

கிடைக்க வேண்டிய தங்கப் பதக்கத்தைக் கூட கேடு கெட்ட தெய்வக் குழந்தை வகையறாக்கள் சதி செய்து கெடுத்து விட்டார்களே, எப்படி ஒரே இரவில் இத்தனை பதக்கங்கள் வந்தது என்று ஆச்சர்யத்துடன் மேலே படித்தால்தான் தெரிகிறது. 1900 ம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டியில் தொடங்கி 2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டி வரை இந்தியா இதுவரை 41 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது என்ற அவலத்தை சொல்லும் செய்தி அது என்று.

இப்படி ஒரு நக்கல் தேவையா "தி இந்து"விற்கு?

பிகு: மத வெறியை தூண்டும் விஷப் பேச்சுக்களுக்கு வயது வாரியா போட்டிகள் வையுங்கய்யா, அவதாரமும் அவதாரத்தின் அத்தனை அல்லக்கைகளும் அனைத்து பதக்கங்களையும் அள்ளி வருவார்கள் பாருங்கய்யா . . .


Friday, August 9, 2024

சதிகார சகுனிகளுக்கு ஆதரவாக . . .

வினீஷ் போகத்தின் பதக்கத்தை பறித்த சதி குறித்து நேற்று இதயங்களை வென்றாய் பெண்ணே  என்ற பதிவை எழுதி அதனை முகநூலிலும் பகிர்ந்து கொண்டேன்.

முகநூலின் சமூகத் தரத்திற்கு எதிராக இருப்பதாக என்று சொல்லி ஒரு பத்து நிமிடத்திற்குள் நீக்கி விட்டார்கள்.

சதிகார சகுனிகளுக்கு ஆதரவாக நிற்பதுதான் முகநூலின் சமூகத்தரம் போல . . .

240 சீட்டிற்கே இப்படியென்றால் மோடி சொன்னது போல சாக்கோபார் கிடைத்திருந்தால் ஆட்டம் எப்படி இருக்கும்!
 

Wednesday, August 7, 2024

இதயங்களை வென்றாய் பெண்ணே!

 


தகுதி இழப்பு என்பது ஒரு மோசடி. நாட்டின் பெருமையை விட காமுகனின் போலி கௌரவம்தான் முக்கியம் என்று நினைக்கிற கீழ்த்தரமான மனிதன் பிரதமராக உள்ள தேசத்தில் இதுவும் நடக்கும். இதை விட கேவலமாகவும் நடக்கும்.

பதக்கம் வெல்லும் வாய்ப்பு வந்த போது வாய் மூடிக் கிடந்த சங்கி நாய்கள் இப்போது ஊளையிடுவது ஒன்றே போதும் நடந்தது சதி என்பதற்கு.

பதக்கத்தை நீ இழந்திருக்கலாம். ஆனால் இந்தியாவை உண்மையாக நேசிக்கும் மக்கள் இதயங்களை வென்றுள்ளாய். எங்களுக்கு நீ தங்க மங்கைதான்.

கட்டபொம்மன் நினைவிலிருக்கும் நாள் வரை எட்டப்பனின் நினைவு இருக்கும், துரோகி என்று.

அது போலத்தான் உனது வலியும் நினைவில் இருக்கும், உனக்கு வேதனை கொடுத்தவர்களும் நினைவில் இருப்பார்கள், துரோகிகளாக, கயவர்களாக . . .

அருகதையற்ற மோடி, வாழ்த்தாதே

 


இந்திய மல்யுத்த வீராங்கனை வினீஷ் போகத், ஒலிம்பிக் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். அவர் தங்கம் வெல்ல உண்மையான  இந்தியர்கள்  அனைவரும் வாழ்த்துவோம். தங்கமோ, வெள்ளியோ இந்தியாவுக்கு அவரால் ஒரு பதக்கம் உறுதி.

காமக் கொடூரன் மல்யுத்த வாரியத் தலைவன் பிரிஜ்பூஷன் சரன்சிங்கின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மற்றவர்களோடு இணைந்து போராடிய போது அப்போராட்டத்தை நசுக்கி அயோக்கியனுக்கு துணை நின்று அவன் மகனுக்கு சீட் கொடுத்து எம்.பி ஆக்கிய கேடு கெட்ட நரேந்திர மோடியே, வினீஷ் போகத் பதக்கம் வென்றதும் தொலைபேசியில் அழைத்து வாழ்த்து எல்லாம் சொல்லாதே. அதற்கான அருகதை உனக்கு கிடையாது.

மோடி மட்டுமல்ல, மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை ஆதரிக்காத எந்த காவிக்கயவ்னுக்கும் அருகதை கிடையாது.

Wednesday, July 31, 2024

இந்தியாவில் முதல் முறையாக . . .

 


இந்தியாவில் முதல் முறையாக . . .

துப்பாக்கி சுடும் போட்டியில் ஏர் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவை பதக்கப்பட்டியலில் இடம் பெற வைத்த பதக்க மங்கை மனு பாக்கர், அதே பிரிவில் கலப்பு இரட்டையருக்கான போட்டியில் சரப்ஜோத்சிங்குடன் இணைந்து இன்னொரு வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார்.

இருவருக்கும் வாழ்த்துக்கள்.

ஒரே ஒலிம்பிக் போட்டியில் இந்தியர்கள் யாரும் இதுவரை இரண்டு பதக்கங்களை வென்றதில்லை.

2024 பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இரண்டு பதக்கங்களை வென்று "ஒன்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்ற முதல் இந்திய வீரர்" என்ற சாதனையை படைத்த மனு பாக்கருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். 

Sunday, July 28, 2024

மனு பாக்கர் - முதல் பெருமை



பாரிஸ் நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் துப்பாக்கி சுடும் போட்டிகளில்  10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கமும் பதக்கப்பட்டியலில் இடமும் பெற்றுக் கொடுத்த வீராங்கனை மனு பாக்கருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

வெற்றிகள் தொடரட்டும் . . . 


Tuesday, May 30, 2023

நீதி மறுக்கப்பட்ட பொக்கிஷங்கள்

 

பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் மொழி பெயர்ப்பில் நீதி மறுக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகளின் சார்பாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்சி மாலிக்கின் அறிக்கை. 



முன்குறிப்பு: பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான மல்யுத்த வீராங்கனைகளின் பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்காமல் பாதிக்கப்பட்டவர்களையே ஒடுக்குகிறது இந்த பாஜக அரசு. அதனைக் கண்டித்து மல்யுத்த வீராங்கனைகள் வெளியிட்ட அறிக்கையின் 'மொழிபெயர்ப்பு' இது. இதனை ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக பதக்கம் வென்ற சாக்‌ஷி வெளியிட்டிருக்கிறார்.

"மே 28 ஆம் தேதியன்று என்ன நடந்தது என்பதைப் பார்த்திருப்பீர்கள். காவல்துறை எங்களை நடத்திய விதத்தையும் கொடூரமாகக் கைது செய்ததையும் நீங்கள் கவனித்திருப்பீர்கள். எங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்து அமைதியாகத்தான் நாங்கள் போராடிக்கொண்டிருந்தோம். எங்கள் போராட்டத்தை ஒடுக்கியதோடு நாங்கள் போராடிய இடத்தையும் நாசமாக்கிவிட்டு, எங்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தியும்விட்டனர். மறுநாளே மிகக்கடுமையான வழக்குகளையெல்லாம் எங்களுக்கு எதிராகப் பதிவு செய்தார்கள்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகளை எதிர்த்து பெண்கள் போராடுவது அவ்வளவு பெரிய குற்றமா என்ன?

காவல்துறையும் இந்த அமைப்புமுறையும் எங்களைக் குற்றவாளிகளைப் போல நடத்துகிறார்கள். ஆனால் எங்களுக்குக் கொடுமைகள் இழைத்த குற்றவாளியோ சுதந்திரமாக பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு மேடையேறி எங்களைக் கேலிசெய்து பேசிக்கொண்டிருக்கிறார். போஸ்கோ சட்டத்தையே திருத்தவேண்டும் என்றெல்லாம் அவர் பொதுவெளியில் பேசிக்கொண்டிருக்கிறார்.

எங்களால் தாங்கிக்கொள்ளவே முடியாத அளவிற்கு எங்களுடைய மனது பாதிக்கப்பட்டிருக்கிறது. மல்யுத்த வீராங்கனைகளாகிய எங்களுக்கு இந்த தேசத்தில் எந்த உரிமையுமே இல்லையா? ஒலிம்பிக்கிலும் உலக சாம்பியம் போட்டிகளிலும் நாங்கள் பதக்கங்கள் பெற்ற தருணங்களை எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கிறோம்.

நாங்கள் ஏன் இப்போது வாழ்கிறோம் என்று யோசிக்கிற நிலைக்கு வந்து சேர்ந்திருக்கிறோம். இந்தளவுக்கு மோசமான நிலைக்கு இந்த அமைப்புமுறை எங்களை இழுத்துக்கொண்டுவந்து போட்டிருக்கிறதே. அதனைப் பார்க்கவா வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எங்களைக் குற்றவாளியைப்போல வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். நேற்று முழுவதும் பெரும்பாலான மல்யுத்த வீராங்கனைகள் எங்கெங்கோ மறைந்து ஒளிய வேண்டியிருந்தது. ஆனால் எங்களை இந்த நிலைமைக்குத் தள்ளிய உண்மையான குற்றவாளியோ எங்களைக் கேலிசெய்தும், பாதிக்கப்பட்ட பெண்களின்மீதே குற்றம் சுமத்தியும் நிம்மதியாக வலம்வந்துகொண்டிருக்கிறார். எங்களுடைய போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எல்லா வேலைகளையும் செய்துகொண்டிருக்கிறார்.

எங்களுடைய கழுத்துகளை அலங்கரித்த இந்த பதக்கங்களுக்கெல்லாம் எந்தப் பொருளும் பலனும் இல்லையென்பதுபோலத்தான் இப்போது எங்களுக்குத் தோன்றுகிறது. எங்களுடைய சுயமரியாதையை அடகுவைத்து இந்த பதக்கங்களையெல்லாம் வைத்துக்கொண்டு என்ன செய்வது? அதனால் அவற்றை திரும்பக் கொடுத்துவிடலாம் என்று முடிவெடுத்தோம்.

ஆனால் அவற்றை யாரிடம் திரும்பக் கொடுப்பது?

நம்முடைய ஜனாதிபதியிடமா? சக பெண்ணாக இருந்தும், எங்களுடைய போராட்டம் நடக்கிற இடத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்தும் அமைதியாக வேடிக்கை மட்டுமே பார்த்துக்கொண்டு எதுவும் செய்யாமல் இருந்த அவரிடம் கொடுப்பது வீண் வேலைதானே.

சரி, அப்படியென்றால் பெண்களை இந்த தேசத்தின் மகள்களென்று அழைக்கும் பிரதமரிடம் பதக்கங்களைத் திருப்பிக் கொடுக்கலாமா?

அதற்கு எங்களுடைய மனசு ஒப்புக்கொள்ளவில்லை. மகள்கள் என்று வார்த்தைகளால் சொன்னாரே தவிர, இத்தனை நாட்களாக நாங்கள் நடத்தும் போராட்டங்களை என்னவென்றுகூட அவர் கண்டுகொள்ளவில்லை. ஆனால், புதிய பாராளுமன்றத் திறப்பு விழாவிற்கு எங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரையே விருந்தாளியாக அழைத்து அழுக்கு நிறைந்த அந்த மனிதரோடு வெள்ளை ஆடையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார். ‘இந்த அமைப்புமுறையே எங்களுடையதுதான். உன்னால் என்ன செய்யமுடியும்’ என்று எங்களைப் பார்த்து கேலிசெய்வதாகத்தான் இது இருக்கிறது.

ஒளிரும் இந்தியாவாக பிரச்சாரம் சொல்லப்படும் இந்த தேசத்தில் எங்களுக்கான இடம் எங்கே?
இந்தியாவின் மகள்களென்று அழைக்கப்படும் நாங்களெல்லாம் ஒரு பொருட்டே இல்லையா?
போலி முழக்கங்களாகவும் அரசியல் அதிகாரத்தைப் பிடிப்பதற்கான வாய்வார்த்தைகளாகவும் மட்டுமேதான் எங்களைப் பயன்படுத்திக்கொள்கிறீர்களா?

இந்தப் பதக்கங்களெல்லாம் எங்களுக்கு இனியும் தேவையில்லை. எங்களை முகமூடி போல அணிந்துகொண்டு, வெறுமனே பிரச்சாரக் கருவிகளாக மட்டுமே பயன்படுத்தி, எங்களை முழுவதுமாக சுரண்டிக்கொண்டிருக்கிறீர்கள். அந்த சுரண்டலுக்கு எதிராகக் குரல் எழுப்பினாலோ, எங்களை சிறையில் அடைக்கத் தயாராகுகிறீர்கள்.

இந்தப் பதக்கங்களையெல்லாம் கங்கை ஆற்றில் வீசப்போகிறோம். கங்கை ஆறுதான் எங்கள் அன்னை. கங்கையை எந்தளவுக்குப் புனிதமாக நாம் கருதுகிறோமோ, கடினமாக உழைத்துப் பெற்ற எங்கள் பதக்கங்களையும் அதே போலத்தான் கருதுகிறோம். எங்களுக்கு மட்டுமல்லாமல், இந்த பதக்கங்களெல்லாம் ஒட்டுமொத்த தேசத்திற்குமே புனிதமானவைதான். அதனால் குற்றவாளியுடன் கைகோர்த்து நின்று எங்களை முகமூடியாகப் பயன்படுத்தும் இந்த அரசிடம் திருப்பிக் கொடுப்பதற்கு பதிலாக, புனித கங்கை அன்னையிடமே எங்களுடைய பதக்கங்களை ஒப்படைப்பதுதான் சரியென்று நினைக்கிறோம்.

இந்தப் பதக்கங்கள்தான் மல்யுத்த வீராங்கனைகளாகிய எங்களுடைய வாழ்க்கையும் உயிரும். கங்கையில் அவற்றை வீசிவிட்டு, அதன்பின்னர் வாழ்ந்தென்ன பயன்? அதனால் கங்கையில் வீசியபின்னர், இந்த தேசத்திற்காக உயிரைவிட்ட தியாகிகளின் நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் இந்தியா கேட் அருகே சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் துவங்கப்போகிறோம். சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் விளையாடும்போது, இந்தியா கேட்டில் இடம்பெற்றிருக்கும் இந்தியப் போர் வீரர்களைப் போன்ற மனநிலையில்தான் நாங்களும் பங்கெடுத்துப் பதக்கங்களை வென்றோம்.

இந்தியாவின் புனிதமற்ற அமைப்புமுறையும் அரசும் அதன் வேலையை செய்கிறது. அதற்கெதிரான போராட்டத்தை நாங்களும் எங்களுடைய வழியில் செய்கிறோம். இந்தியாவின் மகள்களாகிய எங்களுடைய பக்கமா அல்லது அந்த மகள்களைத் துன்புறுத்தும் இந்த அரசு/அமைப்புமுறையின் பக்கமா - இவர்கள் இருவரில் யார் பக்கம் நிற்கப்போகிறார்கள் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்.

இன்று மாலை 6 மணிக்கு நாங்கள் பெற்ற பதக்கங்களையெல்லாம் ஹரித்துவார் அருகே கங்கை ஆற்றில் வீசப்போகிறோம்.

நாங்கள் என்றைக்கும் இந்த நாட்டிற்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்."

இப்படிக்கு,
நீதி மறுக்கப்பட்ட இந்திய தேசிய மல்யுத்த வீராங்கனைகள்

பின் குறிப்பு - என்னுடையது.

பதக்கங்களை டிமோவின் முகத்தில் வீசலாமே என்று ஒரு கணம் எனக்கு தோன்றியது. அது சாக்கடையில் வீசுவதற்கு சமம் என்பதால் கங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர் போல. 

Saturday, September 4, 2021

வாழ்த்துக்கள் - வருத்தமும் கூட

 






ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டி முடிந்ததும் அதே நகரத்தில் பாராலிம்பிக் என்று அழைக்கப்படுகிற மாற்றுத் திறனாளிகளுக்கான  ஒலிம்பிக் போட்டி நடைபெறும்.

இப்போது டோக்கியோவில் நடந்து கொண்டிருக்கிற பாராலிம்பிக் போட்டியில் இந்திய வீரர்கள் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த பாராலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இம்முறை வெள்ளி வென்றுள்ளார்.

ஒலிம்பிக் போட்டியில் வென்றதை விட இம்முறை பாராலிம்பிக்கில் கூடுதல் பதக்கங்கள் வென்றுள்ளோம்.

இதுவரை நான்கு தங்கம், ஏழு வெள்ளி,  ஆறு வெண்கலம் வென்று பதக்கப் பட்டியலில் இருபத்தி ஆறாவது இடத்தில் உள்ளோம். 

வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துக்கள்.

கிரிக்கெட்டிற்கான முக்கியத்துவம் மற்ற விளையாட்டுகளுக்கு இல்லை என்பதை ஒலிம்பிக் போட்டிகளின் போது பேசுவோம். அந்த முக்கியத்துவம் கூட மாற்றுத் திறனாளி வீரர்களுக்கு கொடுக்கப் படுவதில்லை என்பதை வருத்தத்துடன் சுய விமர்சனத்தோடு சொல்கிறேன். 

ஒலிம்பிக்கில் ஒவ்வொரு பதக்கம் வென்ற போதும் பதிவெழுதிய நான், பாராலிம்பிக் பற்றி எழுதும் முதல் பதிவு இதுதான். அதிலும் வெற்றி பெற்றவர்களின் விபரங்கள் இல்லாமல். அந்த விபரங்களை அளிக்காமைக்கு வருந்துகிறேன்.


Wednesday, August 25, 2021

வென்றது வெள்ளி, உள்ளமோ தங்கம்



 

இணையத்திலிருந்து சுட்ட ஒரு நிறைவான, நெகிழ்ச்சியான செய்தி.

 

குழந்தை ஒன்றின் அறுவை சிகிச்சைக்காக  ஒலிம்பிக்  இல் கிடைத்த வெள்ளி  பதக்கத்தை  ஏலம் விட்ட போலந்து நாட்டு விராங்கனை 

 

 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில், பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியா தான் இன்று விளையாட்டு உலகின் சென்சேஷன். தன்னுடைய செயலால் வானளவு உயர்ந்து நிற்கிறார்.

 

போலந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கு தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 3,85,088 டாலர். அதாவது, இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 3 கோடி. இந்த தகவலை பேஸ்புக் மூலம் அறிந்த மரியா, அந்த குழந்தைக்கு எப்படியாவது உதவி புரிய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார்.

 

எனினும், 3 கோடி ரூபாயில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் திரட்ட முடிவு செய்தார். இதுகுறித்து அவர், "பதக்கத்தின் உண்மையான மதிப்பு என்றும் என் இதயத்தில் இருக்கும். பதக்கம் என்பது வெறும் பொருள் மட்டுமே. ஆனால், பலருக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்தது. என்னுடைய வீட்டில் இருந்து தூசி அடைவதை விட இந்த வெள்ளிப் பதக்கம் ஒரு உயிரை காப்பற்றட்டும். அதனாலேயே நோய்வாய்பட்ட குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இதை ஏலத்தில் விட முடிவு செய்தேன்" என்று தன் பதக்கத்தை ஏலத்தை விடுத்தார்.

 

இந்நிலையில், போலந்து நாட்டைச் சேர்ந்த Zabka எனும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1,25,000 அமெரிக்க டாலர் செலுத்தி அவரது மெடலை ஏலத்தில் வென்றது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் மரியா. குழந்தையின் பெற்றோரிடம் அந்த பணத்தையும் அவர் ஒப்படைத்தார். இதில் வியக்கத்தக்க மற்றொரு தகவல் என்னவெனில், ஏலத்தில் வென்ற அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம் வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் மரியாவிடமே கொடுத்துவிட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம், "மரியாவின் மனிதநேயத்தை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். டோக்கியோவில் வென்ற அவரது வெள்ளிப் பதக்கம் என்றும் அவரிடமே இருக்கட்டும்" என்று கூறி நெகிழ வைத்திருக்கிறது.