Showing posts with label விள்ம்பர மோகம். Show all posts
Showing posts with label விள்ம்பர மோகம். Show all posts

Tuesday, July 24, 2018

கல்யாண் ஜ்வெல்லர்ஸின் கபடம்




தாங்கள் என்னவோ மிகப் பெரிய யோக்கியர்கள் போல வேடம் போடுகிற கல்யாண் ஜ்வெல்லர்ஸ், ஹிந்திய்ல் அமிதாப் பச்சனை வைத்தும் தமிழில் பிரபுவை வைத்தும் வெளியிட்ட ஒரு விளம்பரத்தில் வங்கி ஊழியர்களையும் அதிகாரிகளையும் கொச்சைப் படுத்தியிருந்தது.

வங்கி அதிகாரிகள் சங்கத்தின் கடுமையான எதிர்வினைக்குப் பிறகு அந்த விளம்பரம் யாரையும் புண்படுத்தும் எண்ணம் எங்களுக்கு கிடையாது என விளக்கம் அளித்தது.

அந்த விளம்பரம் திரும்பப் பெற வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். திருச்சூரில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். வங்கி அதிகாரிகளின் போராட்டம் நியாயமா என்று பிஸினஸ்லைன் ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியது. ஆம் நியாயம் என்று 58 % பேர் சொன்னார்கள்.



இறுதியில் அந்த விளம்பரத்தை திரும்பப் பெறுவதாய் கல்யாண் ஜ்வல்லர்ஸ் எழுத்து பூர்வமாக அறிவித்தது.



ஆனால் தமிழில் பிரபு நடித்த அந்த விளம்பரம் இன்னும் வெளி வந்து கொண்டுதான் இருக்கிறது.

திரும்பப் பெறுவதாக சொல்லி விட்டு இன்னும் திரையிடுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்!

இவர்கள் நம்பிக்கை, நேர்மை என்றெல்லாம் கதைக்கிறார்கள்!

மோடியிடம் கற்றுக் கொண்ட பாடமோ?


Friday, October 20, 2017

மோடியின் ஃபேன்ஸி ட்ரெஸ் – மூன்று சிக்ஸர்கள்.



மோடி ராணுவ உடை அணிந்து சீன் போட்டது தொடர்பாக முக நூலில் பார்த்த மூன்று கருத்துக்கள். மூன்றும் மூன்று வித்தியாசமான ரகம். ஆனால் மூன்றுமே சுவாரஸ்யம்.


வழக்கறிஞர் தோழர் பிரதாபன்


இதைவிட யாராலும் இராணுவத்தினரை அவமரியாதை செய்ய முடியாது!
அந்த உடையை முப்படைத்தலைவர் என்றமுறையில் குடியரசு தலைவர் மட்டுமே அணிய முடியும்.

அந்த நடை முறையை மீறி இன்று மோடி அணிந்துள்ளார்.
சர்வாதிகாரக்கலை தெரிகிறது! 

இனி இந்தியாவில் இருண்ட வரலாறு ஆரம்பிக்கப்போகிறது. அவர்கள் நாம் நினைப்பதை விட வேகமாக செயல்படுத்துகிறார்கள்!



குறும்பட இயக்குனர் தோழர் ஜெயச்சந்திர ஹஷ்மி



தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் தோழர் கருணா



ராணுவ உடையை யார் யார் போடலாம்..?

ராணுவ வீரர்கள் போடலாம்...

ஓஹோ..அப்புறம்...

முப்படைகளின் தலைவரான குடியரசுத்தலைவர் போடலாம்..

அப்பிடியா...அப்புறம்...

அப்புறம்ம்ம்ம்ம்...ஆங்...நடிகர்கள் நடிப்பதற்காக போடலாம்...

அட...நடிகர்களும் போடலாமா...அப்படின்னா சரிதான்..!


மூன்றுமே சூப்பரான சிக்ஸர்கள்.

நான் பார்க்காத சிக்ஸர்கள் இன்னும் எத்தனையோ?

Thursday, March 23, 2017

கா.கொ.கூ.க.வி.சு.சா.க.விளம்பரம்



காட்டிக் கொடுத்த கூட்டத்து கலப்பட வியாபாரி சுடிதார் சாமியாரின் கபட விளம்பரம்.


போலிச்சாமியாரும் புதிய கலப்பட வியாபாரியுமான ராம்தேவ், இன்று தனது பதஞ்சலி பொருட்களுக்காக ஒரு விளம்பரம் கொடுத்துள்ளார். 



பன்னாட்டுக் கம்பெனிகளை புறக்கணிக்க வேண்டும் என்பது சரிதான். இதை பன்னாட்டுக் கம்பெனிகளின் தரகரான மோடியின் மடியில் அமர்ந்து கொண்டு சொல்வதுதான் அயோக்கியத்தனம்.

பகத்சிங்கின் வீரத்தையும் தியாகத்தையும் தனது பொருட்களின் வியாபாரத்திற்காக பயன்படுத்துவது என்பது கேவலமானது.

கோட்சேவின் பெயரையோ, சவர்க்காரின் பெயரையோ சொல்லி விற்க முடியாது என்று தெரிந்ததால் பகத்சிங்கின் பெயரை பயன்படுத்துகிறார்.

பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு எதிராக போலியாக விளம்பரத்தில் முழங்கிய ராம்தேவால் இக்கருத்தை மோடியிடம் நேரடியாக முழங்க முடியுமா?

தூக்குக்கயிற்றை தைரியமாக சந்தித்த ஒரு வீரனின் பெயரை உச்சரிக்க, காவல்துறை கைது செய்து விடுமோ என்று பயந்து சுடிதார் அணிந்து தப்பித்த இந்த கோழைக்கு அருகதை உண்டோ?

போலிகள், போலிகள், போலிகள்.
காசுக்காக எதையும் செய்ய வெட்கப்படாத இழி பிறவிகள்.

Thursday, March 16, 2017

“அம்மா” பாவம் (ஜெ அல்ல)





மோடியை மகனாகப் பெற்றதற்கு அந்த அம்மையார் என்னவெல்லாம் சிரமம் இன்னும் அனுபவிக்க வேண்டியிருக்குமோ என்று நவம்பர் மாதத்தில் எழுதிய பதிவு இங்கே இணைப்பில் உள்ளது. என் அச்சம் நிஜமாகி விட்டது.

நேற்றிலிருந்து வாட்ஸப்பில் உலா வருகிற செய்தி ஒன்றுண்டு.

மோடியின் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாமல் போய் அவரே 108 எண்ணுக்கு தொலைபேசி செய்து ஆம்புலன்ஸை வரவைத்தார். மருத்துவமனையிலும் கூட ஸ்பெஷல் வார்டில் அனுமதிக்கப்படுவதை மறுத்து பொது வார்டில் சேர்ந்து கொண்டார்.

தாயைப்பார்க்கப் போனதைக் கூட செய்தியாக்கியவர் மோடி. அப்போது கூட அவர் கண்கள் காமெராவைத்தான் நோக்கியிருந்தது.

தள்ளாத வயதில் வங்கி வரிசையில் நிற்க வைத்து அவதிப்படுத்தினார்.

இப்போதும் தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதைக் கூட ஒரு விளம்பரச் செய்தியாக்குகிறார்.

பத்து லட்சம் ரூபாய் கோட் போட்ட ஒரு சுகபோகி தன் விளம்பர மோகத்திற்காக 95 வயது மூதாட்டியை இப்போது பொது வார்டில் அனுமதிக்க வைத்துள்ளார்.

அவரை வைத்து மோடி இன்னும் என்னவெல்லாம் நாடகம் நடத்தப் போகிறாரோ?

மோடியை மகனாகப் பெற்ற அந்த மூதாட்டியாரின் நிலைமை உண்மையிலேயே மிகவும் பரிதாபகரமானது.

Friday, November 18, 2016

மோடியை பெத்த குற்றத்திற்கு





“என்ன தவம் செய்தனை யசோதா” என்பது பாபனாசம் சிவன் பாடல்.

“இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்” என்று பாரதியும் கேட்கிறார்.

“ஈன்ற பொழுதினும் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்” என்ற மகிழ்ச்சிகரமான மன நிலையை விவரிக்கிறார் வள்ளுவர்.

வெற்று அரசியல் ஆதாயத்திற்காக விளம்பர நாடகத்தின் பாத்திரமாக தன்னை மாற்றி வரிசையில் நிற்க வைத்து பெரும் சித்திரவதைக்கு உள்ளாக்கிய தன் மகனைப் பற்றி அந்த வயது முதிர்ந்த தாய் மனதில் என்னவெல்லாம் ஓடி இருக்கும்?

இவனைப் பெற்ற குற்றத்திற்காக இன்னும் என்னவெல்லாம் பாடு படப் போகிறோமோ என்று வேதனைப்பட்டிருப்பாரோ?

தன்னை பார்க்க வந்ததையே படம் எடுத்து காட்சிப்படுத்தியதை அன்றே தடுத்திருந்தால் இன்று இப்படி ஒரு நிலை வந்திருக்காதே என்று தன்னையே நொந்து கொண்டிருப்பாரோ?

தன்னுடைய விளம்பர மோகத்திற்காக பெற்ற தாய் என்றும் பார்க்காமல் அலைக்கழிக்கத் தயங்காத மகனைப் பெற்றதற்காக எத்தனை பேர் தன்னை சபிக்கிறார்களோ என்று கூனி குறுகியிருப்பாரோ?

வரிசையில் நிற்பவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள், கருப்புப் பணக்காரர்கள், அடுத்தவர் பணத்தை மாற்றிக் கொடுக்கும் கூலிக் காரர்கள் என்று அசிங்கமாய் பேசி விட்டு தன்னையும் அந்த பட்டியலில் இணைத்து விட்டானே என்று கோபப்பட்டிருப்பாரோ?

இப்படி ஒரு மகனைப் பெற்றதற்காக அவரால் நிச்சயம் பெருமைப் பட்டிருக்க முடியாது.

தள்ளாத வயதுள்ள தன் அன்னையை வரிசையில் நிறுத்திய நாடகம் இருகிறதே, அது மோடியின் இதர மோசமான குற்றங்களை விடவும் மிகவும் மோசமான குற்றம்.


Monday, February 23, 2015

பணத்திற்காக வெறியூட்டாதீர்கள்


Image result for Star sports cricket advertisement

 Image result for Star sports cricket advertisement


 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி சேனல் தயாரித்த மூன்று விளம்பரப் படங்களை நேற்று என் மகன் காண்பித்தான்.

பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் பாகிஸ்தானின் வெற்றி பெற்றால் வெடிப்பதற்காக பட்டாசுகளை வாங்கி பல வருடங்களாக ஏக்கத்துடன் காத்திருந்து ஏமாறுவதாக முதல் படம் இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவை இதுவரை உலகக் கோப்பையில் வென்றதே இல்லை என்பதை தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் நையாண்டி செய்வதாக இரண்டாவது விளம்பரப்படம் இருக்கிறது.

ஏமாற்றத்துடன் உள்ள பாகிஸ்தான் ரசிகர் தென் ஆப்பிரிக்க சட்டையைப் போட்டுக் கொண்டு அந்த அணியை ஆதரிப்பதாகவும் அந்த அணி தோற்றதும் வெறுப்பாக அந்த சட்டையை கழட்டி வீசி வெளியே வருபவரிடம் ஐக்கிய அரபு அணி ரசிகர் தங்கள் சட்டையை பாகிஸ்தான் ரசிகரிடம் அளித்து தங்களை ஆதரிக்கச் சொல்வதாய் மூன்றாவது விளம்பரம் அமைந்துள்ளது.

இந்த விளம்பரங்கள் எல்லாமே இந்திய ரசிகர்களை வெறியூட்டும் தன்மையோடுதான் அமைந்துள்ளது. இது மலிவான ரசனை என்பது மட்டுமல்ல, ஆபத்தானதும் கூட. இந்தியா பாகிஸ்தான் மக்களிடையே பகைமையை உருவாக்குவதும் அதை அதிகப்படுத்துவதுமாக உள்ளது. கனவான்களின் விளையாட்டு என்று சொல்லப்பட்ட கிரிக்கெட் களவாணிகளின் ஆக்கிரமிப்பில் உள்ளது என்பதற்கான உதாரணம் இது.

தங்களுடைய விளம்பர வருவாயை அதிகரிக்க, அதிகமானவர்களை தொலைக்காட்சியை பார்க்க வைக்க இப்படி வெறியூட்டப்படுகிறது. பன்னாட்டு ஊடகங்கள் கிரிக்கெட் உலகில் அடிவைத்த பின்புதான் எல்லா சீர்கேடுகளும் தொடங்கியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இப்போது அந்த சீரழிவு காசுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அளவிற்கு போய் விட்டது. பொதுவாக இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களை முரட்டுத்தனமானவர்கள் என்று எல்லோரும் சொல்வார்கள். அப்படி முரட்டுத்தனமான கிரிக்கெட் ரசிகர்களை உருவாக்கவே இது போன்ற மட்டமான சிந்தனை கொண்ட விளம்பரங்கள் வழி வகுக்கும்.

ஆங்கிலத்தில் சொல்ல வேண்டுமானால் 

This is not Cricket