Friday, April 10, 2020

மக்கள் சேவையில் - கொரோனா சொல்வதென்ன?

கொரோனா வைரஸ் தொற்று - ஒரு அழுத்தமான உண்மையை உலகிற்கு சொல்லியுள்ளது.

எந்த ஒரு துயரமோ, பேரிடரோ வருமானால் அப்போது களத்தில் மக்கள் சார்ந்து பணியாற்றக் கூடிய வல்லமை அரசுத்துறைகளுக்கும் அரசு நிறுவனங்களுக்குமே உண்டு.

ஒவ்வொரு இயற்கைச் சீற்றத்தின் போதும் பார்க்கிற காட்சி இதுதான். ஆனாலும் நிலைமைகள் மாறிய பின்பு அந்த நிறுவனங்களுக்கு எதிராகவே, அவற்றை அழிக்கவே அரசுகள் முயலும். ஆமாமாம், தனியார்தான் சூப்பர் என்று பல அறிவு ஜீவிகளும் தலையாட்டுவார்கள். 

இனியாவது இந்த போக்கு மாற வேண்டும்.

அரசு வங்கிகளின் சேவை குறித்து எங்கள் தென் மண்டலத் துணைத்தலைவர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களின் அனுபவப் பகிர்வு



அரசு வங்கிகளின் அரவணைப்பு

97 வயது முதியவர்க்கு வீடு தேடி சேவை
*********************************

திரு என்.எஸ்.ராஜன் 97 வயது நிரம்பியவர். எல்.ஐ.சி யில்  பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இல்லம் தாம்பரம் வேளச்சேரி சாலையில் உள்ளடங்கி இருக்கிறது.

அவரின் வங்கி கணக்கு தாம்பரத்தில் உள்ள ஓர் அரசு வங்கியில் உள்ளது. அவருக்கு ரூ 7000 பணம் அவசரமாக தேவைப்படுகிறது. எல்.ஐ.சியின் தொழிற் சங்கத் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற திரு தேவப்பிரகாசை தொடர்பு கொள்கிறார். ஊரடங்கு காலமாயிற்றே. அவர் என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ் மாநில துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன் அவர்களை தொடர்பு கொண்டேன். அவர் விபரங்களை வாட்ஸ் அப்பில் பகிர வேண்டினார். அனுப்பி வைத்தேன். 

அரை மணி நேரம் கூட ஆகவில்லை. திரு ராஜன் அழைத்தார். அவர் குரல் தழு தழுத்தது. ஒரு வங்கி ஊழியர் நேரில் வந்தார்; என்னிடம் காசோலையை வாங்கி கொண்டு ரொக்கத்தை ஒப்படைத்தார் என்றார்.

வங்கி அதிகாரிகள் சங்கத் தலைவரின் உடனடி தலையீட்டின் காரணமாக சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா தாம்பரம் கிளை திரு ஹரிபாபு அவர்கள் திரு ராஜன் அவர்களின் வீடு தேடி முதலில் பணத்தை சேர்ப்பித்து விட்டு கூடவே காசோலையை பெற்று வந்தார்

அரசு வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் சேவைக்கு சல்யூட். மக்கள் மீது அக்கறையோடு உடன் வினையாற்றும் தொழிற்சங்க இயக்கங்களுக்கும் சல்யூட்.

க.சுவாமிநாதன்.

4 comments:

  1. Is it possible for any common man who doesnt know any union persons / reference....

    This is also a one kind of misuse of power!!

    ReplyDelete
    Replies
    1. மேகே சொன்னது ஆயிரமாயிரம் பணிகளில் ஒன்று. பாராட்ட மனமில்லா விட்டாலும் குறை சொல்லும் மனம் இருக்கிறதே "உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு சார்"

      Delete
  2. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 27 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது இந்த பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    முக்கிய அறிவித்தல்: தயவு செய்து எமது வலைத் திரட்டியின் மெனுவில் இணைக்கப்பட்டுள்ள வகைப்படுத்தல்களின் அடிப்படையில் தங்கள் வலைத்தளத்தில் குறிச் சொற்களை இணைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உதாரணமாக, இந்த பதிவை பொது அல்லது அரசியல் என்று குறிப்பிடலாம். இதனை பின்பற்றுமாறு தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

    இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு

    எங்கள் தளத்தில் தங்களது பதிவு: மக்கள் சேவையில் – கொரோனா சொல்வதென்ன?

    ReplyDelete