Showing posts with label மிரட்டல். Show all posts
Showing posts with label மிரட்டல். Show all posts

Friday, November 25, 2022

பாஜகவில இதெல்லாம் ஒரு ஜாலிப்பா!

 



திமுகவிற்கு பெரிய அடி கொடுத்து விட்டோம் என்று சங்கிகள் பீற்றிக் கொண்ட திருச்சி சூர்யா, பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் 
டெய்சி சரனோடு பேசிய ஆடியோவை நானும் கேட்டேன். அசிங்கம், ஆபாசம், வன்முறை, மிரட்டல் இதுதான்,

இப்போது அவர்கள் இருவரும் சமரசமாகி விட்டதாக செய்தி வந்துள்ளது. 


இந்த பிரச்சினையை தீர்க்க ஆட்டுக்காரன் எடுத்த பெரும் முயற்சி வெற்றி பெற்று விட்டது போல . . .

தன்னை ஆபாசமாக பேசியவனை அந்த பெண்மணி செருப்பாலோ, துடைப்பத்தாலோ அடித்திருக்க வேண்டும். ஆனால் தம்பி என்கிறார்.

"அவன் குடும்பத்தை நான் கேவலமா பேசுவேன். என் குடும்பத்தை அவன் படு கேவலமா பேசுவான், நாங்க இதை ஒரு ஜாலியாதான் எடுத்துக்குவோம்" என்ற வடிவேலுவின் டெலக்ஸ் பாண்டியன் வசனம்தான் நினைவுக்கு வந்தது. அது போல இதெல்லாம் அவங்களுக்கு ஜாலி போல . . .

மொத்தத்தில் பாஜக ஒரு மானங்கெட்டவர்களின் கூடாரம். 

Thursday, October 22, 2020

கொரோனா மருந்து – காசு கொடுத்துடுவோம்

 



 பீஹார் தேர்தலில் பாஜக வென்றால் கொரோனா தடுப்பு மருந்து இலவசமாக அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் சொல்லியிருப்பது அப்பட்டமான பிளாக் மெயில் மிரட்டல்.

 பரவாயில்லை. நீங்கள் தோற்றுப் போங்கள்.

 தடுப்பு மருந்து வாங்க வழியில்லாத மக்களுக்கு நாங்கள் பிச்சை எடுத்தாவது மருந்து வாங்கிக் கொடுத்து விடுகிறோம்.

 கொரோனாவை விட மிகக் கொடூரமான கிருமி பாஜக ஒழிந்தால் கொரோனாவும் ஒழிந்து விடும்.

Wednesday, April 10, 2019

என்ன மாலன் மிரட்டறியா?




இனி மாலனை நக்கலுக்குக் கூட மேஜர் என்றழைத்து அந்த பதவியின் மரியாதையை கெடுக்க விரும்பவில்லை.  அந்த நபருக்கும் மரியாதை அவசியம் இல்லை.

தான் தெரிவித்த கருத்துக்காக தனி நபர் தாக்குதல் நடத்துகிறார்கள். வசை பாடுகிறார்கள் என்றெல்லாம் பாஜக ஊதுகுழல் மாலன் புலம்பி இருக்கிறார்.

அப்படி அவர் மீது தாக்குதல் நடத்துகிற அளவிற்கு என்ன கருத்து சொல்லியுள்ளார்.

மாலன் உதிர்த்த தத்துவ முத்துக்கள்  கீழேயுள்ளது.


இந்திலையில் தமிழ்நாட்டு வாக்காளர்கள் யோசிக்க வேண்டிய ஒன்று உண்டு.

மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்குமானால் (தனித்துப் பெரும்பான்மை பெற்றோ, அல்லது சில கட்சிகளின் ஆதரவோடோ) அதில் தமிழகம் இடம் பெற வேண்டாமா?

எதிர்கட்சி வரிசைகளை நிரப்புவதால் என்ன பலன் கிடைத்துவிடும்?

நம் உரிமைகளுக்குக் குரல் எழுப்ப முடியும். உண்மைதான். ஆனால் உரிமைக்குரல் உணர்வுகளை வெளிப்படுத்துமேயன்றி வேறெதைச் சாதிக்கும்? உணர்ச்சி நிலையிலேயே , அதுவும் ஒரு கொதி நிலையிலேயே ஒரு மாநிலம் இருப்பது அதன் வளர்ச்சிக்கு உதவுமா? தமிழகத்தில் தழைத்து வரும் வெறுப்பரசியல் மற்றவர்களிடமிருந்து தமிழகத்திற்கு எதிராகத் திரும்பினால் என்ன ஆகும்?

உலகெங்கும் சிறுபான்மையருக்கு இரு வழிகள்தான் உண்டு. மொழிச் சிறுபான்மையோருக்கும்தான். ஒன்று மோதல் (Confrontation) மற்றது அனுசரித்தல் (Conciliation)

மோதிப் பார்த்தால் என்ன ஆகும் என்பதற்கு இலங்கையும், அடையாளங்களை விட்டுவிடாமல் அனுசரித்துப் போனால் என்ன கிடைக்கும் என்பதற்கு சிங்கப்பூரும் நம் கண்ணெதிரே சாட்சிகளாக இருக்கின்றன.

இரண்டிலும் இழப்புக்கள் இருக்கும், மறுப்பதற்கில்லை. ஆனால் மோதலில் சேதம் அதிகம். சமரசங்கள் வலி தருவன. மறுப்பதற்கில்லை. ஆனால் சமரசம் இல்லாத வாழ்க்கை ஒன்றுண்டா? குடும்பத்தில், அலுவலகத்தில், வாழுமிடத்தில், இறுதியில் சுடுகாட்டில் கூட எத்தனை சமரசங்கள்!

தமிழகத்தில் பாஜக கூட்டணி வரப்போவதில்லை என்பது மாலனுக்கு தெளிவாக புரிந்து விட்டது. மத்தியிலும் வரப்போவதில்லை என்பது இன்னொரு விஷயம்.

தமிழகத்தில் தாமரை கருகுவதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. வாங்கிய காசுக்கு வஞ்சகம் செய்யக் கூடாது என்பதற்காக இலங்கையில் தமிழர்கள் அழிந்து போனது போல தமிழகத்து தமிழர்களும் அழிந்து போவீர்கள் என்று மிரட்டுகிறார்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால்

ஒரு வேளை மோடி மீண்டும் வந்து தமிழகத்தில் அக்கூட்டணி தோற்குமானால் தமிழர்களை அவர் அழித்து விடுவார். ஆகவே உயிருக்கு பயந்தவர்களே மோடிக்கு ஓட்டு போடுங்கள்.

மதச்சிறுபான்மையினருக்கும் அவர் அதே மிரட்டலை விடுக்கிறார்.

மோடிக்கு அடி பணியாதவர்களுக்கு அழிவு நிச்சயம் என்பதுதான் மாலன் வெளிப்படையாக விடுக்கும் மிரட்டல்.

இதுதான் பாஸிஸம். இந்த பாஸிஸ குணாம்சம் இருப்பதால்தான் மோடியை எதிர்க்கிறோம். எதிர்ப்போம்.

காவிக்கயவர்களை விட குரூரமான வார்த்தைகளில் பேசுகிற மனிதன் மாலன் என்று அம்பலப்படுத்துவதையே அவரால் தாங்க முடியவில்லை. தனி நபர் தாக்குதல், வசை பாடுதல் என்று அவரை கழுவி ஊற்றும் ஜெயமோகன் பாணியிலேயே அனுதாபம் தேட முயற்சிக்கிறார்.

தளபதி படத்துல ஒரு வசனம் வரும் தெரியுமா மாலன்!

அது போலதான்

மோடியை ஆதரித்து வாழறதை விட அவரை எதிர்த்து அழியறதே மேல்.

எழுத்து வியாபாரம் செய்யற உனக்கு அதெல்லாம் புரியாது.


Saturday, October 27, 2018

ஒரு முட்டாளின் மிரட்டல் . . .


Metoo சபாஷ் மியூசிக் அகாடெமி என்று இரண்டு நாட்கள் முன்பாக எழுதிய பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டத்தை கீழே தந்துள்ளேன்.

ன்னா காம்ரேட், ஒங்களுக்கு விசயம் புரியலயா! இல்ல, புரியாதமாதிரி நடிக்கிறீர்களா! உதாரணத்துக்கு ஒரு அழகான சங்கி-மங்கி சகோதரி உங்கள்மேல் பாலியல் குற்றச்சாட்டு சொன்னால் அதை மவுனமாக எற்றுக்கொண்டு LIC சங்க பணியிலிருந்து விலகிவிடுவீர்களா. (LIC ஊழியர் பணியிலிருந்து விலகி விடுமாறு கோருவது அராஜகம்!).

என்னோட LIC policy claimல பிரச்சனை இருந்தது அதை clear பண்ணுவதற்காக LIC ஊழியர் சங்கத்தலைவர், வேலூர் 'ராமனை' சந்திக்க சொன்னார்கள். அவர் அவசரமாக சங்க meetingகு கொல்கட்டா செலல விருப்பதாகவும் அங்கு வந்து சந்தித்தால் 'வேலையை' நல்லபடியாக முடித்துக்கொடுப்பதாகவும் வாக்களித்தார். ஆதன்படி அவரை கொல்கட்டா சென்று சந்தித்த பொழுது விக்டோரியா மாளிகை தோட்டத்தில் வைத்து என்னிடம் அத்துமீறி நடந்துகொண்டார் என்று ஒரு பெண் 'சீக்கிரமே' உங்கள் மேல் பாலியல் குற்றம் சாட்டலாம். Be ready, comrade!

உங்களுக்கு வருவது ரத்தமா! அல்லது தக்காளி சட்னியா!! என அறிய ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் தோழன்
ReplyDelete

இந்த பின்னூட்டத்திற்கு பதிலடி கொடுத்து விட்டேன்.


இதைப் படிக்கையில்  எனக்கு தோன்றிய சில உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.

எங்கே தன் மீது Metoo வந்து விடுமோ என்ற அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கும் கடந்த கால குற்றவாளிகளுக்கு அந்த இயக்கத்தை ஆதரிக்கும் ஆண்கள் மீது எரிச்சல் வருவது இயல்பானதே. அப்படிப்பட்ட ஒரு பசுத்தோல் போர்த்திக் கொண்டு உலாவும் ஒரு ஓநாயின் பின்னூட்டமாகவே இதைக் கருதுகிறேன். அது மட்டுமல்லாமல் எனது தொழிற்சங்கப் பொறுப்பும் அந்த அனாமதேயத்திற்கு ஏனோ வெறுப்பை உருவாக்கியுள்ளது போல. அந்த ஆராய்ச்சிக்கெல்லாம் போக நான் விரும்பவில்லை. அந்த அளவிற்கு அது வொர்த் இல்லை. அது சங்கியின் பின்னூட்டமல்ல என்பது தெளிவு. 

உண்மையில் அந்த பின்னூட்டம் எனக்கு மிகப் பெரிய சிரிப்பையே அளித்தது. 

என் மீது யாரை வைத்தாவது புகார் அளிக்க வைப்பேன், அதை சந்திக்க தயாராக இரு என்று எச்சரிக்கிற அந்த அனாமதேயம் அதை இப்படியா பொது வெளியில் பதிவு செய்யும்!

ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். சிலர் பிறவி முட்டாளாகவே இருக்கிறார்களே! 

இதை படிக்கிற போது இன்னொரு சம்பவமும் எனக்கு நினைவு வந்தது.

சில வருடங்களுக்கு முன்பாக ஒரு நல்லவன் "நான் நினைத்தால் அவரை சாட்சி இல்லாமலேயே கொலை செய்வேன்" என்று சில தோழர்களிடம் வெட்டி பந்தா செய்துள்ளான்.  அதான் எங்க கிட்ட சொல்லிட்டயே என்று அவர்கள் பதில் அளித்த போது அவ்வை சண்முகி மணிவண்ணன் போல அசடு வழிந்திருக்கிறான்.

இவர்கள் எல்லாம்  தங்களை தனி ஒருவன் அரவிந்த்சாமி போல பெரிய புத்திசாலி வில்லன் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். 

ஆனால் மேலே உள்ள காமெடி வில்லன்கள் அளவிற்குக் கூட வொர்த் இல்லாத முட்டாள்கள் என்பது ஏனோ அவர்களுக்கு புரிவதில்லை. 

பிகு:

கொல்கத்தா விக்டோரியா நினைவக தோட்டத்தை பின்னூட்டத்தில் கொண்டு வந்து மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்காத அந்த அனாமதேயத்திற்காக நான் அங்கே எடுத்துக் கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்து கொள்கிறேன். ஏதாவது போட்டோஷாப் செய்ய வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளட்டும். 






Saturday, November 11, 2017

அடக்கினா அடங்கற ஆளா இவர்?



அடக்குமுறையின் குரலா?



தோழர் சு.பொ.அகத்தியலிங்கம், தனது முக நூல் பக்கத்தில் எழுதிய கருத்துக்காக காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளார்கள்.
                           
அதற்கெல்லாம் அஞ்சுபவர் அல்ல அவர். சொல்லப்போனால் அவரது வார்த்தைகள் இன்னும் கூர்மையாகவும் வீரியமாகவும் விரியப் போகிறது.

இந்த மிரட்டலை அடக்குமுறையின் குரலாகத்தான் பார்க்க வேண்டியுள்ளது.

“தேரா மன்னா”  என்று பாண்டியன் அவையிலும்
“நாமார்க்கும் குடியல்லோம்” என்று பல்லவன் அவையிலும்

ஒலித்த கோபக்குரல்கள் தமிழகத்தின் திசைகளெங்கும் ஒலித்திட வேண்டும். அதுதான் அடக்குமுறையின் குரலை ஒடுக்கிடும்.