Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

Monday, April 28, 2025

போர், போர் என பொங்கும் சங்கிகளெல்லாம் . . .

 


கீழேயுள்ள பதிவுகள் எல்லாம் சங்கிகளுடையது. போர், போர் என்று பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே ஆருத்ரா திருடன் அமர் பிரசாத் ரெட்டியும் அதில் அடக்கம். இந்த பதிவுகளை முதலில் படியுங்கள்.







மேலே உள்ள படம் போல இந்த போர் வெறி சங்கிகள் எல்லாம், அவர்களை இந்திய ராணுவம் அழைத்தால் சமையலறை மேடைக்கடியில் ஒளிந்து கொண்டு விடுவார்கள் என்பது நிச்சயம்.

56 இஞ்சர் போரெல்லாம் தொடுக்க மாட்டார் என்ற தைரியத்தில் சொல்லப் படும் வெட்டி வார்த்தைகள் அவை

Thursday, March 13, 2025

கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டு . . .

 


உக்ரைன் ரஷ்யா மீதான போரை நிறுத்த வேண்டும். உக்ரைனுக்கு இனி ஆயுத சப்ளை கிடையாது,  அமெரிக்கா இதுவரை செய்த உதவிக்கு மாற்றாக உக்ரைன் தன் கனிம வளத்தை கொடுத்து விட வேண்டும் என்றெல்லாம் ட்ரம்ப் சொல்லிக் கொண்டிருந்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படை வெளியேறும் என்ற அறிவிப்பிற்கே பாரக் ஒபாமா நோபல் அமைதி விருது பெற்றது போல ட்ரம்பிற்கும் ஆசை போல என்று நினைத்திருந்தேன்.

அப்படியெல்லாம் எதுவும் கிடையாது என்பதை இன்றைய செய்தி உணர்த்தி விட்டது. அமெரிக்கா உக்ரைனுக்கு மீண்டும் ஆயுத சப்ளையை தொடங்கி விட்டது.

அப்பறம் என்ன?

போர்தான்! அழிவுதான், மறு கட்டமைப்புதான், அதுக்கான டீலிங்தான்.

ஒரு கிறுக்கனிடம் சிக்கிக் கொண்டு உலகமே தவிக்கிறது . . .

Wednesday, February 26, 2025

ரஷ்யா Vs உக்ரைன், அமெரிக்கா பல்டி

 

ரஷ்ய - உக்ரைன் போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைனை டம்மியாக வைத்துக் கொண்டு அமெரிக்காவும் நேடோவில் உள்ள ஐரோப்பிய நாடுகள் நடத்திய போர்தான் அது.

ட்ரம்ப் வந்தவுடன் அவர் உக்ரைன் ஜனாதிபதி ஜேலென்ஸ்கியை கிறுக்கன் என்று திட்டுகிறார்.

ஒரு கிறுக்கனே
இன்னொரு கிறுக்கனை
கிறுக்கன் 
என்று சொல்கிறானே!
அடடே
ஆச்சர்யக்குறி.

நேற்று ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் ஐ.நா சபையில் ஒரு தீர்மானம் கொண்டு வருகிறது. 

இது நாள் வரை உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களித்த அமெரிக்காவும் அதன் கூட்டாளி இஸ்ரேலும் ரஷ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்தனர். இந்தியா வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. முழு விபரம் கீழே . . .


சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பது போல அமெரிக்காவின் பல்டிக்குப் பின்னே ஏதோ கணக்கு இருக்கிறது. அதன் பாதிப்பு ரஷ்யாவுக்கா உக்ரைனுக்கா என்பது சீக்கிரம் தெரிய வரும்.  


Thursday, October 24, 2024

கொல்லப்பட்ட கடைசி தருணத்திலும் கம்பீரம்

 பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்தது. இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத்தலைவர் யாஹ்யா சின்வர் அவர்களின் இறுதி உயில். தமிழாக்கம் செய்தவர் தோழர் ராஜ சங்கீதன்.

LAST MOMENTS OF YAHYA SINVAR என்ற இந்த காணொளியை யூடூயுபில் பாருங்கள். ஒரு கை வெட்டப்பட்டு வாழ்வின்  இறுதித்தருணத்தில் இருக்கையில் பறந்து வரும் ட்ரோன் மீது ஒற்றைக் கையால் தடியை வீசி எரியும் தீரத்தை பார்க்க மறவாதீர். கீழேயுள்ள படத்தில் சொல்லப்பட்டது போல அமெரிக்க அடிமையாக பாலஸ்தீனத்திற்கு எதிரான சவுதி அரேபிய மன்னரின் அரியணையை விட சின்வரின் சோபா கம்பீரமானது. 

பாலஸ்தீனத்தின் வரலாற்றில் அம்மக்களின் துரோகியாக, எதிரியாக மோடியும்  பதிவு செய்யப்படுவார். 



ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்:

இந்த வார்த்தைகளை எழுதுகையில் என் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் எண்ணி பார்க்கிறேன். சந்துகளில் திரிந்திருந்த பால்யகாலம் தொடங்கி பல வருட சிறைவாசம் வரையான வாழ்க்கையையும் இந்த நிலத்தில் சிந்தப்பட்ட ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நினைவுகூருகிறேன்.
1962ம் ஆண்டில் நான் கான் யூனிஸ் முகாமில் பிறந்தேன். பாலஸ்தீனம் கிழித்தெடுக்கப்பட்டு நினைவாக மட்டுமே எஞ்சியிருந்த காலக்கட்டம் அது. அரசியல்வாதிகளின் மேஜைகளில் மறக்கப்பட்ட வரைபடமாக பாலஸ்தீனம் கிடந்தது.
நெருப்புக்கும் சாம்பலுக்கும் இடையில் வளர்ந்தவன் நான். ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் வாழ்வது, நிரந்தர சிறைவாசம் என்பதை வாழ்க்கையின் தொடக்கத்திலேயே புரிந்திருந்தேன்.
இங்கு பிறக்கும் ஒவ்வொருவரும் தன் நெஞ்சில் உடையாத ஓர் ஆயுதத்தை ஏந்தியிருக்க வேண்டும். விடுதலைக்கான தூரம் நெடியது என்பதை உணர்ந்திருக்க வேண்டும்.
முதன்முறையாக 1988ம் ஆண்டில் சிறைக்கு சென்றேன். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருள் நிறைந்த அந்த சிறைகளின் ஒவ்வொரு சுவரிலும் தூரத்து அடிவானத்துக்கான ஒரு ஜன்னலை நான் கண்டேன். ஒவ்வொரு சிறையிலும் விடுதலைக்கான வழி காட்டும் வெளிச்சம் தெரிந்தது,.
பொறுமை என்பது பண்பல்ல, ஆயுதம் என்பதை சிறையில் கற்றுக் கொண்டேன். மிகவும் கடுமையான ஆயுதம் அது. ஒவ்வொரு துளியாக மொத்த கடலையும் குடிக்க முனையும் ஒருவரின் முயற்சிக்கு நிகரான ஆயுதம்!
என்னுடைய அறிவுரை இதுதான்: சிறைகளுக்கு அஞ்சாதீர்கள். விடுதலைக்கான நெடும்பாதையின் அங்கங்கள் அவை.
விடுதலை என்பது வலியில் பிறப்பது; பொறுமையில் பக்குவப்படுவது! 2011ம் ஆண்டு “வஃபா அல் அஹ்ரார்” ஒப்பந்தத்தில் நான் விடுவிக்கப்பட்ட போது, போராட்டத்தை விட்டுச் சென்றுவிட வில்லை. வலிமை பெற்றிருந்தேன். நம்பிக்கை அதிகமாகி இருந்தது. நாம் முன்னெடுப்பது சாதாரண போராட்டமல்ல என்பதையும் நம் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை நாம் சுமக்கும் விதி போராட்டம்தான் என்பதையும் புரிந்து கொண்டேன்.
என்னுடைய அறிவுரை, துப்பாக்கியையும் வழுவாத சுயமரியாதையயும் அழிவுறா நம் கனவையும் கைவிட்டு விடாதீர்கள் என்பதுதான். நம் போராட்டத்தை நாம் கைவிட்டுவிட வேண்டுமென எதிரி விரும்புகிறான். நம் நோக்கத்தை நெடிய பேச்சுவார்த்தை மூலம் நீர்த்துப் போக வைக்க விரும்புகிறான்.
ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் உரிமை பெற்றிருக்கும் ஒரு விஷயத்துக்காக பேச்சுவார்த்தை நடத்தாதீர்கள். உங்களின் ஆயுதங்களை விட, உங்களின் உறுதி அவர்களை அச்சுறுத்துகிறது.
போராட்டவுணர்வு என்பது நமக்கான ஆயுதம் மட்டுமில்லை, நம் சுவாசத்தில் பாலஸ்தீனத்தின்பால் நாம் கொண்டிருக்கும் அன்பு அது; ஆக்கிரமிப்பும் படையெடுப்பும் தாக்குதலும் தொடர்ந்தாலும் இங்கு நாம் தொடர்ந்து நீடிப்பதற்கான பற்று அது!
உயிரிழந்த ஈகியரின் ரத்தத்துக்கு உண்மையாக இருங்கள். முட்களாலான பாதையில் நமக்கான விடுதலைப் பாதையை தங்களின் ரத்தம் கொண்டு போட்டவர்கள் அவர்கள்தான். அரசியல்வாதிகள் தரும் கணக்குகளுக்காகவும் அரசப் பிரதிநிதிகள் காட்டும் ஆட்டத்துக்காகவும் அவர்களின் ஈகையை விரயமாக்கி விடாதீர்கள்.
முன்னவர்கள் தொடங்கியதை முடிக்கத்தான் நாம் இங்கு இருக்கிறோம். என்ன விலை கொடுக்க நேர்ந்தாலும் இந்த பாதையிலிருந்து நாம் விலகிடக் கூடாது. பூமியே நம்மை குறுக்கினாலும் உறுதிப்பாட்டின் தலைநகரமாகவும், தொடர்ந்து துடிக்கும் பாலத்தீன இதயமாகவும் காசா இருக்கும்.
2017ம் ஆண்டில் ஹமாசின் தலைவராக நான் ஆனபோது, வெறும் அதிகாரப் பரிமாற்றமாக அதை நான் பார்க்கவில்லை. கற்களால் தொடங்கி துப்பாக்கிகளால் தொடரும் ஒரு பெரும் போராட்டத்தின் தொடர்ச்சியாகதான் பார்த்தேன்.
விடுதலையை நோக்கி நாம் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்திருந்தேன். ஆனால் ஒன்றை மறந்து விடாதீர்கள். சரணடைவதால் நாம் கொடுக்கும் விலை இவற்றை விட மிக அதிகமாக இருக்கும். எனவே வேர், மண்ணை பிடித்திருப்பது போல், இந்த நிலத்தை பிடித்திருங்கள். வாழ வேண்டுமென முடிவெடுத்து விட்ட மக்களை எந்தக் காற்றாலும் பெயர்த்தெடுக்க முடியாது.
அல் அக்ஸா போர், உடல்களுக்கு எதிரான ஆன்மாக்களின் போர்; ஆயுதங்களுக்கு எதிரான உறுதியின் போர்!
நான் விட்டுச் செல்வது என் தனிப்பட்ட மரபு அல்ல, ஒரு கூட்டு மரபு! விடுதலைக் கனவு கொண்ட ஒவ்வொரு பாலஸ்தீனருக்கும், உயிர் துறந்த மகனை தோளில் சுமந்த ஒவ்வொரு தாய்க்கும், தோட்டா உயிர் குடித்த மகளை சுமந்த ஒவ்வொரு தந்தைக்கும் அந்த மரபை நான் விட்டுச் செல்கிறேன்.
போராட்டம் வீண் போகாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். போராட்டம் என்பது துப்பாக்கியின் தோட்டா மட்டும் அல்ல, நாம் மதிப்புடனும் மரியாதையுடனும் வாழ்வதற்கான அடிப்படையும் அதுதான்.
உலகம் நீதி வழங்கும் என எதிர்பார்க்காதீர்கள். நம் வலியை வெறுமனே உலகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தற்கு நானே சாட்சி. நீதியை எதிர்பார்க்காதீர்கள்; வழங்குங்கள்! பாலஸ்தீனர்களின் கனவை நெஞ்சில் ஏந்துங்கள். ஒவ்வொரு காயத்தையும் ஆயுதம் ஆக்குங்கள். ஒவ்வொரு கண்ணீரிலும் நம்பிக்கையை பெற்றெடுங்கள்.
இதுவே என் உயில். உங்களின் ஆயுதங்களை ஒப்படைக்காதீர்கள். கற்களை கீழே போடாதீர்கள். ஈகியரை மறந்திடாதீர்கள். நீங்கள் உரிமை கொண்டிருக்கும் கனவை காவு கொடுத்து விடாதீர்கள்.
நாம் இங்குதான் இருப்போம். நம் நிலத்தில், நம் நெஞ்சங்களில், நம் குழந்தைகளின் எதிர்காலத்தில் நாம் இருப்போம்.
இறுதி வரை நான் நேசித்த நிலத்தையும் பெருமலை போல் என் தோள்களில் சுமந்த கனவையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.
நான் வீழ்ந்தால், நீங்களும் வீழ்ந்திடாதீர்கள். என்றுமே வீழாத பதாகையை எனக்காக ஏந்துங்கள். என் ரத்தத்தை, ஒரு தலைமுறை வலிமை பெறுவதற்கான பாலமாக மாற்றுங்கள்.
சொந்த நிலம் என்பது சொல்வற்கான கதையல்ல, வாழ்வதற்கான யதார்த்தம் என்பதை மறந்து விடாதீர்கள்.
உயிரை ஈகை செய்த ஒவ்வொருவரிடமிருந்தும் ஆயிரக்கணக்கான போராளிகள் பிறப்பார்கள்.
மீண்டும் போர் வருகையில் நான் உங்களுடன் இல்லாது போயிருந்தால், விடுதலைக்கான அலைகளின் முதல் துளி நான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Monday, October 14, 2024

இந்தியர்கள் செத்தாலும் இஸ்ரேல் பக்கம்தானா மோடி?

 


இஸ்ரேலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் வளாகத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.

நேற்று இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் கதவுகளை தகர்த்து உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு அமைதிப் படையின் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. தீவிரவாத இயக்கங்கள் கூட செய்யத் துணியாத, தயங்குகிற ஒரு வேலையை இஸ்ரேல் ராணுவம் செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு மிரட்டல் வீடியோ அனுப்பியுள்ளார். அந்த மிரட்டல் வீடியோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை லெபனானை விட்டு வெளியேறாவிட்டால் அதன் மீது தாக்குதல் நடத்தி முற்றிலுமாக அழித்து விடுவேன் என்று சொல்லியுள்ளார்,

இஸ்ரேல் குரைக்கும் நாய் அல்ல, கடிக்கும் நாய்.

நெதன்யாகு தான் மிரட்டியது போல செய்யக்கூடிய ஆசாமிதான்.

இதிலே மோடி எங்கே வருகிறார் என்ற கேள்வி எழலாம்.

லெபனானில் செயல்படும் ஐ.நா அமைதிப்படையில் 20 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர்.  இந்திய ராணுவ வீரர்கள் மட்டும் 903 பேர் உள்ளனர். இஸ்ரேல் தாக்கினால் அவர்களும் செத்துப் போவார்கள்.

மோடிக்கு இது ஏற்புடையதுதானா?

மோடி அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார் என்பதுதான் சோகமான யதார்த்தம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாலஸ்தீனம் உபட இஸ்ரேலின் மண்ணில் கால் வைக்கக் கூடாது என்று இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

இத்தடைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் 125 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது இரண்டு நாடுகள். ஒன்று அமெரிக்கா.

இன்னொன்று.

ஆம். அது இந்தியாதான்.

இஸ்ரேல் என்ன அராஜகம் செய்தாலும் அதற்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் நாடாக இந்தியாவை மாற்றி விட்டது மோடியின் அரசு.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய மனிதப் பிறவியா மோடி?

அப்படிப்பட்ட கவலையெல்லாம் இருந்திருந்தால் உளவுத்துறை எச்சரித்தும் 44 வீரர்களை புல்வாமாவில் சாகவிட்டிருப்பாரா?

Sunday, April 14, 2024

மோடியின் கூடா நட்பால் . . .

 


உலகின் மிகப் பெரிய பயங்கரவாத அரசான இஸ்ரேல் அரசுடன் இந்தியா வாஜ்பாய் காலம் வரை விலகியே நின்றது. மோடியோ ஒட்டி உறவாடினார். மோடி, ட்ரம்ப், நெதன்யாகு என மூவருமே வெறி பிடித்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே .

இஸ்ரேலின் உதவியோடுதான் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் ஆகியோரை வேவு பார்த்தது மோடி அரசு.

அதெல்லாம் போகட்டும்.

இஸ்ரேலுடன் மோடி கொண்ட கூடா நட்பு இந்தியர்களுக்கு கேடாக முடிந்துள்ளது.

பல முனைகளில் இஸ்ரேலுக்கும் மற்ற நாடுகளுக்கும் பிரச்சினை, மோதல், அவ்வப்போது போர்.

பாலஸ்தீனத்துடனான போர் ஒரு புறம் என்றால் இரானுடனான போர் இன்னொரு புறம். 

கட்டுமானப் பணிகளுக்காக உபி தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க அவர்கள் சில ஆயிரம் பேர் அங்கே சிக்கிக் கொண்டுள்ளனர்.

அதைத் தவிர இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்க தயார் செய்யப்பட்டவர்கள், அதற்கான விமானக் கட்டணம் உட்பட லட்ச ரூபாய் வரை கடன் வாங்கி செலுத்தி இப்போது பயணங்கள் ரத்து செய்யப்பட்டதால் தவித்து நிற்கிறார்கள் சில ஆயிரம் பேர்.

இந்த தருணத்திலும் கூட இஸ்ரேலுக்கு ஆள் பிடிக்கும் வேலை தொடர்வதாக தகவல்கள் வருகிறது.

மோடியின் கூடா நட்பு அவருக்கு கேடாய் அமைந்தால் தவறில்லை. அவர் பிரதமராய் இருந்து தொலைப்பதால் இந்திய மக்களுக்கு கேடாகிறது.

அவரை பிரதமர் பதவியிலிருந்து துரத்த வேண்டும் என்பதற்கு இஸ்ரேல் நட்பும் ஒரு காரணம்.

Sunday, October 8, 2023

விழித்துக் கொண்ட நியாயவான்களே!

 


இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம் என்று உலகெங்கும் பல நியாயவான்கள் (மணிப்பூர் மக்களை கைவிட்ட டிமோ உட்பட)  என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

நல்லது. 

இத்தனை நாள் உறக்கத்தில் இருந்தவர்கள் இப்போதாவது விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.  உங்கள் உறக்கத்தை முற்றிலுமாக கலைக்க நல்ல டீயோ, காபியோ குடித்து விட்டு (டிமோ கோமியம்தான் குடிப்பார் என்றால் அது அவரின் விருப்பம்) ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் இது நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தது என்பதை கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்பாவிகள் யார் கொல்லப்பட்டாலும் யாரால் கொல்லப்பட்டாலும் தவறுதான்.

இன்று இஸ்ரேலிய மக்களின் இறப்பிற்காக கதறி அழுகிறவர்கள் யாராவது இஸ்ரேலால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களுக்காக கண் கலங்கியதாவது உண்டா?

பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டே  இருக்கிற இஸ்ரேல் மீது சிறு விமர்சனமாவது செய்ததுண்டா?

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான தோழர் அ.முத்துகிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட ஒரு படத்தை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த கதையாக பாலஸ்தீனம் எப்படி இஸ்ரேலால் சுருக்கப்பட்டது என்பதை படம் பார்த்து உணருங்கள்.

தோழர் முத்து கிருஷ்ணன் இன்னொரு கேள்வியையும் எழுப்பி இருந்தார். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த உளவுத்துறை என்று புகழப்படுகிற இஸ்ரேலின் உளவுத்துறைக்கு ஹமாஸின் தாக்குதல் பற்றி ஏன் தெரியவில்லை என்று கேட்டு அதற்கு ஒரு ஊகத்தையும்சொல்கிறார்.

செல்வாக்கு முற்றிலும் சரிந்து போய், நீதி மன்றத்தோடு மோதிக் கொண்டிருக்கிற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவுக்கு தன் மீதான பிரச்சினைகளை திசை திருப்ப ஹமாஸின் தாக்குதல் தேவைப் பட்டிருக்குமோ என்பது அவரது ஊகம்.

அதனை நாம் நிராகரிக்க முடியாது. 2019 தேர்தலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்தும் கூட புல்வாமாவில் சி.ஆர்.பி.ஃஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த கொடூரர்களின் ஆட்சியில் அல்லவா நாம் வாழ்கிறோம்!

இஸ்ரேலுக்காக இதயம் துடிக்கிற நியாயவான் கனவான்களே (நீங்கள் அப்படிப்பட்ட அடைமொழிகளுக்கெல்லாம் அருகதை அற்றவர்கள் என்ற போதிலும்) கீழே உள்ள படத்தை பாருங்கள்.


பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக 1994 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் அவர்கள்.

அந்த ஒப்பந்தத்தில் பாலஸ்தீனர்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டார் என்று அப்போது யாசர் அராபட் விமர்சிக்கப்பட்டார். 

அந்த அற்ப ஒப்பந்தத்தைக் கூட நிறைவேற விடாத பெருமை இன்றைய இஸ்ரேல் பிரதமர் நெத்ன்யாஹூ வுக்கே உண்டு.

உங்கள் மனிதாபிமானம் உண்மை என்றால் குறைந்தபட்சம் அந்த ஒப்பந்தத்தையாவது அமலாக்கச் சொல்லுங்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலை வெளியேறச்சொல்லுங்கள். 

Thursday, July 13, 2023

யாருடைய நாடகம்? எதற்காக?

 


உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. ரஷ்யாவும் உக்ரைனும் மட்டும் போரிட்டிருந்தால் இந்த போர் எப்போதோ முடிந்திருக்கும். ஆனால் இது இத்தனை நாள் இழுத்துச் செல்வதற்கான காரணமே இது  ரஷ்யாவுக்கும் அமெரிக்கா தலைமையிலான நேடோ NATO) அமைப்பிற்கும் இடையிலான போர் என்பதால்தான்.

நேடோ நாடுகளின் உதவியோ, போர்த்தளவாடங்களோ, நிதியுதவியோ, உளவுத்தகவல்கள், ஆலோசனைகள் இல்லாமல் உக்ரைனால் இத்தனை காலம் தாக்கு பிடித்திருக்க முடியாது.

ஆனால் இன்று செய்தி பார்த்தேன்.

உக்ரைன் ஜனாதிபதி ஃஸேலன்ஸ்கி நேடோ நாடுகளை கடுமையாக சாடியுள்ளார். உக்ரைனை எப்போது நேடோவில் சேர்த்துக் கொள்வீர்கள் என்பதற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணியுங்கள் என்பது அவரது ஆதங்கம்.

ஏன் அவர் அப்படி கேட்டுள்ளார் என்பதையும் அந்த செய்தி விளக்குகிறது.

சமீபத்தில் நடந்த நேடோ உச்சி மாநாட்டில் “உக்ரைன் இப்போது ரஷ்யாவுடம் போரிடுவதால் உக்ரைனை இப்போது நேடோவில் சேர்த்துக் கொண்டால் அந்த போரில் நேடோ தலையிட வேண்டியிருக்குமாம். அதனால் யோசிக்கிறார்களாம், அமெரிக்காதான் ரொம்பவே சிந்திக்கிறதாம்”

“இது உன் பிரச்சினை குமாரு, நாங்க தலையிட்டா கேங் வாராயிடும்” என்ற புதுப்பேட்டை வசனத்தை நேடோ உக்ரைனில் சொல்லியுள்ளதாக அந்த செய்தி சொல்கிறது.

நேடோவின் தலையீட்டால்தான் உக்ரைன் ரஷ்யா போரே நடந்து கொண்டிருக்கிறது, ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்துக் கொண்டிருக்கிறது என்பது உலகறிந்த உண்மை.

அப்படி இருக்கையில் எதற்கு இந்த நாடகம்? யாரை ஏமாற்ற?


Wednesday, January 4, 2023

சம்பந்தம் இல்லையென்றால் நம்புங்கள்

 


நகரம் திரைப்படத்தில் வடிவேலு சுந்தர்.சி யிடம் என் ஏரியா பக்கம் வா, தெருவுக்கு வா, வீட்டுக்கு வா என்றெல்லாம் உதார் விட்டு விட்டு கடைசியில் காலில் விழுந்து கதறும் காட்சிக்கும்

எல்லையில் ஆவேசமாக முழங்கிய ராஜ்நாத்சிங் வஜனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்று நான் சொல்வதை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். 

Tuesday, December 20, 2022

அழகல்ல, அழிவு . . .

 


காலையில் நாளிதழை கையிலெடுத்ததும் கண்ணில் பட்டது இந்த படம்தான். ஆகா அழகு என்று முதலில் தோன்றினாலும் சற்று கவனித்ததும்தான் இது அழிவு என்பது புரிந்தது.

உக்ரைன் தலைநகர் கீவ் மீது நேற்று ரஷ்யா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் எரிந்து கொண்டிருக்கும் மின் நிலையம் இது.

இந்த போர் எப்போது முடியும் என்பது தெரியவில்லை.

புடினோடு மோடி பேசி விட்டார். போர் முடிந்து விடும் என்று இரண்டு நாட்கள் முன்பாக சங்கிகள்தான் கதையளந்து கொண்டிருந்தார்கள்.

முட்டாப் பசங்க . . .

Wednesday, September 21, 2022

என்னது? சீனா வலிமையான சவாலா?

 


மோடி வந்த பின்னாடி சீனா இந்தியாவைப் பாத்து பயந்து நடுங்குது. வாலை சுருட்டிக்கிட்டாங்க, மோடி பேரைச் சொன்னாலே சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் கிற்கு குளிர்க்காய்ச்சல் வந்துடும் (இதுக்கு மேல படிக்காதவன் படத்தில் சுமனைப் பார்த்த விவேக்கின் செய்கையைக் கூட) என்றெல்லாம் சங்கிகள் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். திருட்டு சங்கிகள் எழுதுவதை முட்டாள் சங்கிகள் பரப்புகிறார்கள்.

இந்திய கப்பற்படை தளபதி அட்மிரல் ஹரிகுமார், இந்த மாயைகளை உடைத்து விட்டார். உண்மையை பொசுக்கென்று உடைத்து விட்டார்.

எல்லைப் பகுதியில் இருப்பதைப் போலவே சீனா கடல் பகுதியிலும் வலிமையான சவாலாகவே {Formidable Challange)  இருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பகுதி முழுதுமே ஐந்திலிருந்து எட்டு போர்க்கப்பல்கள், ஏராளமான ஆய்வுக்கப்பல்கள், மீன்பிடிக் கப்பல்கள் என்று சீன மயமாக உள்ளது. கடற்கொள்ளையர்களை கட்டுப்படுத்தும் பணியை அவர்கள் துவக்கியதிலிருந்தே  கடலிலும் அவர்களின் ஆதிக்கம்தான்.

இதுதான் அவர் சொன்னது.

வெட்டிப் பெருமை பேசிக் கொண்டிருந்தால் உண்மையான ஆபத்துக்கள் கண்ணிற்கு தென் படாது. மோடிக்கும் உண்மைக்கும் வெகு தூரம்.

எனவே இந்த ஆட்சியாளர்கள் நீடிப்பது இந்திய பாதுகாப்பிற்கு என்றும் சிக்கல்தான். 

Friday, March 18, 2022

இறந்தவர் உயிர்த்தெழும் உக்ரைன்.

  


உக்ரைனில் அடுக்கி வைக்கப்பட்ட சடலங்கள் முன்பாக ஒரு ஊடகக்காரர் பேசிக் கொண்டிருக்க அந்த சடலங்களில் ஒன்று அசைந்து உயிரோடு இருந்த காணொளியை இப்போதுதான் ஒழுங்காக பார்த்தேன். அதை நீங்களும் பார்த்திருப்பீர்கள். அது என்னமோ அதனை பகிரவே முடியவில்லை



 புராணக்கதைகளில் அசுர குரு சுக்ராச்சாரியாருக்கு இறந்தவர்களை உயிர்த்தெழ வைக்கும் சஞ்சீவினி மந்திரம் தெரியும் என்று சொல்லப்படும்,

(ஆஹா, இந்த மந்திரத்தைப் பெற தேவர்கள் நடத்திய நாடகக் காதலைப் பற்றியே தனியாக ஒரு பதிவு எழுதலாம் போல இருக்கே!)

 ஒரு வேளை அது போல சஞ்சீவினி மந்திரம் ஏதாவது உக்ரைன் அரசிடம் இருக்குமோ?

Tuesday, March 15, 2022

உக்ரைனில் சிந்தெடிக் பயோ வெப்பன் . . .

 


அமெரிக்கா உக்ரைனில் உயிரி ரசாயன ஆயுத ஆய்வகங்களை அமைத்துள்ளது இப்போது அம்பலமாகியுள்ளது.

அதன் மூலம் எத்தனை ஆயுதங்கள் உற்பத்தி செய்யப்பட்டு எங்கே பதுக்கப் பட்டுள்ளது என்பதும் ஒரு நாள் தெரிய வரும்.

பேரழிவு ரசாயன ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக சதாம் உசேன் மீது பொய்க்குற்றம் சுமத்தி ஈராக்கை அழித்தது அமெரிக்கா.

இப்போது அமெரிக்கா மீது சொல்லப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்காவே ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்கா மீது யார் போர் தொடுக்கப் போகிறார்கள்? 

பிகு: மேலே உள்ள படம் அமெரிக்காவில் உள்ள சிந்தடிக் பயோ வெப்பன் ஆய்வகம்.

உபயம் : கமலஹாசன்

Wednesday, March 9, 2022

புடினுடன்தான் பேச வேண்டும் சேலன்ஸ்கி

 


மோடியோடும் பல ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களோடு பேசி போரை முடிவுக்குக் கொண்டு வர உதவுமாறு கேட்டுக் கொண்டதாக உக்ரைன் ஜனாதிபதி சேலன்ஸ்கி சொல்லியுள்ளார்.

இவர்களால் என்ன செய்ய முடியும் என்று அவர் நினைக்கிறார்?

கூறையேறி  கோழி பிடிக்க கையாலாகாத மோடி வானம் ஏறி எப்படி வைகுண்டம் போவார்?

"இது உன் பிரச்சினை குமாரு, நாங்க தலையிட்டா கேங் வாராயிடும்" என்ற புதுப்பேட்டை வசனத்தைப் போல 

அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் இந்த போரிலிருந்து நாசுக்காக நழுவியதைப் பார்த்தும் புத்தி வரவில்லையென்றால் என்ன சொல்வது?

அவர்  பேச வேண்டியது ஒருவரோடு மட்டும்தான்.

அப்போதுதான் போர் முடிவுக்கு வரும்.

அவர் பேச வேண்டிய ஒரே நபர்

ரஷ்ய ஜனாதிபதி புதின்.

Saturday, February 26, 2022

அவர்களுக்கு தவிப்பு புரியாது.

 


உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை மீட்கிற வேலையை மட்டும் மோடி செய்தால் போதும் என்று எழுதியதற்கு

"உக்ரைன் வரை போய் படிக்கும் அளவிற்கு வசதி உள்ளவனால் விமானக் கட்டணம் செலுத்த முடியாதா?"

என்று ஒரு கேள்வி வந்தது.

இந்த கேள்வியை இப்போது சங்கிகள் பரவலாக கேட்கத் தொடங்கி விட்டார்கள். அதிலும் தமிழ்நாட்டு மாணவர்களின் பயணச்செலவை மாநில அரசு ஏற்கும் என்று முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அறிவித்த பின்பு எரிச்சல் அதிகமாகி விட்டது. 

நீட் எழுதாமல் கோடிக்கணக்கில் செலவு செய்பவனுக்கு எதற்கு தண்டச் செலவு செய்ய  வேண்டும் என்று அர்ஜூன் சம்பத் போன்ற வெறியன் வெளிப்படையாகவே பேசுகிறான்.

மேலோட்டமாக பார்த்தால் நியாயமாகவே தோன்றும்.  ஒரு சொந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வேண்டுமென்று நினைக்கிறேன்.

மதுரையில் கல்லூரியில் படித்த காலம். விடுதியில் இருந்த நேரம். மாதத்தின் கடைசி வாரம். மெஸ் கட்டணத்தோடு செலவுக்கான பணம் (கொஞ்சமாகத்தான்)  மாதத்தின் முதல் வாரம் வரும். மாதக் கடைசியில் சொற்பமாகத்தான் கையிருப்பு இருக்கும். அப்படிப்பட்ட ஒரு நாளில்தான் ஈழத்தமிழர் பிரச்சினைக்காக கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடக்கிறது. மாநிலம் முழுதும் போராட்டம் பரவியதும் அரசு அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடியது. விடுதிகளை விட்டு மாணவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

மதிய உணவு தயார் செய்திருந்ததால் அதை சாப்பிட்டு விட்டு செல்ல பெருந்தன்மையோடு கல்லூரி நிர்வாகம் அனுமதித்தது. 

அப்போது என் கையில் பேருந்து கட்டணத்துக்கு மேலாக ஐந்து ரூபாய் மட்டுமே இருந்தது. யாரிடமும் கேட்க கூச்சம். என் அக்காவின் மாமியார் வீடு மதுரையில் இருந்தது. அவர்களிடம் சென்று பணம் கேட்டிருக்கலாம். ஆனால் இப்படி கல்லூரி மாணவர்கள் பொறுப்பில்லாமல் போராடலாமா என்று என் அக்கா மாமனார் கொஞ்சம் வகுப்பெடுப்பார். ஊருக்கு போனதும் இதே வகுப்பு உக்கிரமாக நடக்கும். அதற்கு முன்பாக இன்னொரு வகுப்பு வேண்டாமென்று புறப்பட்டு விட்டேன்.

மதுரை அண்ணா பேருந்து நிலையம் அனைத்து கல்லூரி மாணவர்களால் நிரம்பி வழிந்தது. பேருந்துகளில் செம கூட்டம். ஒரு மணி நேரம் கழித்தே நின்று செல்ல இடம் கிடைத்தது. இடைப்பட்ட நேரத்தில் தேநீருக்கு ஒரு ஐம்பது காசு செலவழிந்து விட்டது.

திருச்சியிலும் இதே நிலைதான். ஒரு ஏழரை மணி அளவில் வந்திருப்பேன். இரண்டு இட்லியும் ஒரு தோசையும் சாப்பிட்டதில் ஒன்றரை ரூபாய் செலவு.  மீண்டும் திருச்சியிலிருந்து நெய்வேலி வரை நின்ற கோலத்தில் பயணம். திருவள்ளுவர் பேருந்து என்பதால் கூடுதல் கட்டணம் இரண்டு ரூபாய். ஆக கையில் இருந்தது ஒரு ரூபாய்தான். விருத்தாச்சலத்தில்தான் உட்கார இடம் கிடைத்தது.

மதியத்திலிருந்து நின்று கொண்டே வந்ததில் ஏற்பட்ட களைப்பு, ஜன்னல் சீட்டில் வந்து மோதிய குளிர் காற்று இரண்டுமே தூக்கம் என் கண்களை தழுவச்செய்து விட்டது. 

அதன் விளைவு???

நான் இறங்க வேண்டிய மந்தாரக்குப்பம் நிறுத்தத்தை தவறவிட்டு விட்டேன். மத்தியப் பேருந்து நிலையத்தில் நடத்துனர்தான் எழுப்பி விட்டார். 

மந்தாரக்குப்பத்திற்கு செல்ல என்.எல்.சி  டவுன் பஸ் எப்போது என்று கேட்டால் அமராவதி தியேட்டர் செகண்ட் ஷோ முடிந்து பனிரெண்டு மணிக்கு மேல்தான்  என்று சொல்கிறார்கள். ஆட்டோக்காரர்கள் நாங்கள் கொண்டு விடுகிறோம் என்று சொலிகிறார்கள். அவர்கள் கேட்ட பத்து ரூபாய் என்னிடம் இல்லை என்கிறேன். வீட்டுக்கு போய் வாங்கிக் கொடு என்று சொல்கிறார்கள். பொறுப்பில்லாமல் தூங்கி விட்டு ஆட்டோவில் வந்தாயா என்று நள்ளிரவில் திட்டு வாங்க தயாராக இல்லை. 

பனிரெண்டு மணிக்கு மேல் டவுன் பஸ்ஸில் இருபத்தி ஐந்து பைசா கட்டணத்தில் சென்று எழுபத்தி ஐந்து பைசா கையிருப்போடு வீட்டுக்குப் போன சொந்தக்கதை, சோகக்கதை இது.

எதிர்பாராத பயணத்தால் ஒரே மாநிலத்தில் பட்ட அவதி இது.

படிக்கச் சென்ற உக்ரைன் மாணவர்களால் திடிரென விமானச் செலவுக்கான கட்டணத்தை எப்படி திரட்ட முடியும் என்று சிந்தித்தால் இந்த கேள்வி வராது.

உக்ரைன், ரஷ்யா என்று பல நாடுகளில் மருத்துவப் படிப்பு படிக்க இந்திய மாணவர்கள் எல்லா மாநிலத்திலிருந்தும்தான் செல்கிறார்கள். அவர்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து ஒன்றும் செல்லவில்லை. கோடிக்கணக்கில் செலவு செய்ய முடியாமல்தான் செல்கிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாகக் கோட்டாவிற்கான கோடிக்கணக்கான கட்டணத்தை கட்ட முடியாமல் குறைந்த கட்டணத்தில் படிக்க கடன் வாங்கிச் செல்பவர்கள்தான்.

இந்தியாவிற்கான அரசு விமான நிறுவனம் இல்லாத நிலைமையில் தனியார் விமானக் கம்பெனிகள் சூழலைப் பயன்படுத்தி மூன்று மடங்கு அதிகமாக கட்டணம் வசூலிப்பதால் அவர்கள் கதி அதோகதியாக மாறி விட்டது.

இந்நிலையில் அவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.

அரசு நிறுவனமாக ஏர் இந்தியா இருந்திருந்தால் மூன்று மடங்கு கட்டணக் கொள்ளை நடக்காது. அதனால் அந்த கட்டணத்தை ஏற்றுக் கொள்ள வேண்டியது ஏர் இந்தியாவை விற்றுத் தின்ற அரசின் கடமைதான்.

எல்லாமும் இலவசமாக இருக்க முடியாது என்பதெல்லாம் விளக்கெண்ணெய் உபதேசம். முதலாளிகளுக்கு கொடுக்கும் வரிச்சலுகை, தள்ளுபடி உள்ளிட்ட எல்லா எழவுகளும் கூட இலவசம்தான். சொற்றொடர் வேறு.

உக்ரைனில் தவிப்பவர்கள் நம்மவர்கள் என்ற உணர்வுள்ளவர்கள் இப்போது செலவுக்கணக்கு பார்க்க மாட்டார்கள். நமக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சொகுசாக இருப்பவர்கள்தான் பொருளாதார மேதைகளாக வியாக்யானம் செய்து கொண்டிருப்பார்கள்.

அவர்களுக்கு மாணவர்களின் தவிப்பு புரியாது. அவர்கள் யார் என்பதை அடையாளம் கண்டு கொள்ளும் வாய்ப்பை காலம் நமக்கு கொடுத்துள்ளது.

என்ன இவர்கள்தான் தங்களை தேச பக்தர்கள் என்று பீற்றிக் கொள்வார்கள்.


Friday, February 25, 2022

நிறுத்தனும் . எல்லாரும் நிறுத்தனும் .

 


ரஷ்யா போரை நிறுத்தனும்.. அவங்களும் . . .

 ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்து விட்டது. நீண்ட நாளாக புகைந்து கொண்டிருந்த விஷயம் இப்போது நிஜமாகி விட்டது.

 போருக்கான காரணங்களும் நியாயங்களும் ஆயிரம் இருந்தாலும் பாதிக்கப் படுபவர்கள் என்னமோ அந்த காரணங்களுக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத அப்பாவி மக்கள்தான். அதனால் போர் நிறுத்தப்பட வேண்டும். ஐ.நா சபை தலையிட வேண்டும்.  மற்ற நாடுகளுக்கு இனே வேலை இல்லை. ஏனென்றால் அவைகள் எல்லாமே அப்பத்தை பகிர்ந்து அளிக்கும் குரங்குகளைப் போன்றவையே. (மோடிக்காக இதை நான் எழுதவில்லை. மோடி ஒரு டம்மி, வேஸ்ட் பீஸ்.)

 சதாம் உசேன் பேரழிவு ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளார் என்று பொய் சொல்லி இராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது நியாயமென்றால் அதே நியாயம் நேடோ ராணுவ தளம் உக்ரைனில் அமைவது எங்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று ரஷ்யா கருதுவதும் நியாயம்தானே!

 முன்னாள் சோவியத் யூனியன் நாடுகள் நேடோ கூட்டணியில் இணையக் கூடாது என்ற ஒப்பந்தத்தை மீறுவதுதானே இந்த பதற்றத்திற்கு முக்கியக் காரணம்!

 ஆக இப்போதைய போருக்கு முக்கியமான காரணம் உக்ரைனும் உக்ரைனை உசுப்பேத்திக் கொண்டிருக்கும் அமெரிக்கா மற்றும் இதர நேடோ நாடுகள்தான்.

 ஆனாலும் ரஷ்யா போரை நிறுத்த வேண்டும்.

 ஏனென்றால் இந்த போரில் உக்ரைன் தலைவர்களோ அல்லது இதர நேடோ நாடுகளின் தலைவர்களோ கொஞ்சம் கூட பாதிக்கப்பட மாட்டார்கள். உக்ரைன் தலைவர்கள் பதுங்கு குழிகளிலோ அல்லது குண்டு துளைக்காத வசதியான், உறுதியான மாளிகைகளிலோ பாதுகாப்பாக இருப்பார்கள். இறப்பதும், காயப்படுவதும், வாழ்வாதாரத்தை இழப்பதும் சாதாரண மக்களே. அவர்களுக்காக போர் நிறுத்தப்பட வேண்டும்.

 அதே நேரம் ரஷ்யாவை ஏதோ பழைய சோவியத் சோஷலிச நாடு என்று நினைத்து அதனை அழிக்க அல்லது அதனை மடக்க உக்ரைனை பயன்படுத்தும் அற்பத்தனத்தை அமெரிக்காவும் இதர நேடோ நாடுகளும் நிறுத்த வேண்டும். அவர்களின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி அருகாமை நாட்டை  வெறுப்பேற்றுவதை உக்ரைனும் நிறுத்த வேண்டும்.

 இதோடு இன்னும் சில விஷயங்களையும் பேசிட வேண்டும்.

 நேற்று முக நூலில் பார்த்தது இது.

 


"ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு அழைப்பேதும் இல்லாமல்  டாங்கிகளை, வீரர்களை அனுப்பினால் அதன் பெயர் என்ற கேள்விக்கு பதில் மிகவும் நச்சென்று இருந்தது.

 இதற்கு பதில் சொல்வது மிகவும் எளிது. எந்த நாடு என்பதைப் பொருத்தது. ரஷ்யாவாக இருந்தால் உக்ரைன், ஜியார்ஜியா நாடுகள் மீது அது நடத்தியது படையெடுப்பு, போர்."

 அதுவே அமெரிக்காவாக இருந்தால் அது இராக், சிரியா, லிபியா, பனாமா, க்யூபா, வியட்னாம், லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் மீது நடத்தியது விடுதலைக்கான வேள்வி.  

 இன்று மனித உரிமைகளுக்காகவும் உக்ரைனின் இறையாண்மைக்காகவும் குரல் கொடுக்கும் எத்தனை மகான்கள், அமெரிக்கா இராக், லிபியா, வியட்னாம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் மீது போர் தொடுத்த போது அமெரிக்காவிற்கு எதிராக வாய் திறந்தார்கள்?

 கியூபா, வெனிசுலா, பனாமா, பொலிவியா, நிகரகுவா ஆகிய நாடுகளின் சோஷலிச அரசுகளைக் கவிழ்க்க உள் நாட்டுக் கலவரங்களை தூண்டி ஆயுதங்களும் பணமும் அளித்த போது இவர்கள் எல்லாம் எந்த பங்கரில் பதுங்கி இருந்தார்கள்?

 பாலஸ்தீனத்தின் மேற்குக் கரை மற்றும் காஸா திட்டின் மீது இஸ்ரேல் அன்றாடம் தாக்குதல் நடத்தி பாலஸ்தீன மக்களை அழித்துக் கொண்டிருக்கிறார்களே, எப்போதாவது சிறிய முணுமுணுப்பாவது செய்துள்ளார்களா?

 இது நாள் வரை அமெரிக்காவையும் இஸ்ரேலையும் கண்டிக்க துணிவில்லாத எந்த கையாலாகாதவர்களுக்கும் இன்று ரஷ்யாவுக்கு உபதேசிக்க அருகதை கிடையாது.

 ரஷ்யா போரை நிறுத்த வேண்டும். போருக்கான சூழலை உருவாக்கியவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

 

அந்த ஆணியெல்லாம் வேண்டாம் மோடி

 


ரஷ்யா - உக்ரைன் போரால் பதற்றம் நிலவும் சூழலில் ஒரே ஒரு கூட்டம் மட்டும் உற்சாகமடைந்துள்ளது. (போர் பற்றி விரிவாக மாலையில் எழுத வேண்டும்)

இன்னமும் 56 இஞ்ச் மார்பன், வல்லவன், நல்லவன், திறமையானவன், உலகத் தலைவன் என்று நம்பிக் கொண்டிருக்கும் முட்டாள் சங்கிகள் கூட்டம்தான் அது.

மோடி தலையிட்டு போரை நிறுத்திடுவார் என்று அந்த கூட்டம் நிஜமாகவே நம்பிக் கொண்டிருக்கிறது. 

அந்த கூட்டத்திடமும் மோடியிடமும் நாம் சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்றைத்தான்.

இந்த சமாதான தூதுவர் ஆணியெல்லாம் அவசியமில்லை. உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் 25,000 பேரை பாதுகாப்பாக இந்தியாவுக்கு கொண்டு வந்தால் போதுமானது. 

தனக்கு மட்டும் ஒரு விமானத்தை அரசு நிதியில் வாங்கிக்கொண்டு அரசின் விமானநிறுவனத்தை விற்றுத்தின்ற ஊதாரியால் உக்ரைனில் தவிக்குது நம் பிள்ளைகள்.

என்ற தோழர் ஆதவன் தீட்சண்யாவின் வார்த்தைகள் நூற்றுக்கு நூறு சரியானது. அதனால் ரத்தன் டாடாவின் காலில் விழுந்தாவது மாணவர்கள் திரும்ப வருவதை உத்தரவாதம் செய்யவும். அப்படி கட்டணம் செலுத்த அரசிடம் பணமோ, மனமோ இல்லையென்றால் சொல்லவும். ஒன்றிய அரசுக்கு நாங்கள் பிச்சையெடுத்தாவது பணம் தருகிறோம். 



Wednesday, June 17, 2020

பக்தாள் இதற்கும் பொங்கட்டும்



சீனா இந்திய எல்லையை ஆக்கிரமித்தால் அதை மீட்க வேண்டும். போர் என்று வந்தால் அது இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்காக வர வேண்டும். மோடியின் அரசியல் ஆதாயத்திற்காக இந்திய வீரர்களின் உயிரோடு ஆட்சியாளர்கள் விளையாடக் கூடாது.

வீர தீர மோடி மகராஜ், இன்னும் வாய் திறக்கவில்லை. ராஜ்நாத் சிங் ட்வீட் எதிலும் சீனாவை கண்டிக்கவில்லை. இந்திய வீரர்கள் எப்படி இறந்தார்கள் என்று கூட சொல்லவில்லை.




ஹெச்.ராசா, மாலன், மாரிதாஸ் போன்ற . . . . .. . . . . .. களின் பேச்சைக் கேட்டு பொங்குபவர்கள் கீழே உள்ள இரண்டு செய்திகளைப் பார்த்து விட்டு அதற்காகவும் பொங்கவும்.

1. புதுதில்லி மீரட் அதிவிரைவு வேக ரயில் போக்குவரத்திற்கான சுரங்கம் அமைக்க 1126 கோடி ரூபாய்க்கான டெண்டரை ஷாங்காய் டன்னல் எஞினியரிங் லிமிடெட் Shanghai Tunnel Engineering Limited என்னும் சீன நிறுவனம் இரண்டு நாளுக்கு முன் பெற்றுள்ளது.

2. மகராஷ்டிராவில் 7500 கோடி முதலீட்டில் கார் தயாரிக்கும் தொழிற்சாலையை அமைப்பதற்கான ஒப்பந்தம் மகராஷ்டிரா அரசுக்கும் சீனத்தின் கிரேட் வால் மோட்டார் நிறுவனத்திற்கும் இடையே நேற்றைக்கு முன் தினம் கையெழுத்தாகி உள்ளது.

எல்லையில் பதட்டம் கிட்டத்தட்ட பதினைந்து நாட்களாக நீடிக்கிறது. இந்த நிலையிலும் சீன நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கிறார்கள். 

இதுதான்  மோடி வகையறாக்களின் உண்மையான தேஷ் பக்தி. 

பொங்குகிற தேச பக்தர்கள், கம்யூனிச சீனாவுக்கு ஒப்பந்தம் அளித்த மோடி வகையறாக்களுக்கு எதிராகவும் பொங்குங்கள்.


திசை திருப்ப தியாகியாக்காதீர் . . .




இந்திய சீன எல்லையிலே பதட்டம் நிலவுகிறது.

இந்திய வீரர்கள் மூவரும் சீன வீரர்கள் ஐவரும் கொல்லப்பட்டனர் என்று முதலில் தகவல்கள் வந்தது.

இப்போது இந்திய வீரர்கள் இருபது பேரும் சீன வீரர்கள் 43 பேரும் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் கசிகிறது. இது உண்மையாகக் கூட இருக்கலாம்.

இது உண்மையாக இருந்தால் இரு நாடுகளும் இன்னொரு பேரழிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதுதான் யதார்த்தம்.

அடுத்த நாட்டு ராணுவம் நம் எல்லையை ஆக்கிரமிக்கிறது என்றால் நாம் கண்டிப்பாக பதிலடி கொடுத்தாக வேண்டும். எல்லையை மீட்க வேண்டும். இதில் சமரசத்திற்கு இடம் கிடையாது.

அதே நேரம் இப்பிரச்சினை நம் மீது திணிக்கப்பட்டதா
அல்லது
நாமாக உருவாக்கிக் கொண்டதா?

என்பதையும் ஆராய்ந்திட வேண்டும்.

இந்த நேரத்தில் இந்த ஆராய்ச்சி தேவையா என்று நீங்கள் கோபமாக கேட்கலாம்.

இந்த கேள்வி ஆட்சிப் பொறுப்பில் மோடி பிரதமராகவும் அமித் ஷா உள்துறை அமைச்சராகவும் பாஜக ஆட்சியிலும் இருப்பதனால் மட்டுமே வருகிறது.

இவர்களின் கடந்த கால லட்சணம் அப்படி

குஜாராத்தில் மோடி இஸ்லாமியர்கள் மீது நடத்திய ரத்த வெறி கொண்ட படுகொலைத் தாண்டவங்களே  அவர் இன்று பிரதமர் பதவியில் இருப்பதற்கான அடித்தளம்.

குஜராத்தில் மோடியின் செல்வாக்கு குறையும் நேரத்தில் எல்லாம் “போலி  எண்கவுண்டர்”  நடத்தி “மோடியின் உயிருக்கு ஆபத்து” என்று பரபரப்பை உருவாக்கி “பேக்கரி டீலிங்” மூலமாக சிறு கீறல் கூட தப்பித்தவர் அமித் ஷா.

“கலவரங்கள் நடந்தால் எங்கள் வெற்றிகள் தொடரும்” என்று வெளிப்படையாகவே தன் தேர்தல் உத்தியை பிரகடனம் செய்ததும் அமித்தே.

உத்திரப் பிரதேச மாநில சட்டப் பேரவை தேர்தலுக்கு முன்பாக, தண்டவாளங்கள் பலவீனமாக இருந்து நிகழ்ந்த ஒரு ரயில் விபத்தை “எல்லைக்கு அப்பால் இருக்கிற சக்திகளின் சதியால்” நடந்தது என்று சொல்லி உ.பி தேர்தலில் ஓட்டு வேட்டையாடி மொட்டைச் சாமியாரை முதல்வராக்கியவர் மோடி.

ஜம்மு காஷ்மீர் மாநில உளவுத்துறை “வெடிகுண்டு தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது” என்று எச்சரிக்கை அளிக்கிறது.  அந்த எச்சரிக்கை அலட்சியப்படுத்தப் படுகிறது.

 மத்திய ரிசர்வ் போலீஸ் தலைமையகமும் வீரர்களை ஒரு முகாமிலிருந்து இன்னொரு முகாமிற்கு மாற்ற விமான சேவைக்கு அனுமதி கேட்கிறது.  அனுமதி மறுக்கப்படுகிறது.

இரண்டு கிலோ மீட்டருக்கு ஒரு செக்போஸ்ட் என்று கடுமையான கண்காணிப்பு இருக்கிற நெடுஞ்சாலையில் 700 கிலோ வெடி பொருட்கள் ஏந்திய வாகனம் எப்படி வந்தது?

புலவாமா தாக்குதல் அதனால்தானே நடந்தது.

தாக்குதல் நடத்திய அமைப்பு முதல் குற்றவாளி என்றால் உளவுத்துறை எச்சரிக்கையை உதாசீனம் செய்து விமான சேவைக்கு அனுமதி மறுத்து சாலை வழியாகவே பயணம் போக வைத்து 58 பேர் மரணத்துக்கு காரணமான மோடி அரசு இரண்டாவது குற்றவாளி கிடையாதா?

துல்லியமான தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டு ஐநூறு பேர் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்டதற்கு இன்று வரை எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லையே!

பாகிஸ்தானுக்கு நாங்கள் விற்ற அனைத்து எஃப் 16 விமானங்களும் பத்திரமாகவே உள்ளது மோடியின் எஜமான் நாடு அமெரிக்கா சொன்னதன் மூலம் இரண்டு போர் விமானங்களை வீழ்த்தியதும் கூட வழக்கமான மோடி ஜூம்லா என்று நிரூபணமாகி விட்டதே!

எது எப்படியானாலும் நான்கரை வருட தோல்விகள், கடைந்தெடுத்த பொய்கள், நிர்வாக சீர்கேடுகள், மாட்டின் பெயரிலான படு கொலைகள், வரலாறு காணாத அளவிற்கு வேலையின்மை அதிகரிப்பு, செல்லா நோட்டு அராஜகம், ஜி.எஸ்.டி குழப்பம் அனைத்தையும் தாண்டி புலவாமாவும் பாலக்கோடும் மீண்டும் மோடியை நாற்காலியில் அமர வைத்து விட்டதே!

ருசி கண்ட திருட்டுப் பூனைக்கு பால் கிடைக்கும் வழி மறக்காதல்லவா!

இதோ பீகார் மாநில தேர்தல் நெருங்கி விட்டது.

கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் வேளையிலும்  கூட தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி விட்டார் அமித்து.

வாக்கு கேட்க சாதனை என்று சொல்ல ஏதுமில்லை. மாநிலத்தில் உள்ள நிதின் குமார் நிலையும் அதுதான். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் ஆதரித்தது மகா கூட்டணியை. அதை முறித்து பாஜகவோடு ஒட்டிக் கொண்டு வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்தவர் என்ற களங்கம் வேறு அவரை அச்சுறுத்துகின்றது.

சாதனைகள் இல்லை என்பது மட்டுமல்ல, ஏராளமான பிரச்சினைகளும் இருக்கிறது.

குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்களில் பீகாரைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகம்.  கால் நடையாக பாதங்கள் கொப்பளிக்க, பசியும் பட்டினியுமாக வீடு திரும்பி வந்தவர்கள்  வாக்குகளை என்ன சொல்லி கேட்பார்கள்.

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் அரசியல் என்பது போல
சங்கிகளின் கடைசி புகலிடம் போர் மூலம் தேசிய உணர்வுகளை உசுப்பேத்தி அரசியல் ஆதாயம் தேடுவது.

இவர்கள் நம்ப முடியாதவர்கள்.

ஒரு பேரிடர் காலத்தில் பிஎம் கேர்ஸ் என்று கோடிக்கணக்கில் புதிய கணக்கில் வரவு வைத்து அது பற்றிய தகவல்களை ராணுவ ரகசியம் போல பாதுகாப்பவர்கள், ராணுவ ரகசியத்தில் மட்டும் உண்மையாகவா இருக்கப் போகிறார்கள்!

இத்தனை சம்பவங்கள் நடந்தும் பெரும் புள்ளிகள் எல்லாம் அமைதியாக இருப்பது வேறு சந்தேகத்தை உருவாக்குகிறது.

ஏற்கனவே நீங்கள் ஆட்சிக்கு வருவதற்காக புலவாமாவில் 58 பேரை தியாகியாக மாற்றினீர்கள்.

கொரோனா சொதப்பல் நடவடிக்கைகளிலிருந்து மக்களை திசை திருப்பவும் பீகாரில் வெற்றி பெறவும் மீண்டும் இந்திய வீரர்களை தியாகியாக்காதீர்கள்.

உங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடைக்காய்கள் அல்ல இந்திய வீரர்கள்.