Showing posts with label அதிமுக. Show all posts
Showing posts with label அதிமுக. Show all posts

Tuesday, May 12, 2026

அதிமுக சண்டை புரியலை

 


எடப்பாடி கோஷ்டியும் சரி, வேலுமணி சரி ரெண்டு பேருமே கொள்கைக் குன்றுகள் கிடையாது. மோடியின் கட்டளைகளை நிறைவேற்ற தயங்காதவர்கள். பிறகு ஏன் அவர்களுக்குள் மோதல்?

மோடிக்கு எடப்பாடியையோ அல்லது வேலுமணியை பிடிக்காமல் போயிருக்கிறது. 

அதனால் அவர்கள் சண்டை செய்கிறார்கள்.

மோடியின் செல்லப்பிள்ளை யார் என்பது விரைவிலேயே தெரிந்து விடும்.


Friday, April 17, 2026

எடப்பாடி இழிவுபடுத்தப்படாமல் தடுத்திடுவோம்.


 மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே ஆட்சியை கவிழ்க்க சிவசேனை கட்சியை உடைக்க ஏக்நாத் ஷிண்டேவை தூண்டி அதற்கான ஊக்கப் பரிசாக அவரை முதலமைச்சராக்கியது.

சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகி ஷிண்டேவை துணை முதல்வராக்கி விட்டார்கள்.

பீகாரில் ஐக்கிய ஜனதாதள் கட்சியின் நிதீஷ்குமாரைத்தான் முதலமைச்சராக்கினார்கள். இப்போது அவரை மாநிலங்களவைக்குத் துரத்தி விட்டு பாஜகவின் கல்வித்தகுதி மோசடி சாம்ராட் சவுத்ரியை முதல்வராக்கி விட்டார்கள்.

நாளை அதிமுக வென்று எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானால் கூட பின்பு அவரை கழற்றி விட்டு தமிழிசையையோ, ஆட்டுக்காரனையோ, எச்.ராசாவையோ ஏன் கே.டி.ராகவனையோ கூட பாஜக முதல்வராக்கி விட்டு எடப்பாடியை துணை முதல்வராக்கி விடுவார்கள்.

அப்படிப்பட்ட இழி நிலை எடப்பாடிக்கு வரலாமா?

அதை நாம் அனுமதிக்கலாமா?

அதனால்

இப்போதே தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை (அதிமுக கூட்டணி என்று எடப்பாடிதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். கோபாலகிருஷ்ணன் கிடையாது சப்பாணிதான் என்று பாஜக என்.டி.ஏ என்றே சொல்கிறார்கள்) முற்றிலுமாக தோற்கடிக்க வேண்டும். 

நிர்மலா அம்மையாரின் கணவர் பரகால பிரபாகர் "ஜீரோ பாஜக" என்றொரு முழக்கத்தை கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அது 

ஜீரோ என்.டி.ஏ, ஜீரோ பாஜக, ஜீரோ அதிமுக, ஜீரோ பாமக, ஜீரோ தவெக

என்றே அமைய வேண்டும்.

தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக அதிமுக-பாஜக கூட்டணியை வீழ்த்திடுவோம். 

Thursday, April 2, 2026

ராயபுரம் ஜெயகுமார் இப்போது தோற்கப் போவதற்கும் ?????

 


கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின்பு தன் தோல்விக்கு காரணம் யார் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயகுமார் விளக்கமாக சொல்லும் காணொளி இங்கே உள்ளது.

பாவம் ஜெயகுமார்!

2026 தேர்தலிலும் ஜெயகுமார் அதே வேஸ்ட் லக்கேஜ் பிஜேபியால்தான் தோற்கப் போகிறார். 

Tuesday, March 17, 2026

முன்னாள் மந்திரி சண்முகத்தை விரட்டி அடியுங்கள்

 


இருபத்தி நான்கு  மணி நேரமும் போதையில் இருக்கிறாரா என்ற சந்தேகம் அதிமுகவின் முன்னாள் மந்திரி திண்டிவனம் சி.வி.சண்முகம் பேசுவதை கேட்கும் போதெல்லாம் வரும்.

சந்தேகமே தேவையில்லை. அவர் எப்போதும் அப்படித்தான் என்பதை அந்த ஜந்துவின் இன்றைய பேச்சு நிரூபித்துள்ளது.


இப்படிப்பட்ட கேவலமான ஜென்மங்கள் அமைச்சராக இருந்தது, எம்.எல்.ஏ ஆக இருப்பதெல்லாம் தமிழ்நாட்டிற்கு மிகப் பெரிய அசிங்கம்.

தமிழ்நாட்டை விட்டு துரத்த வேண்டும். வேண்டுமானால் பாலியல் குற்றங்களின் சொர்க்கமான உத்திரப்பிரதேசத்திற்கு செல்லட்டும்.

இதில் மிகப் பெரிய கொடுமை என்னவென்றால் அந்த ஆள் பேசியது :பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை" என்பதை கண்டித்து நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்.

இது போன்ற ஜந்துக்கள் இருக்கும் வரை எப்படி பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியும் !

பாலியல் ஜல்சா கட்சியின் கூட்டாளி வேறெப்படி பேசுவார்!

Monday, March 2, 2026

எடப்பாடி எங்கே நயினார்?

 


மதுரை என்.டி.ஏ கூட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியார் படத்தை பாஜக கட்டளையின் பேரில் நீக்கியது பற்றி நேற்று எழுதியிருந்தேன்.

அந்த பதிவை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து போது பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பக்கத்தைப் பார்த்தேன்.

இன்று  நடைபெறவுள்ள கூட்டத்திற்கான பின்னணித்திரையின் படத்தை அவர் பகிர்ந்தார். 

அதையெல்லாம் பாருங்கள்.









ஒரு பக்கத்தில் மோடி படம் இருப்பது போல இன்னொரு பக்கத்தில் எடப்பாடியின் படமும் உள்ளது. ஆனால் நயினார் நாகேந்திரன் பகிர்ந்த எந்த ஒரு படத்திலும் எடப்பாடியை காணவில்லை.

முதல் கூட்டத்திலேயே ஒரு சாதாரண ட்விட்டர் பதிவில் கூட எடப்பாடியை மதிக்காத பாஜக மாநிலத்தலைவர் தயாராக இல்லை. போகப் போக இன்னும் என்னென்ன அவமானங்கள் எடப்பாடிக்கும் அதிமுகவிற்கும் காத்திருக்கிறதோ?

பாவம் அந்த கட்சியின் தொண்டர்கள் !!!!

பிகு: நேற்று பகிர்ந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் எழுதியது. தோழர் தயாநிதி அவர்களின் மறைவினால் இன்று பகிர்ந்து கொள்கிறேன். 

Saturday, February 28, 2026

கட்சியின் பெயரை மாத்திடுங்க எடப்பாடி

 


நாளை மதுரையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் மோடி பேசுகிறார். அதற்காக அமைக்கப்பட்ட அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்தை பாஜகவினரின் கட்டளைப்படி அதிமுக அகற்றியுள்ளது. 


இன்றைய எடப்பாடி திமுகவிற்கு தந்தை பெரியாரெல்லாம் தேவை இல்லை என்பதினால் கட்டளையை நிறைவேற்றி விட்டார். அவர்களுக்கு எம்.ஜி.ஆர், ஜெ கூட முக்கியமில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டை கொண்டாடிய போது சேலத்தில் எடப்பாடி, ஓ.பி.எஸ் ஆகியோரின் கட்டவுட்கள் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்த போது எம்.ஜி.ஆர், ஜெ வின் கட்டவுட்டுகள் தம்மாத்தூண்டாக இருந்ததை நானே நேரில் பார்த்துள்ளேன். 

சங்கிகளுக்கு தந்தை பெரியாரை மட்டுமல்ல, அறிஞர் அண்ணாவையும் பிடிக்காது. அறிஞர் அண்ணாவை இழிவு படுத்தியவர்களோடு இனி எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று சொல்லித்தான் கடந்த மக்களவைத் தேர்தலின் போது என்.டி.ஏ விலிருந்து வெளியே வந்தார்கள். மக்கள் அதையெல்லாம் மறந்திருப்பார்கள் என்று நினைத்துத்தான் இப்போது மீண்டும் கூட்டணிக்குள் நுழைந்துள்ளார் எடப்பாடி.

இன்று தந்தை பெரியார் படத்தை நீக்கச் சொன்ன பாஜக உங்கள் கட்சியிலின் பெயரிலிருந்தும் கட்சியின் கொடியிலிருந்தும் அண்ணாவை நீக்கச் சொல்வார்கள். நீங்களும் வெட்கமில்லாமல் அதை செய்வீர்கள். பாஜக சொல்லி செய்வதற்குப் பதிலாக நீங்களே உங்கள் கட்சியின் பெயரை எ.தி.மு.க என மாற்றி விடுங்கள்.

எதிமுக என்றால் எடப்பாடி திமுக என்றும் சொல்லலாம். எட்டப்பன் திமுக என்றும் சொல்லலாம். 

Thursday, January 29, 2026

எது உமது வாய் எடப்பாடி?


 
கரூர் நெரிசல் மரணங்கள் நிகழ்ந்த போது தவெக தற்குறிகள் போல செந்தில் பாலாஜி மீது பழி போட்டு, அதையே சட்டப்பேரவையிலும் பேசி, சி.பி.ஐ விசாரணை கேட்டு, ஏதோஒரு கூட்டத்தில் தவெக கொடியை ஒருவர் (அவர் அதிமுக ஆள் என்பது பிறகு தெரிந்த உண்மை) காண்பித்த போது புளகாங்கிதம் அடைந்த எடப்பாடி அவர்கள் இன்று தவெக வை தாக்கியுள்ளார்.



இரண்டில் உமது நிஜ வாய் எது எடப்பாடி அவர்களே?

யாருங்க அது! இரண்டுமே நாற வாய் என்று சொல்வது 😜😜😜😜😜😜😜

Thursday, January 22, 2026

வடிவேலு வசனம்தானே எடப்பாடி?

 


"என்னம்மா கண்ணு" என்ற திரைப்படத்தில் ஸ்த்ரீ லோலனான சத்யராஜ், எஸ்.பி வடிவேலை புரோக்கர் வடிவேலு என்று நினைத்து அசிங்கம் அசிங்கமாக திட்டுவார், வடிவேலுவின் மனைவி கோவை சரளாவையும் அசிங்கமாக பேசுவார்.

சத்யராஜ் போனதும் வடிவேல் கோவை சரளாவிடம்

"அவன் என் ஃப்ரெண்டு. படிக்கற காலத்துலேயே அவன் குடும்பத்தை நான் அசிங்கமா பேசுவான். அவன் என் குடும்பத்தை அதை விட கேவலமா பேசுவான். இதை நாங்க ஒரு பொழுது போக்காவே வச்சிருக்கோம்"

உங்களோடு கூட்டணி வைப்பதை விட தூக்கில் தொங்கலாம் என்று சொன்ன டி.டி.வி.தினகரனோடும் டயர் நக்கி என்ற அன்புமணியோடும் கூட்டணி வைத்துள்ளீர்களே, அவர்கள் பேசியது உங்களை பாதிக்கவில்லையா என்று கேட்டால்

வடிவேலின் வசனத்தைத்தானே சொல்வீர்கள் வடிவேல்!

வேறு என்ன வழி உங்களுக்கு இருக்கிறது !!!!

Saturday, January 10, 2026

அடாவடியில் மம்தாவின் முன்னோடி விஜயபாஸ்கர்

 


மோடியின் அமலாக்கப் பிரிவு நேற்று முன் தினம் தேர்தல் சகுனி பிரஷாந்த் கிஷோரின் ஐ.பேக் நிறுவனத்தின் கொல்கத்தா அலுவலகத்திலும் பிரஷாந்த் கிஷோரின் கூட்டாளி பிரதீக் ஜெயின் வீட்டிலும் ரெய்ட் நடத்தியுள்ளது. மம்தாவிற்கு இப்போது வழிகாட்டுவது பிரதீக் ஜெயின் தான். 

ரெய்ட் நடத்திய இரண்டு இடங்களுக்கும் தன் குண்டர்களோடு சென்ற மம்தா பானர்ஜி பல முக்கியமான ஆவணங்களை தூக்கிக் கொண்டு வெளியே வந்து விட்டார்.

அந்த ஆவணங்களில் என்ன ரகசியம் இருந்தது என்பது அவருக்கே வெளிச்சம்.

அமலாக்கப்பிரிவை ஏவுவது என்பது மோடியின் அராஜகம். உள்ளே புகுந்த ஆவணங்களை தூக்கி வருவது மம்தாவின் அராஜகம்.

இது போல முன்பு  எப்போதாவது நடந்துள்ளதா?

ஆம்.

அதுதான் தமிழ்நாட்டின் பெருமை.

ஜெயலலிதா ஆட்சியில் சட்டப்பேரவையில் கலைஞரின் உடல் குறைபாட்டை நக்கலடித்து  அமைச்சர் பதவியை பெற்றவர் விஜயபாஸ்கர். எடப்பாடி காலத்திலும் அவர் சுகாதாரத்துறை அமைச்சர்.

அவர் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட் நடத்திய போது அவரது செயலாளர்களில் ஒருவர், பல முக்கியமான ஆவணங்களை தூக்கி வந்து வெளியே வீச, காத்திருந்த தோண்டர்கள் அதனை தூக்கிக் கொண்டு ஓடி விட்டார்கள்.

ஆக  அடாவடி செய்வதில் விஜயபாஸ்கர் முன்னோடியாக இருந்துள்ளார்.


Friday, January 9, 2026

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம்தானே அன்புமணி?

 


அதிமுகவுடன் இப்போது கூட்டணி வைத்துள்ளது பாமகவின் அன்புமணி கோஷ்டி. ஜெயலலிதா காலத்தில் அமைச்சர்களாக இருந்து இப்போது அதிமுகவை நடத்திக் கொண்டிருப்பவர்கள், குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்களைப் பற்றி அன்புமணியின் மதிப்பீடு என்ன?

கீழேயுள்ள காணொளியை பாருங்கள்.


மன்ணு என்றும் டயர் நீக்கி என்றும் சொன்ன அன்புமணியும் சொல்லப்பட்ட எடப்பாடியும் இப்போது அந்த காணொளி பற்றி என்ன சொல்வார்கள்?

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா . . .


Thursday, January 8, 2026

ஜனநாயகன்-சென்சார்-சி.பி.ஐ-நாடகம்???????


 பாஜக எங்கள் கொள்கை எதிரி என்று வஜனம் பேசிய விஜய், ஒன்றிய அரசை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. 

பாஜகவின் ஏற்பாடே விஜய் கட்சி என்ற குற்றச்சாட்டை நிரூபிப்பது போலத்தான் விஜயின் மௌனம் காண்பித்தது.

கரூர் நெரிசல் மரணங்கள் தொடர்பாக விஜய்யை டெல்லிக்கு வருமாறு சி.பி,ஐ அழைத்துள்ளது.

விஜயின் கடைசிப் படம் என்று தற்காலிகமாக சொல்லப்படுகிற "ஜனநாயகன்" திரைப்படத்திற்கு  சென்சார் சான்றிதழ் கொடுக்கவில்லை. 

இந்த இரண்டு சம்பவங்களால் பாஜகவை கொள்கை எதிரி என்று சொன்னதால் விஜய் பழி வாங்கப்படுகிறார் என்ற தோற்றத்தை இப்போது உருவாக்கப் பார்க்கிறார்கள்.

பாஜக கூட்டணியில் நேரடியாக இணைவதற்கு பதிலாக வேறு வழியில்லாத காரணத்தால் விஜய் கூட்டணியில் இணைந்து விட்டார் என்ற அனுதாபத் தோற்றத்தை உருவாக்க நடத்தப்படுகிற நாடகம் இந்த இரண்டு சம்பவங்கள் என்று நான் கருதுகிறேன்.

ஏனென்றால் பாஜக, அதிமுக, விஜய் என எல்லோருமே எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடியவர்கள்தான். 

Wednesday, November 12, 2025

அரசியல் அடிமையின் ஒப்புதல் வாக்குமூலம்

 


அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொன்னதை "ஒப்புதல் வாக்குமூலம்" என்று சொல்லாமல் வேறென்ன சொல்ல முடியும்.


இதிலே "சசிகலா ஜெயிலுக்கு போன பிறகு" என்று ஏன் சேர்க்கவில்லை என்று தெரியவில்லை. அவரிடம் அடிமையாக இன்னும் வாய்ப்பு இருப்பதால் சாய்ஸில் விட்டு விட்டாரோ!

பிகு: "ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்" நூலின் தலைப்பையும் அட்டைப்படத்தையும் உல்டா செய்தமைக்கு வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள் மன்னிப்பாராக . . .

Wednesday, August 20, 2025

எடப்பாடியெல்லாம் மனுசனா?

 


தான் நடத்திய பொதுக்கூட்டத்தின் வழியே சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனரை எடப்பாடி எனும் எடுபிடி மிரட்டிய காணொளியை பார்த்தேன்.

ஆம்புலன்ஸ் கடந்து சென்றால் அதற்கு வழி விட வேண்டும் என்பது மனிதர்கள் பின்பற்ற வேண்டிய சாதாரண விதி. நோயாளி சிகிச்சைக்காக விரைவில் செல்ல வழி விட வேண்டும் என்பதெல்லாம் ஒருவரின் ரத்தத்தில் கலந்திருக்க வேண்டிய குணம்.

அந்த குணம் கூட இல்லாமல் ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மிரட்டுவது,  பின்பு கவனித்துக் கொள் என்று கட்சிக்காரர்களுக்கு உத்தரவு போடுவதெல்லாம் கேவலம். இதை செய்துள்ள எடுபிடியை மனிதன் என்று சொல்வது மனித குலத்திற்கு அவமானம். ம்னுசன் என்று சொல்ல முடியாத ஒரு ஆள் முதல்வராக இருந்தது என்பதெல்லாம் தமிழ்நாட்டிற்கு அவமானம்.

காலி ஆம்புலன்ஸ் என்றொரு  ...... பிளக்கும் வாதம் வைக்கப்படுகிறது. அட முட்டாள்களே! நோயாளியை வீட்டிலிருந்தோ, விபத்தானால் ரோட்டிலிருந்தோ அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் காலியாகத்தான் செல்ல வேண்டும்.

நான் விபத்துக்குள்ளான சமயத்தில் அடுத்த கட்ட சோதனைகளுக்காக மூன்று முறை மருத்துவ மணைக்கு ஆம்புலன்ஸில்தான் சென்றேன். என்னை வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் காலியாகத்தான் வந்தது.

இன்னொன்று இவர் கூட்டத்திற்கு வேண்டுமென்றே இடையூறு செய்கிறார்களாம்.

அதற்கெல்லாம் அவர் வொர்த்தில்லை என்பதை அவரிடம் யாராவது சொல்லுங்களேன்.


காலி ஆம்புலன்ஸ் 

Monday, April 14, 2025

அண்ணல் அம்பேத்கரும் அடுத்த தேர்தலும்

 


இன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு வேலூர் மக்கான் முனையில் இருந்த சிலைக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் மாலை அணிவிக்க சென்ற போது பார்த்த காட்சிகள் சுவாரஸ்யமானது.

அங்கே சென்ற போது ஒரே காவிமயம். முதல் முறையாக பாஜக  ஆட்கள் அங்கே  கூடியிருந்தார்கள். கொடிகள் மட்டும் இருந்தால் அவர்கள் யார் என்று தெரியாது என்ற நினைப்போ என்னமோ, பிஜேபி என்று அச்சிடப் பட்ட துண்டுகளை அணிந்திருந்தார்கள். காத்திருந்தார்கள், காத்திருந்தார்கள், காத்துக் கொண்டே இருந்தார்கள்.

அதிமுகவின் சார்பில் வேலூர் மேயராக இருந்து, எங்கள் சங்க மாநாட்டிற்கு மொட்டைக்கடிதத்திற்கு பயந்து டிமிக்கி கொடுத்து, 2024 ல் சிதம்பரம் மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போன கார்த்தியாயணி அம்மையாருக்காக அவர்கள் காத்திருந்தார்கள்.  அந்த அம்மையார் வந்து மாலை அணிவித்த பின்பு போட்டோ ஷூட் நடத்தி விட்டு ஒரு வீர உரை வேறு ஆற்றினார்.

மோடியின் கட்சியல்லவா! மோடியைப் போலவே பொய்யாகவே அள்ளி விட்டார். அண்ணல் அம்பேத்கருக்கு மோடிதான் நாடாளுமன்றத்தில் சிலை வைத்தார் என்று சொன்னாரே ஒரு கதை, அப்படியே ஆடிப் போய் விட்டேன். நாடாளுமன்றத்தின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கர் சிலையை பின் பக்கத்தில் மாற்றி வைத்து சிறுமை செய்து விட்டு என்ன பேச்சு இது!

அடுத்த போட்டோ ஷூட் த.வெ,க தம்பிகளுடையதுதான். அவர்கள் வாயிலிருந்து ஒரு முழக்கம் கூட வரவில்லை. பெரும்பாலும் சின்ன வயது பையன்கள், பெண்கள்.  ட்ரோன் வைத்தெல்லாம் அவர்கள் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  அவர்களில் ஒரு மூத்த பையன் அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை போட்டதும் ஒரே விசில் சத்தம். திரையில் விஜய் தோன்றியதும் அடிக்கும் விசிலை இங்கேயும் அடித்து விட்டார்கள். நல்ல வேளை பேப்பரெல்லாம் கிழித்துப் போடவில்லை.

டி.டி.வி தினகரன் கோஷ்டியிலிருந்து கூட ஆறேழு பேர் வந்து மாலை போட்டு விட்டு சென்றார்கள்.

அதிமுகவிலிருந்து கூட சிலர் வந்திருந்தார்கள். இவர்கள் இன்று மாலை போட்ட  அதிமுகவின் மூன்றாவது கோஷ்டி என்று மூத்த தோழர் ஸ்ரீதர் சொன்னார்.

தேமுதிக, மக்கள் நீதி மய்யம் கட்சியெல்லாம் வேறு வந்திருந்தார்கள்.

திமுகவில் இந்த வருடம் அமைச்சர் துரை முருகன், எம்.பி கதிர் ஆனந்த், மற்றும் லோக்கல் தலைவர்கள் வந்திருந்தார்கள். போன சட்டசபை தேர்தலுக்கு முன்பாக துரை முருகன் வந்திருந்தார். அப்போது அவர் காரிலேயே அமர்ந்து மாலையை தொட்டுக் கொடுத்தார். இந்த வருடம் சிலை வரைக்கும் நடந்து வந்தார். அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போவார்களோ என்று பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளை அப்படியெல்லாம் அவரை படுத்தவில்லை.

அதென்ன இந்த வருடம் அண்ணல் அம்பேத்கர் மீது அப்படியென்ன இத்தனை கட்சிகளுக்கு திடீர் பாசம்?

எல்லாம் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வருவதுதான் . . .

அடுத்த வருடம் வாக்குப்பதிவு முடியவில்லையென்றால் வருவார்கள். இல்லையென்றால் . . .

பிகு : மேலே உள்ள அண்ணல் அம்பேத்கரின் ஓவியத்தை வரைந்தது தோழர் ரவி பாலேட். 

Friday, April 11, 2025

ஆட்டுக்காரனுக்கு பாத்து ஏதாவது செய்யுங்கய்யா

 


பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப் பட்டு விட்டார். ஆட்டுக்காரன் இல்லாதது உண்மையிலேயே வருத்தம்தான்.  அவருக்கு புடிக்காத அதிமுகவோட கூட்டணி வேற. 




புள்ள மூஞ்சியை பாருங்க! எப்படி சோகத்துல இடிஞ்சு போயிருக்கு பாருங்க! பதிவுகள் எழுத, மீம்கள் உருவாக்க தொடர்ந்து கண்டெண்ட் கொடுத்துக் கொண்டிருந்த  ஒரு ஆள் இனி இல்லை என்றால் வருத்தம் இருக்காதா என்ன?

 ஏதாவது செய்யுங்கய்யா!

 எல்.முருகனுக்கு கொடுத்த மாதிரி, ஆட்டுக்காரனுக்கும் ஏதாவது மந்திரி பதவி கொடுத்து அதில் அவரது குணாம்சத்தின் படி சொதப்பி முட்டாள்தனத்தை வெளிப்படுத்தி வழக்கம் போல் கண்டெண்ட் கொடுக்க வழி செய்யுங்கய்யா.

 ஏதாவது பாத்து போட்டு கொடுங்க . . .

Wednesday, March 26, 2025

ஆட்டுக்காரன் நிலைமை பரிதாபம் . . .

 


நேற்று எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு நடந்துள்ளது. மோசடி வழக்கில் சிக்கிக்கொண்ட உறவினரை பாதுகாக்கவே இந்த சந்திப்பு என்று ஊடகங்கள் சொன்னாலும் கூட்டணி பேச்சுவார்த்தை பற்றியும் பேசப் பட்டுள்ளதாக சங்கிகள் நம்புகிறார்கள்.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி போட்டுள்ள பதிவு கீழே.


அதிமுக கூட்டணிக்காக சங்கிகள் ஏங்குவது நன்றாக தெரிகிறது. அப்படி ஒரு கூட்டணி நிகழாது என்றும் நாம் சொல்ல முடியாது. 

அதிமுக- பாஜ்க கூட்டணி உருவானால் 

முன்பு அந்த கூட்டணி முறிய காரணமாக இருந்த ஆட்டுக்காரன் நிலைமை என்னாகும்?

அழகி படத்தில் மந்திரி பதவியையும் இழந்து ஆடைகள் கிழியும் அளவிற்கு அடி வாங்கிய பாண்டுவின் கதிதான் ஏற்படும்.

பாவம் ஆட்டுக்காரன் . . .

Tuesday, December 17, 2024

எடப்பாடி க்யாரே டீலிங்கா?

 


சி.ஏ.ஏ சட்டத்தை ஆதரித்து இஸ்லாமியர்களுக்கு துரோகம் இழைத்த அதிமுக, ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை ஆதரித்து இந்திய ஜனநாயகத்திற்கே துரோகம் இழைத்துள்ளது.

என்ன எடப்பாடி ரெண்டு நாள் முன்னாடி பொதுக்குழுவில பாஜகவை தாக்கினீங்களாம், அதெல்லாம் செட்டப்பா?

இந்த கேவலமான வேலைக்கு என்ன டீலிங் போட்டிருக்கீங்க?

யானை மாலை போட்டு பிச்சைக்காரன் ராஜாவானது மாதிரி தவழ்ந்து போய் முதலமைச்சரான உங்க கிட்ட எல்லாம் அரசியல் நாணயம் எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?

நீங்களும் ஒரு அமைதிப்படை அமாவாசைதானே!

Tuesday, November 12, 2024

ஏன் பல்டி எடப்பாடியாரே?

 


திமுகவிற்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம் என்ற எடப்பாடியாரிடம் “அப்படியென்றால் பாஜக, பாமக கட்சிகளுடன் கூட்டணிக்கு கதவு திறந்துள்ளதா? “ என்ற கேள்விக்கு “அப்படியெல்லாம் யாருக்கும் கதவை மூடி விட முடியாது. தேர்தல் நேரத்தில் உரிய முடிவெடுப்போம். திமுகவிற்கு எதிரானவர்களை திரட்டுவதே எங்கள் கடமை” என்று பதில் சொல்லி பாஜகவிற்கு பச்சைக் கொடி காட்டியிருந்தார் எடப்பாடி. இது நேற்றைய ஆங்கில இந்து நாளிதழின்செய்தி.

 “பாஜகவுடன் கூட்டணி எக்காலத்திலும் கிடையாது” – இது இன்றைய ஆங்கில இந்து இதழில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சொன்னதாக வெளிவந்த செய்தி.

 24 மணி நேரத்தில் என்ன ஆனது?

 இன்று காலை தினமலரின் போஸ்டர் சொன்னது

 “அதிமுக மாஜிக்களால் எடப்பாடி பல்டி”

 இந்த பல்டி ஏன் என்று எடப்பாடியார் சொல்வாரா?

 

Wednesday, January 3, 2024

அலோ, அமலாக்கப் பிரிவா?

 


நீதி, நேர்மை, நாணயம் ஆகிவற்றை நிலை நாட்டுவதற்காக அவதாரம் எடுத்துள்ள அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த உத்தம புத்திரர்களே, இங்கே வாருங்கள்.

 


ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரிடமும் விசாரணை நடத்தி இருவரையுமே தூக்கி உள்ளே போடுங்கள்.

ஆனால் பாவம், நீங்கள் என்ன செய்ய முடியும்!

மதுரையில் ஒரு அமலாக்கப்பிரிவு அதிகாரி லஞ்சம் வாங்கி கம்பி எண்ணுகிறார். மாநிலத்தின் தலைமையில் உள்ள ஆட்களோ பாஜக கயவர்களின் நில ஆக்கிரமிப்புக்கு துணை போய் அதிகார துஷ்பிரயோகம் செய்து அசிங்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.


Thursday, September 28, 2023

இதெல்லாம் சாதனையா பாண்டே?

 


சதிகாரன் சாணக்யனாக தன்னை  சித்தரித்துக் கொண்டுள்ள ரங்கராஜ் பாண்டே, டிமோ தமிழ்நாட்டுக்கு என்ன சாதனை செய்தார், எந்த கோரிக்கையை நிறைவேற்றினார் என்று தம்பட்டம் அடிப்பதை பாருங்கள்.



வெட்கங்கெட்டவர்கள் . . .