Showing posts with label அயோக்கியத்தனம். Show all posts
Showing posts with label அயோக்கியத்தனம். Show all posts

Thursday, February 5, 2026

ஓடி ஓளிவதைத் தவிர மோடிக்கு வேறு வழியில்லை . . .

 


குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி சொல்லும் தீர்மானம் பிரதமர் பதில் அளிக்காமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

சீனப் படைகள் முன் வந்த போது முடிவெடுக்க திராணியில்லாமல் நடுங்கியதை சொல்லும் ராணுவத் தளபதியின் புத்தகத்தைக் கொடுக்க ராகுல் காந்தி காத்திருக்கிறார்.

எங்கய்யா போச்சு உன் 56 இஞ்ச் மார்பு என்று எதிர்க்கட்சிகள் குடைவார்கள்.

டொனால்ட் ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து அவர் அடிமையாய் மாறி விட்டாயே என்ற கேள்விகள் வேறு.

இதைத் தவிர மோடிதான் முஜ்ரா நடனம்  (விபரங்களுக்கு  இந்த இணைப்பை பார்க்கவும்)   ஆடினார் என்று எப்ஸ்டீன் கோப்புகள் சொல்வதாக வேறு ஒரு தகவல்.

இப்படிப்பட்ட சூழலில் அவர் எப்போதுமே வெறுக்கும் நாடாளுமன்றத்திற்கு மோடி எப்படி வருவார்? 

ஓடி ஓளிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.


அதற்கு ஓம் பிர்லா (சபாநாயகர் என்றெல்லாம் அந்த சங்கிக்கு மரியாதை அவசியமில்லை) சொல்லியுள்ள காரணம்.

வழக்கமான பாஜக அயோக்கியத்தனம்.

நாடாளுமன்றம் கூட பாதுகாப்பில்லை என்றால் உள்துறை அமைச்சர் பதவி எதற்கு? அமித் ஷா ராஜினாமா செய்யட்டும். 

பிகு : நான் பனையூரிலேயே பதுங்கி இருப்பதைப் பற்றி பாஜகவினர் யாரும் பேச முடியாது என்று விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும். 

Friday, December 5, 2025

எரிச்சலூட்டும் காமெடி இது . . .

 


கீழேயுள்ள செய்தியை படிக்கையில் சிரிப்பும் வந்தது. கோபமும் வந்தது.  பாஜக "பொறுக்கி" எடுத்ததால் அதன் விசுவாசியாக வாலை ஆட்டிக் கொண்டு செயல்பட்டு இந்திய ஜனநாயகத்தையே கொலை செய்து கொண்டிருக்கும் ஒரு அயோக்கியப் பதரை "நடுநிலையாக வெளிப்படைத்தன்மையுடன் நடத்துபவர்" என்று சொல்வது எவ்வளவு மோசமானது!!!! 




Thursday, May 1, 2025

தினமலரின் வழக்கமான அயோக்கியத்தனம்

 


தினமலரின் ஜால்ரா முடியல

கீழே உள்ள தின மலர் செய்தியை ஒரு தோழர் மெனக்கெட்டு கொண்டு வந்து கொடுத்தார். எதுக்கு என்னை டென்ஷன் செய்கிறாய் என்று கேட்டதற்கு நீங்க எழுத மேட்டர் கொடுத்திருக்கேன் என்றார்.



ஒரு பிரதமராக உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி, மாறு வேடப் போட்டியில் கலந்து கொள்வது போல விதம் விதமாக ஆடைகள் மட்டும் அணிந்து கொள்வார்.

 அவர் அணியும் ஆடைகள் எதுவும் எளிமையானது கிடையாது. இயல்பானது கிடையாது. யாருக்கோ வாழ்வு வந்தால் அர்த்தராத்தியில் குடை பிடிப்பார்கள் என்று சொல்வார்களே, அந்த ரகம் இதெல்லாம்.

 அந்த அற்பத்தனத்தின் உச்சம்தான் அவர் பெயர் பொறிக்கப்பட்ட பத்து லட்ச ரூபாய் கோட்டை ஒபாமா வந்த போது அணிந்தது. நாட்டில் உள்ள அனைவரும் கழுவி கழுவி ஊற்றிய பின்பு அந்த ஆடையை ஏலம் போட்டார்கள்.

 ஒரே நாளில்  நாலு முறை, ஐந்து முறை என்று உடை மாற்றுவதெல்லாம் கொழுப்பன்றி வேறில்லை, அல்லது மோடிக்கு ஏதாவது தோல் வியாதி இருந்து பக்கத்தில் உள்ளவர் மூக்கை சுளிப்பார்கள் என்பது காரணமாக இருக்கலாம்.

 அப்படி இருக்கையில்  “உங்களில் ஒருவன் – உடை வழி உணர்த்தும் பிரதமர்” என்றெல்லாம் தலைப்பு கொடுத்திருப்பதெல்லாம்  தினமலரின் வழக்கமான அயோக்கியத்தனம்.

 நியாயப்படிப் பார்த்தால் மேலே உள்ள படத்தில் வடிவேலு கேட்பது போன்ற கேள்வியைத்தான் தின மலர் கேட்டிருக்க வேண்டும்.

Saturday, April 5, 2025

சங்கிகள் ஏன் அயோக்கியர்கள்? அடி முட்டாள்கள்?

 


சங்கிகள் அயோக்கியர்கள், அடி முட்டாள்கள் என்று எப்போதுமே நான் சொல்வேன். அதற்கான இன்னொரு சான்றாக சங்கிகள் பகிர்ந்து கொண்டிருக்கிற ஒரு படம் கீழே.

 


தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கைதான் 39 ஏ தவிர திமுக எம்.பி க்கள் 22 பெர்தான். காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, விசிக, மதிமுக, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், தமுமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்ற 17 பேர்.

 உண்மை இப்படி இருக்கையில் திமுக எம்.பி க்கள் 17 பேர் காண்டீன் போய் விட்டார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது அயோக்கியத்தனம், அதை அப்படியே நம்பி பகிர்பவர்கள் அடி முட்டாள்கள்.

 

Tuesday, March 25, 2025

அநாகரீகம்-அசிங்கம்-அராஜகம்

 


சவுக்கு சங்கர் ஒரு அரசியல் தரகன், பிளாக் மெயிலர், பணத்திற்காக பொய்ப் பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான நபர்.

துப்புறவுத் தொழிலாளர்களைப் பற்றி அந்தாள் பேசியது கேவலமானது. 

அதற்கான எதிர்வினையாக அந்தாள் வீட்டில் கழிவு நீரையும் மனிதக் கழிவுகளையும் வீசியது என்பது மிகவும் அநாகரீகமான செயல்.

இதுதான் சரியான எதிர்வினை என்று சிலர் பாராட்டுவது அசிங்கமாக இருக்கிறது. சொல்லப்போனால் துப்புறவுத் தொழிலாளர்கள் மீது இந்த சம்பவம் ஏற்படுத்திய களங்கத்தை இவர்கள் அதிகமாக்குகிறார்கள்.

இந்த சம்பவத்தை கண்டித்தால் நீங்கள் சவுக்கு சங்கருக்கு நீங்களும் ஆதரவாக செயல்படும் தரகர்தான் என்று சில உ.பி க்கள் சொல்வது அராஜகமானது.

உங்கள் அராஜகத்தால் பாதிக்கப்படப் போவது திமுக மட்டுமே. இது கூட புரியாத முட்டாள்களா அவர்கள்! அல்லது அவர்கள் திமுகவில் உள்ள பாஜக ஸ்லீப்பர் செல்களா? 

Friday, December 27, 2024

சவுக்கடின்னா இப்படி இருக்கனும் ஆட்டுக்காரா?

 


சவுக்கடி நாடகம் நடத்திய ஆட்டுக்காரனுக்கு "சவுக்கடி என்றால் எப்படி இருக்க வேண்டும்?" என்று வடிவேலு பாடம் நடத்துவதை பாருங்கள்.




சவுக்கடி என்பது ஒரு கோமாளித்தனம் என்றால் அதை அமலாக்கிய முறை அதை விட பெரிய கோமாளித்தனம்.

காமெடியனாக இருக்கக்கூட ஆட்டுக்காரன் லாயக்கில்லை . . .

Thursday, September 5, 2024

அவதூறு பொதுவெளியில். மன்னிப்பு ரகசியமாகவா?

 


பெங்களூரில் ராமேவரம் கபே என்ற உணவு விடுதியில் குண்டு வெடித்த போது, கர்னாடகாவைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர்  ஷோபா, தமிழ்நாட்டில் இருந்து வந்து குண்டு வைத்தார்கள் என்று ஒரு பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் பிறகு சில பொதுக்கூட்டங்களிலும் பேசினார்.

அவர் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.

அமைச்சர் மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக அவரது வழக்கறிஞர் தெரிவிக்கிறார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் மன்னிப்பு கேட்பது, பிரமாண வாக்குமூலம் மூலம் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பது ஆகிய இரண்டையும் அமைச்சர் செய்தால் வழக்கை முடித்துக் கொள்ளலாமா என்று நீதிபதி கேட்கிறார்.

அப்படி சொன்னவுடன் அமைச்சரின் வழக்கறிஞருக்கு கோபம் வந்து விட்டது. நீதிமன்றத்திற்கு பிரமாண வாக்குமூலம் கொடுத்து வேண்டுமானால் மந்திரி மன்னிப்பு கேட்பாரே தவிர பத்திரிக்கையாளர் சந்திப்பில் மன்னிப்பெல்லாம் கேட்க மாட்டார் என்று உறுதியாக சொல்லி விட்டார்.

பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் பொதுக்கூட்டங்களிலும் இவர் அவதூறு செய்வாராம், ஆனால் மன்னிப்பை மட்டும் ரகசியமாகக் கேட்பாராம்.

இதென்னங்கடா நியாயம்!

அவதூறு செய்யும் அயோக்கியர்களை எல்லாம் மொட்டை அடித்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மேல் உட்கார வைத்து ஊர்வலம் விட வேண்டும். அந்த அவதூறுகளை வெளியிடுகிற மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியர்களையும் கூட. அவர்களையெல்லாம் செத்துப் போகும் வரை ஜெயிலில் அடைத்தால் கூட தகும். வாட்ஸப்பில் பரப்புபவர்களின் போனை பறித்து உடைத்து விட வேண்டும்

 ஏம்மா ஷோபா, சாவர்க்கர் வழியில் வந்த மோடியின் கட்சியில் இருந்து கொண்டு மன்னிப்பு கேட்க தயங்கலாமா? மோடி எப்படி மன்னிப்பு கேட்டார் என்பது தெரியுமில்லையா?

பிகு: மோடி கேட்ட மன்னிப்பு பற்றி அடுத்த பதிவில். . .

 

Wednesday, August 7, 2024

இதயங்களை வென்றாய் பெண்ணே!

 


தகுதி இழப்பு என்பது ஒரு மோசடி. நாட்டின் பெருமையை விட காமுகனின் போலி கௌரவம்தான் முக்கியம் என்று நினைக்கிற கீழ்த்தரமான மனிதன் பிரதமராக உள்ள தேசத்தில் இதுவும் நடக்கும். இதை விட கேவலமாகவும் நடக்கும்.

பதக்கம் வெல்லும் வாய்ப்பு வந்த போது வாய் மூடிக் கிடந்த சங்கி நாய்கள் இப்போது ஊளையிடுவது ஒன்றே போதும் நடந்தது சதி என்பதற்கு.

பதக்கத்தை நீ இழந்திருக்கலாம். ஆனால் இந்தியாவை உண்மையாக நேசிக்கும் மக்கள் இதயங்களை வென்றுள்ளாய். எங்களுக்கு நீ தங்க மங்கைதான்.

கட்டபொம்மன் நினைவிலிருக்கும் நாள் வரை எட்டப்பனின் நினைவு இருக்கும், துரோகி என்று.

அது போலத்தான் உனது வலியும் நினைவில் இருக்கும், உனக்கு வேதனை கொடுத்தவர்களும் நினைவில் இருப்பார்கள், துரோகிகளாக, கயவர்களாக . . .

Saturday, May 11, 2024

நியாயத்துக்காக போராடினால் பழிவாங்கல்

 


டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் மல்யுத்தத்தில் வெண்கலப் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா இம்முறை பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. 

சொல்லப்பட்ட காரணம்:

அவர் போதை மருந்து சோதனைக்கு மாதிரி கொடுக்க மறுத்து விட்டார்.

உண்மை என்ன?

போதை மருந்து சோதனைக்காக கொண்டு வந்த உபகரணங்கள் காலாவதி ஆனதால் அவை கொண்டு சோதிக்க மறுத்து விட்டார். இது போல காலாவதி ஆன உபகரணங்களை முன்பும் ஒரு முறை கொண்டு வந்துள்ளனர்.

நோக்கம் என்ன?

காலாவதியான உபகரணங்கள் கொண்டு சோதித்து பஜ்ரங் புனியா போதைப் பொருள் உட்கொண்டதாக அவதூறு செய்து தகுதி அற்றவராக மாற்றுவது.

இறுதி வெற்றி யாருக்கு?

போதைப் பொருள் உட்கொண்டார் என்று அவதூறு பரப்பும் முயற்சியை முறியடித்ததால் பஜ்ரங் புனியாவுக்கு வெற்றி.

பதக்கம் வெல்லும் வாய்ப்புள்ள வீரர் போட்டிக்கே செல்லாததால் இந்தியாவுக்கு தோல்வி. இந்திய விளையாட்டுத்துறைக்கு தோல்வி.

ஏன் இந்த கேவலமான முயற்சி?

பாலியல் ஜனதா கட்சியின் பாலியல் குற்றவாளி பிரிஜ்பூஷன் சரண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடியதற்காக அந்திமக் காலத்திலும் மோடி செய்த அயோக்கியத்தனம்.

அயோக்கியர்கள் தங்களுக்கு எதிராக போராடுபவர்களை அவதூறு செய்ய நினைப்பார்கள், பழி வாங்க நினைப்பார்கள், எந்த அளவிற்கும் கீழிறங்குவார்கள். அதற்காக யாருடன் வேண்டுமானாலும் கூட்டு வைத்துக் கொள்வார்கள். யாரை வேண்டுமானாலும் பொய்யாக பேசி ஏமாற்றுவார்கள். அவர்களும் கூட அதனை முட்டாள்தனமாக நம்புவார்கள்.

ஆனால் இறுதியில் அவர்கள் நிச்சயம் தோற்று[ப் போவார்கள்.

ஜூன் 4 இந்த உண்மையை சொல்லும். 

Thursday, May 9, 2024

ஆப்பிரிக்கான்னா அசிங்கமா மோடி?

 


காங்கிரஸ் கட்சியின் சாம் பிட்ரோடா கூறியதில் எந்த தவறும் இல்லை. நிறங்களில், உருவ அமைப்புக்களில் வேறுபாடு இருந்தாலும் நாம் இந்தியர் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதே. வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் அதன் அர்த்தம். சங்கி தருண் விஜய் பேசியதுதான் நிற வெறியின் வெளிப்பாடு . . .

ஒற்றுமை என்ற வார்த்தையே அயோக்கிய நாய்களுக்கு பிடிக்காதே! அதனால்தான் குரைக்க ஆரம்பித்து விட்டன. நாய்களை கல்லைக் கொண்டு அடிப்பதற்கு பதிலாக சாம் பிட்ரோடா  பதவியை விட்டு விலகி ஒதுங்கி விட்டார். விலகியது கூட சரியென்பேன். ஆனால் ஒதுங்காமல் சங்கிகளை உதைக்க வேண்டும்.

சாம் பிட்ரோடா  தமிழர்களை ஆப்பிரிக்கர்களோடு ஒப்பிட்டு இழிவுபடுத்தி விட்டார் என்று மட சங்கிகள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிரதம முட்டாள் கூட மு.க.ஸ்டாலினுக்கு சவால் விட்டுள்ளார்.

என் கேள்வி எளிதானது.

ஏன்யா மோடி.

அப்படி என்ன நீங்க எல்லாம் ஒஸ்தி? ஆப்பிரிக்கர்கள் எல்லாம் மட்டம்?
சொகுசுப் பேர்வழியே. ஆப்பிரிக்கர்களின் உழைப்பில் கொஞ்சமாவது உழைக்க உன்னால் முடியுமா? 
ஆப்பிரிக்கர்கள் அசிங்கம் என்ற நினைப்பிருந்தால் ஆப்பிரிக்க நாட்டு தலைவர்களை எல்லாம் எப்படி மதித்திருப்பாய்?
ஒபாமாவுக்கு டீ போட்டு கொடுத்து  டிராமா போட்டியே, ஆப்பிரிக்க அமெரிக்கரான அவருக்கு கொடுத்த டீயில எதை கலந்து கொடுத்தாய்? சர்க்கரையையா? வெறுப்பையா?

உன் மானம் உலகெங்கும் பறக்குது. அதை மடை மாற்ற தமிழர்களை உசுப்பேத்தறயா உருப்படாத ஜந்துவே! 

Wednesday, May 8, 2024

இதுவும் கர்மாவா சங்கிகளா?

 


எங்கேயாவது ஏதாவது ஜனநாயகத்துக்கு எதிரான சம்பவம் நடந்தால் அதை நியாயப்படுத்தி முட்டு கொடுக்க வாய்ப்பில்லாத போது சங்கிகள் அதனை கர்மா என்று சொல்லி விடுவார்கள்.

இப்போது பாஜக ஆட்சி ஹரியானாவில் கவிழும் நிலை ஏற்பட்டு விட்டது. மூன்று சுயேட்சை எம்.எல்.ஏ க்கள் பாஜக பக்கத்திலிருந்து காங்கிரஸ் பக்கத்திற்கு தாவி விட்டார்கள். அதனால் பாஜக பெரும்பான்மையை இழந்து விட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால் தோற்றுப் போவார்கள். இதுவும் குதிரை பேரத்தின் விளைவுதான்.

மகாராஹ்டிரா, பீகார், மத்தியப்பிரதேசம், கர்னாடகம் என்றெல்லாம் ஆட்சிகளை கவிழ்த்த பாஜகவின் ஆட்சியும் கவிழ்வது இனிமையான செய்திதான், அந்த முறை உடன்பாடில்லாவிட்டாலும் கூட.

சங்கிகள் இந்த சம்பவத்திற்கு என்ன எதிர்வினையாற்றுவாற்றுவார்கள்?

ஜனநாயகப் படுகொலை என்பார்களா?

இல்லை

கர்மா அவர்களை திரும்பித் தாக்கி விட்டது என்பார்களா?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். தொடர்ந்து அயோக்கியத்தனம் செய்து கொண்டிருப்பவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும் சரி, யாருடைய ஆதரவு இருந்தாலும் சரி, அடி நிச்சயம் விழும் என்பதைத்தான் ஹரியானா உணர்த்துகிறது.

 

Monday, May 6, 2024

மோடி பொய் சொன்னா ஆராயலாமா?

 


மோடி வாயைத் திறந்தால் வருவதெல்லாம் பொய் என்பது நிரூபணமான பிறகு அவர் சொல்வதை எல்லாம் ஆராயலாமா?

இந்த பொய்யை நம்பி "வாராது வந்த மாமணி" என்பது போல பல அடிமுட்டாள் சங்கிகள் போடும் பதிவுகள்தான் எரிச்சல் தருகிறது.

சங்கி என்றால் அயோக்கியர்களும் அடிமுட்டாள்களும்தான் என்பது தெரிந்தும் கூட எரிச்சல் வருகிறது. அரசியலில் மட்டுமல்ல, அன்றாட வாழ்வில் கூட  சில அயோக்கியர்களுக்கு முட்டு கொடுத்து முட்டாள்களாகிக் கொண்டிருக்கும் சிலரைக் கண்டும் இப்படித்தான் எரிச்சல் வருகிறது. 

என்ன செய்ய இதுதான் மனித இயல்பு!

விலகி நிற்பதே சில சமயம் தீர்வாகி விடுகிறது. 

Friday, May 3, 2024

அப்பனுக்கு பதில் மகனா மோடி?

 


மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகள் செய்த பாஜக எம்.பி பிரிஜ் பூஷண் சரண்சிங்கை நினைவில் உள்ளதா?

அந்த பாலியல் கொடூரனுக்கு பாஜக இம்முறை சீட் கொடுக்கவில்லை.

பரவாயில்லையே என்றெல்லாம் ஒரு நொடி கூட நினைக்காதீர்கள்.

பிரிஜ் பூஷன் சரண்சிங்கிற்கு பதிலாக அவனுடைய மகன் கரண் பூஷண் சிங்கிற்கு சீட் கொடுத்துள்ளார் மோடி. அந்த குடும்பத்தையோ பாலியல் குற்றவாளியையோ விட்டுக் கொடுக்க மோடி தயாரில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

இந்த லட்சணத்துல பெண்களுக்கு இவர்தான் கியாரண்டியாம்.

வெட்கம் கெட்ட ஜந்து ...


Monday, April 22, 2024

மோடியின் பேச்சு அயோக்கியத்தனமாது.

 


தோல்வி பயம் மோடிக்கு வந்து விட்டது.

 முதல் முறை பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்.

 புல்வாமாவில் எல்லைப் பாதுகாப்புப்ப்டை வீரர்கள் கொல்லப்படுவதை அனுமதித்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தார்.

 இனி பொய்களையும் அள்ளி விட முடியாது. ராணுவ வீரர்களையும் சாகடிக்க முடியாது.

 அதனால் மோடி கையிலெடுத்திருப்பது மத வெறிப் பேச்சு.

 “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்  நாட்டு மக்களுடைய செல்வத்தை எல்லாம் பிடுங்கி  இஸ்லாமியர்களிடம் கொடுத்து விடுவார்கள்”

 காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பேசினார்கள், தேர்தல் அறிக்கையில் உள்ளது என்று அவர் சொல்லும் விஷயங்களுக்கு அவரிடம் எந்த தரவுகளோ, ஆதாரங்களோ கிடையாது.

 வாய்க்கு வந்ததை அடித்து விட்டுள்ளார். ஆனால் அது ஆபத்தானது. பிளவு படுத்தும் நோக்கமுடையது. ஒற்றுமையை குலைக்கக் கூடியது. வாக்காளர்கள் மனதில் குழப்பத்தை  உருவாக்கக்கூடியது. வெறுப்பை விதைக்கும் விஷம். மொத்தத்தில் அயோக்கியத்தனமானது.

 இந்த அயோக்கியத்தனமான பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பது மட்டும் போதாது. மோடியை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். மோடியால் பொறுக்கி எடுக்கப்பட்ட தேர்தல் ஆணையர்கள் அதை செய்ய மாட்டார்கள். அதனால் மக்கள்தான் மோஈடியை முறியடிக்க வேண்டும்.

 

Thursday, April 11, 2024

சங்கிங்க நெனப்பெல்லாம் . . .

 


ஒரு சங்கி உறவினரின் பார்த்த பதிவு கீழே உள்ளது.


அவருக்கு அளித்த பின்னூட்டம்தான் மேலே உள்ள படம்.

வோட்டு கேட்க அவர்கள் முக்கியமாக எதை சொல்கிறார்கள் என்று பாருங்கள்!

சங்கிகள் அயோக்கியர்களாகவும் அடி முட்டாள்களாகவும் உள்ளனர் என்பதற்கு இதுவும் ஒரு உதாரணம். 

Saturday, January 20, 2024

கார்ப்பரேட்டிடம் சொன்னால் டிமோவுக்கு???

 


வரும் 22 ம் தேதி டிமோ நடத்தும் அயோத்தி கோயில் திறப்பு எனும் அரசியல் கேலிக்கூத்து நாடகத்திற்காக அன்று மதியம் 2.30 மணி வரை அனைத்து மத்திய அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்துள்ளார்கள்.

இவரு பெருமையை டி.வி ல பார்க்க லீவு விடறாரு. மதியம் மூன்று மணி நேரம் மட்டும் எதற்கு அலுவலகம் போகனும்,  அரை நாள் லீவ் எடுக்கலாம் என்றால் எழவு ஒரு நாள் லீவ் பிடிக்கப்படுமாம். அயோக்கியத்தனமான அதிகார துஷ்பிரயோகம் இது. உன் பவுசை பார்க்க எனக்கு எதுக்கய்யா லீவு?

பொதுத்துறையெல்லாம் இறப்பதற்காக பிறந்தவை என்று அவற்றை அழித்துக் கொண்டிருக்கும் டிமோவே, யாரிடம் தரகுக்கூலி வாங்கிக் கொண்டு, இந்தியாவின் செல்வங்களை எல்லாம் தாரை வார்க்கிறேயே, அந்த கார்ப்பரேட் கம்பெனிகளை லீவ் விடச்சொல்லும் தைரியம் இருக்கிறதா உனக்கு?

சொன்னால் என்ன ஆகும்? யாருக்கு கோயில் திறப்பதாக அரசியல் செய்கிறாரோ, அந்த ராமர் காட்டுக்கு போன போது ராமரின் பிரதிநிதியாக எதை அரியணையில் வைத்து பரதன் ஆட்சி செய்தானோ, அதைக் கொண்டே அடி கிடைக்கும்.

எதைக் கொண்டு?

மேலே உள்ள படத்தை பார்க்கவும் . . .. 

Tuesday, January 2, 2024

இதெல்லாம் பெருமையில்லடா, அசிங்கம்

 



 திருச்சி விமான நிலைய அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய போது சங்கிக் கயவர்கள் “டிமோ, டிமோ” என்று கூச்சலிட்டுள்ளனர். அதை மிகவும் பெருமையாக ட்விட்டர் தளத்தில் பாஜக தமிழ்நாடு, வானதி சீனிவாசன் உட்பட சில சங்கிகள் அதை ஏதோ பெருமையாக பதிவு செய்துள்ளனர்.

 






 

அடேய்களா,

ஒரு அரசு விழாவில் மாநில முதல்வர் பேசும் போது கூச்சலிட்டு இடையூறு செய்வதென்பது

அநாகரீகம்,
அசிங்கம்,
சிறுபிள்ளைத்தனம்,
அயோக்கியத்தனம்,
ரௌடித்தனம்.
  
 இதனை பெருமை என பீற்றிக் கொள்வது முட்டாள்தனம்.

 ஆனால் சங்கிகளுக்குதான் அறிவே கிடையாதே! டிமோவை துதிப்பவர்களுக்கு எப்படி அறிவு இருக்கும்.

 மன்னன் எவ்வழியோ, மக்கள் அவ்வழி.

 டிமோவின் சீடர்களும் டிமோ போலவே . . .

 

Saturday, December 9, 2023

ஸ்டெரிலைட் அராஜகம் -CBI அயோக்கியத்தனம்


 நேற்று காலையில் படித்த செய்தி.

ஸ்டெரிலைட் ஆலைக்கு ஆதரவாக நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை மாவட்ட முதன்மை நீதிபதி நிராகரித்து "ஒழுங்காக விசாரணை செய்து முறையாக மீண்டும் தாக்கல் செய்"  என்று சொல்லி விட்டார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர் கே.எஸ்.அர்ஜூனன், இந்த வழக்கில் தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு வாதாடியதன் காரணமாகவே நீதிபதி சி/பி.ஐ குற்றப்பத்திரிக்கையை நிராகரித்துள்ளார்.

அப்படி என்ன இருந்தது அந்த குற்றப்பத்திரிக்கையில்?

"திருமலை என்ற ஒரே ஒரு இன்ஸ்பெக்டரைத் தவிர துப்பாக்கிச் சூட்டிற்கு வேறு யாரும் காரணமும் இல்லையாம். பங்கும் இல்லையாம்"

எப்பேற்பட்ட அயோக்கியத்தனம் இது!

அனைத்து குற்றவாளிகளையும் காப்பாற்றி விசுவாசமிக்க நாய் என்று சி.பி.ஐ அதிகாரிகள் நிரூபித்திருக்கலாம். ஆனால் அந்த நாய்களை தெருவில் ஓட விட்டு கல்லால் அடிக்கும் காலம் வரும் போதுதான் விசுவாசத்தின் தவறு தெரியும் . . .

Sunday, December 3, 2023

அதுவே மேல் டிமோ

 


பல்கலைக்கழக மானியக்குழு ஒரு சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன் படி அனைத்து பல்கலைக்கழகங்களும் தங்களின் வளாகத்தில் முக்கியமான இடத்த்தில் ஒன்றிய அரசின் சாதனைகளை விளக்கும் ஒரு செல்பி பாய்ண்ட் அமைக்க வேண்டும். மாணவர்கள் அங்கே நின்று செல்பி எடுத்துக் கொள்வது ஊக்குவிக்கப்பட வேண்டும்.

முக்கியமான விஷயத்தை சொல்ல மறந்து விட்டேனே!

அந்த செல்பி பாய்ண்டில் பின்னணியில் டிமோ இருக்க வேண்டும். ஏற்கனவே ரயில்வே நிலையங்களில் அவர் ஏதோ பெரிய சைன்டிஸ்ட் போல செல்பி பாயின்ட் வைத்துள்ளார்கள்.



விளக்குமாற்றுக்கு பட்டுக்குஞ்சலம் என்பது போல இப்போது கல்வி வளாகங்களில். 

இந்த பிழைப்பிற்கு

மேலே சூரியன் படத்தில் உள்ள தொழில் மேல் மிஸ்டர் டிமோ . . .

Saturday, November 18, 2023

முட்டாள் சங்கிகளும் முகமது ஷமியும்

 


பாவம் சங்கிகள்!

அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காத இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை பாராட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஏன்யா இப்படி அடிபட்டே என மனதுக்குள் ஹர்திக் பாண்டியாவை திட்டிக் கொண்டிருக்கலாம்.

இன்று காலை முதல் ஒரு படத்தை வைத்து அலட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


இது உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனால் இதை வைத்து சீன் போட்டீர்களே என்று கேட்டால் அப்படியெல்லாம் கிடையாது என்று சண்டைக்கு வருகிறார்கள்.

இப்போ ஸ்டேடியம் கட்டுவார்கள். நாளை ஒழுங்காக விளையாடாவிட்டால் வீட்டை இடிக்க புல்டோசர் அனுப்புவார்கள். பாகிஸ்தானுக்கு போ என்று சொன்ன கூட்டம்தானே! முகமது ஷமிக்கு ஆதரவுக்குரல் கொடுத்ததற்காக "உன் குழந்தையை பாலியல் வன்புணர்ச்சி செய்வேன்" என்று விராத் கோலியையும் மிரட்டி வசை பாடிய கூட்டம்தானே ! என்றெல்லாம் கேட்டால் ஒரு கதை சொல்கிறார்கள் பாருங்கள்! அங்கேதான் நிற்கிறார்கள் முட்டாள் சங்கிகள்!

முகமது ஷமி பற்றி அவரது மனைவியே மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு சொன்னதால் அப்போது ஆற்றிய எதிர்வினை. அது உண்மையல்ல என்று தெரிந்ததால் அமித்ஷா மகன் ஜெய்ஷாதான் முகமது ஷமியை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தார்.  - இதுதான் சங்கிகளின் கதை.

முகமது ஷமிக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை உண்டு. அவர் குற்றம் சுமத்தினார். அதையெல்லாம் கிரிக்கெட் வாரியம் விசாரித்து ஷமி மீது எந்த தவறும் கிடையாது என்று முடிவு செய்து அறிவித்தது. இதெல்லாம் நடந்தது 2018 ல். ஜெய்ஷா கிரிக்கெட் வாரியத்தை ஆக்கிரமித்தது 2019 ல் தான்.

இதை விட முக்கியமாக முகமது ஷமியை எதற்கு எப்போது "பாகிஸ்தானுக்கு போ" என்று வசை பாடினார்கள் என்பது பற்றி வாய் திறக்கவே இல்லை.

2021 ல் நடந்த டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றது. பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் அவுட் ஆகாமல் 10 விக்கெட் வெற்றி பெற்றார்கள். முகமது ஷமி மட்டுமல்ல, எந்த பவுலருமே விக்கெட் எடுக்கவில்லை. ஆனால் வசவு மட்டும் முகமது ஷமிக்குத்தான். அதற்கு அவர் மதம் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்? ஷமியை ஆதரித்த குற்றத்திற்காக சங்கிகளின் ஆபாச வசைக்கு விராத் கோலியின் ஒரு வயது பெண் குழந்தை கூட தப்பவில்லை.

தங்களின் அயோக்கியத்தனமான நடவடிக்கைகள் குறித்து சிறு உறுத்தல் கூட இல்லாமல் அயோக்கிய சங்கிகள் தற்போது ஷமியை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் (நாளை இந்தியா தோற்றுப் போனால் அப்படியே மாறி விடுவார்கள் என்பது வேறு கதை). முட்டாள் சங்கிகள் நம்பி பரப்புகிறார்கள்.