Showing posts with label கிரிமினல்ஸ். Show all posts
Showing posts with label கிரிமினல்ஸ். Show all posts

Sunday, August 17, 2025

பழைய து.ஜ வே நல்லவருப்பா . . .

 


ஆமாம். ராஜினாமா செய்த/செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட முன்னாள் துணை ஜனாதிபதி ஜ்க்தீப் தன்கர்  இப்போது நல்லவராகி விட்டார். 

ஆமாம். 

அவர்கள் புதிய ஜனாதிபதியாக முன்மொழியப்பட்டுள்ளவரின் வரலாறு அப்படி . . .

அது சரி,

பாஜகவில் என்ன மகாத்மா காந்திகளா இருக்கிறார்கள்! எல்லோருமே ரத்தக்கறை படிந்த கிரிமினல்கள்தானே!

Thursday, December 19, 2024

சைக்கிள் சாரங்கியா? அப்ப சரி, அப்ப சரி

 


இன்று மக்களவையில் தள்ளு முள்ளு நடந்துள்ளது.

 ராகுல் காந்தி ஒரு காங்கிரஸ் எம்.பி யை தன் மேல் தள்ளி விட்டதால் கீழே விழுந்து மண்டை உடைந்துள்ளதாக ஒரு பாஜக எம்.பி ஐ.சி.யுவில் படுத்துக் கொண்டுள்ளதாக மத்யமர் ஆட்டுக்காரன் குழுவே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அநேகமாக ராகுல் காந்தியை கைது செய்யலாம். அதை வைத்து எம்.பி பதவியிலிருந்து நீக்கும் முயற்சியைக் கூட மோடி செய்யலாம்.

 யாரந்த எம்.பி என்று பார்த்தால் அது சைக்கிள் சாரங்கியாம்.

 யார் அந்த சைக்கிள் சாரங்கி?

 ஐந்து வருடத்திற்கு முன்பு எழுதிய பதிவு கீழே . . .

 

மோடி சைக்கிளில் மறைத்த ரத்தக்கறை





மூங்கில் குடிசையில் வசிக்கும் ஏழை,
சைக்கிளில் மட்டுமே பயணிக்கும் எளிய வேட்பாளர்,
ஒடிஷாவின் மோடி

இப்படியெல்லாம் காவிகளால் சமூக ஊடகங்களில் வர்ணிக்கப்பட்டவர் பிரதாப் சந்திர சாரங்கி.

ஒரு சாதாரண கதர் ஜிப்பா அணிந்த இந்த தாடி வைத்த மனிதர் நேற்று மோடியின் அமைச்சராக பதவியேற்றுள்ளார்.

ஒரு எளிய மனிதரை அமைச்சராக்கி அழகு பார்த்துள்ளார் மோடி என்று சங்கிகளின் பெருமிதத்திற்கு அளவே இல்லை.

ஆனால்  அந்த எளிமைக்குப் பின்னே ஒளிந்திருப்பது மோசமான ஒரு மனிதர், மத வெறி பிடித்த ஒரு மிருகம் என்பதை பி.பி.சி அம்பலப்படுத்தி உள்ளது.

கிரஹாம் ஸ்டெய்ன்ஸ் நினைவில் உள்ளாரா?

அவரும் அவரது இரண்டு மகன்களும்  எரித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் நினைவில் உள்ளதா? பஜ்ரங் தள் என்ற ஆர்.எஸ்.எஸ் ஸின் அடியாள் பிரிவுதான் அந்த அராஜகக் கொலைகளை நிகழ்த்தியது என்பதும் நினைவில் உள்ளதா?

இந்தியாவை உலக அரங்கில் தலை குனிய வைத்த அந்த கொடூரக் கொலையை நிகழ்த்திய பஜ்ரங் தள் அமைப்பின் அன்றைய ஒரிஸா மாநிலத் தலைவராகவும் நேரடியாக அக்கொலையைச் செய்த தாராசிங்கின் வழிகாட்டியுமாக இருந்ததும் யார் தெரியுமா?

இதோ இப்போது
சைக்கிளில் பயணிக்கும் எளியவராகச் சொல்லப்படுகிற
மோடியின் புதிய மந்திரி
பிரதாப் சந்திர சாரங்கிதான்.

அந்த வழக்கில் முதன்மைக் குற்றவாளிகளில் ஒருவராக சேர்க்கப்பட்டதால் தலை மறைவாக இருந்தவர் அவர்.

அது மட்டுமல்ல, 2001 ல் ஒடிஷா மாநில சட்டப் பேரவையை தாக்கிய கலவர வழக்கிலும் பிரதான குற்றவாளி இந்த மனிதர்தான்.

சமூக ஊடகங்களால் ஒரு குற்றவாளியை ஒரு குற்றவாளியை புனிதன் போல சித்தரிக்க முடியும் என்பதற்கான சிறந்த உதாரணம் இந்த சாரங்கி.

வெடிகுண்டு சாமியாருக்கு மந்திரி பதவி கொடுக்கவில்லை என்று காலையில் மோடிக்கு நன்றி சொல்லியிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது சீனியாரிட்டி அடிப்படையில் சாமியாருக்குப் பதிலாக சாரங்கிக்கு கொடுத்திருக்கிறார் என்று.

ஆக மிகப் பெரிய கிரிமினல் மூலம் மோடியின் புது நாடகம் அரங்கேறியுள்ளது. அண்ணல் அம்பேத்கரை இழிவு படுத்திய அமித்ஷாவை பாதுகாக்க நடத்திய திசை திருப்பும் நாடகம். அமித்ஷாவை பாதுகாப்பது மோடியின் கடமை அல்லவா! மோடிக்காக இளம் பெண் பொறியாளரை உளவு பார்த்த உத்தமனல்லவா!

 


பிகு: ஆமாம், எந்த மருத்துவமனையில் ஐ.சி.யு வில் ஒரு நோயாளியை எந்த மானிட்டர் இணைப்போ, குளுக்கோஸ் கூட ஏற்றாமல், தொலைக்காட்சி கேமராக்கள் புடை சூழ மந்திரிகள் வருவதை அனுமதிக்கிறார்கள். போடும் நாடகத்தையாவது ஒழுங்கா போடுங்கடா . . .

 

 

Monday, March 20, 2023

ஆட்டுக்காரன் கட்சியிலதான் எல்லா . . .

 


கீழே உள்ள நான்கு செய்திகளும் நேற்று நடந்த சம்பவங்கள்.





எல்லா  கிரிமினல்களும் பாஜக அல்ல . . .

ஆனால் பாஜகவில் உள்ள அனைவரும் கிரிமினல்கள்தான் . . .

என்ன ஆட்டுக்காரா சரிதானே! நீயே மிகப் பெரிய பொய்யன், உன் லேட்டஸ்ட் பொய் பற்றி மாலை பார்ப்போம். . .

Wednesday, August 24, 2022

அவன் திமிரோடுதான் பேசுவான் . .


 லக்கிம்பூர் கேரி நினைவில் உள்ளதல்லவா?

போராடிய விவசாயிகளை காரேற்றி கொலை செய்த இடம். அதை செய்தவன் மோடி மந்திரியின் அயோக்கிய மகன்.

அந்த கொலைகாரனுக்கு ஜாமீன் வழங்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததும் நீங்கள் அறிந்ததே.



கொலைகார மகனின் கொடூர அப்பன் நேற்று ஒரு கூட்டத்தில் "போராடும் விவசாயிகளை "குரைத்துக் கொண்டே காரை துரத்தும் நாய்கள்" என்று சொல்லியுள்ளான்.

எட்டு பேரை கொலை செய்ய தூண்டி விட்ட கிரிமினல் பேர்வழியை மத்திய மந்திரியாய் அழகு பார்த்தால் அவன் அப்படித்தான் திமிராகப் பேசுவான்,

இவனை குறை சொல்லி என்ன பயன்!

பிரதம மந்திரியே கிரிமினலாக இருக்கிற நாடல்லவா இந்தியா!!!

Monday, August 8, 2022

பாஜகவில இது வாடிக்கைதானே!

 


கீழே உள்ள செய்தியை படித்ததும் "காக்கா பிரியாணி சாப்டா, காக்கா குரல் வராம உண்ணிகிருஷ்ணன் வாய்ஸா வரும்" என்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது.

பாஜக மெம்பர்னா அவன் கிரிமினலா இல்லாம யோக்கியனாகவா இருப்பான்!




Tuesday, April 5, 2022

தேவையில்லா ஆணி மோடி

 


பில்லா - ரங்கா கிரிமினல் கூட்டாளிகள் நேற்று இந்திய குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்துள்ளார்கள்.

அவை பற்றி வழக்கறிஞர் தோழர் பிரதாபன் அவர்களின் முகநூல் பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

குற்றவியல் நடைமுறை ( அடையாள சேகரிப்பு) சட்ட முன்வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி, இனி வழக்கில் கைதாககூடியவர்களுடைய அங்க அடையாளங்கள் மட்டுமில்லாமல், கைரேகை, கால்களின் அச்சு, கண்கள், உடல் அவையங்கள் இதைத்தவிர கையெழுத்து, behavioural attributes உட்பட அனைத்தும் பதிவு செய்ய காவல்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இன்னும் இந்த சட்டம் குறித்த விதிமுறைகளை அரசு தாக்கல் செய்யவில்லை. கேள்விகளுக்கும் திருத்தங்களுக்கு பதில் அளித்த அமித்ஷா, 7 ஆண்டுக்கு குறைவான தண்டனை பெற்ற, பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை செய்யாதவர்கள், தங்களின் அடையாளம் பெறப்படுவதை மறுக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.
காவல்நிலையத்தில் பேசவே விடமாட்டார்கள். மறுக்க முடியுமா?

புதியவகை குற்றப்பரம்பரை சட்டமாக இது ஆகிடுமா? என்ற அச்சம் எழாமல் இல்லை.

ஒட்டுமொத்தத்தில் ஹிட்லரின் நாஜி ஆட்சி போல, பாஜகவின் திட்டங்கள் அனைத்தும் சட்டபூர்வமாக நிறைவேற்றப்பட்டுவருகிறது. அதை தடுக்காத வகையில் வெறும் கோஷங்களால் பாஜகவை வெல்ல இயலாது.

குற்றவாளிகள் தண்டனை பெறும் விகிதத்தை அதிகரிக்கத்தான் இத்திருத்தங்கள் என்று அமித்ஷா சொல்கிறார்.

"கண்ணாடியை திருப்பினா எப்படி ஜீவா ஆட்டோ ஓடும்?" என்பது போல இத்திருத்தங்கள் மூலம் எப்படிய்யா குற்றவாளிகள் தண்டிக்கப்படும் விகிதம் அதிகமாகும் என்றுதான் நாம் கேட்க வேண்டும்.

மக்களை எப்போதும் அச்சத்திலேயே வைத்திருக்க மோடி பிடுங்கிய தேவையில்லாத ஆணிகளில் இதுவும் ஒன்று.

பிகு: இந்த கிரிமினல்களுக்கு நிஜமாகவே குற்றவாளிகள் தண்டனை பெற வேண்டும் என்ற விருப்பம் உள்ளதா? வேறு ஒரு வழக்கு பற்றி நாளை பார்ப்போம்.

Friday, February 18, 2022

சிங்கப்பூரார் சொன்னது உண்மைதானே மோடி?

 


சிங்கப்பூர் பிரதமருக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

ஏன்?

“நேரு காலத்திய இந்தியா அல்ல இப்போதைய இந்தியா. பாதிக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிமினல் பின்னணி உள்ளவர்கள். பாலியல் வன்புணர்ச்சிக் குற்றங்கள் செய்தவர்கள் கூட உண்டு. அது மாதிரியான மோசமான நிலைமைக்கு சிங்கப்பூர் சென்று விடக் கூடாது”.

இந்தியாவைப் பற்றி இப்படி சொல்லி விட்டார்களே என்று எனக்கும் வருத்தமாகத்தான் உள்ளது. ஆனால் இது போல பேச வைத்தது நீங்கள்தானே மிஸ்டர் மோடி! பொறுக்கி எடுத்து பொறுக்கிகளை தேர்தலில் நிற்க வைத்தால் அப்படித்தானே சொல்வார்கள்! உங்கள் கட்சியில் எவன் யோக்கியன்? திருடனும் கொள்ளையனும் கடத்தல் காரனும் பாலியல் குற்றவாளியும் ஊழல் பேர்வழியும்  மோசடிப் பேர்வழியும்தானே உங்கள் கட்சி உறுப்பினர்கள்!

பொய்களைத் தவிர நீங்கள் என்றைக்காவது உண்மை பேசியதுண்டா? பொய்களை பரப்புவதற்கென்றே ஒரு ஐ.டி விங். அதை அப்படியே நம்பி பகிர்ந்து கொள்ள முட்டாள் கூட்டம். இதுதானே உங்கள் கட்சி அமைப்பு! 

உலக அளவில் பல நாடுகளில் விசா மறுக்கப்பட்டு தலை குனிவை தேடித்தந்ததுதானே உங்கள் யோக்கிய லட்சணம்! எந்த முகத்தோடு நான் வெளி நாடுகளுக்குப் போவேன் என்று வாஜ்பாயை புலம்ப வைத்தது நீர்தானே!

அதனால் அடுத்த நாட்டு ஆள் சொல்லி விட்டார் என்று கோபப்படுவதற்குப் பதிலாக இனியாவது நீங்களும் உங்கள் கூட்டமும் யோக்கியமாக, நேர்மையாக நடந்து கொள்ள முயறசியுங்கள்,

என்ன! உங்களாலும் உங்கள் திருடர் கூட்டத்தாலும் அது முடியாது. ஏனென்றால் நீங்கள் எல்லாம் பிறவி கிரிமினல்கள் . . .

 

Monday, January 10, 2022

சரியான இடம் பாஜகதானே!

 காலையிலிருந்து சமூக வலைத் தளங்களில் உலாவிக் கொண்டிருக்கும் செய்தி இதுதான்.

 


கிரிமினல்களால் கிரிமினல்களுக்காக நடத்தப்படும் கிரிமினல் கட்சியில் ஒரு கிரிமினல் மனைவி இணைவதுதானே பொருத்தமாக இருக்கும்! எனவே இந்த செய்தியில் விமர்சிப்பதற்கோ வியப்பதற்கோ ஏதுமில்லை.

 எல்லா கிரிமினல்களும் பாஜகவில் இல்லை.

ஆனால் பாஜகவில் உள்ள எல்லோருமே கிரிமினல்கள்தான்.

 பிகு: ரௌடிகளும் கிரிமினல்களும் இங்கே அரசியலில் இருக்கும் போது படித்தவர்கள் அரசியலில் சேரக் கூடாதா என்று ஒரு நண்பர் கேள்வி கேட்டிருந்தார். இது தொடர்பாக சற்று விரிவாகவே விரைவில் எழுதுகிறேன்.

Tuesday, July 20, 2021

சட்டபூர்வமான ஒட்டு கேட்டலா மோடி ????

 





அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்டவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டதாக அறிக்கைகள் உறுதி செய்கின்றன.

வெறும் தொலைபேசி உரையாடல்கள் மட்டுமல்ல, மற்ற நேரத்தில் அவர்கள் யாரோடு நேரடியாக உரையாடிக் கொண்டிருந்தாலும் அவையும் பதிவு செய்யப்படுமளவிற்கான வல்லமை படைத்தது அந்த மென்பொருள் என்று நேற்று இணைய வழியில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் "இந்து" ராம் குறிப்பிட்டார்.

அந்த மென் பொருள் அரசுக்கு மட்டும்தான் விற்கப்பட்டது என்று இஸ்ரேல் நிறுவனம் சொல்கிறது.

இந்தியாவில் சட்ட விரோதமாக ஒட்டு கேட்க முடியாது என்று ஒன்றிய அமைச்சர் அஸ்வினியும் சொல்கிறார்.

அப்படியென்றால் இந்த ஒட்டு கேட்பு வேலை சட்டபூர்வமானதா பில்லா-ரங்கா கிரிமினல் கூட்டாளிகளே?

இப்படி ஒட்டு கேட்கும் அதிகாரத்தை மோடி-அமித்ஷா கிரிமினல் கூட்டாளிகளுக்கு கொடுத்தது யார் என்பதை ஜனாதிபதி சொல்வாரா?

அதற்கான அதிகாரம் அவருக்கு கிரிமினல் ஆட்சியாளர்களால் அளிக்கப் பட்டுள்ளதா?

Wednesday, September 23, 2020

பாஜகவுக்கு இதெல்ல்லாம் ஜகஜமப்பா!

 


மோடியால் குரங்குக்குளியலில் பாராட்டப்பட்டவரை கந்து வட்டி வழக்கில் போலீஸ் தேடுதாம்.


இப்படியெல்லாம் கேஸ் வரக்கூடாதுன்னுதான் ஊரில இருக்கற எல்லா சமூக விரோதியும் பாஜகவில சேர்ந்து எஸ்கேப் ஆகப் பார்க்கறான். அப்பவும் போலீஸ் தேடினா அப்புறம் மோடிக்கு என்னய்யா மருவாதை?

 என்ன முருகன் இதையெல்லாம் கவனிக்க மாட்டீங்களா? கிரிமினல்களை பாதுகாக்கலைன்னா அப்புறம் தாமரை எப்படி மலரும்?

 ஆமாம். அந்த ஆட்டுக்கார அண்ணாமலையே முக்கியமான சில வழக்குகளை கவனித்துக் கொண்டிருந்த அவரோட உயரதிகாரி மர்மமாக இறந்து போனதுக்குப் பிறகுதான் ஐ.பி.எஸ் வேலையை ராஜினாமா செய்தாராமே?

 சரி சரி. கிரிமினல்னா பாஜகவில உறுப்பினராவாங்க என்பதெல்லாம் ஜகஜம்தானே!

 

Friday, September 4, 2020

எச்.ராசாவின் பிண அரசியல்.

 


சமூக விரோதிகள் நிரம்பிய கட்சி பாஜக. இப்போது புதிதாக, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, பாலியல் வன் கொடுமை போன்ற பல வழக்குகள் கொண்ட கிரிமினல் குற்றவாளிகளை தேடி தேடி கட்சியில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

 எந்த ஒரு சமூக விரோதிக்கும் நிச்சயம் எதிரிகள் இருப்பார்கள். கத்தி எடுத்தவனுக்கு கத்தியால் மரணம் என்பது போன்ற எதிர்வினைகள் அந்த சமூக விரோதிகளுக்கு நேர்வதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம்.

 குடும்பத் தகராறு,

தவறான உறவுமுறைகள்,

பண மோசடி

 போல பல காரணங்களால் அப்படி பாஜகவில் உள்ள கிரிமினல் வழக்கு சங்கிகள் (கிரிமினல் சங்கி என்று நான் சொல்லாததற்கு காரணம் உண்டு. சங்கி என்றாலே கிரிமினல்தானே! அதை வேறு ஏன் தனியாக சொல்ல வேண்டும்!) கொல்லப்படுகிற போது அதற்கு மதச்சாயம் பூசுவதே எச்.ராசா உள்ளிட்ட பேர்வழிகளின் வேலை.

 அப்படித்தான் ராமநாதபுரத்திலும் பிரச்சினையை தூண்டி விடப் பார்த்தார்.

 ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கொலையின் பின்னணியில் மதப் பிரச்சினை கிடையாது என்று தெளிவாக சொல்லி விட்டனர்.

 நீட் காரணமாக அனிதா இறந்த போது பல அரசியல் கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்ட போது “பிணத்தை வைத்து அரசியல் செய்வதாக சங்கிகள் வசை பாடினர்.

 ஆனால் உண்மையிலேயே  பிண  அரசியல் செய்வது பாஜகவும் எச்.ராசா போன்றவர்களும்தான்.

Thursday, December 5, 2019

குற்றவாளிகளுக்கோர் நற்செய்தி . . .



கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், வழிப்பறி, செயின் திருட்டு, பாலியல் வன் கொடுமை, ஆவணக் கொலை, ஊழல், பண மோசடி, வங்கிகளை ஏய்த்தல் உள்ளிட்ட அனைத்து விதமான குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கும் ஓர் நற்செய்தி.

நீங்கள் பாரதீய ஜனதா கட்சியில் உறுப்பினராக இணைந்து விட்டால் உங்களின் அனைத்து குற்ற வழக்குகளும் ஊத்தி மூடப்பட்டு உங்கள் மீது கங்கை ஜலம் தெளிக்கப்பட்டு நீங்கள் புனிதராக மாற்றப்படுவீர்கள்.

ஆமாம். 



அது மட்டுமல்ல தீண்டாமைச்சுவர் கட்டி ஆணவக் கொலை செய்த சக்ரவர்த்தி துகில் மாளிகை முதலாளி சிவசுப்ரமணியனுக்கு வழங்கப் பட்டது போல உங்களுக்கு சட்ட உதவி, போலீஸ் பாதுகாப்பு எல்லாம் கிடைக்கும்.

உங்களுக்கு எதிரானவர்களை கைது செய்ய ஏவல் துறையின் சேவையும் கிடைக்கும்.

அனைத்து ரக குற்றவாளிகளும் பாஜகவில் இணைந்து கொள்வீர்.

பாஜக - குற்றவாளிகளால் குற்றவாளிகளால் நடத்தப்படும் குற்றவாளிகள் கட்சி.

BJP - A party of the Criminals by the Criminals For the Criminals