Showing posts with label கமலஹாசன். Show all posts
Showing posts with label கமலஹாசன். Show all posts

Wednesday, May 22, 2024

கமல் கரீக்டாதான் சொன்னாரு மோடி

 


“கடவுள் இருக்காருன்னு சொல்றவங்களை நம்பலாம், கடவுள் இல்லைன்னு சொல்வறங்களையும் நம்பலாம், ஆனா நாந்தான் கடவுள்னு சொல்றவனை மட்டும் நம்பவே நம்பாதே”

இது கமலஹாசனின் வசூல்ராஜா, எம்.பி.பி.எஸ் படத்தின் வசனம்.

“நான் இயற்கையாக பிறக்கவில்லை. ஏதோ காரணத்திற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார்”

என்பது மோடி லேட்டஸ்டாக உதிர்த்த முத்து.

இதன் மூலம் தன்னை ஒரு தெய்வப்பிறவி, அவதாரம் என்று மோடி சொல்லிக் கொள்கிறார். கொஞ்சம் கூட நம்புவதற்கு அருகதையே அற்ற ஜந்து என்பதற்கு மோடியின் இந்த வஜனமே போதும்.

இந்த ஜந்துவை ஏதோ காரணத்துக்காக பூமிக்கு அனுப்பி வைத்த பரமாத்மாவையும் நாம் எப்படி நம்புவது? இறை மறுப்புப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கிறார் மோடி.

உண்மையில் பாவம் ஹீரா பென் என்ற அந்த இறந்து போன மூதாட்டியே. ஏழைத்தாயின் மகன் என்ற வஜனத்துக்கு பயன்படுத்தப்பட்டார். பின்பு மோடியின் போட்டோ ஷூட்களுக்கு செட் பராபர்டியாக பயன்படுத்தப்பட்டார். நேற்று வரை கூட அவர் பெயரை தேர்தல் பிரச்சார ட்யலாக்குகளில் இணைத்துள்ளார். இப்போது அவருக்கு பிறக்கவில்லை என்று சொல்கிறார்.

எந்த ஒரு தாய்க்கும் இறப்புக்குப் பிறகு இப்படி ஒரு இழிவு வந்திருக்க வேண்டாம். அவர் அன்று கருக்கொலை செய்திருந்தால் இந்தியாவும் தப்பித்திருக்கும், அவரும் இழிவை தவிர்த்திருக்ககாம்.

Saturday, March 23, 2024

ஸ்ரீரங்க, ரங்கநாதனின் . . .

 


கமலஹாசன் நடித்து இளையராஜாவின் இசையில் சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான "மகாநதி" படத்தில் வரும் "ஸ்ரீரங்க, ரங்கநாதனின்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ண்த்தில்  . . . 

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

Tuesday, November 28, 2023

வேண்டியது நடக்கும் டிமோ

 

நேற்று முன் தினம் விமானப்படை பைலட் வேஷம் கட்டிய டிமோ நேற்று திருப்பதியில் பக்தர் வேஷம் கட்டியுள்ளார். 140 இந்திய மக்களின் வளமான, ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக வெங்கடாசலபதியிடம் வேண்டியதாக  வஜனமும் பேசியுள்ளார் அந்த மகா நடிகர்.


இந்திய மக்களின் சேமிப்பை பறித்து உழைப்பைச் சுரண்டி அவற்றையெல்லாம் பெரு முதலாளிகள் அளிக்கும் தரகுக்கூலிக்காக விற்கிற உன்னைப் போன்ற தரகர்கள் பதவியில் இருக்கும் வரை அதற்கு வாய்ப்பில்லை. ஜாதி மத வெறியை தூண்டுகிற உங்கள் ரத்தக்காட்டேரி சங்கி குண்டர் கூட்டம் இருக்கும் வரையில் இந்தியாவில் அமைதிக்கும் இடமில்லை.

உங்கள் வெறியர்கள் சொல்வது போல அரபிக்கடலில் விழுந்து விடுங்கள், பாகிஸ்தானுக்கு போ என்றெல்லாம் அநாகரீகமாக நான் சொல்ல மாட்டேன்.

உங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நிச்சயம் உங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். அப்போது நீங்கள் வேண்டியது நடக்கும் டிமோ . . .


Saturday, July 8, 2023

பார்த்த முதல் நாளே . . .

 


கமலஹாசன் நடித்த "வேட்டையாடு, விளையாடு" படத்தின் "பார்த்த முதல் நாளே...." பாடலின் வயலின் வடிவம்

என் மகனின் முயற்சியில்

யூட்யூப் இணைப்பு இங்கே

Friday, January 27, 2023

பழைய கமல் டயலாக்குதான். திருந்துங்கடா சங்கிகளா


 

திரைக்கலைஞர் ஐஸ்வ்ர்யா ராஜேஷ், ஆண் பெண் பாகுபாடுகள் குறித்து தெரிவித்த கருத்துக்கு ஒரு சங்கி ஆபாசமாக ஒரு கமெண்ட் போட்டுள்ளான்.

 


அட அறிவு கெட்ட முட்டாள் சங்கி, நீ சொன்னது ஒன்னும் புதுசு இல்லை, முப்பத்தி ஆறு வருஷம் முன்னாடியே விக்ரம் படத்தில் கமலஹாசன் பேசின டயலாக்தான். படம் வரும் முன்னாடி குமுதத்தில் தொடராக வந்த போது இன்னும் அசிங்கமா சுஜாதா எழுதி வாங்கிக் கட்டினதால் சினிமாவுல மாத்தி வைச்சார். அதற்கும் அப்போது அடி விழுந்தது. படத்துலயே ஹீரோயின் காட்டான் என்று திட்டுவது போல டயலாக்கும் வந்தது.

 அன்னிக்கு அந்த காட்டான் சொன்னதைத்தான் நீ வாந்தி எடுத்திருக்க.

 குமரி மாவட்டத்தில் மேலாடை அணியக்கூடாது என்ற கேவலமான விதிக்கு எதிராகத்தான் தோள்சீலை போராட்டமெல்லாம் நடந்தது என்பதெல்லாம் சினிமா டயலாக் கூட தெரியாத உனக்கு எங்கே தெரியப் போகுது!

 அப்டேட் ஆகுங்கடா சங்கிகளா, உன் கமெண்டை உன் அம்மா, சகோதரிகள், மனைவி, மகள் ஆகியோரிடம் காண்பிக்கவும். அவர்கள் உன்னை அப்டேட் ஆக்கி திருத்துவார்கள்.

 பிகு: ஒருவேளை அவர்களும் சங்கி நோயர்களாக மாறியிருந்தால் நிலைமை மோசம்தான். மத்யமர் ஆட்டுக்காரன் குழு அப்படிப்பட்ட சங்கிப்பெண்கள் பலரின் பதிவுகளை படிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளது.

Sunday, November 20, 2022

அதே பரவசம் ராஜா!

 அபிராமியைக் கண்ட குணாவின் கண்களில் தென் பட்ட அதே பரவசம் மோடியைப் பார்த்த உங்கள் கண்களிலும் தெரிகிறதே!



நல்லதோர் வீணை புழுதியில் விழுந்து நலங்கெட்டதே என்ற ஆதங்கம்தான் . ..

Tuesday, June 7, 2022

விக்ரம் – இருட்டும் ரத்தமும்

 



6.30 மணிக் காட்சிக்கு முன்பதிவு செய்திருந்த நிலையில் 6 மணியிலிருந்தே நல்ல மழை. முன்பதிவு செய்தது வேஸ்டாகிவிடும் என்றுதான் தோன்றியது. 6.25 க்கு மழை நிற்க வேகமாக சென்றாலும் படம் ஆரம்பித்து கமலஹாசன் “வெத்தல, வெத்தல ”(ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தின் “வெத்தல வெத்தல கொழுந்து வெத்தலையோ பாடல் வரிகள் மனதில் பதிந்தது போல பத்தல, பத்தல என்ற வரிகள் மனதில் நிற்கவில்லை) என்று பாடி, ஆடிக் கொண்டிருந்தார்.

 

கைதி போலவே படத்தின் பெரும் பகுதி இருட்டில்தான் நடக்கிறது. அந்த இருட்டிலும் ரத்தம் பீறிட்டு தெறிக்கிறது. பின்னணி இசைக்கு வேலை இல்லாமல் தோட்டாக்களின் சத்தம்தான் பெரும் இரைச்சல். இருட்டு, ரத்தம், தோட்டா, போதை,இதற்குள்ளாகத்தான் படமே.

 

ஆனாலும் போரடிக்காமல் போவதுதான் படத்தை ஓட வைத்துள்ளது. ஃபகத் ஃபாஸில் தன் இயல்பான நடிப்பால் படத்தின் முதல் பாகம் முழுதையும் சுமக்கிறார். இடைவேளையில்தான் கொல்லப்பட்டதாக சொல்லப்பட்ட கமலஹாசன் வருகிறார்.

 

கைதியில் போலீஸிடம் பிடிபட்ட 900 கிலோ போதைப் பொருளை வில்லன் விஜய் சேதுபதி மீட்க துடிக்கிறார். அந்த போதை பொருளை கைப்பற்றிய போலீஸான மகன் கொல்லப்பட்டதால் அதற்கு காரணமானவர்களை வரிசையாக கொல்கிறார் கமலஹாசன். கொலைகாரர்களை தேடும் ரகசிய ஏஜெண்ட் ஃபகத் ஃபாஸில் ஆகியோருக்குள் சுழல்கிறது கதை. இதற்குள் செண்டிமெண்டிற்காக இதய நோயுள்ள கமலின் பேரக்குழந்தை.

 

படம் பார்க்கலாமா?

 

கைதியின் தொடர்ச்சியாய் சரியாக இணைத்திருப்பது, அதன் முக்கியப் பாத்திரங்களை இங்கே கொண்டு வந்தது. (எஸ்.பி ஆபிஸில் போலீஸால் அடிபட்டு இருந்த அர்ஜூன் தாஸ் எப்படி கடைசி காட்சியில் வந்தார் என்றுதான் தெரியவில்லை)

 

போலீஸ் – கிரிமினல் கூட்டணியை அம்பலப்படுத்துவது.

 

வேலைக்காரப் பெண்மணி  ஏஜெண்டாக மாறி சண்டை போடுவது, அதுபோலவே குமாரலேலும் சந்தான பாரதியும் கூட ஏஜெண்டுகளாக இருப்பது,

 

குழந்தையின் உயிரைக் காக்க ஃபகத் ஃபாஸில் நடத்தும் போராட்டம்,

 

கடைசி நிமிடத்தில் வந்து ஈர்க்கும் சூர்யா.

 

இவை அனைத்துக்கும் மேலாக வயதுக்கு ஏற்ற பாத்திரத்தில் கலக்கிய கமலஹாசன்,

 

ஆகியவை விக்ரமை பார்க்கலாம் என்று சொல்ல வைக்கிறது.

 

படத்தின் குறைகளாக நான் கருதுவது.

 

போதைப் பொருட்களின் தீமையை உணர்ச்சிமயமாக சொல்லும் படத்தில் படம் முழுக்க யாராவது சரக்கடிப்பது, போதைப் பொருள் எடுத்துக் கொண்ட விஜய் சேதுபதி சக்திமானாக மாறுவதெல்லாம் நெருடல்.

 

பீரங்கி உட்பட அனைத்து ஆயுதங்களும் பிரயோகிக்கப்படுகிறது. விக்ரம் 3 வந்தால் ஏவுகணை, சப்மரின் கொண்டுதான் சண்டை போட வேண்டும்.

 

நம் கையிலேயே ரத்தப் பிசுக்கு ஒட்டியிருப்பது போல ஒரு ஃபீலிங்.

 

தராசில் வைத்துப் பார்த்தால் இன்னொரு விறுவிறுப்பான படத்தை அளிப்பதில் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்றுள்ளார். இசை எனக்கு திருப்தியளிக்கவில்லை.

 

இதிலே ஒரு திருப்தியான விஷயம் என்னவென்றால் எங்கள் பகுதியில் உள்ள ஸ்ரீனிவாசா தியேட்டர் நவீனமயமாக்கப்பட்டதுதான்.

Sunday, June 5, 2022

விக்ரம் - என் பார்வையில்

 


புதிய விக்ரம் இன்னும் பார்க்கவில்லை. இன்று 6.30 மணி காட்சிக்கு முன்பதிவு செய்துள்ளேன்.

புதிய விக்ரம் வந்துள்ள சூழலில் பழைய விக்ரமை ஆகா, ஒகோ என பலரும் புகழ்ந்து கொண்டுள்ளார்கள். நிஜமாகவே பழைய விக்ரம் சூப்பர் படமா?

நினைவுகளை ஓட விட்டு எழுதுகிறேன்.

குமுதத்தில் தொடராக வந்து ஆவலை உருவாக்கிய படம். 

அதற்கு சில வருடங்கள் முன்பாக அது போல குமுதத்தில் தொடராக வந்த படம் பாக்யராஜ் எழுதி இயக்கிய "மௌன கீதங்கள்" அந்த சமயம் திருக்காட்டுப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன். திருக்காட்டுப்பள்ளி பெரிய அக்கா வீட்டிலிருந்து புதுக்கோட்டை இரண்டாவது அக்கா வீட்டுக்கு தஞ்சாவூர் வழியாக சென்று தஞ்சாவூர் பேருந்து நிலையம் அருகிலிருந்த தியேட்டரில் வீட்டுக்குச் சொல்லாமல் கருப்பில் பார்த்த படம் அது. பிடிக்கவே பிடிக்காத வாத்தியாரும் அந்த காட்சிக்கு வர அவர் கண்ணில் படக்கூடாது என்பதற்காக எல்லோரும் வெளியேறும் வரை காத்திருந்து கடைசியாக வெளியே போனது நினைவுக்கு வந்தது.

விக்ரம் வந்த போது எல்.ஐ.சி பணியில் நெய்வேலியில் சேர்ந்திருந்தேன். அங்கே அப்போதிருந்த அமராவதி தியேட்டரில் எந்த ஒரு புது படமும் ஆறு மாதத்திற்குப் பிறகே வரும்.

விக்ரம் வெளியான சமயம் கும்பகோணத்தில் என் கடைசி அக்காவின் திருமணம் நடந்தது. மண்டபத்தை சுற்றி சுற்றி விக்ரம் பட போஸ்டர்கள்தான். ஆனால் திருமண வேலைகள் காரணமாக திரைப்படம் பார்க்க நேரம் கிடைக்கவில்லை.

ஆகவே அமராவதி தியேட்டரில் வரும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. 

மூன்றே மாதத்தில் வந்து விட்டது. அதுவே அப்படம் பெரிதாக ஓடவில்லை என்பதற்கான சான்று.

கடுமையான தண்டனை அறிவிக்கப்பட்டதைக் கூட காது கொடுத்து கேட்காமல் ஆடுபுலி ஆட்டம் விளையாடும் குற்றவாளிகள், அந்த குற்றவாளிகள் மூன்று மதங்களையும் சார்ந்தவர்களாக காண்பித்தது, அக்னிபுத்திரன் ஏவுகணையை சுகிர்தராஜா எனும் சத்யராஜ் கடத்துவது, அதை கண்டுபிடிக்க விக்ரமை கேட்பது, வில்லன் ஆட்கள் விக்ரமின் மனைவியைக் கொல்வது, உளவுத்துறை அலுவலகத்திலேயே வில்லனின் உளவாளி இருப்பது, அவன் மூலமாக வில்லன் யார் என்பதை அறிவது, பரபரப்பான சேஸிங் காட்சிக்குப் பின் சினிமா தியேட்டர் நியூஸ் ரீல் மூலமாக வில்லன் இருப்பது சலாமியா என்று கண்டறிவது வரை தீயாய், பரபரப்பாய் படம் செல்லும்.

அதன் பிறகு சலாமியாவுக்குப் போன பிறகு படம் படுத்து விடும். ஜனகராஜ் திருநங்கையாக செய்யும் காமெடிகள் எரிச்சலூட்டும். டிம்பிள் கபாடியை எவ்வளவு தூரம் கவர்ச்சியாக காண்பிக்க முடியுமோ, அந்த அளவு காண்பிப்பது, ஷோலே வில் நடுங்க வைத்த அம்ஜத்கானை காமெடியனாகக் காண்பித்த பரிதாபம் என்றெல்லாம் இரண்டாவது பாகம் மிகவுமே சோதித்து விடும்.

அதிலும் கிளைமேக்ஸ் கொடூரம். சத்யராஜ் செல்லும் விமானத்தின் மீது தாவி, அவர் கீழே குதிக்கையில் அவர் மீது பாய்ந்து அவரது பாராசூட்டைப் பறித்து அந்தரத்தில் பறந்த கதாநாயகியையும் சேர்த்துக் கொண்டு கீழே வருவதெல்லாம் மிகப் பெரிய காமெடி. அதிலும் பாவம் அப்போது கிராபிக்ஸ் தொழில் நுட்பம் வேறு சரியாக வராமல் ஒழுங்காக ஒட்டாமல் பிசிறு பிசிறாக இருக்கும். உதாரணம் கீழே உள்ளது.



இரண்டாவது பாதியில் கதையை விட கவர்ச்சிக்கு முன்னுரிமை கொடுத்ததால் சொதப்பலாகிப் போன படம்தான் விக்ரம். 

இளையராஜாவின் இசை, சில வசனங்கள், சத்யராஜ், ராஜஸ்தான் அரண்மனைகளின் அழகு ஆகிய நல்ல அம்சங்கள் இரண்டாவது பகுதியின் சொதப்பலை தாங்க வைத்தது.

பார்ப்போம் புதிய விக்ரம் எப்படி இருக்கிறதென்று . . .

கைதி தந்த நம்பிக்கையில் செல்கிறேன்...

முடிந்தால் நாளை அது பற்றி எழுதுவேன்.

Thursday, June 2, 2022

நீ ஒரு காதல் சங்கீதம்

 


இளையராஜா, மணிரத்னம் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் இணைந்து பணியாற்றிய "நாயகன்" படத்தின் "நீ ஒரு காதல் சங்கீதம்" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கைவண்ணத்தில் . . . .

யூட்யூப் இணைப்பு இங்கே

Monday, June 28, 2021

படேல், ராவ் – ஒரே குட்டை மட்டைதான்.

 


 

செத்துப் போன சில காங்கிரஸ்காரர்களை மட்டும் செலக்டிவ்வாக சங்கிகள் தத்தெடுத்துக் கொள்கிறார்கள். முன்பு வல்லபாய் படேல், இப்போது நரசிம்மராவ்.

 


இருவரும் நேரு குடும்பத்துக்கு அவ்வளவாக வேண்டாதவர்கள் என்பது மட்டுமல்ல காரணம், இரண்டு பேருமே சாஃப்ட் சங்கிகள் என்பதும் கூட முக்கியக் காரணம். மகாத்மா காந்தி படுகொலைக்குப் பின்பு வேறு வழியில்லாமல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை தடை செய்தாலும் பிறகு அந்த அந்த தடையை நீக்கியவர் படேல்தான். அதனால்தான் அவருக்காக “ஸ்டேட்டுகே ஓப்பி  யூனிட்டி” உருவாக்கினார்கள்.

 நரசிம்மராவிற்கு பதிலாக வி.பி.சிங் போல வேறு யாராவது பொறுப்பானவர்கள் பிரதமராக இருந்திருந்தால் பாபர் மசூதியை இடித்திருக்க முடியாதல்லவா! அயோத்தி பிரச்சினையில் ராணுவத்தை கையில் வைத்துக் கொண்டு எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்த்த உத்தமனல்லவா அவர்!

 அந்த நன்றியை இப்படித்தான் வேறு பல காரணங்களை முன்வைத்து சொல்ல வேண்டும். இந்தியப் பொருளாதாரத்தை ஒரு மோசமான நிலைமைக்கு இட்டுப் போனவர்தான் நரசிம்மராவ் என்பதுதான்  அவரை நினைத்தால் நினைவுக்கு வரும் இரண்டாவது விஷயம்.

 இன்னொரு விஷயமும் உள்ளது.

 பிகு: நரசிம்மராவ் குறித்து சிலிர்த்து போய் சிலாகித்து இன்னொரு கட்சியின் தலைவரும் எழுதியுள்ளார்.



 ஆமாம். அவர் மய்யத்தார்.

 

இந்தியாவின் சிரிக்கா மனிதன் பற்றி நினைவுக்கு வரும் மூன்றாவது விஷயம் கூட ஒன்றுள்ளது.

 

அது நாளை. . .

Friday, May 21, 2021

கமலுக்கு தொலை நோக்கு பார்வைதான்

 


கமலுக்கு தொலை நோக்கு பார்வை நிறைய உண்டு. சுனாமி, உயிரியல் ஆயுதம் போன்றவற்றை எல்லாம் தமிழகத்தில் முதலில் பேசியவர் அவர்தான் என்பார்கள்.

அது உண்மை என்பதை "உயர்ந்த உள்ளம்" படக்காட்சி நிரூபிக்கிறது.


கட்சி ஆரம்பித்து தோற்றுப் போன பின்பு எல்லோரும் அவரை கை விட்டு விடுவார்கள், புலம்ப வைப்பார்கள் என்பதையும் தொலை நோக்கு பார்வையோடு படம் எடுத்துள்ளாரே!

Friday, May 14, 2021

வர வர மநீம . . . .

 


படம் பழைய ஹேராம் படக்காட்சிதான். வசனம் மட்டும் புதிது, எனது.

Wednesday, April 7, 2021

ஆரம்பிக்கலாங்களா கமல்?

 


இன்று முக நூலில் பார்த்த சுவாரஸ்யமான ஒன்றை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

பாவம்யா கமலஹாசன்.

ஒரு டயலாக்கை பேச விடுறீங்களா!



பிகு : மாலை ஒரு சூடான பதிவு உள்ளது. அதனால்தான் இப்போ கொஞ்சம் ரிலாக்ஸ்டா ஒரு பதிவு

Sunday, April 4, 2021

யாரடிச்சாரோ, கமலை யாரடிச்சாரோ?

 



மேலே உள்ள படம் ஒப்பனைதான். ஒப்பனை கலைந்ததும் வடுக்கள் மறைந்து விடும்.

ஆனால் நக்கலைட்ஸ் யூட்யூப் குழு கொடுத்துள்ளார்களே, ஒரு பதில். அந்த நாவினால் சுட்ட வடு ஆறாது, ஆறாது. 

இப்படி அசிங்கப்பட வேண்டுமா கமல்? தோழர் சீத்தாராம் யெச்சூரி பற்றி நீங்கள் பேசியதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்று தோழர் ஜி.ஆர் கடந்து போனார்.

எல்லோரும் அப்படி போவார்களா என்ன?

தேர்தலுக்கு பிறகாவது நாவடக்கம் காக்க

writes
அன்பு மக்கள் நீதி மய்ய ஆதரவாளர்களுக்கு வணக்கம்,

'உன்னால் முடியாது தம்பி' வீடியோ ஏற்படுத்தி உள்ள விவாதங்களுக்கு பதில் அளிக்கவே இந்த பதிவு .

பெரும்பாலான தமிழ் மக்களைப் போலவே நாங்களும் கமல்ஹாசன் என்கிற மிகச்சிறந்த நடிகரின் ரசிகர்கள்தான் . இந்தியாவின் ஆகச்சிறந்த திரைக்கலைஞர்களில் அவரும் ஒருவர் , மாற்றுக் கருத்தில்லை .

ஆனால் சகலகலா வல்லவன் படத்தின் TOXIC MASCULINITY தொடங்கி பாபநாசம் படம் உருகி உருகி காப்பாற்றும் CHASTITY, பெண்ணுடல் மீது கட்டப்படும் புனித பிம்பம் வரை அவருடைய பெரும்பாலான படங்களின் உள்ளடக்கமான கருத்துகளோடும் அரசியலோடும் பெரும் முரண்பாடு உடையவர்கள் .

அதன் தொடர்ச்சியாகவே அவருடைய அரசியலோடும் அந்த அரசியல் முன்வைக்கப்படும் முறையோடும் கடுமையாக முரண்படுகிறோம்.

கமல்ஹாசன் அவர்களின் ரசிகர்களாக இருந்து இன்று அவருடைய கட்சியின் தொண்டர்களாக மாறிவிட்டவர்களுக்கு, அவர் அனைத்துத் தீமைகளிலிருந்தும் தங்களை மீட்க வந்த அரசியல் மேதையாகவும், தியாகியாகவும் தலைவராகவும் தெரியலாம். தவறில்லை .

ஆனால் எங்களுடைய அரசியல் சமூகப் புரிதலுக்கு வள்ளுவன் , அவ்வை , வள்ளலார் , அயோத்திதாசர் , பெரியார், சிங்காரவேலர் என்று ஈராயிரமாண்டு மரபுத் தொடர்ச்சி உண்டு . இந்த சிந்தனைத் தொடர்ச்சியின் வழியாகவே எங்கள் சமூக அரசியல் நிலைப்பாடும் அமைகிறது .

எங்கள் சமூக அரசியல் நிலைப்பாட்டின் வழி இந்தத் தமிழ் மண்ணுக்கும் மக்களுக்கும் கேடு தரக் கூடிய எந்த அரசியல் இயக்கமோ , கட்சியோ, அதை நாங்கள் விமர்சிக்கவும் எதிர்க்கவும் செய்வோம் . நக்கலைட்ஸ் என்ற இந்த ஊடகம் தொடங்கிய நாளிலிருந்து அதைத்தான் செய்து வருகிறோம் . இனியும் செய்வோம்.

எல்லா கட்சிகளையும் விமர்சிக்க உனக்கு தில் இருக்கா என்று கேட்பவர்களுக்கு , விமர்சித்திருக்கிறோம் , வழக்கு, விசாரணை, மிரட்டல்கள் எல்லாவற்றையும் சந்தித்திருக்கிறோம் என்பதுதான் எங்கள் பதில் .

நக்கலைட்ஸ் YOUTUBE சேனலில் உள்ள PLAY LIST இல் POLITICAL SATIRE , SOCIAL SATIRE பட்டியலில் உள்ள வீடியோக்களை, சவால் விடும் மய்யத்தார்கள் பார்த்துவிட்டு வரவேண்டும். BONUS ஆக URBAN NAKKALITES இல் உள்ள GST வீடியோக்களையும் ஒருமுறை பார்க்க வேண்டும்.

அறுபத்து ஐந்து வயது வரை சாவகாசமாக இருந்துவிட்டு திடீர் ஞானம் வந்து பொங்கிக்கொண்டு அரசியல் களத்திற்கு வந்தவர்கள் நாங்கள் அல்ல . பதின் பருவக் காலம் தொட்டு அரசியல் களத்தில் நிற்பவர்கள் . உங்கள் ஆண்டவருக்கும் மூத்தவர்கள் .

ஆகவே இளையவர்களே சற்று இளைப்பாறுங்கள் .

தி .மு .க விட்ட எலும்புத்துண்டுக்கு விலைபோய் விட்டீர்கள் , அ. தி . மு .க வின் ரகசிய ஏஜென்ட்டுகள் என்று சாட்டையடி பதிவு போட்டுவிட்ட மய்யத்தார்களே...

உங்களை விமர்சிப்பவர்களெல்லாம் தி.மு.க வுக்கும் அ.தி.மு.க வுக்கும் விலை போனவர்களாகத்தான் இருக்க வேண்டுமென்றால் , உங்களுடைய LOGIC படியே திராவிட கட்சிகளை விமர்சிக்கும் நீங்கள் ஏன் பா.ஜ.க வுக்கு விலை போனவர்களாக இருக்கக் கூடாது ?

பாபர் மசூதி இடித்ததை கமல் கண்டித்தார் , மெழுகுவர்த்தி ஏந்திப் போராடினார் . உனக்கு அதெல்லாம் தெரியுமா ? விடலைகளான நாங்கள் ஆண்டவருடைய அருமை பெருமையெல்லாம் அறிந்திருக்கவில்லைதான் , வருந்துகிறோம் . தவறைத் திருத்திக்கொள்கிறோம்.

ஆனால் விஸ்வரூபத்திலும் , தசாவதாரத்திலும் அள்ளித் தெளிக்கப்பட்ட ISLAMOPHOBIA எந்த வகையிலான நிலைப்பாட்டில் சேர்த்தி என்பதை நீங்கள்தான் விளக்க வேண்டும்.

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பது ... அப்படி வரும் இளைஞர்கள் உங்களை விமர்சித்துவிட்டால் 'சின்னப் பசங்க ' உங்களுக்கு வயசும் பத்தாது அனுபவமும் பத்தாது என்பது...

இந்த எகத்தாளமெல்லாம் எந்த மேட்டிமைத் தனத்திலிருந்து ஊற்றெடுக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும். தாரை தப்பட்டை அதிர அதிர எதிர் எகத்தாள வீடியோக்கள் வெளிவரும் என்பதை பதிலாகக் கூறிக்கொள்கிறோம்.

SATIRE என்கிற கலை வடிவின் வழியாக எங்கள் அரசியல் விமர்சனகளைப் பதிவு செய்கிறோம். மாற்றுக் கருத்து இருந்தால், விவாதிக்க வாருங்கள். நாங்கள் ஒருநாளும் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் இருந்ததில்லை.

கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி எங்களை இழிவுபடுத்திவிடலாம் என்று நினைத்தால், மிரட்டியோ , புகார் செய்தோ எங்களை முடக்க நினைத்தால் , எங்கள் கையில் 'கலை' இருக்கிறது . அது என்ன செய்யும் என்பதை எல்லோரை விடவும் நம் ஆண்டவரே நன்கு அறிவார் . அவரிடமே கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

நாங்க என்ன இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களா ? நீ வெளக்கு புடிச்சு பாத்தியா ? இப்படி ஒரு மய்யத்தார்.

விளக்குப் பிடிப்பது எங்கள் வேலை இல்லை . மய்யத்தார் கையில் தான் TORCH இருப்பதாகக் கேள்விப்பட்டோம்.

எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்ள முடியாமல் இப்படி தரங்கெட்டுப் பேசும் நீங்கள்தான், தமிழக மக்களுக்கு மாற்றத்தைக் கொண்டு வரப்போகிறீர்கள் என்று நாங்கள் நம்ப வேண்டும், அப்படித்தானே ? நீங்கள் கொண்டுவரும் மாற்றம் உங்கள் வார்த்தைகளைப் போலவே கேவலமாக இருந்துவிட்டால் ?

கட்சி அறிக்கைகளை வைத்தே எல்லா முடிவுகளுக்கும் வந்துவிடலாமென்றால், நேற்று கட்சி தொடங்கிய அண்ணன் மன்சூர் அலி கானுக்குக் கூட முச்சந்தியில் சிலை வைக்கலாம். பள்ளி விண்ணப்பத்தில் சாதிப் பெயர் குறிப்பிடாமல் தவிர்த்துவிட்டால் சாதி உணர்வு இல்லாமல் போய்விடும் என்கிற சமூக அறிவியல் தத்துவத்தை உதிர்த்தவர் யார் ?

69% இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குப் போட்ட வக்கீல் விஜயனை மய்யத்தில் மய்யமாக உட்காரவைத்துக்கொண்டு நீங்கள் பேசும் சமூகநீதி எந்தத் தரத்தில் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா ?

சக்கரை என்று காகிதத்தில் எழுதி நக்கிவிட்டால் இனிக்குமா ? களத்தில் ம.நீ.ம நடத்திய போராட்டங்கள் எத்தனை ? சிறை சென்ற தியாகிகள் எத்தனை பேர் ? ஆனால் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்காக முப்பதாண்டுகளுக்கும் மேலாக பல போராட்டங்களும் , சிறையும் கண்டு அரசியல் கட்சி நடத்தி வரும் திருமாவளவன் அவர்கள் உங்களிடம் கூட்டணிக்கு வந்து நிற்க வேண்டுமா ? எங்கிருந்து வந்தது இந்த ஆணவம் ?

ஆணவமும் ஆதிக்கமும் எந்தத் தோரணையில் வந்தாலும் அதற்கு எதிரான கலை வெளிப்பாடும் சமூகத்தில் இருந்தே தீரும். இந்த இயங்கியல் கூடப் புரியாத அரசியல் அம்மாஞ்சிகளாக மய்யத்தார் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இல்லாவிட்டால், அரசியலையும் சமூக சேவையையும் போட்டுக் குழப்பிக் கொள்வீர்களா ?

ரத்ததானம் செய்வதும் , புயல் பாதித்த பகுதி மக்களுக்கு பாய் , பெட்ஷீட் கொடுப்பதெல்லாம் அரசியல் பணி என்று ஆகிவிட்டால், ஆட்சி அதிகாரத்தை லயன்ஸ் , ரோட்டரி கிளப்புகளிடமே ஒப்படைத்துவிடலாம். அதற்கு ம.நீ. ம தேவை இல்லை.

இறுதியாக , நாம் இந்த சமூகத்தில் தான் இயங்கப்போகிறோம் . விமர்சனங்களோடும் விவாதங்களோடும் இயங்குவோம். சிங்காரவேலன் திரைப்படத்தை விடவும் தரம் தாழ்ந்த விமர்சனத்தை நாங்கள் வைத்துவிடவில்லை. அவருடைய தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடவில்லை . எங்கள் எல்லை என்ன என்று எங்களுக்குத் தெரியும் . எங்கள் ஆசான்கள் எங்களுக்கு அநாகரிகத்தைக் கற்றுக்கொடுக்கவில்லை.

உங்களுக்குப் புரியும் என்ற நம்பிக்கையோடு புதிய வீடியோவோடு மீண்டும் வருவோம் . காத்திருங்கள் ... புரட்சி என்பது மாலை நேரத் தேநீர் விருந்து அல்ல நண்பர்களே .

நன்றி .
இப்படிக்கு
நக்கலைட்ஸ் கமல் ரசிகர்கள் .




Wednesday, March 24, 2021

கமல் 300 கோடி, கலாம், பெரியார்

 



சீமானுக்கு கடும் போட்டி கொடுப்பவராக கமலஹாசன் மாறி வருகிறார். காமராசர் மாதிரியும் கலாம் மாதிரியும் ஆக வேண்டும் என்று தான் வளர்க்கப்பட்டதாக  ஒரு உருட்டு.

அரசியலுக்கு வந்ததால் தனக்கு 300 கோடி ரூபாய் நஷ்டம் என்று இன்னொரு உருட்டு.

மேலே உள்ள படங்களை மட்டும் போட்டு விட்டு கடந்து விடலாம் என்றுதான் நினைத்தேன். 


இரண்டு சவுக்கடிகளை படித்ததால் அவற்றை பகிர்ந்து கொள்வது மிகவும் சரியாக இருக்கும் என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



கமலிசம்
1. காமராஜர், அப்துல் கலாம் போல் வர வேண்டுமென்று வளர்க்கப் பட்டேன்...
காமராஜர் சரி. கலாம் என்ற பெயர் முதலில் பேசப்பட்டது 1980இல். எஸ் எல் வி ரோஹிணி எனப்படும் ராக்கெட் தயாரிப்பில் அவருடைய பங்குதான் காரணம். பிறகு 1990களில் மிகவும் பிரபலமடைந்து, பிஜேபியினால் குடியரசுத் தலைவராக்கப் பட்டு, பாரத ரத்னா விருது பெற்று இளைஞர்களின் ரோல் மாடலாக முன்னிறுத்தப் பட்டார். அவர் என்ன பேசினாலும் வாழ்க்கைத் தத்துவம் என்கிற அளவுக்கு புகழப் பட்டது (அவர் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பிஜேபியினால் தேர்ந்தெடுக்கப்பட்ட போது நான் எழுதிய கட்டுரைதான் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட முதல் பிரசுரம் என்று நினைவு)

ஆனால் இப்போது கலாம் பிரச்சினையல்ல. கலாம் பிரபலமான காலத்தில் கமலுக்கு வயது 25 அல்லது 26. ஏற்கெனவெ புகழின் உச்சத்திற்குச் சென்ற இரண்டு முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக ஆகி விட்டார். அந்த வயதில் கலாம் போல் நீ வர வேண்டுமென்று யார் ஆளவந்தானை ‘வளர்த்திருப்பார்கள்’ என்று புரியவில்லை. அந்தக் குழந்தையே நீங்கதான் சார் என்று கதை சொல்லியிருப்பார்களோ?

2. அரசியலுக்கு வந்ததால் எனக்கு 300 கோடி நஷ்டம்...

சுதந்திரப் போராட்டம் உக்கிரமடைந்த காலத்தில் பலர் நல்ல வருமானம் வரக் கூடிய தொழில்களைத் தியாகம் செய்து விட்டு களத்திற்கு வந்தனர். வசதியான குடும்பத்தில் பிறந்து பிரபல வக்கீலாக இருந்த கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர் எம் ஆர் வெங்கட்ராமன் அரசியலுக்கு வந்தது இப்படித்தான்.

தான் பிறந்த நம்பூதிரி சமூகத்துக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தி, சமூக சீர்திருத்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு, பின்னர் தேசிய இயக்கத்தில் இணைந்து அதற்குப் பின் கம்யூனிஸ்டான ஈ எம் எஸ், கட்சிப் பத்திரிக்கை ஒன்றைக் காப்பாற்றுவதற்காக தன் சொத்துக்களை விற்றவர். 1957இல் கேரள முதல்வரான பின் சைக்கிளில்தான் அலுவலகம் செல்வார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன்.

பிற அரசியல் இயக்கங்களிலும் இப்படிப் பட்டவர்கள் இருக்கிறார்கள். அதற்கு சிறந்த எடுத்துக் காட்டு பெரியார்.

இவர்கள் யாரும் அரசியலுக்கு வந்ததால் ஏற்பட்ட ‘நஷ்டக் கணக்கைப்’ பேசியதில்லை.

நிழல் நிழலாகவே இருக்கிறது.
தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன்,
ஆசிரியர், ஃப்ரண்ட்லைன்




100 ஆண்டுகளுக்கு முன்பே பல லட்சம் வணிகம் கொண்ட தன்னுடைய எல்லா தொழில்களையும் விட்டுவிட்டு, தான் வகித்த ஈரோடு நகர்மன்றத் தலைவர் உள்ளிட்ட 48க்கும் மேற்பட்ட அத்தனை பதவிகளையும் துறந்துவிட்டு அரசியல் பணிக்கு வந்ததோடு, அடுத்த ஐம்பது ஆண்டுகள் தமிழக அரசியல் களத்தில் எந்த அரசுப்பதவியும் வகிக்காமல் தாக்குதல்களையும், ஒடுக்குமுறைகளையும் மட்டுமே சந்தித்த தந்தை #பெரியார் ஒரு நாளும் சொன்னதில்லை தனக்கு அரசியலால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டதென்று.

நீங்கள் யார் கமல். உங்களை யார் இந்த தள்ளாத வயதில் அரசியல் பணியாற்ற வெத்தலை பாக்கு வைத்து அழைத்தது. இப்போது ஏன் இவ்வளவு சலிப்பு. அப்படி என்ன தியாகம் நீங்கள் செய்துவிட்டீர்கள்?

உங்கள் மீது இருந்த அத்தனை மரியாதையையும் நீங்களே உங்கள் அன்றாட தேர்தல் பிரச்சாரதில் உதிர்க்கும் அரசியலற்ற கருத்துக்களின் மூலம் உதிர்த்துக் கொண்டிருகிறீர்கள் கமல்.

நீங்கள் ஆகச் சிறந்த கலைஞன் தான். ஆனால் மிக மோசமான அரசியல்வாதியாக உருமாறிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையேனும் உணருங்கள்.
தோழர் களப்பிரன்.
துணைப் பொதுச்செயலாளர், த.மு.எ.க.ச

Tuesday, March 9, 2021

ரொம்ப முத்திடுச்சா கமல்?

 


தேர்தல் நெருங்க நெருங்க கமலஹாசனுக்கு மன நிலை மாறிக் கொண்டே இருக்கிறது. சாலையில் போகும் ஆம்புலன்ஸ்கள் எல்லாம் ஏதோ அவரது பிரச்சாரத்திற்கு இடையூறு செய்யும் சதி என்று கருதும் அளவுக்கு வெயில் அதிகமாகி  மூளை பாதிக்கப்பட்டு விட்டது போல.

உயிருக்கு போராடும் நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்ஸ்களே இவருக்கு இடையூறு என்றால் இவரெல்லாம் பதவிக்கு வந்து மக்களுக்கு என்ன கிழிக்கப் போகிறார்!

 இந்த கற்பனைத்திறனையெல்லாம் விஸ்வரூபம் திரைக்கதையில் காண்பித்திருந்தால் அந்த படத்தை தூங்காமல் பார்த்திருப்பேனே!

 பிகு: நிஜமாகவே விஸ்வரூபம் 2 திரைப்படத்தை தியேட்டரில் பார்க்கும் போதும் சரி, தொலைக்காட்சியில் பார்த்த போதும் சரி, நன்றாகவே தூங்கி விட்டேன்.

Wednesday, March 3, 2021

எந்த மொழியில் வருது கமல்?

 


கலாம் என்ற பெயரை தமிழில் திருப்பிப் போட்டால்  ம்லாக

KALAM என்பதை ஆங்கிலத்தில் திருப்பிப் போட்டால் MALAK

 ஒரு வேளை சமஸ்கிருதத்தில் இருக்குமோ?

 தேர்தல் நேரத்தில் ஏங்க JUMBLE THE WORDS காமெடி செஞ்சுக்கிட்டு இருக்கீங்க?

 ஒரு விதத்தில் நீங்களும் அவரும் ஒன்றுதான். குஜராத் கலவரத்தின் கோரத்தை மறைக்க வாஜ்பாய்க்கு தேவைப்பட்ட இஸ்லாமிய முகம் அப்துல் கலாம். அங்கே ரத்த ஆறு ஓடாவிடில் இவர் குடியரசுத் தலைவராகியிருக்க வாய்ப்பே கிடையாது.

பாஜக எதிர்ப்பு வாக்குகளை திசை திருப்ப இறக்கி விடப்பட்டுள்ளவர் அல்லவா நீங்கள்!

Friday, February 26, 2021

கமல்-ரஜினி-மாலன்-சக்கர நாற்காலி

 


சிங்கப்பூர் லீக்வான் க்யூ போல ரஜினிகாந்த் சக்கர நாற்காலியிலாவது அரசியல் செய்ய வேண்டும் என்று சொன்ன மாலன் அவர்களே, சக்கர நாற்காலியில் இருந்து அரசியல் செய்பவர்களை கமலஹாசன் இழிவு படுத்தி பேசியுள்ளாரே, அதை கண்டிக்க மாட்டீர்களா?

ஓ!

அவர் இழிவுபடுத்தியது உங்கள் பழைய முதலாளி கலைஞரைத்தானே! இப்போது படியளிக்கிற மோடியை அல்லவே!



உடல் ஊனம் உள்ளவரை கேலி செய்யும் காமெடிகளை உங்களின் எத்தனையோ படங்களில் வைத்துள்ளீர்கள். அது திரைப்படத்தில் மட்டும் அல்ல, உங்கள் பார்வையே அப்படித்தான் என்பது இப்போது புரிகிறது.

இப்போது நக்கலடிக்கும் நீங்கள், இதனை மலர்ந்த முகத்தோடு கரம் பற்றிய போதே சொல்லியிருக்கலாமே.

எனினும் நீங்கள் பேசியது நல்லதுதான்.

வேடம் கலைகிறது.

Tuesday, December 22, 2020

மாலனின் சேம் சைட் கோல்

 



பாட்டையாவின் பதிவு மய்யத்தார் சொன்ன ஒரு ட்ரில்லியன் பொருளாதாரம் பற்றிதான்.

 அதற்கு மாலனார் வேக வேகமாக “செல்லாத செக்கில் எத்தனை கோடி எழுதினால் என்ன?" என்று பின்னூட்டமிட்டார்.

பாவம் மாலன்!

அந்த வேகத்தில் ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்று வடை சுடும் மோடி பற்றி மறந்து விட்டார்.

கமலஹாசனது மட்டுமல்ல மோடியின் செக்கும் செல்லாதது என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ஆமாம், எல்லாவற்றையும் மாற்ற வேண்டும் என்று நீங்கள் உசுப்பேத்துகிற ரஜினி என்ன அமர்த்யா சென்னின் சிஷ்யனா?

ட்ரில்லியன் பொருளாதாரம் என்றால் என்னவென்று தெரியுமா என்று கேட்டால் "எந்திரன் சோல்ஜர்ஸ்" போல ரஜினி தலை சுற்றுமே!

ஒன்றை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கமலஹாசனின் முக நூல் பதிவுகள் உண்மையிலேயே நல்ல பொழுது போக்கு. கிரேசி மோகனால் கூட அவ்வளவு நகைச்சுவையாக எழுத முடியாது.

Friday, December 18, 2020

ரஜினி - கமல் - கோர்ட்

 


ஏப்ரலுக்குள் ஆஸ்ரம் பள்ளி வாடகைக்கட்டிடத்திலிருந்து வெளியேறாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயும். 

ஸ்டெரிலைட் துப்பாக்கிச் சூட்டை விசாரிக்கும் அருணா ஜகதீசன் கமிஷன் முன்பாக ரஜினிகாந்த் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்.

இது நேற்று முன் தினமும் நேற்றும் வந்த செய்தி.

ரஜினியின் குரங்குக் குளியல் எப்படி இருக்கும்?

இப்படியே கோர்ட் சொல்லிக்கிட்டு இருந்தாங்கன்னா இந்தியாவே சுடுகாடாயிடும். அதுக்குத்தான் இந்த சிஸ்டத்தையே மாத்தனும்.

இதுவே கமலுக்கு நேர்ந்தால் அவரின் குரங்குக் குளியல்?

ஆண்டவரை நீதிமன்றங்கள் அவஸ்தைக்கு உள்ளாக்கினால் இனி இங்கே இந்நாட்டில் தொடர்வதும் தகுமோ? தடை விலகி விண்ணில் தப்புவேன்