Showing posts with label மூடர்கள் கூட்டம். Show all posts
Showing posts with label மூடர்கள் கூட்டம். Show all posts

Wednesday, April 29, 2026

இதுவும் திமுக சதிதானே விஜய்?

 


சென்னையில் உள்ள வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் சி.சி.டிவி மையம் அமைத்துள்ள ஒப்பந்ததாரரின் பதிவை முகநூலில் யாரோ பகிர்ந்திருந்தார்கள்.


இது மிகப் பெரிய விதி மீறலாயிற்றே! கைது கூட செய்வார்களே என்று நினைத்தேன்.

கைது செய்யப்பட்டு விட்டார் என்று இன்றைய நாளிதழ் செய்தி சொன்னது. பார்க்கும் பணியின் தீவிரத்தன்மை கூட புரியாமல் அதன் விளைவுகளைப் பற்றிக் கூட கவலைப்படாதவர்களாகத்தான் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம் இந்த சம்பவம்.

இந்த கைதைக் கூட விஜய்யும் அவர் கட்சி தொண்டர்களும் "என்ன ஸ்டாலின் சார் பயமா? வாக்கு எண்ணும் மையத்திலிருந்து என் கட்சிக்காரரை வெளியே அனுப்ப சதி செய்யறீங்களா?" என்று வீர வஜனம் பேசுவார்களே என்பதுதான் என் கவலை.

Thursday, April 9, 2026

உங்களைத்தாண்டா மக்கள் மன்னிக்க மாட்டாங்க


 சங்கிகள் தாங்கள் அடி முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள் என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இரான்-அமெரிக்கா போரைப் பொறுத்தவரை இரண்டு வார காலத்திற்கு போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இது சற்று ஆசுவாசமளிக்கிற செய்தி.

இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்துள்ளது. பாகிஸ்தான் எடுத்த முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியே இந்த போர் நிறுத்தம்.

இதனை டொனால்ட் ட்ரம்பும் ஒப்புக் கொண்டுள்ளார். இரானும் ஒப்புக் கொண்டுள்ளது.



மேலே உள்ள செய்தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது.

உலகமே இன்று நிம்மதி பெருமூச்சு விட்ட ஒரு முயற்சிக்கு பாகிஸ்தான் காரணம் என்று திமுக எம்.பி சல்மா கருத்து சொல்லி விட்டாராம்.  அதனால் அவரை கைது செய்ய வேண்டும் என்று சங்கிகள் குதிக்கிறார்கள்.


சங்கிகளின் அயோக்கியத்தனமும் முட்டாள்தனமும் மீண்டும் மீண்டும் உறுதிப்படுகிறது.

சரியானதொரு கருத்தை வெளியிட்ட சல்மாவை கைது செய்ய வேண்டும் என்று கேட்பதற்கு என்னவெல்லாம் காரணம் இருக்கிறது?

மோடிதான் விஸ்வகுருவாக இருந்து போரை முடித்து வைப்பார் என்று இவர்களாகவே முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டிருந்தது நடக்காமல் அந்த பெயர் பாகிஸ்தானுக்கு போய் விட்டதை இவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மணிப்பூரிலேயே மத்தியஸ்தம் செய்ய முடியாத டம்மி பீஸ் மோடி.

இரண்டாவது இவர்கள் சல்மாவை மதக்கண்ணால்தான் பார்க்கிறார்கள்.

அதனால் சங்கிகளின் அயோக்கியத்தனத்தைத்தான் மக்கள் என்றும் மன்னிக்க மாட்டார்கள். 

Thursday, October 23, 2025

சங்கிகளோடு போட்டியிடும் விஜயினர்


 சங்கிகள்தான் இந்தியாவிலேயே மிகப் பெரும் மூடர்கள் என்று நினைத்திருந்தேன்

அந்த பட்டத்தை தட்டிச் செல்ல விஜய் கட்சியினர் மிகக் கடுமையாக முயற்சி செய்கின்றனர். 

கீழே உள்ள ஒரு ட்விட்டர் பதிவிற்கு தவெக வீரன் ஒருவர் போட்டுள்ள பதிலை பாருங்கள்.



சட்ட மன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்களை மூடர்கள் என்று சொல்லாமல் வேறென்ன சொல்வது!

பிகு: இதை விட இன்னொரு ஸ்பெஷல் ஐட்டம் உள்ளது. அது மாலையில் . . .

Monday, August 25, 2025

நல்ல வேளை யூரி காகரின் இறந்து விட்டார்!

 


மோடியின் முட்டாள் மந்திரிகளில் ஒருவரான டெல்லி கலவர புகழ் அனுராக் தாகூர் உதிர்த்த முத்து ஒன்று கீழே  உள்ளது.


புராணக்கதைகளுக்கும் அறிவியல் உண்மைகளுக்கும் வித்தியாசம் தெரியாத மோடி போன்ற பெரும் மூடரின் அமைச்சர் மட்டும் அறிவியல் பார்வையுடனா இருப்பார்! காக்கா பிரியாணி தின்பவர்களுக்கு உண்ணிகிருஷ்ணன் குரலா வரும்!!.

அப்படிப்பட்ட மூடனுக்கு நிலவுக்கு முதலில் சென்றவருக்கும் விண்வெளிக்கு முதலில் சென்றவருக்குமான வித்தியாசம்  எப்படி தெரியும்!!!!

நல்ல வேளை விண்வெளிக்கு முதலில் சென்ற சோவியத் வீரர் யூரி காகரின் இந்த கொடுமையை எல்லாம் கேட்காமல் முன்பே இறந்து விட்டார். 

Thursday, April 10, 2025

சங்கிகள் மட்டுமல்ல அதிமுகவினரும் கூட . . .

 


சங்கிகள் மூடர்கள் என்பது அனைவரும் அறிந்ததுதான். அதிமுக உறுப்பினர்கள் கூட அப்படித்தான் இருந்திருக்கின்றனர் என்பதை பழைய பதிவு ஒன்று சொன்னது.

ஒரு தகவலை சரி பார்க்க பழைய பதிவுகளை பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்ட பழைய பதிவு கீழே உள்ளது.

பதிவுக்கு செல்வதற்கு முன்பாக ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்.

காங்கிரஸ் ஆட்சியில் சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது கொடுத்தார்கள். அவருக்கு அந்த விருது அவசியமில்லை என்று ஒரு நீண்ட, நெடிய பதிவு ஒன்றை எழுதினேன். அதிகமான பின்னூட்டங்கள், ஆனால் அனைத்தும் நாகரீகமாக வந்த பதிவு அது.

சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா அவசியமில்லை - சுட்டெரிக்கும் உண்மைகள்  என்ற அந்த பதிவை இணைப்பின் மூலம் அதனை படித்து விடுங்கள்.

 அந்த பதிவை குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் மூன்று பக்கத்திற்கு வெளியிட்டார்கள். அதற்கு வந்த வாசகர் கடிதம்தான் அதிமுகவினர் பற்றிய மதிப்பீட்டிற்குக் காரணம்.

 

Friday, November 29, 2013

எம்.ஜி.ஆர் "பாரத ரத்னா" வை திருப்பி அனுப்பினாரா? சொர்க்கத்திலிருந்தா? 

 

சச்சினுக்கு பாரத ரத்னா அவசியமில்லை என்று நான் எழுதியிருந்தது     கடந்த வெள்ளியன்று வெளியான குமுதம் ரிப்போர்ட்டர் இதழில்
பிரசுரமாகி இருந்தது. அக்கட்டுரைக்கான வாசகர் கடிதங்கள் இன்று
வெளியான குமுதம் ரிப்போர்ட்டர்  இதழில் பிரசுரமாகியுள்ளது.

மொத்தம் ஏழு கடிதங்கள். அதிலே நான்கு கடிதங்கள் எனது கருத்திற்கு
ஆதரவாகவும் மூன்று கடிதங்கள் மாற்றுக் கருத்துக்களோடும் 
வெளியாகியுள்ளது. 

பொது வெளியில் எழுதும் போது விமர்சனங்கள் கண்டிப்பாக வரும்  என்ற புரிதலோடுதான் எழுதுகிறோம். அது வாசகர்களுக்கான  கருத்துச் சுதந்திரம். இது வலைப்பக்கத்திற்கும் பொருந்தும். என்ன வரும் பின்னூட்டங்கள் கொஞ்சம் வன்மத்தோடோ, வக்கிரத்தோடோ இல்லை அபத்தமாகவோ, இல்லை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இடப்பட்டால் கொஞ்சம் கடுமையாக எதிர் வினை ஆற்ற வேண்டியுள்ளது.

சரி இப்போது விஷயத்திற்கு வருகிறேன்.மாற்றுக் கருத்தோடு வந்த மூன்று கடிதங்களும் எம்.ஜி.ஆர் பற்றி   நான் எழுதியிருந்ததை சரியாக புரிந்து கொள்ளாமல் எழுதப்  பட்டவை. அதற்கும் விளக்கமளிக்க முடியும். ஆனாலும் நான்  எழுதப் போவதில்லை. மிகவும் போரடித்து விட்டது.

ஆனாலும் கூட

சிவகாசியைச் சேர்ந்த  ரெய்கி செ.வேதமூர்த்தி அவர்கள் எழுதிய
கடிதத்தை படித்து விட்டு விழுந்து விழுந்து சிரித்தேன்.

இதோ அந்த கடிதம்.

"பாரத ரத்னா விருது குறித்து எஸ்.ராமன் அநாவசியமாக     எம்.ஜி.ஆரையும்  அவரது  தொண்டர்களையும் வம்புக்கு இழுக்கிறார். இதை அப்போதே கருணாநிதி செய்து எம்.ஜி.ஆர் திருப்பி அனுப்ப,  ' இல்லை. உங்களுக்கு தகுதியின் அடிப்படையில்தான்   தரப்பட்டதாக மத்திய அரசும் விளக்கமும் தந்தது""

நான் எனது கட்டுரையில் எம்.ஜி.ஆருக்கு அவர் இறந்ததற்குப்   பின்பே பாரத ரத்னா அளிக்கப்பட்டது என்பதை மிகவும் தெளிவாக  எழுதியிருந்தேன். மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்ட    பாரத ரத்னா விருதை திருமதி ஜானகி ராமச்சந்திரன் பெற்றுக்  கொள்ள, அதை எம்.ஜி.ஆர் எப்படி திருப்பி அனுப்பினார்? 


மத்திய அரசு எம்.ஜி.ஆருக்கு எப்படி விளக்கம் அளித்தது?   யார் எங்கே சென்று விளக்கம் அளித்தார்கள்? யார் எம்.ஜி.ஆருக்கு   விளக்கம் அளிக்க சொர்க்கம்/நரகம் சென்றார்கள்? 

இதற்குத்தான் இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் புலிகேசியில்  வடிவேலு மிகவும் தெளிவாக, ஆணித்தரமாக சொன்னார்.

" வரலாறு மிகவும் முக்கியம் அமைச்சரே"

 

 

Saturday, April 5, 2025

சங்கிகள் ஏன் அயோக்கியர்கள்? அடி முட்டாள்கள்?

 


சங்கிகள் அயோக்கியர்கள், அடி முட்டாள்கள் என்று எப்போதுமே நான் சொல்வேன். அதற்கான இன்னொரு சான்றாக சங்கிகள் பகிர்ந்து கொண்டிருக்கிற ஒரு படம் கீழே.

 


தமிழ்நாட்டின் மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கைதான் 39 ஏ தவிர திமுக எம்.பி க்கள் 22 பெர்தான். காங்கிரஸ், சி.பி.எம், சி.பி.ஐ, விசிக, மதிமுக, கொங்கு மக்கள் கட்சி, முஸ்லீம் லீக், தமுமுக கட்சியைச் சேர்ந்தவர்கள் மற்ற 17 பேர்.

 உண்மை இப்படி இருக்கையில் திமுக எம்.பி க்கள் 17 பேர் காண்டீன் போய் விட்டார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்வது அயோக்கியத்தனம், அதை அப்படியே நம்பி பகிர்பவர்கள் அடி முட்டாள்கள்.

 

Sunday, March 23, 2025

காண்டோ பல்லால் – முதல் சங்கி மூடன்

 


நேற்றைய பதிவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்க்சாலக் சத்ரபதி சிவாஜியின் மகன் “சாம்பாஜியை குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்யச் சொல்லி மானத்தை காப்பாற்றிக் கொள்ளச் செய்தான்” என்று எழுதியிருந்ததை குறிப்பிட்டிருந்தேன்.

 கோல்வாக்கரின் “சிந்தனைக் கொத்துக்கள்” நூலில் அந்த குறிப்பிட்ட பகுதி கீழே உள்ளது. காண்டோ பல்லாலை கோல்வால்க்கர் புகழோ புகழ் என்று புகழ்கிறார் என்பது அதை படித்தால் உங்களுக்கு புரியும்.

 யார் இந்த  காண்டோ பல்லால்?



 “சாம்பாஜியின் தீவிர விசுவாசி இந்த காண்டோ பல்லால். இவனின் தந்தை சத்ரபதி சிவாஜியின் எட்டு அமைச்சர்களில் ஒருவர். சிவாஜி இறந்து சாம்பாஜி அரியணைக்கு வந்த பிறகு  முந்தைய ஏதோ கசப்பின் காரணமாக அவருக்கு மரண தண்டனை அளித்து  கொன்று விட்டான். தன்னுடைய வலியையும் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும் மௌனமாக விழுங்கிக் கொண்டு சாம்பாஜிக்கு சேவை புரிந்தான்.

 மதுவுக்கு அடிமையாகி பெண்களை வேட்டையாடுவதை வழக்கமாக்கிக் கொண்ட சாம்பாஜியின் தீய பார்வை தன் சகோதரி மீது படிவதை அறிந்ததும், கற்பை பாதுகாத்துக் கொள்ள அவளை தற்கொலை செய்து கொள்ள வைத்தான்.

 சாம்பாஜியின் மோசமான குணங்கள் பற்றி தெரிந்திருந்தாலும் இந்துக்களை ஒன்றினைக்கும் அடையாளமாக சாம்பாஜி இருந்ததால் இந்து தர்மத்திற்காக காண்டோ பல்லால் சாம்பாஜிக்கு துணையாக இருந்தான். ஔரங்கசீப்பால் சாம்பாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது தன் உயிரை பணயம் வைத்து மீட்டு வந்தான்.

 சாம்பாஜியின் மரணத்திற்கு பின்பு அரியணைக்கு வந்த சாம்பாஜியின் சகோதரன் ராஜாராமிற்கும் விசுவாசமாக இருந்தான் காண்டோ பல்லால். செஞ்சிக் கோட்டையில் சிக்கிக் கொண்ட ராஜாராமை காப்பாற்றும் பணியில் இறந்து போகிறான்.

 எப்பேற்பட்ட தியாக வாழ்வு காண்டோ பல்லால் உடையது!”

 இதுதான் கோல்வால்கர் காண்டோ பல்லால் பற்றி எழுதியது.

 தந்தையை கொன்று, சகோதரியை பாலியல் வன்புணர்ச்சி செய்ய திட்டமிட்டு தற்கொலை செய்ய வைத்த சாம்பாஜியின்மீது கொஞ்சமும் கோபப்படாமல் விசுவாகமாக இருப்பதற்கு என்ன் பெயர்?

 கையாலாகாதவன் …

கோழை,

 சுயநலவாதி

 மத வெறி கண்ணை மூடியதால்  தன் வாழ்வை அழித்த சாம்பாஜிக்கு எதிராக திரும்பாமல் ஆதரவாக செயல்பட்ட  காண்டோ பல்லாலை மூடன் என்றழைக்காமல் வேறெப்படி அழைப்பது!

அவன் காட்டிய பாதையில் இன்றும் ஆயிரக்கணக்கான சங்கிகள்  பாஜக அரசால் தங்கள் வாழ்வாதாரம் அழிந்து போவதைக் கூடப் பற்றி கவலைப்படாமல் உசுப்பேற்ற்றப்பட்ட மதவெறி காரணமாக மூடர்களாக தங்களையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள். 

Tuesday, October 15, 2024

சங்கிகளுக்கு அறிவே கிடையாதா?

 


சங்கிகள் அறிவில்லாத முட்டாள்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருப்பார்கள்.



பாலங்களின் மீது கார்களை நிறுத்தி விட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாதா? ஆம்புலன்ஸோ அல்லது தீயணைப்பு வாகனமோ போக முடியவில்லையென்றால் எப்படிப்பட்ட பாதிப்பு வரும், இழப்பு ஏற்படும் என்பதைப் பற்றியெல்லாம் பதிவு போடும் முட்டாள்களை என்ன செய்வது?

உடன்பிறப்புக்களும் ஒன்றை மறந்து விடக்கூடாது. சாம்சங் பிரச்சினையில் வேண்டுமானால் சங்கிகள் உங்களை ஆதரிக்கலாம். ஆனால் மற்ற சமயங்களில் எல்லாம் அவர்கள் உங்களுக்கு எதிராகவே இருப்பார்கள். அதனால் எச்சரிக்கையாக இருங்கள். நேச சக்திகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். 

Saturday, August 26, 2023

மாட்டு மூளைக்காரர்கள்

 


திரைக்கலைஞர் பிரகாஷ்ராஜை சங்கிகள் நாய்களைப் போல கடித்துக் குதறியிருக்கிறார்கள். கர்னாடகாவில் போலீஸில் புகார் கொடுத்து வழக்கு பதிந்துள்ளார்கள்.

அதற்கு என்ன காரணம்?

ட்விட்டரில் அவர் பகிர்ந்து கொண்ட படமும் செய்தியும்.

என்ன அது?

இதுதான்


வாவ், நிலவிலிருந்து சந்திராயன் அனுப்பப்போகும் முதல் புகைப்படம் இதுவாக இருக்கும் என்று அவர் எழுதியிருந்தார். 

இதற்குத்தான் சங்கிகள் குதி குதி என்று குதித்தார்கள்.

அந்த மூடர்கள் அறியாத ஜோக் ஒன்று உண்டு,

ஆர்ம்ஸ்டிராங்கும் ஆல்ட்ரினும் நிலவில் கால் வைத்த போது ஒரு கேரள டீக்கடைக்காரர் கையில் டீ க்ளாஸுடன் அவர்களை வரவேற்றார் என்பது அந்த ஜோக்.

இதே ஜோக்கை டென்சிங்கும் ஹில்லாரியும் எவரெஸ்டை அடைந்த போது நிகழ்ந்ததாகவும் சொல்வார்கள்.

எனக்கு பெயர் மறந்து போன ஒரு திரைப்படத்தில் சாலையில் போக்குவரத்து அதிகமாக உள்ளதால் பாதாள சாக்கடை வழியாக பயணிக்கும் விவேக் கையில் டீ க்ளாஸோடு வருவார். உள்ளே ஒரு நாயர் டீக்கடை போட்டுள்ளதாகவும் சொல்வார்.

இந்த ஜோக்கை புரிந்து கொள்ள முடியாத மாட்டு மூளைக்காரர்களால், சந்திராயன் வெற்றிகரமாக நிலவில் கால் பதித்தவுடன் எடுத்த முதல் புகைப்படம் என்பதில் சந்திராயனின் வெற்றி  சொல்லப்படுகிறது என்பதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. 

டீ விற்பவர் படம் போட்டவுடன் டிமோ வை குறிப்பதாக நினைத்துக் கொண்டு விட்டார்கள் போல .  .

அடேய்களா, டீ விற்றதாக அந்தாள்தானய்யா கதை விட்டான்! அதை கூட புரிந்து கொள்ள முடியாத மாட்டு மூளைக்காரர்கள்தானே நீங்கள்!

Tuesday, March 14, 2023

முட்டாள் சங்கிகளே மோடியின் . ..

 


அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவாலாகி விட்டது. அது ஏன் திவாலானது என்பதைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் சங்கிகள் "மத்யமர் ஆட்டுக்காரன்" குழுவில் போட்டுள்ள பதிவுகளை படித்து மகிழுங்கள்.







மோடியின் எஜமான் அதானி செய்துள்ள முறைகேடுகளைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் அதனால் இந்திய வங்கிகள் அடையப் போகும் பாதிப்புக்களைப் பற்றியும் கவலைப்படாமல் அமெரிக்க வங்கி திவாலானதற்கு மகிழ்ச்சியடையும் இந்த முட்டாள்களே மோடியின் மூலதனம். 

இந்த மூடர்களுக்கு சொந்த அறிவும் கிடையாது, சொல் புத்தியும் கிடையாது. 

அதனால்தான் அவர்கள் மோடியை ஆதரிக்கிறார்கள். . .

Tuesday, May 17, 2022

மசூதியில் லிங்கம் - மர்மமென்ன?

வாரணாசி கியான்வாபி மசூதியின் குளத்தில் சிவலிங்கம் இருப்பதாக லோக்கல் கோர்ட் நியமித்த அதிகாரி சொல்ல, அந்த இடம் இப்போது சீல் வைக்கப்பட்டுள்ளது. 

பாபர் மசூதியில் ராமர் சிலையை திருட்டுத்தனமாக நடு ராத்திரியில் வைத்தது போல இங்கேயும் திருட்டுத்தனமாக கொண்டு வந்திருப்பார்கள் என்று நினைத்தேன். ஏனென்றால் சங்கிகள் மிகப் பெரிய கிரிமினல்கள்.

ஆனால் அவர்கள் லிங்கம் என்று எதை சொல்கிறார்கள் என்பதை எழுத்தாளர் தோழர் சம்சுதீன் ஹீரா பகிர்ந்து கொண்டிருந்த பதிவு தெளிவாக்கி விட்டது.

ஆனாலும் கண்டுபிடிக்கப்பட்டது லிங்கம்தான் என்று அயோக்கிய சங்கிகள் பரப்புவார்கள். அடிமுட்டாள் சங்கிகள் அதை நம்பி இன்னும் நாசமாக போவார்கள், நாட்டையும் நாசமாக்குவார்கள்.


 கியான்வாபி மசூதியின் பின்பக்க சுற்றுச்சுவரின் வெளியே ஒரு பெண் தெய்வத்தின் உருவம் இருப்பதாகவும் அங்கு தினமும் பூசை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் டெல்லியை சேர்ந்த நான்கு பெண்கள் வழக்கு தொடுத்தார்கள்.


இதுபற்றி பள்ளிவாசலின் சம்பந்தப்பட்ட வெளிப்புற சுற்றுச்சுவரை ஆய்வு செய்து வீடியோ எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய ஒரு சங்கி   தலைமையில் இரு தரப்பு வழக்கறிஞர்களை கொண்ட குழுவை அமைத்தது உள்ளூர் சிவில் கோர்ட்.

நீதிமன்ற உத்தரவுக்கு புறம்பாக, பள்ளிவாசலின் உள்ளேயும் ஆய்வு செய்து வீடியோ எடுக்க முயன்றார்கள். இதை முஸ்லீம் தரப்பு கடுமையாக ஆட்சேபனை தெரிவித்தது. பதற்றம் ஏற்பட்டதால் அன்று பள்ளிவாசலுக்குள் நுழைவது நிறுத்தப்பட்டது.

மறுநாள் முஸ்லீம் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. நிவாரணம் கிடைக்கவில்லை.

அடுத்து ஏராளமான போலீசாரை குவித்து, பள்ளிவாசலுக்குள் நுழைந்து வீடியோ எடுத்தார்கள்.  

பள்ளிவாசல் குளத்துக்குள் சிவலிங்கம் இருப்பதாக விஎச்பி தரப்பு அறிக்கை கொடுத்து மீடியாவுக்கும் பேட்டி கொடுத்தது. உடனடியாக பள்ளிவாசல் வளாகத்தில் யாரும் நுழையாதபடி சீல் வைக்கவும் மேற்படி சிவலிங்கத்தை பாதுகாக்கும்படியும் சிவில் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

குளத்தில் சிவலிங்கம்னு இவனுங்க சொல்றது, தொழுகைக்கு செல்பவர்கள் கை கால் முகம் கழுவ பயன்படுத்தும் ஹவுது என்ற சிறிய நீர் தொட்டிக்கு நடுவில் அலங்காரத்துக்கு இருக்கும் நீரூற்று போன்ற கல்லை தான்.

இந்த அலங்கார கல் இவனுகளுக்கு சிவலிங்கமாக தெரிகிறதாம். கீழே உள்ள போட்டோவில் இருக்கும் இப்படிப்பட்ட அலங்கார நீரூற்று கற்கள் முகலாயர் காலத்து மசூதிகளில் மட்டுமல்ல உள்ளூர் மசூதிகளிலும் இருக்கும்.

இப்ப கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக பரப்பி சீலும் வைத்து விட்டார்கள். இனி "சட்டப்படி" பெரும்பான்மையினரின் மத நம்பிக்கையின் அடிப்படையில் பள்ளிவாசலை அவர்களிடம் ஒப்படைக்கப்படும்..

பாபர் மசூதி இடிப்பின் போது கூட பல கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. இப்போது இந்த நீதிமன்ற பயங்கரவாதத்திற்கு எதிராக சின்ன முணுமுனுப்பு கூட காணோம்..

Saturday, September 25, 2021

இது அமெரிக்காவுக்கு தெரியுமா மோடி?


கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மோடி கற்றுக் கொள்ள வேண்டும் என்று வாஷிங்டனில் உள்ள ஒரு நீதிமன்றம் அறிவிறுத்தியதாக ஒரு செய்தி சுற்றிக் கொண்டிருக்கிறது. அதன் மெய்த்தன்மையை சரி பார்க்க முடியாததால் அது பற்றி கருத்து சொல்வதும் சரியாக இருக்காது. 

ஆனால் அதே நேரம் WE SUPPORT NIRMALA SEETHARAMAN என்ற குழுவில் வெளியான ஒரு செய்தியை படித்தேன். அந்த காமெடியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 

 


பிரதமர் மோடி முகக்கவசம் இல்லாமல் அமெரிக்காவில் வலம்வருவது ஏன் வெளியான சீக்ரெட் தகவல்!

 பிரதமர் மோடி 3 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்,  அவரை வரவேற்க ஏராளமான இந்தியர்கள் சூழ்ந்த நிலையில், தன்னை வரவேற்க காத்திருந்த இந்தியர்களிடம் கையசைத்தும்,கைகளை கொடுத்தும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் பிரதமர் மோடி.

  அமெரிக்காவில் இந்தியர்களை சந்தித்தபோது பிரதமர் மோடி முக கவசம் அணியாமல் இருந்தார், இந்தியாவில் முக்கிய நிகழ்ச்சிகளில்  குறிப்பாக தேர்தல் பிரச்சாரம் தொடங்கி முக்கிய அரசு நிகழ்ச்சிகள் வரை பொதுமக்களை சந்திக்கும் போதும் எப்போதும் முகக் கவசம் அணிந்து காணப்படுவார் மோடி.

 இந்நிலையில் பிரதமர் மோடி அமெரிக்காவில் முக கவசம் இல்லாமல் வலம்வந்தது ஏன் என்று கேள்வி எழுந்தது, மேலும் தனது பாதுகாப்பையும் மீறி பொதுமக்களிடம் கை குலுக்கியது ஏன் என்ற கேள்வியை எழுப்பியது.

 இந்த நிலையில் அதற்கு பதில் கிடைத்துள்ளது, உலகிலேயே தடுப்பூசிகளை அதிக அளவில் மக்களுக்கு செலுத்திய ஒரே நாடு இந்தியா, இரண்டு விதமான தடுப்பூசிகளை தயாரித்துள்ளது,  ஒன்று கோவிசில்டு மற்றொன்று கோவாக்சின், இதில் கோவாக்சின் ஆனது, முழுக்க முழுக்க இந்திய அறிவியல்  தொழில்நுட்பத்தில் கண்டறியப்பட்டது, இதன் பயன்பாடு உலக அளவில் கொரோனாவை   எதிர்த்துப் போராடுவதில் அதிக வலிமை வாய்ந்ததாகவும் கூறப்படுகிறது.

  ஆனால் இந்தியா மீது உள்ள  காழ்புணர்ச்சியின் காரணமாக  உலக  சுகாதார அமைப்பானது, புதிய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை அங்கீகரிக்கவில்லை, இருப்பினும் மனம் தளராத இந்தியா தொடர்ந்து பிரதமர் மோடியின் முன்னேற்ற திட்டங்கள் மூலம் , மக்களை சென்று அடையும் விதமாக இந்திய மக்களுக்கு இலவசமாக  கோவாக்சின்  தடுப்பூசி வழங்க திட்டமிட்டது.

  பல கோடி இந்தியர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை செலுத்தியது மத்திய அரசு, அதன் எதிரொலியாக இந்தியாவில் கொரோனா  கட்டுப்படுத்தப்பட்டது, இந்தநிலையில் இந்திய நாட்டின் தடுப்பூசி திறமையை வெளிக்காட்டவும் உலக நாடுகளின் கவனத்தை பெறவும், பிரதமர் மோடி முகக்கவசம் இன்றி அமெரிக்காவில் வலம் வந்ததாக கூறப்படுகிறது.

  எங்கள் சொந்த தயாரிப்பான தடுப்பூசி மிகவும் வலிமை வாய்ந்தது என காட்டவும் உலக நாடுகள் எங்களது தடுப்பூசியை பின்பற்றலாம் என தெரிவிக்கவும், மோடி முக கவசம் இன்றி உலக மக்களுக்கும் உலக நாடுகளுக்கும் செய்தியை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பிரதமர் மோடியின் செயல்பாடு இந்திய மக்களிடையே பெரிதும் போற்றதக்கதாக அமைந்துள்ளது.

  அதேநேரத்தில் உலக நாடுகளின் பார்வையிலும் இந்தியப் பிரதமர்  முகக்கவசம் இன்றி தைரியமாக வெளிவரும் நிலையில் கோவக்ஸின் தடுப்பூசி ஆனது மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கும் என்ற நம்பிக்கையும் உருவாக்கியுள்ளார் பிரதமர் மோடி.  பிரதமர் மோடி 100% இந்திய தயாரிப்பான கோவக்சின் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

நாடோடிகள் படத்தில் வருவது போல ஒரு தனி குழுவே இப்படி டுபாக்கூர் செய்திகளையும் வீர தீர பிரதாபங்களையும் பரப்ப பாஜக வைத்துள்ளது.

இதையும் நிஜமென ஒரு மூடர் கூட்டம் நம்பும். அதுதான் கொடுமை.