Monday, April 6, 2020

23 ம் புலிகேசியின் அவையில்

ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அவர்களின் முக நூல் பதிவு 

Inspired by Valluvar
இந்த
ஐரோப்பாக்காரன்களுக்கு
இருக்கும்
அழிச்சாட்டியத்திற்கு
அளவே இல்லை.
அவன்களின்
நகைச்சுவைக்கு கூட
நாலு காரணம் இருக்கும்.

அதற்காக இப்படியா?
புலிகேசியின் தர்பாரே
ஒரு கிறுக்கு மேடை தான்.
அதில் அவ்வப்போது
"கப்சி" காரன் பங்களிப்பு வேறு.
"மாமன்னன் புலிகேசியே
தங்களை
"அசப்பில் பார்த்தால்
அலெக்சாண்டர் போலவும்
நிமிர்ந்து பார்த்தால்
நெப்போலியன் போலவும்
இருக்கிறீர்கள்" என்று
கப்சிகாரன்
"மப்பில்" சொன்னான்.
ராஜகுரு
"பேஷ், பேஷ்" என்றதால்
அந்த அவை
அதை
விசிலடித்து வரவேற்றது.
ராஜகுரு பாராட்டியதற்கு
இரண்டு காரணங்கள்.
1. தனது உலக‌ ஞானத்தை பதிவு செய்வது.
2. தனது மனதிற்கு பிடித்த
சில சுதேசி மாமன்னர்களை
"கப்சி" காரன் விட்டுவைத்தான்
என்ற மகிழ்ச்சி.
ஆனால்
புலிகேசியின் பாடுதான்
பரிதாபமாக இருந்தது.
அலெக்சாண்டர் என்பது யார்?
நெப்போலியன் என்பது யார்?
"ஒரே கன்பூசனா இருக்கே"
அந்த அவையில்
விசில் அடித்த‌ எவனுக்கும்
அவர்களை தெரியாது என்பது
அவனுக்கு தெரியும்.
"மங்குனியை கேட்போமா"
மீசையை தடவுவது போல
பாவனை செய்து கொண்டே
மங்குனியை கேட்டான்.
மங்குனி
"அலெக்சாண்டரை அறவே தெரியாது
ஆனால்
நெப்போலியன்
திப்பு சுல்தானுக்கு வேண்டியவன்
என்று கேள்விப்பட்டிருக்கிறேன்"
என்றான்‌ மங்குனி.
திப்புசுல்தானுக்கு
தெரிந்தவனோடு
எதற்காக
முடிச்சு போடுகிறான்
இந்த "கப்சி.."
அது தெரிந்தும்
ராஜகுரு ஏன்
"பேஷ் பேஷ்" என்றான்!
"கன்பூசன்" மேலும்
கரை புரண்டது.
திப்புசுல்தானுக்கு
ராஜகுருவின்
பெரிய தோப்பனார் தான்
நெருங்கிய ஆலோசகராக
இருந்தார் என்பது
புலிகேசிக்கு தெரியாது.
அந்த அளவுக்கு
விவரமாய் இருந்தால்
அவன் ஏன்
புலிகேசியாய்‌
இருக்கப்போகிறான்.
புலிகேசியின்
குழப்பத்தை தனது
கூர்மதியால் உணர்ந்த
"கப்சி" காரன்
அலெக்சாண்டர்
நெப்போலியன் ஆகிய
இருவரின்
சுய-விவரக்குறிப்பை
விவரித்தான்.
புலிகேசி புல்லரித்தான்.
அப்போது தான்
ராஜகுரு
ஒரு புதிய கோணத்தில்
அடித்து முன்னேறினான்.
"நெப்போலியனின்
ஜன்ம லக்னமும்
புலிகேசியின்
ஜன்ம லக்னமும்
ஒன்றே"
என்று ஒரு
கற்பனையை
நிஜம் போல
கசிய விட்டான்.
"சிவப்பாக இருப்பவன்
எப்போது
பொய் சொல்லி இருக்கிறான்?"
"இந்த விஷயம்
ஏற்கனவே
தெரியும்" என்பது போல
சிரித்துத் தலையசைத்தான்
புலிகேசி.
இது
பொய் என்று புரிந்தாலும்
"கப்-சிப்"பாக இருந்தான் கப்சி.
புலிகேசி சிரித்த
மறுநொடியே
துதிபாடி தூள் கிளப்புவது
மகிழ்நிதியின்
சொல் வணிகர்களின்‌
மரபு.
எழுந்து நின்றார்கள்.
எடுபிடிகள்.
" இன்று‌ முதல் நீ
நீடுபுகழ்
"நெப்புலிகேசி"என்றும்
அடங்கா ஆற்றல்
"அலெக்ஸ் புலி" என்றும்
மாறி மாறி
அறியப்படுவாய் ஆகுக"
அவை
அத்துடன் கலைந்தது.

ஆர்.பாலகிருஷ்ணன்

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின்.
குறள் 838

மு.வ உரை:
பேதை தன் கையில் ஒரு பொருள் பெற்றால் (அவன் நிலைமை) பித்து பிடித்த ஒருவன் கள்குடித்து மயங்கினார் போன்றதாகும்.

Translation:
A fool happening to possess something is like the intoxication of one who is (already) giddy.

1 comment:

  1. அருமையான ஒரு தகவல்

    http://www.ypvnpubs.com/2020/04/unicode-voice-to-typing.html

    ReplyDelete