எல்.ஐ.சி இன்று 54 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பெரும் நிறுவனமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, பாலிசிதாரர்களின் நம்பிக்கையாக திகழ்கின்றதென்றால் அது ஒரே நிறுவனமாக நீடிப்பதால்தான் சாத்தியமானது. ஐந்து கூறுகளாக பிரிக்கும் சதி முறியடிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் எல்.ஐ.சி ஒரே நிறுவனமாக நீடிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தோழர் சுனில் மைத்ரா என்பதற்கு ராஜீவ் காந்தியின் கடிதமே சான்று.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, September 17, 2025
எல்.ஐ.சி யை, எல்.ஐ.சி யாகவே நீடிக்க வைத்தவர்
எல்.ஐ.சி இன்று 54 லட்சம் கோடி சொத்து மதிப்புள்ள பெரும் நிறுவனமாக, இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, பாலிசிதாரர்களின் நம்பிக்கையாக திகழ்கின்றதென்றால் அது ஒரே நிறுவனமாக நீடிப்பதால்தான் சாத்தியமானது. ஐந்து கூறுகளாக பிரிக்கும் சதி முறியடிக்கப்பட்டதன் காரணமாக மட்டும் எல்.ஐ.சி ஒரே நிறுவனமாக நீடிக்கிறது. அதற்கு முக்கியமான காரணம் தோழர் சுனில் மைத்ரா என்பதற்கு ராஜீவ் காந்தியின் கடிதமே சான்று.
Sunday, September 18, 2022
எல்.ஐ.சி பிளவை தடுத்த தலைவர்
ஆறு வருடங்களுக்கு முன்பாக எழுதியதை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன். எல்.ஐ.சி யை ஐந்து கூறுகளாக பிரிக்க முயன்ற இந்திரா காந்தியின் முயற்சியை முறியடித்ததில் முக்கிய பங்காற்றிய தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளில் வரலாற்றை நினைவு கூர்கிறேன். அதுதான் எதிர்கால இயக்கங்களுக்கு ஊக்கம் தரும்.
வைர விழாவும் அந்த முன்னாள் டைப்பிஸ்டும்
Sunday, September 19, 2021
அந்த காலத்திற்கே ஒரு பயணம் . . .
அர்த்தமிக்க உரை. அவசியம் பார்க்கவும்
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போர்ப்படைத் தளபதி தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு எங்கள் வேலூர் கோட்டச் சங்கத்தின் சார்பில் நேற்று நடைபெற்ற இணைய வழி கருத்தரங்கில்
தமுஎகச அமைப்பின் மதிப்புறு தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன்
"என்று தணியும்???"
என்ற தலைப்பில் ஆற்றிய அருமையான, அர்த்தமிக்க, அற்புத உரையை
இந்த யூட்யூப் இணைப்பில் சென்று பாருங்கள்.
நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். சுதந்திரப் போராட்ட காலத்திற்கு சென்று வருவீர்கள், நிகழ்காலத்தின் பொறுப்புக்களும் புரியும்.
பிகு
தோழர் சுனில் ஒவியம் ஆரணி கிளைச் செயலாளர் தோழர் ஜே.சுரேஷ் கைவண்ணம்
Sunday, September 20, 2020
ராஜீவ் காந்தி அனுப்பிய கடிதம்
நேற்று முன் தினம் எங்கள் மகத்தான் தலைவர் தோழர் சுனில் மைத்ரா அவர்களின் நினைவு நாளன்று எழுதிய பதிவில் எல்.ஐ.சி நிறுவனத்தை ஐந்தாக பிரிக்கும் முடிவை கைவிடுவது என்ற மத்தியரசின் முடிவை ராஜீவ் காந்தி தோழர் சுனில் மைத்ரா அவர்களுக்குத்தான் கடிதம் எழுதி தெரிவித்திருந்தார் என்று குறிப்பிட்டிருந்தேன்.
ஒரு அனானி சங்கி அப்படி கடிதம் இருந்தால் அதை வெளியிட வேண்டியதுதானே, சும்மா கதை விடாதே என்று சவால் விட்டிருந்தது. பாவம் மோடியின் பொய்களை கேட்டு கேட்டு எல்லோருமே பொய்தான் பேசுவார்கள் என்ற நினைப்பு போல. இதோ அந்த கடிதம்.
ஏற்கனவே ஒரு முறை இங்கே பகிர்ந்து கொண்டதால், இம்முறை பகிர்ந்து கொள்ளவில்லை. எங்களின் வரலாற்று ஆவணம் அல்லவா இக்கடிதம்!
அந்த அனானி சங்கி நாங்கள் ஒன்றும் "கதை அளந்து மாட்டிக் கொண்ட கங்கணா ராவத்" அல்ல என்று இப்போதாவது புரிந்து கொள்ளட்டும்.
அது என்ன கதை அளந்து மாட்டிய கங்கணா என்று கேட்கிறீர்களா?
அதுதானே அடுத்த பதிவு . . .
பிகு: கல்கத்தாவில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டு மாநாட்டிற்கு தோழர் ஜோதிபாசுவை தோழர் சுனில் மைத்ரா அழைத்து வருவதுதான் மேலே உள்ள படம்.







