Showing posts with label கம்யூனிஸம். Show all posts
Showing posts with label கம்யூனிஸம். Show all posts

Saturday, November 7, 2020

வரும், நிச்சயம் மீண்டும் வரும்





 
மனிதனை மனிதன் சுரண்டும்
இழிநிலை தொடர்கிறது.

வறியவனுக்கும் வளம் படைத்தவனுக்குமான
இடைவெளி அதிகரிப்பதும் தொடர்கிறது.

இல்லாதவனிடமுள்ள சொற்பத்தையும் பறித்து
இருப்பவனுக்கே சேர்க்கிற அரசுகள் தொடர்கிறது.

பசியும் பஞ்சமும் பட்டினியுமாய் நரகத்தில் பலர் உழல,
சொர்க்கத்தில் பலர் மிதப்பதும் தொடர்கிறது.

அடக்கி வைக்கப்படும் ஆத்திரம்
பெரும் புயலாய் சீறிப் பாயும்.

உள்ளத்துக்குள் குமுறுபவர்கள்
எரிமலையாய் வெடிப்பார்கள்.

வருடங்கள் ஓடினாலும் 
அன்றைய சூழல் மீண்டும் வருகையில்

அன்று உலகைக் குலுக்கிய
ரஷ்யப்புரட்சி 
இனி உலகெங்கும் மீண்டும் வரும்.
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டுமென்ற
பொதுவுடமை மாற்றம் மீண்டும் வரும்.
நிச்சயம் வரும்.

நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள் 

 



Saturday, October 17, 2020

நூற்றாண்டுப் பெருமிதம்

 இந்தியாவில் கம்யூனிஸ இயக்கம் இன்றோடு நூற்றாண்டுகளை நிறைவு செய்கிறது. நூறாண்டு கண்ட இயக்கத்தோடு இருபத்தி ஐந்து ஆண்டுகளாக இணைந்து நிற்கும் பெருமிதத்தோடு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ன் தமிழ் மாநிலக்குழு வெளியிட்டுள்ள வரைபடங்களை பகிர்ந்து கொள்கிறேன்.























#CommunistPartyAt100


Friday, June 5, 2020

முழங்கிக் கொண்டே இருப்போம் “லால் சலாம் காம்ரேட்”




குடியுரிமைச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்றவர்களை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ள தேசிய புலனாய்வு முகமை, அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டாக கூறியுள்ளது என்ன தெரியுமா?

அவர்கள் முக நூலில் “லால் சலாம்” என்ற , “காம்ரேட்” என்ற வாசகங்களை பயன்படுத்தியுள்ளார்கள். லெனின் அவர்களின் படத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்கள்.

இந்த கொடுமை நிகழ்ந்தது அஸ்ஸாமில். 



செவ்வணக்கம் என்ற வார்த்தையும் தோழர் என்ற வார்த்தையும் உங்களுக்கு சட்ட விரோதமாக தோன்றுகிறது என்றால்

அதை ஆயிரம் முறை அல்ல, அதற்கு மேலும் முழங்கிக் கொண்டே இருப்போம்.

நீங்கள் எழுப்புகிற “ஓம் காளி, ஜெய் காளி, ஜெய் ஸ்ரீராம்”  முழக்கங்கள், பிரிவினையை தூண்டுஇற, வெறியை தூண்டுகிற முழக்கங்கள். அந்த முழக்கத்தை எழுப்பாதவர்களை கொலை செய்கிற உங்களுக்கு எங்களின் முழக்கங்கள் பற்றி என்ன தெரியும்!

நாங்கள் எழுப்பும் “லால் சலாம்: இன்குலாப் ஜிந்தாபாத்” முழக்கங்கள், உழைக்கும் மக்களை ஒன்று படுத்தும் நோக்கமுடையவை, அவர்களை சுரண்டலிலிருந்து விடுதலை செய்யும் நோக்கமுடையவை. சாதாரண மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கமுடையவை.

கைது, சிறைச்சாலை என்று அஞ்சி நடுங்கி மண்டியிட்டு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து, காட்டிக் கொடுக்கிற கோழை சாவர்க்கர், அடல் பிகாரி வாஜ்பாய், தேவரஸ் போன்றவர்களை பின்பற்றும் கேவலமானவர்கள் நீங்கள்.

இளம் வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட பகத்சிங், பதினான்கு வயதினிலே துப்பாக்கிக் குண்டுகள் துரத்திய போதும் கொடிமரத்தில் ஏறி பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியை அறுத்தெறிந்து இந்திய விடுதலைப் போராட்ட உணர்வின் அடையாளமான மூவர்ணக் கொடியை ஏற்றி  நான்காண்டுகள் சிறையில் வாழ்ந்த தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், வாரணாசி பல்கலைக் கழகத்தில் படிக்கையிலே பிரிட்டிஷ் காவல்துறை சாலைகளை அடைத்து விட கங்கை நதியிலே நூற்றுகணக்கான மாணவர்களை ஒருங்கிணைத்து, படகுகளில் பயணித்து “சைமன் கமிஷனே திரும்பிப் போ” என்று கறுப்புக் கொடி காண்பித்த தீரர் தோழர் பி.ராமமூர்த்தி ஆகியோரின் வீர மரபிலே வந்தவர்கள் நாங்கள். 

உலகின் முதல் புரட்சியை சாத்தியமாக்கிய தோழர் லெனின்தான் எங்களுக்கு என்றும் ஆதர்ஸம்.

அதனால் மீண்டும் மீண்டும் முழங்குவோம்.

லால் சலாம் காம்ரேட்,
இன் குலாப் ஜிந்தாபாத்,,
செவ்வணக்கம் தோழர்களே,
புரட்சி ஓங்குக



Thursday, October 17, 2019

இன்று மிகவும் பொருத்தமாய்



இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டு விழா தொடக்கம்.

கவியரசு கண்ணதாசனின் நினைவு நாளும் கூட.

இந்தப் பாடலை இன்று பகிர்வது மிகவும் பொருத்தமானது அல்லவா !


வாழ்ந்துபார் புரியும்!

Image may contain: sky and cloud

குருதி என்பது வெறும் திரவமல்ல உடலின் உயிர்!
சிவப்பு என்பது வெறும் வண்ணமல்ல
உலகின் உயிர்!
இந்திய மண்ணில் சிவப்பின்
நூற்றாண்டு இது!
என்ன செய்தீர் என்பவற்கு சொல்வோம்
எதை செய்யவில்லையென்று!
எல்லா சிறைகளுக்கும் சென்று பார்
அதுதானே எங்கள் பாசறை!
ஊழலுக்காக ஒரு வழக்கும் இல்லை
உயிரெனக் கொண்ட கொள்கைக்காக!
வீசும் காற்றைக் கேட்டுப்பார் எங்கள்
வீரகாவியத்தை விவரிக்கும்!
வீரத்தெலுங்கானா கையூர் காவியம்
தேபாகா,புன்னப்புரா என நீளும்!
சுந்தரையா,சுர்ஜித்து,ஜோதிபாசு
இ.எம்.எஸ்,பி.டி.ஆரு,ஏ.கே.ஜி!
ராமமூர்த்தி,ஜீவா,சீனிவாசராவ்
எம்.ஆர்.வி,ஏ.பி,நல்லசிவன்!
உமாநாத்,ஜானகியம்மா,பாப்பா,
வி.பி.சிந்தன்,சங்கரய்யா!
சரித்திரம் முழுதும் நிறைந்திருக்கும்
சிவப்பின் அடையாளங்கள்!
காற்று தனக்காக வீசுவதில்லை
பூக்கள் தனக்கென்று மலர்வதில்லை!
மரங்கள் தனக்காக காய்ப்பதில்லை
கனியும் தனக்கென்று கனிவதில்லை!
எங்கள் வாழ்வும் அப்படியே
அது எங்களுக்கானதன்று!
இது என்ன வாழ்கை என்பீர்
வாழ்ந்துபார் புரியும்!

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நூற்றாண்டு விழா  இன்று தொடங்குகிறது.

உணர்ச்சியூட்டும் இக்கவிதையை எழுதியவர் 
தோழர் கே.சாமுவேல் ராஜ் 
பொதுச்செயலாளர் ,
தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி 

Saturday, November 26, 2016

மகத்தான புரட்சித்தலைவருக்கு . . . .



செவ்வணக்கம் தோழர் பிடல் காஸ்ட்ரோ



கியூபப் புரட்சியின் தலைவரான தோழர் பிடல் காஸ்ட்ரோவின் மரணம் அதிர்ச்சியும் துயரமளிக்கிறது.

சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி சோஷலிச ஆட்சியை மலர வைத்தவர்.

பசிப்பிணியை முற்றிலும் போக்கியவர். 

அனைவருக்கும் கல்வி என்பதை உறுதி செய்தவர்.

மருத்துவத்தையும் மருத்துவக் கல்வியையும் விரிவுபடுத்தியவர்.

குழந்தைகள் இறப்பு விகிதத்தை உலகிலேயே மிகவும் குறைவாக மாற்றிக் காட்டியவர்.

பொருளாதாரத் தடைகள் என்று புரட்சியை முடக்க நினைத்தாலும் அதை முறியடித்தவர்.

அவரை கொலை செய்ய நடந்த அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போய் இன்று அவரை இயற்கையால் மட்டுமே வெல்ல முடிந்திருக்கிறது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து சோஷலிச சக்திகளுக்கும் ஆதர்ஸம்.

சோர்வுறும் தருணங்களில் நீதிமன்றத்தில் அவர் ஆற்றிய உரையைக் கொண்ட “வரலாறு என்னை விடுவிக்கும்” நூலை படித்தால் போதும். எழுச்சியும் வேகமும் உடனடியாய் கிடைக்கும்.

மகத்தான புரட்சித்தலைவருக்கு செவ்வணக்கம்