Saturday, April 4, 2020

மோடி முன் கூட்டி சொன்னதனால் . . .



ஊரடங்கு உத்தரவுக்கு நான்கு மணி நேர அவகாசம் கொடுத்த மோடி விளக்கு ஏற்றுவதற்கு மட்டும் ஐம்பது மணி நேரத்திற்கு முன்பே தகவல் சொல்கிறார் என்று ஒரு விமர்சனம் பார்த்தேன்.

அது சரியானதுதான்.

அந்த நான்கு மணி நேர அவகாசம் என்பதுதான் இன்று கோடிக் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வில் இருளைக் கொண்டு வந்து சேர்த்துள்ளது. அந்த இருளைப் போக்க வழி செய்யாமல் விளக்கேற்று என்ற அறிவிப்பு எல்லாம் வெறும் நாடகத்தனம். ஆட்சியாளர்களின் தோல்வியிலிருந்து மக்களை  கவனத்தை திசை திருப்பும் கேவலமான உத்தி. 

ஆகவே மோடி அறிவித்துள்ள்படி நாளை இரவு எரியும் விளக்குகளை அணைக்கவும் மாட்டேன். ஒன்பது நிமிடங்களுக்கு அகல் விளக்கோ, மெழுகு வர்த்தியோ, செல்போன் லைட்டோ, டார்ச் லைட்டோ காண்பிக்க மாட்டேன்.  போட்டோ எடுத்து வாட்ஸப்பிலும் முக நூலிலும் போட்டு விளம்பரம் செய்து கொள்பவர்கள் வேண்டுமானால் மோடியின் நாடகத்தின் கதாபாத்திரங்களாக மாறிக் கொள்ளட்டும்.

ஆனால் இந்த முறை ஐம்பது மணி நேர அவகாசம் கொடுத்தது நல்லதாய் போயிற்று.

இந்த ஒன்பது நிமிட கூத்தின் விளைவுகளை மின் வாரிய பொறியாளர்கள் உணர்ந்து எச்சரித்துள்ளனர்.

ஏற்கனவே தொழிற்சாலைகளுக்கான மின் வினியோகம் என்பது இல்லாத சூழலில் ஒன்பது நிமிடங்கள் அனைத்து விளக்குகளையும் அணைத்து மீண்டும் எரிய விடுகிற போது ஏற்படுகிற திடீர் அழுத்தம் காரணமாக மின் தடை ஏற்பட்டு மின் வினியோகம் பாதிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்ப நீண்ட  காலம் எடுக்கும் என்று எச்சரிக்கிறார்கள். வட கிழக்கு மாநிலங்களில் இது போன்ற நிலை 2012 ல் ஏற்பட்ட போது மீண்டும் மின்சார வினியோகம் தொடங்க இரண்டு நாட்கள் என்ற வரலாற்றுத்தகவலை பகிர்ந்து கொண்டுள்ளார் ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன்.

தயார் நிலையில் இருக்குமாறு அனைத்து ஊழியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.



ஃப்ரிட்ஜ், ஏ.சி போன்றவை இயங்கிக் கொண்டு இருக்கட்டும் என்று அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

நல்ல வேளை மோடி முன் கூட்டியே சொன்னதால் அதை சமாளிக்க மின் வாரியம் தயாராகி விட்டது. 

இல்லையென்றால் விளக்கேற்றிய பின்பு இந்தியாவை மீண்டும் இருள் சூழ்ந்திருக்கும்.

அதெப்படி மோடி தேர்ந்தெடுப்பது எல்லாமே தேவையற்ற ஆணியாகவே இருக்கிறது!!!!

2 comments:

  1. அருமையான கண்ணோட்டம்

    ReplyDelete
  2. நாட்டை, இருளை நோக்கி அழைத்துச் செல்லும் மோடி அவர்களின் இந்தத் திட்டம்!

    ReplyDelete