Showing posts with label பாமக. Show all posts
Showing posts with label பாமக. Show all posts

Saturday, August 9, 2025

இன்னும் நாலு ஜட்ஜுங்கள சேர்த்துக்குங்கய்யா . . .

 


இப்படி ஒரு போர்ட் விரைவில் எழுதப்பட்டால் அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. 

ஆமாம். நம்ம ஜட்ஜய்யா ஒருத்தரு இந்த வேலையைத்தான் நேத்து செஞ்சாரு. 


ஐய்யா, தலைமை நீதிபதி ஐய்யாங்களா, தமிழ்நாட்டில இந்த மாதிரி உதிரி கட்சிங்க நெறய இருக்கு! அதுக்குள்ள சண்டைங்களும் நெறய இருக்கு, அதனால டெல்லில சொல்லி கூட இன்னொரு நாலு ஜட்ஜுங்கள வேலைக்கு சேத்துக்குங்க. அவங்க பஞ்சாயத்துக்களை பாத்துக்கட்டும். இல்லாட்டி கேஸ் கட்டுங்க தேங்கிப் போய் கோர்ட்டுல இடம் பத்தாம போயிடப் போகுது. 

Friday, July 25, 2025

அன்புமணியால் சட்டம் ஒழுங்கு கெடும் - ஐயா

 


அன்பு மணி ஏதோ யாத்திரை போகிறாராம். அப்படி போனால் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விடும் என்பதால் அதனை தடை செய்ய வேண்டும் என்று பெரிய ஐயா போலீஸில் புகார் சொல்லியுள்ளார். தன் பெயரை இனிஷியலைத் தவிர வேறெதற்கும் பயன்படுத்தக்கூடாது என்றும் சொல்லியுள்ளார்.

இந்த காமெடிச்சண்டை போரடிக்கத் தொடங்கி விட்டது.  "கண்கள் பணித்தது, இதயம் கனத்தது, கனி இனித்தது" சீனை சீக்கிரமாக அரங்கேற்றுங்கள்.

Sunday, December 29, 2024

விசு படம் போல அந்த கட்சியிலும் . . .

 


மின்சாரப்படத்தில் விசுவுக்கும் ரகுவரணுக்கும் இடையில் நடந்த காரசார விவாதம் அந்த அப்பா மகன் கட்சிக்கும் பொருந்துதே . . .

மகன் : மாம்பழத்தை இன்னொரு வாரிசுக்கு தரக்கூடாது.

அப்பா : இதை யாரைப் பாத்து சொல்றேன்னு தெரியுதா?

மகன் : தெரியாது.

அப்பா : என் குடும்பத்தில இருந்து யாருக்காவது மாம்பழம் கொடுத்தா முச்சந்தியில நிறுத்தி சாட்டையால அடிங்கன்னு சொன்னாலும் உனக்கு மாம்பழம் கொடுத்த இந்த  அப்பாவை தெரியாதா?

மகன்: தெரியாது.

அப்பா : யாரோட கூட்டணி வச்சாலும் கட்சி தோத்தாலும் நீ டெல்லிக்கு போகனும்னு ராஜ்யசபா சீட் கேட்டு வாங்கின அப்பாவை ஞாபகம் இருக்கா?

மகன் : இல்லை

அப்பா : தர்மபுரியில நீ ஜெயிக்கனும்னு கலவரம் நடத்தி ஜாதிக் கூட்டணி உருவாக்கின இந்த அப்பா யாருன்னு புரியுதா உனக்கு?

மகன் : இல்லை.

அப்பா : அப்படின்னா கட்சியை விட்டு வெளியே போ!

மகன்: ஹலோ, அப்படி நான் கட்சியை விட்டு வெளியே போகனும்னா, நான் மந்திரியா இருக்கற போது வாங்கிக் கொடுத்த கோடிகளை திருப்பிக் கொடுங்க. . . .

அப்பா: மணி, கட்சி ஆபீசுக்கு நடுவுல ஒரு கோடு போடுங்க . . .

பிகு: இந்த கண்டெண்ட் இன்னொரு மீமும் கொடுத்துள்ளது. அது மாலை 

Saturday, April 13, 2024

அதுக்குள்ளயா மருத்துவர் அய்யா?

 


வழக்கமாக தேர்தல் முடிந்த பின்தான்  மருத்துவர் அய்யா கூட்டணியை முறித்துக் கொண்டு "பச்சைத்துரோகம். வெள்ளைத் துரோகம், மஞ்சள் துரோகம்" என்றெல்லாம் வஜனம் பேசுவார். இப்போது ஏன் தேர்தலுக்கு முன்பே?




ஒரு வேளை பாஜக கொடுத்த பணத்தில் செல்லாத நோட்டுக்கள் இருந்திருக்குமோ?

Thursday, November 18, 2021

சின்ன டவுட்டு சின்ன டாக்டரய்யா

 


 ஜெய்பீம் படம் தொடர்பாக டாக்டர் வகையறாக்கள் இரண்டு அம்சங்களை முன் வைத்து பிரச்சினை செய்து வருகிறார்கள்.

 ஒன்று அவர்கள் அமைப்பின் அடையாளம் காலண்டரில் தொங்குவது.

இரண்டாவது அவர்களின் தலைவர் பெயரை வில்லனுக்கு சூட்டியது.

 முதல் கேள்வி: அவர்கள் அமைப்பின் செயல்பாடுகள் என்ன? விழுப்புரம் மாவட்டத்தில் குடிசைகளை கொளுத்துவதில் தொடங்கியதுதானே அவர்கள் பணி! தர்மபுரி கலவரத்தை மறக்க முடியுமா? மக்களவைத் தேர்தலில் பொன்பரப்பியில் நடத்திய வெறித்தாண்டவத்தை மறக்க முடியுமா?   ஏன் சமீபத்தில் கூட சென்னையில் கல்லெறிதல் நடத்தவில்லையா?

 மரக்காணம் கலவரத்துக்காக பெரிய டாக்டர் கைது செய்யப்பட்ட நாளன்று தைலாபுரம் தோட்டத்திற்கு முன்பாக நடந்த வன்முறைக் கலவரத்தில் மயிரிழையில்  உயிர் பிழைத்தவன் நான்.

 அப்போது எழுதிய பதிவு இங்கே.

பாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்பினேன், புல்லரிக்கும் நேரடி அனுபவம்

உலக சமாதானத்திற்காக பாடுபடும் அமைப்பா என்ன உங்களுடையது சின்ன டாக்டரய்யா? 

 இருப்பினும் கூட அந்த சின்னம் மாற்றப்பட்டு விட்டது. இருந்தாலும் காலண்டரை பிடித்துக் கொண்டு தொங்குவது இழந்த செல்வாக்கை மீட்பதற்கான கேவலமான உத்திதான்.

 அடுத்ததாக வில்லனின் பெயர் கொண்ட தலைவர்.

 அவர் இறந்து போன காரணத்தால் விரிவாக எழுத விரும்பவில்லை. ஆனால் அவர் ஒன்றும் வள்ளலாரோ, அன்னை தெரசாவோ கிடையாதல்லவா? அவரது மருத்துவச் செலவுக்கு பணம் தராமல் சாக விட்டார்கள் என்று அவரது குடும்பத்தினரே குற்றச்சாட்டு வைத்தார்கள் என்பதை அவ்வளவு சுலபமாக மறந்து விட முடியுமா? அந்த பெயர் கொண்ட இன்னொரு ஆளும் மோசமான விஷம்தான்.

 டாக்டர் வகையறாக்களின் தொண்டரடிப்பொடிகள் தாங்கள் தவறாக வழு நடத்தப் படுகிறோம் என்பதை புரிந்து கொண்டால் நல்லது.

 அப்படி அவர்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் இந்த உசுப்பேத்தல்.  சரிதானே சின்ன டாக்டரய்யா?

 

Monday, May 17, 2021

மருத்துவரய்யா, நீங்களும் அப்படியே

 


நல்ல யோசனை மருத்துவரய்யா, ஊரடங்கிற்குப் பிறகும் நீங்களும் உங்கள் மகனும் வெளியே வராமல் இருந்தால் அது சமூக அமைதிக்கு நல்லது.

அதனால் நீங்கள் இருக்கும் வீட்டை பூட்டை தைலாபுரம் தோட்டத்தில் எங்காவது தூக்கிப் போட்டு விடுங்கள்

Saturday, December 12, 2020

அப்படியே பாமக ஸ்டைல்!

 


முதல் முறையாக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்த ஒரு வீரன் வெற்றியும் பெற்றதில் சிலருக்கு மிகவும் எரிச்சல் போல!

ஏசியாநெட் தமிழ் என்ற இணையப் பத்திரிக்கை முதலில் வெளியிட்ட செய்தி இது


டிஷர்ட்டும் கூலிங் க்ளாசும் போட்டால் புகழ் போதை, நிறைய காசு என்று பொறாமையில் பொங்குகிறது. அப்படியே மருத்துவர் ஸ்டைல்! அடுத்தவன் வளர்ச்சியில் அவ்வளவு பொறாமை! ஒரு எஃகு கோட்டையில் நுழைந்த எரிச்சல்!

செம டோஸ் வாங்கியதற்கு பிறகு தலைப்பை மாற்றி விட்டார்கள்


அந்த பயம் இருக்கட்டும்!

Friday, April 19, 2019

பாமக - நிமிராத வால்


நாய் வாலை நிமிர்த்த முடியாது என்ற பழமொழி பாட்டாளி மக்கள் கட்சிக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

அவர்களின்  ஆதிக்க ஜாதி  உணர்வும்
தலித் மக்களுக்கு எதிரான பகைமையும்
நாடி, நரம்பு, ரத்தம், புத்தி அனைத்திலும் ஊறியுள்ள வன்முறையும் 

அவர்களை விட்டு என்றென்றும் அகலப் போவதில்லை 

என்பதைத்தான்

நேற்று சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் தலித் மக்கள் குடியிருப்பின் மீது நடந்துள்ள தாக்குதல் நிரூபித்துள்ளது.

தாக்குதலுக்கு உள்ளானவர்களும் தாக்குதலை நிகழ்த்தியவர்களும் ஏழை எளிய உழைப்பாளி மக்கள்தான்.

ஜாதிய வெறியேற்றி அவர்களை உசுப்பேற்றியே வைத்திருந்தால்தான் டாக்டரய்யாக்களின் பிழைப்பு ஓடும். 

தமிழக அரசியல் களத்திலிருந்து பாமக வை புறக்கணித்து வைத்திருந்தால் மட்டுமே அவர்களின் கொட்டம் அடங்கும்.

குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக அவர்களை அவ்வப்போது கூட்டணியில் இணைத்து வைத்துக் கொள்ளும் இரு கழகங்கள் உறுதியான முடிவெடுத்து விட்டால் தமிழகத்திற்கு நல்லது. 

Tuesday, February 19, 2019

பாமக வுக்கு இதெல்லாம் சாதாரணமப்பா!!!



கீழே உள்ள இந்த இரண்டு காணொளிகள் இன்று சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.

பெரிய மருத்துவர் ஐயாவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றை நான் வேலூரில் பார்த்துள்ளேன்.

அப்போது சொன்ன சில உறுதிமொழிகளையும் அதை தான் பின்பற்றாவிட்டால் தன்னுடைய குணம் என்னவென்றும் தனக்கு தர வேண்டிய தண்டனை குறித்தும் ஆவேசமாக பேசியதும் இன்னும் நினைவில் உள்ளது.

அதை ஒப்பிடுகையில் சின்ன மருத்துவர் ஐயா உறுதிமொழி எல்லாம் வெறும் ஜூஜூபி.

இவர்களுக்காகத்தான் அன்றைக்கே கவுண்டமணி எனும் மகான் சொல்லியிருக்கிறார்.

"அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"






Wednesday, October 16, 2013

பாமகவும் தலித் அமைச்சர்களும்

திரு அ.மார்க்ஸ் அவர்களின் முகநூல் நிலைத் தகவல் ஒன்றில்
நான் அளித்த பின்னூட்டம் இது.

பாமக சார்பில் மத்திய அமைச்சராக திரு தலித் எழில்மலை 
இருந்த போது நான் பார்த்ததை அதில் எழுதியிருந்தேன்.

அது கீழே



" பாமக தனக்கு கிடைத்த முதல்  மந்திரி பதவியை தலித்திற்கு கொடுத்தது என்று ஒருவர் பெருமை பட்டுக் கொள்கிறார். நான் ஒரு அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இன்சூரன்ஸ் தனியார்மயம் குறித்து ஒரு மனு அளிக்கவும் ஒரு நிகழ்ச்சிக்கு கூப்பிடவும் அப்போதைய வேலூர் எம்.பி திரு என்.டி.சண்முகம் அவர்களை சந்திக்க சென்றிருந்தேன். அந்த அலுவலகத்தில் நடந்த சம்பவம் இது. 

வேலூரில் உள்ள ஒரு எஸ்.சி/எஸ்.டி ஊழியர் நலச்சங்கக் கூட்டத்திற்கு திரு தலித் எழில்மலை வருவதாக இருந்தது. அமைச்சர் முதல் முறையாக வேலூர் வருகிறாரே, நாம் என்ன வரவேற்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டு வந்த கட்சித் தொண்டர்களை மாவட்டச்செயலாளரை பாரு என்று சொல்லி அனுப்பி விட்டார். 

 ஒருவர் கொஞ்சம் அழுத்தமாக கேட்ட போது " என்னய்யா தலைவலியா போச்சு, நான் ஐயா கிட்ட கேட்டேன். அவரு அவர் ஜாதிக் கூட்டத்துக்குதான் வரார். அதனால் கட்சிக்காரங்க யாரும் போகவேண்டாம், எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லிட்டாரு" என்று பதில் சொல்லி விட்டார். பாமக நியாயமான கட்சி என்ற தோற்றத்தை உருவாக்க அவர்கள் சிலரை பயன்படுத்திக் கொண்டார்கள். அவர்களும் இப்போது அங்கு இல்லை"

தொண்டர்கள் தங்கள் கட்சியின் அமைச்சர் என்றுதான் 
பார்த்தார்கள். ஆனால் ஐயா????????????