Showing posts with label சுவரொட்டி. Show all posts
Showing posts with label சுவரொட்டி. Show all posts

Wednesday, October 7, 2020

குரங்குகள் கையில் வரலாறா?

 


மேலே உள்ள படம்  "இந்த குரங்குகள் கையில் ஒரு கார் கிடைத்தது. ஆனால் ஓட்டத் தெரியவில்லை. இதை மோடி ஆட்சியோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்" என்ற வாசகத்தோடு சமூக வலைத்தளங்களில் நீண்ட காலமாகவே சுற்றில் இருப்பதுதான்.

உபி ஹத்ராஸ் சம்பவத்தின் குற்றவாளிகள் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று கன்னியாகுமரி மாவட்ட காவிக் கயவர்கள் போஸ்டர் ஒட்டி, பேனர் வைத்த போது 




பற்றியெரியும் சம காலப் பிரச்சினையில், அதிலும் குற்றவாளிகள் மொட்டைச் சாமியார் ஆசிர்வாதம் பெற்றவர்கள் என்கிற போது கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் யார் நீதிக்காக போராடுகிறார்களா அவர்கள் மீதே அபாண்டமாக பழி போடுகிற,  அப்பட்டமான ஒரு பொய்யை கட்டவிழித்து விட்டுள்ள இந்த கயவர் கூட்டம் நியமித்துள்ள

டுபாக்கூர் அறிஞர்கள் குழு, பனிரெண்டாயிரம் ஆண்டு வரலாற்றை எப்படி எழுதும் என்ற கேள்வி பிறக்கிறது.

மோடிக்கு வாக்களித்த அனைத்து மூடர்கள் மீதும் கடுமையான கோபம் வருகிறது.

இந்தியாவை இருண்ட காலத்திற்குள் தள்ளி விட்டீர்களடா படுபாவிகளா!

Friday, November 6, 2015

இவங்க மதுரக்காரங்களை மிஞ்சிடுவாங்களோ?




நேற்று முன் தினம்  புதுவை சென்றிருந்தேன். அங்கே இந்த சுவரொட்டி கண்ணில் பட்டது.

பொதுவாக வித்தியாசமான சுவரொட்டிகளை அச்சிட்டு  மதுரைக்காரர்கள்  அசத்துவார்கள். அவர்களுக்கு சவால் விடக்கூடிய விதத்தில் இந்த சுவரொட்டி அமைந்துள்ளது.

யார் இவர் என்று புதுவைத் தோழர்களிடம் விசாரித்த போது முன்பு தலைமைச் செயலாளராக இருந்தவர் என்றும் வேறு புதிய தலைமைச் செயலாளரை மத்தியரசு நியமித்த போதும் புதுவை முதல்வர் ரங்கசாமி இவரை புதுவையை விட்டு அனுப்பாமல் இப்போது கல்வித்துறை செயலாளராக வைத்திருப்பதாகச் சொன்னார்கள்.

இவர் மீது அபாண்டமாக குற்றம் சுமத்துகிறார்கள் என்று இவருக்கு ஆதரவாக தின மலர் கட்டுரை எழுதியிருப்பதாகவும் ஒரு தோழர் தகவல் சொன்னார்.

தின மலர் இவரை ஆதரிக்கிறது என்றால் இவர் கண்டிப்பாக வில்லங்கம் பிடித்த ஆசாமியாகத்தான் இருப்பார்.