Showing posts with label பஞ்சாப். Show all posts
Showing posts with label பஞ்சாப். Show all posts

Wednesday, May 25, 2022

அதுக்குள்ளயா?

 


பஞ்சாப் மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா என்பவர் அரசு டெண்டரில் 1 % லஞ்சம் கேட்ட காரணத்துக்காக பதவியிலிருந்து நீக்கப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார்.

 பஞ்சாப் முதலமைச்சரின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

 சில கேள்விகளும் இயல்பாகவே எழுந்தது.

 ஆட்சி அனுபவம் இல்லாத ஆட்கள் இவர்கள். பதவிக்கு வந்து இரண்டு மாதங்கள் முழுமையாக முடியாத நிலையிலேயே பணம் சம்பாதிக்க துடிக்கிறார்கள் என்றால் அவர்களின் பின்னணி என்ன? ஊழலுக்கு எதிரான அமைப்பு என்றே அறியப்படும் ஆம் ஆத்மி கட்சியின் அமைச்சரே லஞ்சம் வாங்குபவர் என்றால் மற்றவர்கள் எப்படி? இந்த சம்பவம் தனித்த நிகழ்வா அல்லது பானைச் சோறுக்கான உதாரணமா?

 மந்திரியோடு அவரது சிறப்பு அதிகாரியும் கைது செய்யப்பட்டுள்ளார். அதிகார வர்க்கம் யார் ஆட்சிக்கு வந்தாலும் மாறாது. தன் குணாம்சத்தின் படியே செயல்படும் என்பதை சொல்கிறது இந்த சம்பவம்.

 

Saturday, February 5, 2022

ஹிட் விக்கெட் சித்து+காங்கிரஸ்

 


மாற்றுக் கட்சியின் உள் விவகாரங்களைப் பற்றி எழுதக் கூடாது என்று சுயக்கட்டுப்பாடு இருந்தாலும் இன்று காலையில் படித்த இரண்டு செய்திகள் அந்த கட்டுப்பாட்டை மீற வைத்து விட்டது.

கூட்டம் கூடாமல்தான் மோடி பஞ்சாபிலிருந்து திரும்பி வந்தார் என்பதை பஞ்சாப் முதல்வர் அம்பலப்படுத்திய மறு நாளே அவரது மைத்துனர் வீட்டில் மோடி அரசின் அமலாக்கப்பிரிவு சோதனை நடத்தியது. நாளை பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அந்த மைத்துனர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மோடி அரசின் பழி வாங்கும் நடவடிக்கை என்று கண்டிக்க வேண்டிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் நல்ஜோத்சிங் சித்து "நாணயமான ஒருவரைத்தான் முதல்வராக்க வேண்டும்" என்று ஒரு வேகப்பந்தை வீசுகிறார். அவர் முன்பு வீசிய பந்தில் கேப்டன் அமரிந்தர் சிங்கின் விக்கெட் விழுந்து அவர் மாற்று அணிக்கு போய் விட்டார். இப்போது அடுத்த விக்கெட்டை குறி வைக்கிறார்.

ஆனால் இது தன் விக்கெட்டை தானே இழக்கும் ஹிட் விக்கெட்தான். வாய்ப்புள்ள மாநிலத்தை எதிராளிக்கு தாரை வார்க்கும் மூடத்தனம் அல்லது மாற்றுக் கட்சியின் ஸ்லீப்பர் செல்லாக சதித்திட்டம்.

இனி "சிக்ஸர்" சித்து "ஹிட் விக்கெட்" சித்துதான்.

காங்கிரஸ் கட்சியும் சித்துவின் வேலைக்கு நிகரான ஒன்றை செய்துள்ளது. பஞ்சாப் மாநிலப் பிரச்சாரத்துக்கான நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து குலாம் நபி ஆசாத்தையும் மணீஷ் திவாரியையும் நீக்கியுள்ளது. 

காஷ்மீர் மாநிலத்து குலாம் நபி ஆசாத்தின் நீக்கத்தை புரிந்து கொள்ள முடியும்.  பத்ம பூஷணை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டவர் அவர். 

ஆனால் மணீஷ் திவாரியோ பஞ்சாப் மாநிலத்து மக்களவை உறுப்பினர். முக்கியமான தலைவர். சித்துவின் சித்து வேலைகளை அம்பலப்படுத்தி வருவதால் அவரையும் துரத்தப் போகிறார்கள் போல. 

பொன்னான வாய்ப்பை சங்கிகளுக்கு தங்கத் தட்டில் வைத்துக் கொடுக்கப் போகிறார்களே என்ற ஆதங்கம்தான் இந்தப் பதிவுக்கான நோக்கம். 


Thursday, February 18, 2021

ஆனந்தம், ஆனந்தமே, பூஜ்ஜியம் ஆனந்தமே

 



பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் பாஜக வெற்றி பெற்ற இடங்கள் பூஜ்ஜியம் என்று பார்க்கும் போது என்னைப் போல் உங்கள் மனதிலும் ஆனந்தம் பெருக்கெடுத்து ஓடினால் நீங்களும் உண்மையான தேச பக்தன். மக்களை நேசிப்பவர்.

 

பிகு: தலைப்பு மற்றும் படம் உபயம் தோழர் நெல்சன் பாபு ஆண்டனி