Showing posts with label மணிப்பூர் அராஜகம். Show all posts
Showing posts with label மணிப்பூர் அராஜகம். Show all posts

Monday, September 8, 2025

பத்துக்கும் போக மாட்டார் மோடி

 


காலத்தே செல்லாமல் கழுத்தறுத்து விட்டு, பின்பு நானும் இருக்கிறேன் நண்டு வளையில் என்று சீன் போடுபவர்களை "செத்ததுக்கு வாடான்னா பத்துக்கு வந்திருக்கே" என்று கேட்பது தமிழ் மக்களின் பழக்கம். இது ஜீன்ஸ் படத்தில் ஒரு காட்சியாகவே வந்திருக்கும்.

உயிரிழப்பு, பொருளிழப்பு, சொந்த வீட்டை விட்டு வெளியேறி அகதிகள் முகாம்களில் இன்னும் வாழ்க்கை,  உலகமே காறி உமிழ்ந்த பெண்களுக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை என்று மிக மோசமான மணிப்பூர் கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. நிலைமை இன்னும் சீராகவில்லை என்பது வேறு விஷயம்.

இது நாள் வரை மணிப்பூர் செல்வது பற்றி யோசிக்காத 56 இஞ்சார், இப்போது மணிப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்தது.

பக்கத்தில் உள்ள மிசோரம், நாகாலாந்து மாநிலங்களில் பச்சைக் கொடி ஆட்டுதல், ரிப்பன் வெட்டுதல் ஆகிய போட்டோ ஷூட் நிகழ்வுகள் இருப்பதால் மணிப்பூருக்கும் போய்த் தொலைக்கலாம் என்று முடிவு செய்திருக்கலாம்.

அதனால் குகு இன அமைப்புக்களோடு ஒரு ஒப்பந்தம் கூட உருவானது. அது ஒன்றும் பெரிய ஒப்பந்தம் என்று சொல்ல முடியாது. பிரச்சினைகள் தொடர்பாக பேசலாம் என்பதுதான் அந்த ஒப்பந்தம்.

ஆனால் அதை நிராகரிப்பதாக பெரும்பான்மை மெய்தி இன அமைப்புக்கள் நிராகரித்து விட்டன.

அவர்களை மீறி மோடி மணிப்பூர் வருவதோ சிறுபான்மை மக்களான குகு பழங்குடி மக்களோடு பேசுவதோ நடக்கவே நடக்காது.

ஆக போட்டோ ஷூட்டுக்கள் வேண்டுமானால் நடக்கலாம். மணிப்பூர் செல்வதெல்லாம் . . . .




Tuesday, February 25, 2025

மோடியை மணிப்பூர் வரவேற்குமா?

 

நேற்று காலை ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க விளம்பரம் இது. அது அஸ்ஸாம் மாநில அரசால் வெளியிடப்பட்ட விளம்பரம்.

 


மோடி மணிப்பூருக்கு போனால் அம்மாநில அரசும் ஒது போன்றதொரு வரவேற்பு விளம்பரத்தை கொடுக்கும். அதில் எந்த சந்தேகமும் அவசியமில்லை.

 அப்படி மோடி போனால் மணிப்பூர் மக்கள் அவரை வரவேற்பார்களா? அல்லது #GetOutModi. #GoBackModi  என்று  துரத்தியடிப்பார்களா?

 இந்த எழவே வேண்டாம் என்று மோடி மணிப்பூருக்கே போக மாட்டார்.   மேலே உள்ள  படம்   அதைத்தான் சொல்கிறது.

 

Friday, February 14, 2025

ஆரெஸெஸ்.ரெவியை மணிப்பூருக்கு அனுப்புங்கய்யா

 


கலவரத்தை தூண்டி விட்டு அதை அடக்க துப்பில்லாத பிரேன்சிங் மணிப்பூர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க முடியாததால் சட்டப்பேரவையை முடக்கி விட்டு அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டு வந்துள்ளனர்.

குடியரசுத்தலைவர் ஆட்சி என்பது யதார்த்தத்தில் ஆட்டுத்தாடியின் ஆட்சிதான்.

தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி ரெவி நாகாலாந்து கவர்னராக இருந்தபோது நாகாலாந்தில் அதை கிழித்தார், இதை கிழித்தார் என்று சங்கிகள் பீற்றிக் கொள்கிறார்கள். 

ரெவி அவ்ளோ பெரிய அப்பாடக்கர் என்றால் கலவரபூமியான மணிப்பூருக்கு மாறுதலில் அனுப்புங்கள் 56 இஞ்ச் மோடி. அந்தாள் மணிப்பூரில் என்ன கிழிக்கிறார் என்று பார்ப்போம். 

அப்படி ஒரு நிலை வந்தால் ரெவியின் மனநிலை எப்படி இருக்கும்?

நகர்ம்=மறுபக்கம் வடிவேலு போல மோடி காலில் விழுந்து கதறுவார்.

ஆமாம்.

மோடி போல ரெவியும் ஒரு வெத்து வேட்டு டுபாக்கூர்தான் . . .

Sunday, February 9, 2025

இனி ராஜினாமா செஞ்சா என்ன? செய்யாட்டி என்ன?

 


மணிப்பூர் முதலமைச்சர் பிரேன்சிங் ராஜினாமா செஞ்சிருக்காரு, மணிப்பூரில் கலவரம் இரண்டு ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்த அந்தாள் எதுவும் செய்யவில்லை. காரணம் அதை தூண்டி விட்டதே அந்தாள்தான்.

இனி யாராலும் எதுவும் செய்ய முடியாது என்ற அளவிற்கு பிரச்சினையை பெரிது படுத்திய பின்பு, காட்டுத்தீயாய் பரவிய பின்பு இனி அந்த ஆள் முதலமைச்சராய் இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? 

Sunday, September 8, 2024

மணிப்பூர் மாறாதா?

 


மணிப்பூர் மீண்டும் பற்றி எரிகிறது. நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரிக்கிறது. குகி இனத்தவர் உள்ளே நுழைய வாய்ப்பில்லாத பகுதிகளில் மெய்தி இனத்தவர்களே தாக்குதல்கள் நடத்தி குகி இனத்தவர்கள் மேல் பழி போடுகின்றனர் என்று சொல்கின்றனர்.

பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வரவோ, அமைதியை உருவாக்கவோ பாஜக கட்சியோ, முதல்வரோ, மோடியோ விரும்பவில்லை.

மெய்தி இனத்தவரின் வோட்டுக்களை தக்க வைக்க கலவரம் நீடிக்க வேண்டும் என்றுதான்  பாஜக விரும்புகின்றனர் போல . . .

Wednesday, August 28, 2024

கொல்கத்தாவிற்கு அப்பாலும் பாருங்கள் ஜனாதிபதி மேடம்

 


கொல்கத்தா சம்பவம் கொடூரமானது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. அதற்கு நீங்கள் வேதனை தெரிவித்துள்ளதும் நல்லது. 

ஆனால் உங்கள் பார்வை கொல்கத்தாவோடு சுருங்கிப் போவது எங்களுக்கு வேதனை தருகிறது.

கொல்கத்தாவைத் தாண்டி மணிப்பூர் என்றொரு மாநிலம். அங்கே மிகப் பெரிய அயோக்கியத்தனத்தை உங்களை ஜனாதிபதியாக்கியவர்கள் செய்தார். பெண்களுக்கு அங்கே இழைக்கப்பட்ட கொடூரம், கொல்கத்தா கொடூரத்திற்கு நிகரானதுதான்.

அந்த பிரச்சினை தொடர்பாகவும் கண்டனம் தெரிவியுங்கள். நடவடிக்கை எடுக்கச் சொல்லுங்கள். 

இந்தியாவின் முதல் குடிமகளான உங்களிடம் கேட்காமல் வேறு யாரை கேட்பது? 

Sunday, June 16, 2024

மணிப்பூர் நாட்டாமை மாற்று உன் தீர்ப்பை . . .

 


ஆலமரத்தடியோ, செம்போ இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால் ஏழு வருடம் யாரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது என்ற தீர்ப்பு மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

எங்கே?

அதான் தலைப்பிலேயே இருக்கிறதே!



மோடி செல்ல அஞ்சுகிற மணிப்பூரில்தான் . . .

யாருக்கு?

ஆல்பிரட் கன்னாகம் ஆர்தர்..

யார் இவர்?

அவுட்டர் மணிப்பூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி அவர்.

என்ன தவறு செய்தார்?

ஐக்கிய நாகா மக்கள் கூட்டமைப்பு என்ற மணிப்பூரில் உள்ள 21 நாகா இனங்களின் பஞ்சாயத்து ஆல்பிரட் ஆர்த்தரை அனைத்து நாகா அமைப்புக்களும் நாகா குடும்பங்களும் ஏழாண்டுகள் சமூக புறக்கணிப்பு செய்வது என்று அறிவித்தது.

நாகா மக்கள் முன்னணி என்ற கட்சியின் வேட்பாளருக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டு வென்றதுதான் அவர் செய்த தவறு.

ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் முயற்சி தொடங்கி விட்டது.  


Thursday, April 18, 2024

எரியும் மண் - களத்திலிருந்து நேரடியாக

 எங்கள் கோட்டச் சங்க இதழான "சங்கச்சுடர்" ஏப்ரல் தேர்தல் சிறப்பிதழிற்காக எழுதிய நூல் அறிமுகத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

சத்யபிரதா சாஹூ சார், இது நூல் அறிமுகம்தான். தேர்தல் பிரச்சாரம் கிடையாது. அப்படி யாராவது நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லை.


நூல்  அறிமுகம்

 

நூல்                                  : எரியும் மண் – மணிப்பூர்

ஆசிரியர்                       : கிர்த்திகா தரன்

வெளியீடு                      : நக்கீரன் பதிப்பகம்,

                                           சென்னை 14

விலை                            : ரூபாய் 75.00

 

பெரும்பான்மை இனமான மெய்தி இனத்தவரால் தாக்குதலுக்கு உள்ளான குக்கி இன மக்களின் துயரங்களை நிகழ்ந்த இடம் மணிப்பூர். கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆன பின்பும் இந்தியப் பிரதமர் அங்கே செல்லவில்லை. வாரம் இரு முறை தமிழ்நாட்டிற்கு வருகின்ற மோடி தேர்தலில் வாக்கு கேட்கக் கூட செல்லவில்லை. ஆனால் பெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலரான கிர்த்திகா தரன், மணிப்பூருக்கு நேரடியாக சென்று அம்மக்கள் மத்தியில் உரையாடி கவுன்சிலிங் அளித்து தன் அனுபவங்களை இந்நூலில் பகிர்ந்து கொண்டுள்ளார். அம்மக்களின் வலியை உணர்ந்து கொள்ள இந்த நூல் உதவிகரமாக இருக்கும்.

 

நூலிலிருந்து சில பகுதிகள்

 

மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு செல்ல ப்ளைட் வசதி உண்டு. ஆனால் இம்பாலில் இருந்து குக்கிகள் வாழும் பகுதிகளுக்கு மருந்து உள்ளிட்ட எந்த பொருளையும் எடுத்துச் செல்ல அனுமதி தர மாட்டார்கள் என்பதால் நாகாலாந்து சென்று அங்கிருந்து சேனாபதி வழியாக காங்போக்பி மாவட்டத்திற்கு வந்தோம்.

*********

அங்கே கேஸ் அடுப்பு இருந்தாலும் சிலிண்டர் ப்ளாக்கில்தான் கிடைத்தது. எல்லோராலும் வாங்க முடியாது என்பதால் விறகுகளைக் கொண்டுதான் சமையல்.

 

ஒரு சமூக சேவை நிறுவனத்தின் நிர்வாகி அந்த பெண்மணி. எனது அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டது. அலுவலகம் எரிக்கப்பட்ட கவலை ஒரு புறம், ஒன்பது மாத கர்ப்பிணிப் பெண்ணான அண்ணி பற்றிய கவலை. பத்திரமான இடம் நோக்கி செல்கிற போதே கலவரக்காரர்கள் வந்து விட்டார்கள். இடிபாடுகளுக்குள் பதுங்கி அமர்ந்துள்ளார். இரவில் சிறு சத்தம் கூட பெரிய கலக்கத்தை அளித்துள்ளது.

*****

இம்பாலுக்கு அருகே உள்ள கிராமத்தை மே 3 ம் தேதி சூறையாடத் தொடங்கினார்கள். ஒரு பொருளைக் கூட விட்டு வைக்கவில்லை. கணவர் கலவரத்தில் இறந்து போனார். கணவரின் உடலோடு இருக்க நினைத்தேன். ஆனால் நிலைமையைப் பார்த்ததும் ஊர்க்காரர்களோடு ஓடி வந்து விட்டேன். என் கணவருக்கு இன்று வரை இறுதிச்சடங்கு நடக்கவில்லை.

*****

இன்னொரு இளம்பெண், தன் கிராமம் எரியூட்டப்பட்டதால் ஒரு வாரம் மலையில் நீர் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்ததைச் சொன்னார். மற்றொரு பெண்ணோ அழுது கொண்டே இருந்தார். அவரால் ஏதும் பேசவே முடியவில்லை.

******

முகாமில் மெண்டல் ஹெல்த் கேம்ப் நடத்தினோம். என்னுடன் வந்த மன நல மருத்துவர் அவர் வேலையைப் பார்க்க ஆரம்பித்தார். “தூங்க முடியாதவங்க இங்க வாங்க” என் நான் சொல்ல பலர் வந்து விட்டனர். ஒவ்வொருவரும் கண் மூடி பல நாட்கள் ஆனது என்றார்கள்.

*******

பக்கத்திலிருக்கும் முகாமிற்கு சென்றோம். அது பழைய இடிந்த சர்ச். பெரிய ஜன்னல்களை திரை போட்டு மறைத்திருந்தனர். ஒரே ஹாலில் பலர் இருப்பதால் ஸ்காபிஸ், வைரஸ் அவுட்பிரேக் இரண்டும் தொடங்கியிருந்தது.

*******

சமீப காலங்களில் அரசு பட்ஜெட்டில் மலைப்பகுதிகளுக்காக மிகக் குறைந்த தொகையை  ஒதுக்கியுள்ளது அதாவது 3000 கோடி ரூபாய் சமதளப் பகுதிக்கு என்றால் 200 கோடி ரூபாயை மலைப்பகுதிக்கு ஒதுக்குவார்கள். பிறகெப்படி சாலையை செப்பனிடுவது? வளர்ச்சியை கொண்டு வருவது?

*****

பல பள்ளிகள் முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. அப்படியென்றால் பள்ளிகளின் நிலையும் மாணவர்களின் கல்வியும் என்ன ஆகும்?

******

மலை உச்சிக்கு சென்ற போது அங்கே வயதான ஒரு ஜோடி அமர்ந்திருந்தது. மிகத் தள்ளாத வயது. எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்ட பொது மலை தாண்டி மேத்தி எல்லையில் கிராமம் இருக்கிறது. அங்கு எப்பொழுதும் தாக்குதல் அபாயம் உண்டு. வயல், காடுகள் அங்கிருந்ததால் இத்தனை நாள் காலி செய்ய யோசித்துள்ளனர். இப்போது அவர்களும் தங்க முடியாத நிலை.

*******

கலவரக்காரர்கள் கிராமத்தை எப்படி அழித்திருந்தார்கள் என்றால் செங்கல் குவியல்கள் மட்டுமே இருக்கும் இடமாக அந்த கிராமத்தை மாற்றியிருந்தனர். பெட்ரோலை கேன் கேனாக எடுத்துக் கொண்டு ஊற்றினால்தான் இது சாத்தியம். ஆயிரக்கணக்கானவர்கள் ஆயுதத்தோடு வந்து அழித்திருப்பது புரிந்தது.

******

ஒருவர் ஐந்து மலைகளைக் கடந்து வந்ததாக தெரிவித்தார். என் கணவரை, பிள்ளைகளைக் கொன்றார்கள். வாய் பேசாத ஆடு, மாடுகள் என்ன பாவம் செய்தன? அதை உயிரோடு கொளுத்த எப்படி மனம் வந்தது “ என்றார் மற்றொருவர்.

******

மருத்துவமனை என்பதால் எங்களை தாக்க மாட்டார்கள் என்று நினைத்து அலட்சியமாக இருந்து விட்டே. ஆனால் எங்கள் போன் நம்பர்கள் மூலம் நாங்கள் கண்காணிக்கப்பட்டு எங்கள் வீடுகள் அடையாளப்படுத்தப் பட்டிருக்கிறது.

*********

இதை எழுதும் போது மணிப்பூரில் கடும் ஆயுதங்கள் தாங்கிய ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். அவர்களை விடுவிக்கக் கோரி மீரா போய்பா அமைப்புக்கள் உட்பட பல அமைப்புக்கள் போராட்டத்தில்  குதித்துள்ளனர். மீரா போய்பா எனில் தீவட்டி ஏந்திய பெண்கள் என்று அர்த்தம். ராணுவம் பெண்கள் மீது நிகழ்த்தும் அட்டகாசங்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக 1077 ல் உருவாக்கப் பட்ட அமைப்பு. அது இன்று திசை மாறி விட்டது.

*****

டாக்டர் சாங்க்லாய் அவர்களைச் சந்தித்தேன். 13 வாகனங்கள், மூன்று அடுக்கு கட்டடம், மேலே அலுவலகம், கீழே வீடு, சர்ச் வளாகம் என வசதியாக வாழ்ந்தவர். இக்கலவரம் அவரையும் வீதிக்குக் கொண்டு வந்து விட்டது. கலவரம் நடந்த போது கூட்டத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பெண்கள், குழந்தைகள், வயதானவர்களை பாதுகாக்கலாம் என்று பார்த்தேன். கூட்டம் நெருங்க நெருங்க எதற்கும் அட்ங்காத கூட்டம் என்று தெரிய ஆரம்பித்தது. தப்பிப்பதற்குள் பல விஷயங்கள் நடந்து விட்டது. சில சர்ச்சுகளில் பெண்கள் பிரேயர் செய்யும் நிலையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டதை மெல்லிய குரலில் சொன்னார். முட்டி போட்ட நிலையில் பெண்கள் இறந்திருப்பதைப் பார்த்து மனம் உடைந்ததாக தெரிவித்தார்.

*****

இம்பால் பகுதியிலிருக்கும் சர்ச்சுகளை இடித்து நொறுக்கியுள்ளனர். இன்று பள்ளத்தாக்கு பகுதியில் ஒரேயொரு தேவாலயம் கூட இருக்க வாய்ப்பில்லை.

*****

ஒரு மணி நேரப்பயணத்தின் போது அந்த ஆட்டோ டிரைவர் ஒரு சம்பவத்தை சொன்னார். குக்கி பெண்ணொருவர் தப்பித்து மீரா போபாய் அமைப்பிடம் வந்து சேர்ந்துள்ளார். அந்தப் பெண்ணை அவர்கள் குண்டர்களிடம் ஒப்படைத்துள்ளனர். அவர்கள் மலை உச்சிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளனர்.

******

இன்று குக்கி மெய்தி இன மக்களை ஒன்று படுத்த காந்திஜி போன்றொரு தலைவர் தேவைப்படுகிறார். ஆனால் கலவரத்தைத் தூண்டுபவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள்.

******

போகும் வழியில் ஒரு கட்டடம் பார்த்தேன். பலத்த பாதுகாப்பு,  வாச் டவர் எல்லாம் இருந்தது. பாஜகவின் கட்சி அலுவலகம். மக்களுக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் அலுவலகத்திற்கு கச்சிதமான பாதுகாப்பு.

******

மணிப்பூர் பற்றி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கூச்சல் போடும் போது சத்தமில்லாமல் ஒரு பில் பாஸானது. அது மைனிங் எனப்படும் சுரங்கத்துறை பில். இதுவரை அட்டாமிக் மினரல் எனப்படும் அணுசக்தித் துறையில் உபயோகப்படும் கனிமச்சுரங்கங்கள் தனியார் துறைக்கு தரப்படவில்லை. அணுசக்தி தயாரிக்கப்படும் கனிம்ங்களை தனியார்வ்சம் கொடுப்பதற்கான மசோதா அது.அதாவது மணிப்பூர் சிக்கல்களை பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த ஊருக்கு இன்னொரு சிக்கலை கொடுக்கும் மசோதாவை சத்தமில்லாமல் நிறைவேற்றும் அரசை என்னவென்று சொல்வது?

*****

மணிப்பூர் சிக்கலை அரசு ஒரு சில நாட்களில் தீர்க்க முடியும். ஏன் தீர்க்காமல் வைத்திருக்கிறது? அவர்கள் எதிர்பார்க்கும் இடங்களிலிருந்து பழங்குடியினர் முழுதும் வெளியேறாதவரை இந்த சிக்கலை தீர்க்காது என்றே நினைக்கிறேன்.

*****

மணிப்பூரை நான் ஒரு மாடலாகத்தான் கவனித்தேன். அப்பாவி மக்களை அரசியலுக்கான கருவியாக மாற்றி இன்னொரு இனத்துக்கான எதிரியாக மாற்றி விட முடியும் என்பதை மணிப்பூர் நிரூபித்துள்ளது. மணிப்பூர் மாடல் இந்தியா முழுமைக்கும் பரவினால் அதன் விளைவுகளையும் அழிவுகளையும் தாங்க முடியாது.

 

மேலே உள்ளதெல்லாம் பொது வெளியிலோ சமூக ஊடகங்களிலோ நாம் அறியாத தகவல்கள்.  படிக்கும் போதே நெஞ்சம் கலங்குகிறது. இக்கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை பல சம்பவங்கள் மூலம் நூலாசிரியர் உணர்த்துகிறார். நூலின் அட்டைப்படமும் உள்ளே இருக்கும் புகைப்படங்களும் மன அழுத்தத்தை அதிகரிக்கின்றன.

 

கலவரத்துக்கான பின்னணி என்ன என்பது இட ஒதுக்கீட்டைத் தாண்டி கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன் சார்ந்தது என்பதையும் அம்பலப்படுத்துவதாக நூல் அமைந்துள்ளது. மணிப்பூர் மாடல் இந்தியா முழுதும் பரவினால் என்ன ஆகும் என்ற கேள்வியை ஆசிரியர் கேட்கிறார்.

 

குஜராத் மாடல்தான் மணிப்பூரிலும் பரிசோதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் மறந்திடக் கூடாது. இன்றைய ஆட்சியாளர்கள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக மக்கள் மத்தியில் பிரிவினையை தூண்ட தயங்க மாட்டார்கள். அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மேலே சொல்லப்பட்ட சம்பவங்கள் உணர்த்தும். வரும் மக்களவைத் தேர்தலில் இவர்களை கண்டிப்பாக நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தையும்….

 

இந்தியப் பிரதமரே செல்லாத மணிப்பூருக்கு உயிரை பணயம் வைத்து சென்று தன் அனுபவங்களை இந்நூல் மூலமாக ஆவணமாக்கிய திருமதி கிர்த்திகா தரன் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

 

Wednesday, November 22, 2023

குஷ்பு -செலக்டிவ் பொங்கலும் சேரி லேங்குவேஜூம்

 


சகவாச தோஷம் ஒரு மனிதனை எவ்வளவு கேவலமாக மாற்றி விடும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் குஷ்பு. டிமோ கட்சியில் சேர்ந்தது முதல் எத்தனை நாடகம்! எவ்வளவு பொய்கள்! எத்தனையெத்தனை தரக்குறைவான பேச்சுக்கள்!

நடிகை த்ரிஷாவை மன்சூர் அலிகான் என்ன சொன்னார் என்பதை நான் பார்க்கவில்லை. அவருடைய பழைய வரலாறு தெரிந்தவர்களுக்கு அவர் மோசமாக பேசக்கூடியவர் என்பது தெரியும். அப்படி அவர் கேவலமாக பேசியிருந்தால் நிச்சயம் அவர் கண்டிக்கப்பட வேண்டும். மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு கண்டித்துள்ளார். ஓகே.

அதனை ஒருவர் விமர்சிக்கிறார். " ஆடைகள் அகற்றப்பட்டு பெண்களை ஊர்வலமாக அழைத்துப் போன மணிப்பூர் விஷயத்தில் தூங்கிக் கொண்டிருந்த குஷ்பு, த்ரிஷாவிற்காக விழித்துக் கொண்டார்". இந்த விமர்சனம் நியாயம்தானே!

அதற்கு குஷ்பு கோபத்தில் பொங்கி எழுந்து முட்டாள்கள், குண்டர்கள் என்றெல்லாம் வசை பாடி உங்களைப் போல் என்னால் சேரி மொழி பேச முடியாது என சொல்கிறார்.


அதென்ன குஷ்பு அம்மையாரே, சேரிகளில் வசிப்பவர்கள் பேசும் மொழி என்ன அவ்வளவு கேவலமா? எங்கிருந்து வந்தது இந்த மேட்டிமை புத்தி? மனுதர்மத்தின் வெளிப்பாடுதானே உங்களின் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது! சேரிகளில் வாழும் மனிதர்கள்தானே உங்கள் படங்களை பார்த்து உங்களை உயரத்தில் அமர வைத்தார்கள்! உயரத்துக்கு போனதும் கீழே உள்ளவர்களை கேவலமாக நினைப்பீர்களா? தஞ்சை மாவட்ட மிராசுதார்கள், பண்ணையார்களின் வசவு மொழி பற்றி தெரியுமா? எனக்கு தெரியும். ஆனால்  என் வலைப்பக்கம் நாகரீகமானது.

ஆடைகள் அகற்றப்பட்டது உண்மைதானே! அதைத்தானே அவர் சொல்கிறார்! உங்கள் மகளிர் ஆணையமும் ஒன்றிய அரசும் அந்த பெண்களுக்கு என்ன நியாயம் கொடுத்தது? சரி வார்த்தையை சொன்னதற்கு பொங்குகிற நீங்கள் அண்ணாமலை படத்தின் "கடவுளே, கடவுளே" காட்சியை நினைவு கொள்ளுங்கள். ரஜினி பேசும் வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த காட்சியில் நடிக்கவோ, அல்லது ரஜினி அவ்வாறு பேசக்கூடாது என்று மறுக்கவோ செய்யவில்லையே!

சரி, மன்சூர் அலி கான் பேசியது போலவே தமன்னா பற்றி ரஜினிகாந்த் உமிழ்நீர் பொங்க பேசியதை நான் பார்த்தேன். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

போலித்தனமாக பொங்குவதை விட்டுவிட்டு பெண்களுக்கு ஆதரவாக உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க முயற்சியுங்கள். 


Friday, September 29, 2023

முதல்வரை அவர்களே!

 


கேவலம் அரசியல் ஆதாயத்திற்காக மெய்தி இன மக்களை குக்கி இன மக்களுக்கு எதிராக திருப்பி விட்டது பாஜக. அந்த பணியை முன்னின்று செய்த புண்ணியாத்மாக்களில் ஒருவர் மணிப்பூர் மாநில முதல்வர் பிரேன் சிங். இவரது குரு மகா பீடங்கள் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளான டிமோவும் அழுக்கு ஷாவும்.

ஜூலையில் காணாமல் போன இரண்டு மெய்தி மாணவர்களின் சடலங்களின் புகைப்படங்கள் இப்போது சமூக ஊடகங்களில் உலாவியதால் மெய்தி மாணவர் சங்கம் பிரேன்சிங்கின் வீட்டை சூறையாட சென்றிருக்கிறது. காவல்துறை குவிக்கப்பட்டிருந்ததால் வீடும் அவரும் தப்பித்து விட்டனர்.

கத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் அழிவு என்பது போல கலவரத்தை தூண்டி அரசியல் ஆதாயத்தை தேட நினைப்பவனின் அரசியல் அஸ்தனமும் கலவரத்தால்தான் நிகழும்.

மெய்தி இன மக்களை தூண்டி விட்ட பிரேன்சிங்கிற்கு எதிராக எப்படி மெய்தி இன மக்களே புறப்பட்டு விட்டார்களோ, அதே போன்றதொரு கதி,

டிமோவுக்கும் அழுக்கு ஷாவுக்கும் கண்டிப்பாக நடக்கும். . .

Wednesday, August 30, 2023

மணிப்பூர் – 48 நிமிடங்கள்

  


மணிப்பூர் சட்டப்பேரவை நேற்று கூடியுள்ளது.  ஒரே ஒரு நாள் கூட்டத் தொடர் என்று அறிவித்திருந்தது அரசு.

 கலவரத்தில் இறந்து போனவர்களுக்கு இரண்டு நிமிட அஞ்சலி அனுசரித்ததும் காங்கிரஸ் கட்சி எம்.ஏ.க்கள் குறைந்த பட்சம் ஐந்து நாட்களாவது சட்டமன்ற கூட்டத்தொடர் நடத்தப்பட்டு கலவரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோருகிறார்கள். அரசு மறுக்க குழப்பம் … அவை அரை மணி நேரம் ஒத்தி வைக்கப்படுகிறது.

 மீண்டும் கூடுகிறது. மீண்டும் அதே கோரிக்கை. மீண்டும் மீண்டும் குழப்பம், கூச்சல்.

 இம்முறை சபாநாயகர் சட்டமன்றத்தை காலவரையறை இன்றி ஒத்தி வைக்கிறார்.

 சிக்கல் நிறைந்த சூழலில் அதைப் பற்றி விவாதிக்க மனமில்லாத, தைரியமில்லாத பாஜக 48 நிமிடங்களில் ஒரு சட்டமன்ற கூட்டத்தொடரை முடித்து வைத்துள்ளது.

 ஏன் இந்த கூட்டத்தொடர் நடக்க பாஜக விரும்பவில்லை?

 ஏன்?

 இக்கூட்டத்தொடரை குக்கி இனத்தைச் சேர்ந்த பத்து எம்.எல்.ஏ க்களும் புறக்கணித்திருந்தனர்.

 அதில் ஏழு பேர் பாஜக கட்சிக்காரர்கள்தான்.

Wednesday, August 9, 2023

இதுதாண்டா டிமோ சாதனை

 




டிமோ அதைக் கிழித்தார், இதைக் கிழித்தார் என்றெல்லாம் சங்கிகள் வாயை திறந்தாலே பொய்களாகவே கொட்டிக் கொண்டிருப்பார்கள்.

டிமோ செய்த உண்மையான சாதனை என்ன தெரியுமா?

இது நாள் வரை

இரு மதங்களை மோத விட்டார்.

இரு ஜாதிகளை மோத விட்டார்,

மொழிகளுக்குள் மோதலை கொண்டு வந்தார்.

மாநிலங்களுக்குள்ளாக மோதலை ஏற்படுத்தினார்.

இப்போது வெற்றிகரமாக துணை ராணுவப் படைக்கும் போலீஸுக்கும் மோதலை உருவாக்கி விட்டார்.

ஆமாம்.

மணிப்பூர் போலீஸ், அஸ்ஸாம் ரைபிள்ஸ் எனும் துணை ராணுவப்படை மீது கிரிமினல் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது.

குக்கி இனத்தைச் சேர்ந்த மூன்று கொலைகாரர்களை தாங்கள் தேடிப் போன போது அவர்களின் தேடுதல் பணிக்கு இடையூறு விதித்தாக குற்றம் சுமத்தி உள்ளனர். குக்கி இனத்தவருக்கு ஆதரவாகவே அஸ்ஸாம் ரைபிள்ஸ் செயல் படுகிறது என்று வெளிப்படையாகவே சொல்லியுள்ளது.

அஸ்ஸாம் ரைபிள்ஸுக்கெல்லாம் நான் வக்காலத்து வாங்கப் போவதில்லை. ராணுவமும் அதன் துணைப்படைகளும் முந்தைய காலத்தில் மணிப்பூரில் செய்த அட்டூழியம் அப்படி.

டிமோ அலட்சியத்தின் காரணமாக மணிப்பூர் மக்கள் எப்படி பிளவு பட்டு நிற்கிறார்களோ, அதே அரசின் அங்கமான இரு துறைகளும் பிளவு பட்டு நிற்கின்றன. இது நாட்டிற்கு நல்லது. INDIA வந்தால்தான் இந்தியா பாதுகாக்கப் படும்.

Monday, July 24, 2023

உலகம் சுற்றிய ஊதாரி . . .

 


கீழேயுள்ள விபரங்களை படித்தால் நீங்களும் உரக்கச் சொல்வீர்கள். ஒரு மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது வெளி நாடுகளுக்கு பறந்து கொண்டிருந்த டிமோ ஒரு "உலகம் சுற்றிய ஊதாரி" என்று. 



மணிப்பூர் பதுங்கு குழிகள்

 


 இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த மூன்று செய்திகள்…

 மணிப்பூரில் இது வரை  290 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

 காவல்துறையிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4000 துப்பாக்கிகளில் இதுவரை 1000 மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

 முதலமைச்சரை விமர்சனம் செய்யும் ஒரு பதிவை முகநூலில் பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட வாலிபனை சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆண்களும் பெண்களுமாக 800 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து அடித்து கொன்று விட்டனர்.

இந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்டது ...

இது வரை வெளி வந்துள்ள உண்மைகள் சொற்பம். TIP OF THE ICEBERG என்று ஆங்கிலத்தில் சொல்வது போல மிகப் பெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே.



மேலே உள்ள படம் மெய்தி இனப் பெண்கள் நடத்திய இயக்கம். அதிலே NRC குறித்த வாசகத்தின் அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பாஜகவினால் தூண்டப்பட்டு வெறியேற்றப்பட்டவர்கள். அதனால் அவர்கள் எதை வலியுறுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மணிப்பூரில் என்றும் அமைதி திரும்பாது என்பதுதான் இப்படம் உணர்த்தும் யதார்த்தம். 

Friday, July 21, 2023

அவர்களை வீழ்த்தியேயாக வேண்டும்.

 



மணிப்பூரில் நிகழ்ந்த கொடுமை கண்டு மனம் கொதிக்கிறது. மனசாட்சி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவரகளுக்கு கோபம் வரும்.

 ஆனால் சங்கிகள் என்ன செய்கிறார்கள்.

 கீழே உள்ள பதிவைப் போட்ட பெண்மணி, மோதல்களை உருவாக்கும் பதிவுகளை பகிர்ந்தமைக்காக ஏற்கனவே சிறைக்கு சென்றவர். கலவரம் தொடங்கிய நாள் முதல் தூங்கிக் கிடந்த டிமோவை விட்டு விட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியை குறை சொல்கிறார்.

 


இந்த பதிவு கட்சிகள் மாறிக்கொண்டிருக்கும் எப்போதும் கஞ்சா போதையில் திளைக்கும் நபர் போட்டது.

 


மே மாதம் நடந்த சம்பவத்தின் காணொளியை இப்போது வெளியிடுவது சதித்திட்டம் என்று சொல்கிறார் பாஜக மந்தி ரவிசங்கர் பிரசாத்.

 


இதெல்லாம் டிஸ்டாக் டூல்கிட் சதி என்று ஆணவத்துடன் பேசுகிறான் கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி.

 


பெரும்பான்மை சமூகத்தை பழங்குடியின பட்டியலில் கொண்டு வர முயன்றதே பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம். அவர்களின் வோட்டுக்காக இதை தூண்டியது பாஜக.

 

மணிப்பூரின் மலைகளை டிமோவின் முதலாளிகளுக்கு தாரை வார்க்க வழி செய்ய வேண்டும் என்பது அடுத்த நோக்கம்,

 

உண்மை இவ்வாறிருக்க

 

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த டிமோ எடுத்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவே பழங்குடியின மக்கள் கலவரம் செய்கிறார்கள் என்றொரு பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்கள்.

 

அதானியின் குஜராத் துறைமுகத்தில் பிடிபடுவதே ஆயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்கள் என்றால் அங்கிருந்து பரவும் போதைப் பொருட்களின் அளவு எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

 

இத்தோடு நிறுத்திக் கொண்டார்களா?

 

கிருஷ்ணரின் காதல் மனைவி மணிப்பூரைச் சார்ந்தவராம். அந்த பூமியில் இந்துக்கள் அவதிப்படலமா என்றொரு கேள்வியோடு மத வெறியை உசுப்பேற்றுகிறார்கள்.

 

ஒரு அயோக்கியத்தனத்தை செய்து விட்டு அதை நியாயப்படுத்திக் கொண்டு, திசை திருப்பிக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சொல்கிற சங்கிகள் படு கேவலமானவர்கள்.

 

இனி இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடு அழிந்தே போகும்.

 

பாஜக அரசை வீழ்த்தியேயாக வேண்டும்.

 

இது மனசாட்சியுள்ள இந்தியனின் கடமை.

 

பிகு: மேலேயுள்ள ஓவியம் ஓவியர் தோழர் ரவி பாலேட் வரைந்தது.

 

Thursday, July 20, 2023

பாஞ்சாலிகளும் திரௌபதியும் . . .

 

கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக்
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்.
‘ஐயகோ’ வென்றே யலறி யுணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர,
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக, மொய்த்தவராய்,
‘என்ன கொடுமையிது’வென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்

மகாபாரத புனைவுக் கதையின் ஒரு பகுதியை "பாஞ்சாலி சபதம்" ஆக பாரதி எழுதினான். அதிலே துச்சாதனன் பாஞ்சாலியை அரசவைக்கு இழுத்து வரும் காட்சிதான் மேலே உள்ளது. பாரதி எழுதியதை படிக்கையிலேயே நெஞ்சம் பதைபதைக்கிறது.

புனைவை விட மோசமான நிகழ்வாக மணிப்பூரில் பழங்குடியின பாஞ்சாலிகளுக்கு அராஜகம் நிகழ்ந்துள்ளது.

"நெட்டை மரங்களென நின்று புலம்பினர்" என்று பாரதி மக்களை சாடினான்.

இந்தியாவின் முதல் குடிமகள், பழங்குடியினத்தின் முதல் குடியரசுத் தலைவர் என்ன செய்கிறார்.

நெட்டை மரமென புலம்பும் உரிமை கூட அற்றவர். பீஷ்மரும் துரோணரும் விதுரரும் போல வேடிக்கை மட்டுமே அவரால் பார்க்க இயலும்.

அவரது பெயரும் திரௌபதி என்பது மிகப் பெரிய நகை முரண்.