Showing posts with label உயிர். Show all posts
Showing posts with label உயிர். Show all posts

Thursday, February 11, 2016

ஒரே நாளில் கருகிய நம்பிக்கை மொட்டு





சியாச்சின் பனிச்சரிவு விபத்திலிருந்து உயிரோடு மீட்கப்பட்ட வீரர் ஹனுமந்தப்பா, சிகிச்சை பலனில்லாமல் இறந்து போனார் என்ற துயரச் செய்தியைக் கேட்கையில் மேலேயுள்ள படம்தான் நினைவிற்கு வந்தது. மனதின் கனத்தை மேலும் அதிகரித்தது.

பனிக்குழியில் மாண்டவர் மீண்டார் என்ற தகவல் அறிந்து அந்த வீரரின் குடும்பத்தினர் ஆனந்தமடைந்த நேரத்தில் அந்த ஆனந்தத்தை பறிக்கிற இடியாய் இறப்பு நிகழ்ந்துள்ளது. ஹனுமந்தப்பாவின் மனைவியின் நிம்மதியையும் சந்தோஷத்தையும்  புகைப்படத்திலேயே நம்மால் உணர முடிகிறது.




வாழ்வில் இழந்ததெல்லாம் இனி மீட்கப்படும் என்ற நம்பிக்கை மொட்டு அரும்பிய ஒரு நாளிலேயே மலர்வதற்கு முன்பே கருகிப் போனது வார்த்தைகளில் விவரிக்க முடியாத ஒரு சோகம்.

போர் வீரர் ஹனுமந்தப்பாவிற்கும் அவரோடு உயிர் நீத்த இதர ராணுவ வீரர்களுக்கும் ஆழ்ந்த அஞ்சலி.