எஸ்.பி.பி யின் பிரபலமான பாடல்களில் ஒன்றான "பாடும் நிலாவே" படத்தில் வரும் "மலையோரம் வீசும் காற்று, மனசோடு பாடும் பாட்டு" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில்
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
எஸ்.பி.பி யின் பிரபலமான பாடல்களில் ஒன்றான "பாடும் நிலாவே" படத்தில் வரும் "மலையோரம் வீசும் காற்று, மனசோடு பாடும் பாட்டு" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில்
யூட்யூப் இணைப்பு இங்கே . . .
எஸ்.பி.பாலசுப்ரமணியன் அவர்களின் நினைவு நாளான இன்று,
அவர் மறைந்த போது அவரது 11 பாடல்களை அவருக்கான அஞ்சலியாய் என் மகன் வயலினில் வாசித்ததை
மீள் பதிவு செய்துள்ளேன்.
இங்கே யூட்யூப் இணைப்பு உள்ளது.
மறைந்த எஸ்.பி.பி க்கு இன்று பிறந்த நாள். அதனை முன்னிட்டு அவரது பிரபலமான பாடல்களில் ஒன்றான "நீதானே எந்தன் பொன் வசந்தம்" பாடலை வயலினில் வாசித்துள்ளான் என் மகன்.
பாடும் நிலா பாலு மறைந்து ஒரு வருடமாகி விட்டது. காலம் வேகமாக ஓடுகிறது. ஒவ்வொரு நாளும் காதில் விழும் பாடல்கள் மூலமாக அவர் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
அவரின் நினைவாக
கடந்த வருடம் அவர் மறைந்த போது அவரின் பாடல்களை என் மகன் வயலினில் இசைத்தான்.
அந்த இசைக் கோர்வையை
யூட்யூப்பில் இந்த இணைப்பின் மூலம் பாருங்கள்.
சில
நாட்களுக்கு முன்பாக சேனல்களை மாற்றுகையில் விஜய் டிவி சூப்ப்ர் நிகழ்ச்சியில் ஒரு
பாடலை முதல் முறையாகக் கேட்டேன். எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடலை அதற்கு பிறகு ஒரு நாளைக்கு
ஒரு முறையாவது கேட்டிருப்பேன். ஒரு முக்கியமான தமிழாக்கப்பணியை செய்து கொண்டிருந்த
போது எஸ்.பி.பி யின் குரலும் மெல்லிசை மன்னரின் இசையும் காதுகளைத் தாண்டி உள்ளத்தையும்
வருடிக் கொண்டிருந்தது. பணியின் கடுமை தந்த சோர்வையும் போக்கியது.
விஸ்வதுளசி
என்ற இப்படத்தின் பாடல்களை மெல்லிசை மன்னர் உருவாக்க பின்னணி இசையோ இளையராஜாவின் கை
வண்ணத்தில் என்பதை கூகிளார் சொல்ல, டைட்டில் இசையை யூட்யூபார் அளித்தார். அதுவும் உங்கள்
நெஞ்சை வருடிச் செல்லும்.
கடந்தாண்டு எஸ்.பி,பி மறைந்த போது பல்வேறு தொகுப்புக்களில் அவர் பாடிய 157 பாடல்களை பல நாட்களில் பகிர்ந்து கொண்டேன்.
நேற்று முன் தினம் அவரது பிறந்த நாள். அதனை ஒட்டி அந்த 157 பாடல்களில் இல்லாத இன்னொரு 12 பாடல்களை இப்போது பகிர்ந்து கொள்கிறேன்.
எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி தலைமுறை பாடல்கள்
முத்துராமன், சிவகுமார், ஜெய்சங்கர் தலைமுறைப்பாடல்கள்
கமலஹாசன், ரஜினிக்காக
கார்த்திக், பிரபு, மோகன், ராமராஜன் ஆகியோருக்காக எஸ்.பி.பி பாடிய பாடல்கள்
முன்னர் பகிர்ந்து கொண்ட 157 பாடல்களுக்கான காணொளிகள் அடங்கிய பதிவுகளின் இணைப்பையும் கீழே கொடுத்துள்ளேன்.
நினைத்தாலே இனிக்கும் உறவிலிருந்து
ராஜாவின் ராஜாங்கத்து நாயகர் அவர்
மைக்கிற்கு முன்னேயும் பின்னேயும்
கடந்தாண்டு எஸ்.பி.பி க்கு அஞ்சலி செலுத்த என் மகன் அவன் பாணியில் அவருடைய 11 பாடல்களை வயலினில் வாசித்து பதிவு செய்தான்.
புன்னகை மன்னனின் "என்ன சத்தம் இந்த நேரம்?" பாடல் எஸ்.பி.பி யின் மிகச் சிறந்த பாடல்களில் ஒன்று.
அந்த பாடலை ஒரு மேடையில் செல்வி ஸ்வேதா மோகன் பாடுவதை யுட்யூபில் பார்த்தேன்.
இதுவும் நன்றாகத்தான் இருந்தது. அதனால் நீங்களும் ரசிக்க பகிர்ந்து கொண்டுள்ளேன்.
ஒரு தோழர் ஒரு யூட்யூப் இணைப்பை அனுப்பியிருந்தார். "கேளடி கண்மணி" படத்துக்கு முன்பே எஸ்.பி.பி அவருக்கே குரல் கொடுத்துள்ளார் என்ற தகவலோடு.
அந்த காணொளியை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். முகமது பின் துக்ளக் படத்தின் தெலுங்கு வடிவத்தில் இப்பாடலை அவர் பாடி நடித்துள்ளார்.
என்ன ஒரு உற்சாகத் துள்ளல்! சிறந்த நடிகருக்கான அத்தனை அம்சங்களும் அப்போதே இருந்திருக்கின்றன.
எஸ்.பி.பி க்கான இசையஞ்சலியின் நிறைவுப் பகுதி இது.
இதற்கு முன்பாக ஒன்பது பதிவுகளில் அவர் பாடிய 151 பாடல்களின் காணொளிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
அவர் பாடல்களில் பதினொன்றை பாடும் நிலாவிற்கு வயலினில் அஞ்சலி
என்று என் மகன் வயலின் வாசித்ததையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.
இப்பதிவில் நடிகராகவும் முத்திரை பதித்த எஸ்.பி,பி அவருக்கே பாடிய பாடல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
மண்ணில் இந்த காதலன்றி
சின்ன கண்மணிக்குள்ளே
வழி விடு, வழி விடு, என் தேவி வருகிறாள்
காதலிக்கும் பெண்ணின்
வண்ணம் கொண்ட வெண்ணிலவே
மிதுனம் என்ற தெலுங்குத் திரைப்பாடல் (என்னைப் போன்ற உணவுப் பிரியர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்)
நாற்பதாயிரம் பாடல்களில் வெறும் 158 பாடல்கள்தானா என்று எனக்குள்ளே ஒரு கேள்வி வந்தது. பதிலும் உடனே மனதில் தோன்றியது.
எல்.ஐ.சி நிறுவனத்தை தனியார்மயமாக்க வேண்டும் என்று பரிந்துரை கொடுத்த மல்ஹோத்ரா குழு அறிக்கையை அமலாக்கக்கூடாது என்று 1994 ல் கையெழுத்து நடத்துகிறோம். நாடெங்கிலுமாக ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்கள் கையெழுத்திடுகின்றனர். 25.08.1994 அன்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய தலைவர் தோழர் சரோஜ் சவுத்ரி அன்றைய பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்களிடம் ஒப்படைக்கிறார். அப்போது நரசிம்மராவ் "100 கோடி மக்கட்தொகையில் ஐம்பத்தி ஐந்து லட்சமா?" என்று நக்கலாக கேட்கிறார்.
அன்று ஐம்பத்தி ஐந்து லட்சம் மக்களோடு துவங்கிய இயக்கம்தான் இன்று வரை எல்.ஐ.சி யை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாத்து வருகிறது. இத்தனை பாடல்களையும் நான் வேகமாக தரவிறக்கவும் பகிர்ந்து கொள்ளவும் இன்னொரு பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆப்டிகல் பைபர் இணைப்பே காரணம்.
ஆக இந்த 158 பாடல்கள் என்பது அவரது பாடல்களிலிருந்து பிழிந்தெடுக்கப்பட்ட சாறு. அதன் ருசி அதிகம்தான்.
மற்ற கலைஞர்களை விட ஏன் எஸ்.பி.பி மீது மக்கள் அதிகமான நேசத்தைக் காண்பித்தார்கள். தங்கள் இல்லத்து இழப்பாக ஏன் இன்னும் வருந்துகிறார்கள்?
குரலினிமைக்கா?
பாடும் திறனுக்கா?
அவர் பாடல்கள் அன்றாட வாழ்வின் அங்கமான காரணத்தாலா?
இவை அனைத்தும் உண்மை. இதைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரணம் உண்டு. அதை சொல்வதற்கு முன்பாக இன்னொரு காணொளியையும் பார்த்து விடுங்கள்.
இரண்டு இசை விற்பன்னர்களும் கொஞ்சம் கூட அகந்தை இல்லாமல் ஒருவரை ஒருவர் மதிக்கும் பாங்கு இருக்கிறதே, இதிலே கொஞ்சம் கூட நடிப்பில்லை. உண்மையான உணர்வன்றி வேறெதுவும் இல்லை.
தன் கலையை, சக கலைஞர்களை, மனிதர்களை நேசிக்கிற ஒரு முழுமையான மனிதராக எஸ்.பி.பி வாழ்ந்தார்.
அவர் நினைவு என்றும் நம் மனதில் வாழும்.
.... இசையஞ்சலி நிறைவுற்றது
எஸ்.பி.பி யின் குரலின் நிழல் பதிப்பாய் நான் இருந்தது பெருமை
என்று கமலஹாசன் கூறியிருந்தார்.
கமல் சொன்னது சரிதான். எத்தனை சிறப்பான பாடல்கள்! எண்ணிக்கையை
சுருக்கவே தோன்றவில்லை. நாற்பத்தி ஐந்து பாடல்களில் வந்து நின்றது. சரி ரவுண்டாக
இருக்கட்டுமே என்று ஐம்பதாக்கி விட்டேன். “கல்யாணம்,
கச்சேரி” என்ற வரிகளோடு தொடங்கிய பாடலோடு துவக்கிய பதிவை அதே “கல்யாணம், கச்சேரி”
என்று தொடங்கும் இன்னொரு பாடலோடு முடிப்போமே என்று எண்ணியதில் 51 பாடல்களாகி
விட்டது.
கல்யாணம், கச்சேரி எல்லாமே
உன்னை நான் பார்த்தது
கடவுள் அமைத்து வைத்த மேடை
ஜூனியர், ஜூனியர்
ஆசை போவது விண்ணிலே
ஒரே நாள் உனை நான் நிலாவில்
என்னடி மீனாட்சி
கம்பன் ஏமாந்தான்
எங்கேயும் எப்போதும்
பாரதி கண்ணம்மா
நான் கட்டில் மேலே கண்டேன்
சொர்க்கம் மதுவிலே
விழியில் என் விழியில்
உனக்கென்ன மேலே நின்றாய்
நடிகனின் காதலி நாடகம் ஏனடி?
தீர்த்தக் கரையினிலே
பேரைச் சொல்லவா?
ஜெர்மனியின் செந்தேன் நிலவே
நீல வான ஓடையில்
அந்தி மழை பொழிகிறது
ராதா ராதா நீ எங்கே?
சொல்லச் சொல்ல என்ன பெருமை
இளமை இதோ இதோ
ஒரு நண்பனின் கதை இது
தேகம் பட்டு
மேகம் கொட்டட்டும்
நாத வினோதங்கள்
வான் போலே வண்ணம் கொண்டு
பட்டுக் கண்ணம் தொட்டுக் கொள்ள
வானம் கீழே வந்தால் என்ன?
சிறிய பறவை சிறகை விரித்து
வலையோசை கலகலவென
வந்தாள் மகாலட்சுமியே
கால காலமாக வாழும் காதலுக்கு
என் ஜோடி மஞ்சக்குருவி
உன்ன நெனச்சேன், பாட்டு படிச்சேன்
புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
இதழில் கதையெழுதும் நேரமிது
காதல் மகராணி
மாருகோ மாருகோ மாருகயி
ரம்பம்பம் ஆரம்பம்
துள்ளி துள்ளி நீ பாடம்மா
சாந்து பொட்டு, சந்தனப் பொட்டு
எடக்கு முடக்கான சரக்கு
ஸ்ரீரங்க ரங்க நாதனின்
புதுச்சேரி கச்சேரி
பூங்குயில் பாடினால் நல்ல சங்கீதம்
கப்பலேறிப் போயாச்சு
சுவாஸமே, சுவாஸமே
கல்யாணம், கச்சேரி
மெல்லிசை மன்னர், கே.வி.எம் போன்ற மூத்த தலைமுறையினர் காலத்தில் பாட வந்தவர் எஸ்.பி.பி. (அவர்களை நான் முதல் தலைமுறை என்று குறிப்பிடவில்லை. எஸ்.பி.பி பாட வந்த போது அவர்கள் மூத்த தலைமுறை).
அதற்கடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளையராஜாவின் இசையில் அவர் பாடிய பாடல்கள் எண்ணிலடங்காது.
அதற்கடுத்த மூன்றாம் தலைமுறை இசையமைப்பாளர்கள் இசையிலும் தன் முத்திரையை பதித்தவர் பாலு.
அந்த மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் எஸ்.பி.பி முத்திரை பதித்த பாடல்களை இந்த பதிவில் ர்சியுங்கள்
காதல் ரோஜாவே
மானூத்து மந்தையிலே
தொடத் தொட மலர்ந்தென்ன?
பெண்ணல்ல, பெண்ணல்ல, ஊதாப்பூ
எனை காணவில்லையே நேற்றோடு
ஒருவன் ஒருவன் முதலாளி
என் வீட்டுத் தோட்டத்தில்
தீண்டாய், மெய் தீண்டாய்
மெட்டுப் போடு மெட்டுப் போடு
என் காதலே என் காதலே
இசையஞ்சலி தொடரும் . . .
மைக்
மோகன் என்றே அறியபட்ட மோகனுக்காக எஸ்.பி.பி பாடிய காலத்தால் அழியாத பாடல்கள்.
இளைய நிலா பொழிகிறது
ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ
பருவமே புதிய பாடல் பாடு
பாடு நிலாவே
உதய கீதம் பாடுவேன்
என்னோடு பாட்டு பாடுங்கள்
நீலக்குயிலே உன்னோடுதான்
நிலவு தூங்கும் நேரம்
இசை மேடையில்
விழியிலே மணி விழியிலே
கவிதை பாடு குயிலே
இதயம் ஒரு கோயில்
கூட்டத்திலே கோயில் புறா
மலையோரம் வீசும் காற்று
மன்றம் வந்த தென்றலுக்கு
நிலாவே வா
தேவன் தந்த வீணை
இசையஞ்சலி
தொடரும் . . .