உறங்குங்கள்
நன்றாக உறங்குங்கள்
உங்களுக்கு என்ன கவலை?
நன்றாக உறங்குங்கள்
அடுத்த வேளை உணவிற்கு
தவிப்பவர்களா நீங்கள்?
வேலை தேடும் வேலை
என் ஏதாவது உண்டா என்ன?
கடன் பட்ட நெஞ்சம்
போல் கலங்கிடவும் வேண்டாம்,
வாராக்கடனுக்காய்
தவிக்கவும் வேண்டாம்.
எவர் எக்கேடு கெட்டாலும்
ஐந்து வருடங்கள் உங்களை
அசைக்க வாய்ப்பில்லை
எனும் இறுமாப்போடு
உறங்குங்கள்
நன்றாக உறங்குங்கள்.
வாக்களித்த மக்கள்
துயரத்தில் தூக்கம் தொலைக்க
நீங்கள் உறங்குங்கள்
நன்றாக உறங்குங்கள்
அதற்குத்தானே அனுப்பினார்கள்
அப்பாவி மக்கள்....

