Saturday, April 18, 2020

சங்கத்தின் பணியும் மருத்துவரின் பாராட்டும்

தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பில் நேற்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு மருத்துவக் கருவிகள் அளித்தது. அது குறித்த விபரங்கள் கீழே உள்ளது. 

இச்செய்தியை சென்னையில் உள்ள ஒரு தோழர் ஸ்டான்லி மருத்துவ மனை மருத்துவருக்கு அனுப்ப அவர் தன் மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். அதனையும் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுப்பினர் என்பதில் பெருமிதம் கொள்ளும் தருணம் இது. 



சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ரூ 1,77,000 க்கு மருத்துவ கருவிகள்

சென்னை ஏப்ரல் 17, 2020
*********************************

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு ரூ 1,77, 000 பெறுமான மருத்துவ கருவிகளை தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வழங்கியுள்ளது. 

கொரோனா ஒழிப்புக்கான உதவி

கொரோனா ஒழிப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் ஆற்றி வரும் அரிய பணியை பாராட்டுகிற வகையிலும், அவர்களின் மருத்துவப் பணிக்கு உதவுகிற வகையிலும் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு இன்று மருத்துவ சாதனங்களை வழங்கியது. 50 பி.பி.இ தற்காப்பு கவசம், லேரிகோஸ்கோப் பிளேடுகள், பி.வி.எப் பில்டர்கள், ஸ்டில்லட்கள், ஷீல்டுகள் ஆகியன அவற்றில் அடங்கும். 

பாராட்டு

இன்று அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவைக்கு பாராட்டு தெரிவித்த தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் டி.செந்தில்குமார், இணைச் செயலாளர் ஆர்.கே.கோபிநாத் மருத்துவ சாதனங்களை மருத்துவர்கள் மீனாட்சி (மயக்கவியல் துறைத் தலைவர்), பி.ஸ்ரீதர் (உதவிப் பேராசிரியர்), என்.சத்யன் (இணைப் பேராசிரியர்) ஆகியோர் இடம் வழங்கினார்கள். மருத்துவர்களும் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Medical Devices donated to Stanley Government hospital by SZIEF
********************************

1. PPE KITS - (Personal Protection Gear): 50 Nos  This would be used for rendering protection for  medical staff  while taking care of Covid patients.

2. LARYGOSCOPE BLADES:  Will be used for  putting tubes into wind pipe fr ventilator.

3. BVF FILTERS: Mechanical Disposable filters used in Ventilators to filter virus preventing its contamination to other patients and doctors.  

4. STILLETS : Helps to put tubes into wind pipes  to encounter difficult situation. 

5. SHIELDS: To prevent patient secretions being sprayed over doctors face while putting tube into patient windpipe and taking care of patients.

நிவாரணப் பணியில் இன்னொரு முன்னுதாரணம்

மருத்துவரின் பாராட்டுச் செய்தி கீழே உள்ளது. 

Sir,I am SASIKALA CBO 20, Chennai Division -2 . Dr.Sathyan is our neighbour.My husband sent this message to Dr. He  has replied the attached message.

S sir.. We are greatly thank ful to Aiiea sir... * *Among the very many philanthropic activities of the lic employees union , * *our department anesthesiologists immensely thank and appreciate ur federation in supporting us in the fight against the Corona.

Infact when I was in thiruvarur, it was only because of the great help by one of ur union friend Mr.Senthil, that we could manage to stay for 1.5 yrs ....

*Long live Ur federation sir*🙏

1 comment:

  1. மக்களை காக்க என்றும் தோள் கொடுப்பவர்கள் AIIEA தோழர்கள்....

    ReplyDelete