Showing posts with label தமுஎகச. Show all posts
Showing posts with label தமுஎகச. Show all posts

Monday, March 16, 2026

பெருமையும் நிறைவும் அளித்த விருது

 


மோடி அரசின் கலாச்சாரத்துறையின் தலையீட்டால் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2025 ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது ஒருவழியாக இன்று அறிவிக்கப்பட்டு விட்டது.

கால தாமதமானாலும் மிகச் சரியான ஒருவருக்கே இந்த ஆண்டு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழின் முன்னணி எழுத்தாளரான தோழர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு "தமிழ்ச்சிறுகதையின் தடங்கள்" நூலுக்காக அளிக்கப்படவுள்ளது. இந்த ஆண்டு சென்னை புத்தக விழாவில் வாங்கியுள்ளேன். விரைவில் படிப்பேன்.

தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுத்தாளர் மட்டுமல்ல, அரசியல், கலை, பண்பாடு என பல தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வரும் அமைப்பாளர். முன்னாள் ராணுவ வீரரான அவர் அஞ்சல் தொழிற்சங்கத்தில் பொறுப்பாளராக செயல்பட்டுள்ளார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் ஆணி வேராக திகழும் தோழர்.

தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரப்புத்துவக் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற எழுச்சியை அவரது புதிய நூலான "திருப்பி அடித்த வரலாறு" சொல்லும். 

மிகச் சிறந்த சிறுகதைகளையும் பல்வேறு அர்த்தமிக்க நூல்களையும் எழுதியவர். அவரது தொழிற்சங்க அனுபவங்களை சொல்லும் "ஜிந்தாபாத், ஜிந்தாபாத்" நூல் எப்போதும் எனக்கு உணர்வூட்டும். எங்கள் வேலூர் கோட்டச்சங்க அனுபவங்களை அதன் வெள்ளி விழாவின் போது தொகுக்க எனக்கு வழிகாட்டியது அந்த நூல்தான்.

சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாத மிகச் சிறந்த மனிதர். எங்கள் சங்கத்தோடு நெருக்கமான உறவு கொண்டவர். எங்கள் கோட்டத்தின் மகளிர் மாநாடு, தொழிற்சங்க வகுப்பு ஆகியவற்றில் கலந்து கொண்டவர்.

தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.


எங்கள் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு அளவில் நடைபெறும் வெண்மணி சங்கம நிகழ்வில் தோழர் தமிழ்ச்செல்வன். 



ஏலகிரியில் நடைபெற்ற எங்கள் கோட்டத்தின் தொழிற்சங்க பயிலரங்கில்  தோழர் தமிழ்ச்செல்வன்.  


பாலக்காட்டில் நடைபெற்ற தென் மண்டல பயிலரங்கில் வகுப்பெடுத்த தோழர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்குகையில்.


மதுரையில் நடைபெற்ற தமிழ் மாநில மகளிர் கலை விழாவில் தோழர் தமிழ்ச்செல்வன். 

Wednesday, January 14, 2026

குன்றம் எங்கள் நிலமடா, சுவாசமடா

 தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளரும் சிறந்த ஓவியக் கலைஞருமான தோழர் வெண்புறா சரவணன் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொள்கிறேன். 

அவசியம் முழுமையாக படியுங்கள். திருப்பரங்குன்றம் இன்னொரு அயோத்தியாகும் என்ற சங்கிகளின் சதி  நிச்சயம் பொய்த்துப் போகும். . .




மலையும் மலைசார்ந்த வாழ்வும்

_______________________________
திருப்பரங்குன்றம் மலை எங்கள் இன்னொரு தாய்மடி. ஒருபுறம், இரண்டு மூன்று மண் குவியல்களை முன்னும் பின்னுமாகக் கொட்டி வைத்தது போன்ற தோற்றப் பொலிவுடனும் மறுபுறம், ஒரு யானை காலை மடக்கி படுத்திருப்பது போன்ற கம்பீரத்துடனும் காட்சியளிக்கும் எங்கள் மலை, எம் குன்றத்து மக்களின் அரணாகவும் இருக்கும் அழகு யாருக்கும் வாய்க்காது. இயற்கை வளத்துடன் சுதந்திரமான, எவ்வித இடையூறும் இல்லாத எங்கள் மலை எப்போதும், எல்லோரையும் அணைத்துக்கொள்ளும் துடிப்புடனே சிலகாலம் முன்புவரை இருந்திருக்கிறது.
அது ஒரு காலம்...
மலையேறுவது என்று முடிவு செய்துவிட்டால் நேரம் காலமெல்லாம் பார்க்காமல் குபீரென கிளம்பிவிடுவோம். பெரும்பாலும் பத்துப் பன்னிரண்டு பேருக்கு குறையாமலும், இரவாகவும் அது இருக்கும். சிறு தீனிகள், தண்ணீர் கேன்களுடன் இரவு பத்து மணிக்கு மலையேறினால், இறங்கி வரும்போது பழனியாண்டவர் கோவில் தெருவின் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போட்டுக் கொண்டிருப்பார்கள்!
நாங்கள் மலையேறும்போது இரவு நேர ரோந்துப் பணியில் இருக்கும் காவல்துறை நண்பர்கள் பார்த்துவிட்டால், சில நிமிடங்கள் நின்று எங்களைப் பார்த்துவிட்டு, "ஓ. நீங்களா... உங்களுக்கொல்லாம் தூக்கமே வராதா?" என்று சொல்லி சிரித்தபடி கிளம்பிவிடுவார்கள். தமிழகத்தின் கலை இலக்கிய ஆளுமைகள் பலரும் எங்களோடு மலையேறிய ஏகாந்தமான நாட்களை எண்ணிப்பார்க்கிறேன்... கலை இலக்கியம் அரசியல், பாடல்கள், கதைகள், கவிதைகள் என நீளும் பொழுதுகளில் குன்றத்து மலையே எங்களுடன் அமர்ந்து கூடிக்களித்திருப்பது போன்ற உணர்வுகளுடனேயே விடிகாலை பிரியா விடைகொடுத்து கீழிறங்குவோம். அதிலும், பௌர்ணமி நாட்களில் மிளிரும் மலையின் அழகை நடந்துணர்வதற்காகவே மலைமுழுவதும் அலைந்து திரிவோம். அப்படி ஒருநாள், யார் கண்ணிலும் படாத அழகிய குளம் ஒன்றுக்கு 'சாகுந்தலா குளம்' என்று சு.வெங்கடேசன் பெயர் சூட்டியதும், மற்றொரு நாள் மறைந்த எழுத்தாளர் க.சீ.சிவகுமார் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான 'இனியவை நாற்பது' போல், 'நிலா நாற்பது' படைக்கப் போவதாக மலையின் மெலமர்ந்து அறிவித்ததும் பசுமையாக நினைவிலிருக்கிறது.
சிலநேரங்களில் படிகளின் வழியே மலை ஏறாமல், பழனியாட்டவர் கோவில் பின்புறமுள்ள சரிவான நீள் பாறை வழியாக உச்சிப்பிள்ளையார் கோவில் சென்று, அங்கிருந்து செங்குத்தாக உள்ள பாறையில் இறங்கி நெல்லித் தோப்பை அடைவோம். அங்குள்ள சுமார் பத்தடி உயரத்தில் வெட்டிப் பிளந்ததுபோல் சிறிது சாய்வாகவும் செங்குத்தாகவும் உள்ள ஒற்றைப் பாறையில், 20 30 அடிகள் பின்னால் போய் ஓடிவந்து ஏறி திறமையைக் காட்டுவோம். (அது அவ்வளவு எளிதானதல்ல. பல முறை உச்சிக்குப் போகாமல் பின்னோக்கி சரிந்தபடியே கீழே வந்து விழுவோம்) பிறகு மறுபடியும் படிகளைப் பயன்படுத்தாமல் பாறைகள் வழியாகவே, காசிவிஸ்வநாதர் கோயில், அங்கிருந்தபடியே பின்புற பாறை வழியாக சிக்கந்தர் தர்கா, அங்கிருந்து இறங்கி, தூண் இருக்கும் பாறை, ஒற்றை மரம் என மலை முழுவதும் அரட்டையடித்துவிட்டு கீழிறங்கவும் பொழுது விடியவும் சரியாக இருக்கும்.
காசிவிஸ்நாதர் ஆலயத்திற்கு முன்னதாக நீள்வெட்டுத் தோற்றத்திலும், ஆலயத்திற்கு உள்ளே குளம்போலவும் தேங்கி இருக்கும் சுனைநீரை லட்சுமி தீர்த்தமென அங்கு வருபவர்கள் அள்ளிப் பருகுவார்கள். சிக்கந்தர் அவுலியா தர்காவிற்கும் அதிலிருந்து குடத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வார்கள்.
காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்குச் செல்லும் பாதையின் விளிம்பு செங்குத்தாக இருப்பதால் (யாராவது தவறி விழுந்தால் உடலைத் தேடித்தான் எடுக்கவேண்டும். பல தற்கொலைகளும்கூட அங்கு நடந்திருக்கிறது.) பக்தர்கள், பயணிகளின் பாதுகாப்புக்காக சுற்றுச்சுவர் கட்டும் பணி நான் இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நடைபெற்றது.
ஒன்று முதல் ஐந்துவரை பெரியரத வீதியில் இருந்த கோட்டைப் பள்ளியில் நான் படித்தபோது, (இப்போது அந்தப்பள்ளி திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை அருகில் உள்ளது) இட நெருக்கடியால் இரண்டாம் வகுப்பு மட்டும் பழனியாண்டவர் கோவில் தெருவில் உள்ள மலையேறும் படிகட்டு அருகில், சாவடியில் நடக்கும். அப்போது அந்தப்பணி நடைபெற்றபோது, கட்டுமானப் பணிகளுக்கு பொருட்களை கொண்டுசெல்ல படிகளைத்தான் பயன்படுத்தியாக வேண்டும். சும்மா நடந்தாலே மேல் மூச்சு கீழ்மூச்சு வாங்கி, இளைப்பாறியபடிதான் செல்லவேண்டிய நிலையில் சிமெண்ட், மணல், உடைகற்களைக் கொண்டு செல்வது அவ்வளவு எளிதானதல்ல, ஆட்கள் கிடைப்பதும் கடினம்.
இந்தச் சூழலில்தான். சாவடிக்கு (பள்ளி) முன்னால் குவிக்கப்பட்ட உடைகற்களை யார் வேண்டுமானாலும் எடுத்துச் சென்று கூலியை பெற்றுக் கொள்ளலாம். எட்டு வயதில் என் வகுப்பு நண்பர்களுடன் அந்த கற்களை நான் சுமந்திருக்கிறேன். (ஒரு கல்லுக்கு 5 பைசா என்று நினைவு.) ஒரு கல்லை சுமந்து செல்வதற்குள் முழி பிதுங்கிவிடும். இதில் ஆச்சரியம் என்னவென்றால். தர்காவுக்கு பிரியாணி அண்டா மற்றும் அங்குள்ள கடைக்கு சோடா, கலர் பெட்டிகளை தலையில் சும்மாடு கூட்டி பாய்மார்கள் அசால்ட்டாக கொண்டுசெல்வார்கள்.
பிறந்ததிலிருந்தே எனக்கும், தெருப் பசங்களுக்கும் உடன் பிறந்தது மலையேறுவதும், மலையில் சுற்றித்திரிவதும்.
"டேய் இங்க பார்ரா, எவனோ பாய் தலவாணி விரிச்ச மாரி வருசயா பளபளன்னு செதுக்கி வச்சிருக்கான்" என்றுதான் அறிமுகமாகியது, கால் முளைத்து நாங்கள் முதன் முறையாக மலையேறிய போது 'சமணப் படுகைகள்'. சமணர்கள் பள்ளிகொண்ட படுகைகள் தாங்கிய குகையுடன் இருக்கும் மலையடிவாரம்தான் எங்கள் வீடும், தெருவும். வீட்டின் பக்கவாட்டு சந்துக்குள் புகுந்து கிடுகிடுவென ஏறினால் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் படுகையில் இருப்போம். படியேறி இறங்குவதெல்லாம் (அதற்கும் தனியே படிகள் உள்ளன) கெளரவக் குறைச்சல் என்பது, படிக்கிற காலத்தில் எங்கள் எண்ணம். தேர்வுக்குப் படிக்க நாங்கள் தேர்வு செய்யும் இடம் சமணப் படுகை.
குறுக்கு வாக்கில் நீளமாக மலையை வெட்டிப் பிளந்தது போன்ற அந்தக் குகையின் படுகைக்கு உள்ளேயுள்ள துளையில் சிரமப்பட்டு நுழைந்து அருகில் உள்ள மறு துளை வழியாக வெளியேறும் போது திகிலாக இருக்கும். ஆனால், அது எங்களுக்கு விளையாட மட்டும்தான். படிப்பதற்கென்று நாங்கள் மட்டுமே பயன்படுத்தும் ஒரு இடம் உண்டு. படுகைக் குகையின் பக்கவாட்டில் சிறிது இடறினாலும் கீழே உருளக் கூடிய பாதையில் மலையை உரசிக் கொண்டே நகர்ந்து சென்றால், ஒரு ஐந்து பேர் மட்டுமே உட்காரக்கூடிய - துப்பாக்கியால் துளைத்தது போன்ற - அந்த குகையில் ஆட்டுப் புழுக்கைகளைத் தட்டிவிட்டுப் அமர்ந்து படிப்போம். அந்தக் குகையின் அருகில் மேலும் சில சிறு சிறு பொந்துகள் இருக்கின்றன. ஆந்தைகள் அடையும் அதற்குள் ஒருமுறையாவது நுழைந்துபார்த்துவிட வேண்டும் என்பதை ஆசைப்படத்தான் முடியும். நிஜத்தில் நடக்காது. அது ஆந்தைகளின் வசிப்பிடம் என்பதுகூட எனது பெரியம்மா சொல்லித்தான் தெரியும். மலையின் வெக்கை வீசும் வீட்டு வாசலில் இரவுகளில் படுக்கும் பெரும்பாலான தெரு மக்களில் நானும் ஒருவன். அப்படிப் படுத்திருக்கும்போது நள்ளிரவு நேரத்தில் பலமுறை "ஏய்... ஏய்" என்று அடித் தொண்டையில் யாரோ ரகசியமாய் கூப்பிடுவது போன்ற ஓசையைக் கேட்டு பயந்து தூங்காமல் இருந்திருக்கிறேன். ஒருநாள் என் பெரியம்மாவிடம், "எம்மா, மலையில் பேய் இருக்கா" என்றேன். அதற்கு பெரியம்மா, "எந்த கீர முண்டடா சொன்னது" என்றது. "இல்ல ராத்திரி அங்கருத்து ஏய், ஏய்னு கூப்புடுது" என்று மலையில் உள்ள துளைகளைக் காட்டி நான் சொன்னவுடன் விழுந்து விழுந்து சிரித்துவிட்டு, "அட அறுதப் பயலே அது ஆந்த மூச்சு விடுற சத்தம்டா" என்று சொன்ன பிறகுதான் இரவுகளில் நிம்மதியாக தூக்கம் வந்தது. அதன் பிறகு அ(ஆ}ந்த ஓசையை ரசிக்க ஆரம்பித்தேன்.
எங்கள் வீட்டிற்கு நேர் மேலே உள்ள சமணக் குகைகளும் (அதற்கு பஞ்சபாண்டவர் குகை என்று கதை கட்டியவன் எவன் என்று தெரிவில்லை.) கிழக்கே சற்று தள்ளி உள்ள உச்சிப்பிள்ளையார், காசி விஸ்வநாதர் ஆலயங்களும், மலை உச்சியில் உள்ள தர்காவும், தெற்கே அடிவாரத்தில் உள்ள ஊமையாண்டவர் கோயிலும் (கல்வெட்டுக் குகைக் கோயில்) ஏழு கன்னிமார்கள், கருப்பசாமி, உள்ளிட்ட குலதெய்வங்களும், குன்றத்து மலைக்கு எதிரில் உள்ள கூடதட்டி மலையில் உள்ள கட்டிக்குளம் மாயாண்டி சுவாமிகள், சோமப்பா சுவாமிகள் போன்ற சித்தர்கள் ஜீவசமாதிகளுமாய் பலரும் வந்துசெல்லும் நந்தவனமான இருந்த குன்றம் இப்போது மதவெறி குரங்குகள் கையில் கிடைத்த பூமாலையாக சிக்கியிருக்கிறது.
பறவைகளின் வேடந்தாங்கலாக நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து இந்து மக்களும் முஸ்லீம் மக்களும் சுதந்திரமாக வந்து சென்ற குன்றத்து மலை இப்போது உள்ளூர் மக்களுக்கே அந்நியப்பட்டு கிடக்கிறது. இரவிலும் காவல்துறையினர் சிரித்து மலைக்கு வழியனுப்பிய காலம்போய், பகலிலேயே ஆதார் கார்டு ஆதாரம் கேட்கும் குரூரம் அரங்கேறுகிறது. மதவெறியர்களின் பக்க வாத்தியங்களாகவும், ஊதுகுழலாகவும் உள்ளூர் காவல்துறையும், உயர்நீதிமன்றமும் மாறியிருக்கிறது. பக்தர்கள் எப்போதும் போல் தங்கள் வழிபாட்டை தொடரும்போது, பக்தியை வைத்து அரசியல் செய்யும் சங்கிப் பதர்கள் குன்றத்து அமைதியைக் குலைப்பதற்கு நாள்தோறும் வந்து குரைத்துக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் நம்பிக்கையிருக்கிறது...
சரவணப் பொய்கையில் நீராடி, முருகனின் திருநீரணிந்து, உச்சிப்பிள்ளையாருக்கு தீபம் ஏற்றி, காசிவிஸ்வநாதரை வணங்கிய கையோடு சிக்கந்தரிடமும் மந்திரித்துக்கொள்ளும் எம் குன்றத்து மக்கள் இந்தப் பிணைப்பில் நெருப்பள்ளி போடுபவர்களின் ஈனப் பிழைப்பில் நிச்சயம் மண்ணள்ளிப் போடுவார்கள்.
- வெண்புறா

Sunday, December 28, 2025

பெருமையாக இருக்கிறது.


 முன்னாள் ராணுவ வீரர், அஞ்சல் துறை ஊழியர், தொழிற்சங்கத் தலைவர், மிகச்சிறந்த எழுத்தாளர், அறிவொளி இயக்க செயற்பாட்டாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளராக, தலைவராக, மதிப்புறு தலைவராக செயல்பட்டு அந்த இயக்கத்தின் ஆணிவேராக திகழ்பவர், "திருப்பி அடித்த கதை" என்ற பெயரில் தஞ்சை மாவட்ட செங்கொடி இயக்கத்தின் வரலாற்றை எழுதியுள்ளவர், மகளிர் உரிமைகளுக்காக போராடுபவர், சிறப்பான வகுப்பாசிரியர், இந்தாண்டு சாகித்ய அகாடமி விருதிற்காக ஒரிஜினலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோழர் ச.தமிழ் செல்வன்.

அவருடைய முக நூல் பக்கத்தில் இந்த படத்தை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது.

ஆம், எங்கள் வேலூர் கோட்டச்சங்கத்தால் வெண்மணி புதிய நினைவகத்திற்கு வழங்கப்பட்ட தியாகிகள் நினைவுச் சின்னத்தின் முன்பாக எடுத்துக் கொண்ட படத்தைத்தான் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். 

அது எங்களுக்கு பெருமையாக உள்ளது.

பிகு: மேலே கொடுக்கப்பட்டுள்ள அறிமுகத்தை தோழர் தமிழ்ச்செல்வன் விரும்ப மாட்டார்.  அவர் விருதுக்கு தேர்வாகியுள்ளார் என்ற செய்தி வெளியானதும் வன்மத்தை அள்ளித்தெளித்த சில வயிற்றெரிச்சல் பேர்வழிகளுக்காக இப்பதிவு. 

Monday, December 22, 2025

சங்கி (மனசை) ங்களை புண்படுத்திக்கிட்டே இருக்காங்க

 


தோழர் ச.தமிழ்ச்செல்வன் சாகித்ய அகாடமி விருது பெறுவதை சகித்துக் கொள்ள முடியாத சங்கிகள் கலாச்சாரத்துறை அமைச்சகம் மூலம் தடுத்து நிறுத்தியுள்ள சூழலில் இந்த பபாசி வேறு அவர்கள் மனதை மேலும் புண்படுத்துவது போல இன்னொரு இடதுசாரி எழுத்தாளர், தமுஎகச தலைவர் தோழர் ஆதவன் தீட்சண்யாவிற்கு பொற்கிழி அளிக்கிறதே. 


அவருக்கு மட்டுமா?



முக்கிய மார்க்சிய நூல்களை மார்க்சிய அறிஞர் தோழர் எஸ்.வி.ராஜதுரை அவர்களுடன் இணைந்து தமிழாக்கம் செய்துள்ள தோழர் வ.கீதா அவர்களுக்கு வேறு பொற்கிழி.

இப்படி அறிவானவர்களை தேர்ந்தெடுத்து விருதுகள் கொடுத்தால் மூடர் கூட்டத்தைச் சேர்ந்த சங்கிகள் மனம் புண்பட மாட்டார்களா?

அதிலும் சாகித்ய அகாடமி போல இதனை தடுக்க வேறு முடியாது. 

Friday, December 19, 2025

உங்காளுங்களுக்கு உருப்படியா எழுத . . .

 


வழக்கமாக சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்ட பின்புதான் சர்ச்சை வரும். இந்தாண்டு முன்பே வந்து விட்டது.

நேற்று மாலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி விருதுகள் அறிவிக்கப்படும் என்று அறிவித்திருந்தார்கள். ஆனால் அது ரத்து செய்யப்பட்டதாக  பின்பு அறிவிக்கிறார்கள்.

காரணம் என்ன என்பதை கீழே உள்ள தமுஎகச அறிக்கை சொல்லும்.

சாகித்ய அகாதமியின் சுயேட்சையான செயல்பாட்டில் ஒன்றிய அரசின் தலையீடு கண்டிக்கத்தக்கது.
- தமுஎகச மாநிலக்குழு
சாகித்ய அகாதமி நிறுவனத்தால் இந்தியாவில் உள்ள 24 மொழிகளின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் இலக்கிய ஆளுமைகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதற்குரிய விருதுப் பட்டியலை அந்தந்த மொழியைச் சேர்ந்த சாகித்ய அகாதமி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட சுயேட்சையான குழு தேர்வு செய்து வெளியிடும்.
இந்த ஆண்டும் அதே போல் 24 மொழிகளின் குழுக்களும் தங்கள் தேர்வுப் பட்டியலை தயார் செய்துவிட்டன. அதன் அடிப்படையில் நேற்று 18.12.2025 மாலை 3 மணிக்கு டெல்லியில் நடைபெற இருந்த செய்தியாளர்கள் சந்திப்பில் விருது அறிவிப்பு வெளியாகும் என்று இருந்தது. நாடு முழுக்க உள்ள இலக்கிய ஆர்வாளர்கள் சாகித்ய அகாதமி விருதுப் பட்டியலை எதிர்பார்த்து காத்திருந்தனர்.
இந்தச் சூழலில் திடீரென்று அந்தச் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் சாகித்ய அகாதமி குழுக்களின் தேர்வுகளில் ஒன்றிய அரசின் அமைச்சகம் தலையீடு உள்ளதாக செய்திகள் வருகின்றன. இது சாகித்ய அகாதமி எனும் நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்கும் செயலாகும். இது போன்ற நேரத்தில் சாகித்ய அகாதமி நிறுவனம் தனது தன்னாட்சி அதிகாரத்தை காத்திட உறுதியோடு செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இந்தியாவில் உள்ள எல்லா நிறுவனங்களையும் கைப்பற்றும் அரசியல் வேலையை ஒன்றிய அரசு தொடர்ந்து செய்து வருகிறது. அதைப்போல சாகித்ய அகாதமி நிறுவனத்தின் சுயேட்சையான செயல்பாட்டை முடக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசின் செயலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டிக்கிறது. அனைத்து மொழிகளின் குழுக்களும் தேர்வு செய்த விருத்தாளர்களின் பட்டியலை எந்தத் திருத்தமும் இல்லாமல் வெளியிடும் அதே முறையை இந்த ஆண்டும், இனி வரும் ஆண்டுகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசை தமுஎகச கேட்டுக் கொள்கிறது.
*மதுக்கூர் இராமலிங்கம்*
தலைவர்
*களப்பிரன்*
பொதுச்செயலாளர்

தமுஎகச அறிக்கையில் குறிப்பிடாத முக்கியமான விஷயம் ஒன்று உண்டு. இந்த ஆண்டு தமிழுக்காக தமுஎகச வின் முக்கியமான தலைவரும் மிகச் சிறந்த எழுத்தாளரும் செயற்பாட்டாளருமான தோழர் ச.தமிழ்ச்செல்வன் எழுதிய "தமிழ்ச் சிறுகதைகளின் தடம்" நூல் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதுதான் அந்த செய்தி.

இறுதிப்பட்டியலில் மோடியின் அல்லக்கை மாலனின் பெயரும் இருந்த போதும் ஒரு இடதுசாரி எழுத்தாளருக்கு விருது கொடுப்பதா என்பதுதான் ஒன்றிய அரசின் கடுப்பிற்கு காரணம்.

இடதுசாரிகளே விருதுகளை பெறுகிறார்கள் என்று ஆஜான் போன்ற சங்கிகள் மத்தியில் ஒரு பொறாமை எப்போதும் உண்டு.

அவர்களிடம் ஒன்று சொல்ல வேண்டும்.

சங்கிகளும் உருப்படியாக எதையாவது எழுத வேண்டியதுதானே! தந்தை பெரியாரையும் அண்ணாவையும் கலைஞரையும் அசிங்கப்படுத்துவதற்கு என்றே சோ.அதர்மன் எழுதிய "சூல்" நாவலுக்குத்தான் விருது கிடைத்ததே, அது போன்ற குப்பையைக் கூட உங்கள் ஆட்களால் எழுத முடியாத போது சிறந்த எழுத்தாளர்கள் உரிய அங்கீகாரம் பெறுவதை சகிக்க முடியாத மோடி வகையறாக்கள் எல்லாம் ஆட்சி நடத்தவே அருகதையற்றவர்கள்.

Sunday, December 7, 2025

வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன்

 


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் புதிய பொதுச்செயலாளராக தோழர் களப்பிரன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், தஞ்சைக் கோட்டத்தின் துடிப்பு மிக்க தோழர் ராஜனாக அறிமுகமானவர். தஞ்சைக் கோட்டத்தின் பொறுப்பாளராகவும் செயல்பட்டார். தொழிற்சங்க தளத்தில் பணியாற்றுவதை விட கலை, பண்பாட்டு தளத்தில் பணியாற்றுவதில் அதிக ஆர்வம் காண்பித்தார். அதன் தொடர்ச்சியாய் ஒரு முக்கியமான அமைப்பின் முக்கியமான பொறுப்பை ஏற்றுள்ளார். 

ஏராளமான பயணங்களை மேற்கொண்டு அந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்பவர். அதில் காஷ்மீர் பயண அனுபவமும் பாகிஸ்தான் பயண அனுபவமும் மிக முக்கியமானது.

அவரது தலைமையில் தமுஎகச புதிய சிகரங்களை அடையட்டும்.

வாழ்த்துக்கள் தோழர் களப்பிரன் . . .


அமைப்பின் மாநிலக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எங்கள் கோட்ட இணைச்செயலாளர் தோழர் கே.வேலாயுதத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். . .

பிகு : மேலே உள்ள படங்கள் எங்கள் வேலூர் கோட்ட வெள்ளி விழா ஆண்டில் 2013 ல் திருவண்ணாமலையில் நடைபெற்ற வேலூர் கலை விழாவின் போது எடுக்கப்பட்டவை.

Tuesday, September 9, 2025

தாளம் போட வைத்த .......

 


தஞ்சையில் டிசம்பரில் நடைபெறவுள்ள தமுஎகச அமைப்பின் 16 வது மாநில மாநாட்டின் இலச்சினைதான் மெலே உள்ளது.

இந்த இலச்சினையுடன் அல்லது இன்னும் சரியாக சொல்ல வேண்டுமானால் இந்த இலச்சினையை ஒரு காணொளியாக தயாரித்து உள்ளனர்.

அதை கேளுங்கள்.

உங்களையும் அறியாமல் உங்கள் கால்கள் தாளம் போடும்.

இதோ அந்த காணொளி



இதனை தயாரித்த தோழருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

எனக்கு அனுப்பிய தமுஎகச துணைப் பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்ட தோழருமான தோழர் களப்பிரனுக்கு நன்றிகள் பல . . .

Wednesday, February 19, 2025

மதுரை போலீஸுக்கு மட்டும் காவி சீருடையா முதல்வரே?

 


நேற்று மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ஆகிய அமைப்புக்கள் இணைந்து மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் வலியுறுத்தியும் திருப்பரங்குன்றத்தின் அமைதியை குலைக்க சதி செய்யும் அழிவு சக்திகளை முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுமான பிரசுரத்தை மக்கள் மத்தியில் வினியோகித்தனர்.


ஆனால் இதனை மக்களிடம் கொடுக்க விடாமல் திருப்பரங்குன்றம் போலீஸ் தலையிட்டு அதனை பறித்துக் கொண்டு போய் அராஜகம் செய்தார்கள்.

திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு மூல காரணம் அரசு நிர்வாகமும் போலீஸும்தான். 

காவல்துறையில் காவி ஆடுகள் ஊடுறுவியுள்ளது என்பது தொடர்ந்து நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது. 

இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தல்லையிட்டு களையெடுக்காவிட்டால் நாளை அவருக்குத்தான் சிக்கல்...

Thursday, January 30, 2025

தமிழ் இந்து வெட்டிய "தகப்பன்சாமி"

 



எங்கள் தஞ்சைக் கோட்டத்தோழரும் தமுஎகச துணைப் பொதுச்செயலாளருமான தோழர் களப்பிரன் எழுதிய கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

நேற்றைய தமிழ் இந்து வெளியிட்ட கட்டுரையில் வெட்டப்பட்ட பகுதிகளை ப்ரௌன் நிறத்தில் கொடுத்துள்ளேன்.

சங் பரிவாரம் பற்றிய பயமோ, கரிசனமோ, சில முக்கியமான பகுதிகள் வெட்டப்பட்டுள்ளது.

நவம்பர் 14 ம் தேதியன்று ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரையை வெளியிட மறுத்த அனுபவம் தோழர் களப்பிரனுக்கு நேர்ந்துள்ளது. இந்த கட்டுரை பிரசுரமானதற்கு அதிலே மகாத்மா காந்தி குறித்த விமர்சனங்களும் உள்ளது கூட காரணமாக இருக்கலாம்.

ஆனாலும் கூட அண்ணல் அம்பேத்கரை மகாத்மா காந்தியின் தகப்பன்சாமி என்று சொல்லும் வரி நீக்கப்பட்டுள்ளது. தலைப்பிம் கூட மாற்றப்பட்டு விட்டது. ஒருவேளை இதுவும் ஒரு வகை தீண்டாமையோ.

*அம்பேத்கர் எனும் தகப்பன்சாமி*























- களப்பிரன் Kalapiran Kalam
(நன்றி: இந்து தமிழ் திசை 30.01.2025)

இன்று வெளிவந்துள்ள கட்டுரையின் முழு வடிவம்

காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாளில் அம்பேத்கர் குறித்து ஏன் பேசவேண்டும்? தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை காந்தியடிகளுடன் மாறுபட்ட கருத்துக்கொண்டிருந்த ஒருவர் குறித்து இந்நாளில் பேச என்ன இருக்கிறது? காந்தியடிகளை மகாத்மா என்று ஏற்றுக்கொள்ளாதவர் அம்பேத்கர். காந்தியடிகளும் அம்பேத்கர் கருத்துக்கு எதிராக தனது இதழ்களில் தொடர்ந்து பதில் எழுதிக்கொண்டே இருந்தார். இப்படி இவர்களுக்குள் இருந்த பல முரண்பாடுகளை சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால் காந்தியடிகள் வாழ்க்கையில் நடைபெற்ற மிக முக்கியமான மனமாற்றங்களுக்கு அம்பேத்கர் எந்த அளவிற்கு தாக்கம் செழுத்தினார் என்று பார்த்தோமானால், இவர்களுக்குள் இருந்தது பகை முரண் அல்ல என்பது நன்றாகத் தெரியும்.

*தீண்டாமைக்கு எதிரான தலைவர்*
1948 ஜனவரி 30ல் காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு முன்பாக அவரைக் படுகொலை செய்ய ஏழு முறை முயற்சிகள் நடைபெற்றுள்ளது. அந்த ஏழு முயற்சிகளும் காந்தியடிகளுக்கும் அம்பேத்கருக்கும் நடைபெற்ற பூனா ஒப்பந்த உரையாடலுக்குப் பின்பே நடைபெற்றது. காந்தியடிகள் ஆப்ரிக்காவில் இருந்த காலத்திலிருந்தே தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்துவந்தவர் தான். தன் மனைவி கஸ்தூரிபாயை கொண்டு ஒரு ஒடுக்கப்பட்டவரின் மலச்சட்டியை சுமக்கச்சொல்லும் அளவிற்கு தீண்டாமைக்கு எதிராக சொந்த வாழ்வில் இருந்தவர் தான். 1915ல் இந்தியா வந்த பிறகு அகமதாபாத்தில் அவர் தொடங்கிய ஆசிரமத்தில் ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை தங்கவைத்தார். அதற்காக காந்தியடிகளை வைணவப் பிரிவினர் ஊரை விட்டே ஒதுக்கி வைத்தனர். அவர் ஆசிரமத்திற்கு நிதி கொடுத்தவர்கள் தங்கள் நிதியை நிறுத்திக்கொண்டனர். ஆனாலும் காந்தியடிகள் தன் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்தினார்.

”தீண்டாமை ஒரு பாவகரமான செயல். அதைப் பின்பற்றுகிற நீங்கள் எல்லாம் இந்து மதத்தின் ஜெனரல் டயர்கள்” என்றும், “நாம் ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெறப் போராடுகிறோம். பெரும்பான்மை மக்களைச் சமமானவர்களாக நடத்தாமல் தீண்டாமைக் கொடுமையால் பிரித்து வைத்திருக்கும் வரை நமக்கு சுயராஜ்ஜியம் சாத்தியமே இல்லை” என்றும் 1920களிலேயே அதுவும் காங்கிரஸ் மாநாடுகளில் நின்று கொண்டு கடுமையாக பேசியவர் தான் காந்தியடிகள். ஆனாலும் சாதிய அமைப்பு குறித்தும், இந்துமத புனிதம் குறித்தும் காந்தியடிகளுக்கு இருந்த பார்வை மிகப்பழமையானவை. அப்போதெல்லாம் காந்தியடிகளின் இக்கருத்துக்கு எதிராக யாரும் வீதியில் இறங்கி போராடவில்லை.

*கிளம்பிய எதிர்ப்பு*
1932 பூனா ஒப்பந்தத்தை ஒட்டியும் அதற்கு பின்பும் அம்பேத்கருடன் நடைபெற்ற உரையாடல்கள் காந்தியடிகளிடம் பெரும் மனமாற்றத்தை ஏற்படுத்தியது. அதுவரை தீண்டாமைக்கு எதிரான கருத்துக்கள் இவரின் தனிப்பட்ட கருத்துக்களாகவே பார்க்கப்பட்டது. அம்பேத்கருடனான உரையாடலுக்குப் பின் அது ”ஹரிஜன இயக்கம்” என்று தேசிய இயக்கத்தின் வேலைத் திட்டமாக மாறியது. தீண்டாமைக்கு எதிராக காந்தியடிகள் தொடர் சுற்றுப்பயணம் செய்யத் தொடங்கி அது சூராவளியாக வீசத் தொடங்கியவுடன், அவருக்கு எதிராக இந்துமகா சபையினரின் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம், மலத்தை எடுத்து அவர் மீது வீசுதல் என்று எதிர் இயக்கத்தை தொடங்கினார்கள். முதல் முறையாக இந்தியாவில் காந்தியடிகளுக்கு எதிரான இயக்கம் தீவிரமடைந்தது அப்போது தான். அதன் உச்சமாக 1934 ஜுன் 25ல் புனாவில் அவர் சென்று கொண்டிருந்த கார் மீது குண்டு வீசி, அவரை கொலை செய்யும் முதல் முயற்சியை தொடங்கி வைத்தார்கள். அம்பேத்கரை காந்தியடிகள் சந்தித்து உரையாடாமல் இருந்திருந்தால் இந்த முதல் கொலை முயற்சியே நடந்திருக்காது.

ஆனாலும் காந்தியடிகளின் தீண்டாமைக்கு எதிரான இயக்கம் சுனக்கமில்லாமல் தீவிரமடைந்தது. கோவில் நுழைவுப் போராட்டம், தலித் அல்லாதோர் தலித்துகளை சாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டால் மட்டுமே அவர்களை ஆசிர்வதிப்பது என்று அவர் பணி இன்னும் வேகமெடுத்தது. ”இந்து மதத்தின் புனிதத்தை நீங்கள் கெடுக்கலாமா?” என்று காந்தியடிகளை நோக்கி வீசப்பட்ட கேள்விகளுக்கு “என்னுடைய செயலால் இந்து மதம் அழிந்தால் அழியட்டும். நான் கவலைப்படவில்லை. நான் இந்து மதத்தை காப்பாற்ற வரவில்லை. இந்து மதத்தின் முகத்தை மாற்றவே விரும்புகிறேன்” என்று கடுமையான பதிலைளித்தார். அவர் பேச்சின் சுடு தாங்காமல், “காந்தியையும் அவரைப் பின்பற்றுகிறவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்து இல்லை என்று குறிக்க வேண்டும்” என்று ஆங்கில அரசுக்கு கடிதம் எழுதினார்கள் அப்போதைய மடாதிபதிகள். இதன் தொடர்ச்சியாக காந்தியை கொலை செய்த அதே நாதுராம் கோட்சே 1944 மே மாதத்தில் புனே அருகே உள்ள பஞ்சாக்னி என்ற இடத்தில் காந்தியடிகள் மீது கத்தியால் குத்தி இரண்டாம் கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

*இவ்வாறு நடைபெற்ற தொடர் கொலை முயற்சிகளுக்கு, காந்தியடிகள் இந்துமத சனாதனிகளின் கருத்துக்களுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டதே காரணமாகும். ஒரு முறை காந்தியடிகள், “கொலை முயற்சியிலிருந்து எனது உயிர் ஏழு முறை காப்பாற்றப்பட்டிருக்கிறது. நான் அவ்வளவு சீக்கிரம் இறந்து விட மாட்டேன். 125 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன்” என்று கூறினார். அதற்கு பதிலாக நாதுராம் கோட்சே தான் நடத்தி வந்த ”அக்ரனி” இதழில் “அதுவரை யார் உங்களை உயிருடன் விட்டுவைக்கப் போகிறார்கள் பார்ப்போம்” என்று வன்மத்தோடு பதில் எழுதினார். அதன் பிறகே 1948 ஜனவரி 30ல் அதே கோட்சேவால் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த அளவிற்கு காந்தியடிகளுக்கும் சனாதானிகளுக்கும் இடையே தீராப்பகையை தொடங்கிவைத்தது அம்பேத்கருடனான காந்தியடிகளின் உரையாடல்களே.*

ஆனாலும் காந்தியடிகளின் தீண்டாமை ஒழிப்புப் பணிகளை அம்பேத்கர் முழுவதும் அங்கீகரிக்கவில்லை. பல நேரங்களில் கடிந்தே சொல்லியுள்ளார். ”காந்தி ஒரு ஆச்சாரமான இந்து தான். இவரால் தீண்டாமை ஒழிக்கப்படாது. அமெரிக்காவில் கருப்பினத்தவர்களுக்காகப் போராடிய கேரிசன் போலல்ல காந்தி” என்றே விமர்சித்தார். ஆனால் மறுமுனையில் காந்தியடிகளோ, “டாக்டர் அம்பேத்கரின் விமர்சனத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் மீது துப்புவதற்கு கூட அவருக்கு உரிமை உண்டு. அனைத்து உயர் சாதி இந்துக்களும் தீண்டத்தகாதவர்களை நடத்துவது பாவம். நம் மீது காறி உமிழ்வதற்கு அவர்களுக்கு முழு உரிமை உண்டு. அதை செய்தால் நான் ஏற்றுக்கொள்வேன்” என்று பதிலளிக்கிறார். ஆனால் இவ்வளவு கணிவான பதிலை தன்னை எதிர்க்கும் சனாதனிகளுக்கு எதிராக காந்தியடிகள் ஒருபோதும் சொன்னதில்லை.

*காந்தி – அம்பேத்கர் உறவு*

இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு அம்பேத்கரை ஜின்னா தன் நாட்டிற்கு அழைத்தார். காரணம் அம்பேத்கர் 1946ல் அன்றைய வங்காள மாகனத்திலிருந்தே தேர்வு செய்யப்பட்டார். அது பாகிஸ்தான் வசமானது. ஆனால் காந்தியடிகள் இதில் தலையிட்டு அம்பேத்கரை மும்பை மாகாணத்திலிருந்து மீண்டும் தேர்வு செய்ய வலியுறுத்தினார். அதோடு அவரை இந்தியாவின் முதல் அமைச்சரவையில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்பதையும் தனது விருப்பமாக முன்வைத்தார். சனாதானிகளிடம் இருந்த பகை முரண் போல் ஒரு நாளும் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையே இருந்த முரண்கள் பகை கொண்டதாக இருந்ததில்லை.

காந்தியடிகளைப் பொறுத்த வரையில் இந்திய விடுதலைப் போராட்டக் களத்தில் அன்றைக்கு இருந்த நேரு, நேதாஜி, அம்பேத்கர், பிசி ஜோசி என்ற எல்லோருமே அவரின் பிள்ளை வயது உடையவர்களே. அதனால் ஒரு தந்தையின் முறுக்கோடே அவர் எல்லோரிடமும் நடந்துகொண்டார். தான் எடுத்த முடிவில் ஒருநாளும் அவர் பின்வாங்கியது கிடையாது. சில பிள்ளைகள் அவர் பேச்சை கேட்கும். சில பிள்ளைகள் அவரோடு முரண்பட்டு நிற்கும். ஆனாலும் அவர் தனது முடிவை முரண்படும் பிள்ளைக்காக மாற்றிக் கொண்டதேயில்லை. அதற்காக வருத்தப்பட்டதுமில்லை. ஆனால் ஒரே ஒரு பிள்ளை அவரின் மனசாட்சியை தூங்கவிடமால் செய்தது. அந்தப் பிள்ளை அண்ணல் அம்பேத்கர். அந்தப் பிள்ளைக்காகவே அவர் பல நேரங்களில் மனம் மாறினார். நம்மூரில் தந்தைக்கு அறிவுரை சொல்லும் பிள்ளைக்கு தகப்பன் சாமி என்ற பெயர் உண்டு. காந்தியடிகள் வாழ்வில் அவருக்கான தகப்பன் சாமி அண்ணல் அம்பேத்கர் தான்.

Monday, February 5, 2024

செல்ஃபி பாயிண்ட் ரூ 1500 தான் டிமோ

 


ரயில் நிலையங்களில் செல்ஃபி பாயிண்ட் ஒன்று  அமைப்பதற்கு ஆறே கால் லட்ச ரூபாய் செலவாகிறது என்பது தகவல் அறியும் சட்டத்தின் படி கேட்கப்பட்ட கேள்விக்கு கிடைத்த பதில். பதில் சொன்ன அதிகாரியை அந்த பதவியிலிருந்து தூக்கி விட்டார்கள் என்பதும் இது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடாது என்று உத்தரவு போட்டதும் கிளைக்கதை.

 மேலே புத்தகம் போல உள்ள செல்ஃபி பாயிண்ட் தமுஎகச காட்பாடி கிளை, கடந்த டிசம்பரில் காட்பாடியில் நடத்திய புத்தகக் கண்காட்சியின் போது அமைக்கப்பட்டது. அழகாகத்தான் இருந்தது. இதற்கு என்ன செலவானது என்று அங்கே இருந்த பொறுப்பாளர் தோழர் ஸ்ரீராமிடம் கேட்டேன்.  பேனர், ஃப்ரேமுடன் சேர்த்து ஆயிரத்து ஐநூறு ரூபாய் என்றார்.

 1500 ரூபாய் எங்கே இருக்கிறது! ஆறேகால் லட்ச ரூபாய் எங்கே இருக்கிறது!

 டிமோவின் மூஞ்சியோடு போட்டோ எடுக்க ஆறே கால் லட்ச ரூபாயை ரயில்வே வெட்டியாக செலவழிக்க வேண்டுமா?

 ஆக இவர்கள் செய்தது ஊழல், ஊதாரித்தனம்.

Tuesday, January 23, 2024

பாவம் கழியாது டிமோ

 


சூப்பராக சொல்லி விட்டார், தமுஎகச தலைவர் தோழர் ச.தமிழ்ச்செல்வன். 

Saturday, January 20, 2024

இதுதான்டா மதச்சார்பின்மை நாடு

 தமுஎகச அமைப்பின் துணைப் பொதுச்செயலாளரும் எங்கள் தஞ்சைக் கோட்டத் தோழருமான களப்பிரன் அவர்களின் அனுபவப் பகிர்வு, ஒரு மதச்சார்பற்ற நாடு எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள முழுமையாக படியுங்கள்.

அவரிடம் இன்னொரு ஸ்பெசல் ஐட்டம் உள்ளது. அநேகமாக அதை அவர் நாளை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.

"இந்தியாவில் மட்டும் தான் மதச்சார்பின்மை பத்தி பேசுவீங்க. ஏதாவது ஒரு இஸ்லாமிய நாட்டில் பேசுங்களேன் பார்ப்போம்" என்று யாராவது ஒரு சங்கி கிளப்பிவிட்ட கேள்வியை, ஏன் எதற்கு என்று கூட கேட்காமல் அப்படியே நம்மிடம் வந்து ஒப்பிக்கும் அப்பாவிகளுக்காக...

கஜகஸ்தான் ஒரு இஸ்லாமிய பெரும்பான்மை நாடு. மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் 71% கிருஸ்தவர்கள் 17% குறிப்பிட விரும்பாதோர் 9.5% நாத்திகர்கள் 2.3% இதர மதத்தினர் 0.2%

இஸ்லாமிய பெரும்பான்மை இருந்த போதும் கஜகஸ்தான் அரசியலமைப்பு தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாகவே அறிவித்துக் கொண்டுள்ளது. சும்மா பெயருக்கல்ல. உண்மையாகவே மதச்சார்பற்ற நாடு தான்.

அந்நாட்டு சட்டம் மக்கள் அனைவரும் அவரவர் மத சுதந்திரத்தோடு வாழ உறுதி அளிக்கிறது. ஆனால் அரசு இயந்திரம் முழுவதும் மதச்சார்பின்மையை மட்டுமே கடைபிடிக்க வலியுறுத்துகிறது. அந்த நாட்டு சட்டப்படி அரசு விவகாரங்களில் மதம் தலையிடக்கூடாது. உதாரணத்திற்கு அங்குள்ள கல்விக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள் உள்ளிட்ட எதிலும் எந்த மத சடங்குகளும் கூடவே கூடாது. ஆனால் அவரவர் வழிபடும் இடங்கள் முழு சுதந்திரத்துடன் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் நம்மூரில் மதச்சார்பின்மை அரசியல் சட்டத்தில் இருக்கிறது. இங்கே தான் கட்டிமுடிக்கப்படாத #இராமர் கோவில் திறப்புக்கு நாடு முழுவதும் விடுமுறை விடப்படுகிறது. என்னங்க சார் உங்க சட்டம்.

ஆனால் கஜகஸ்தானில் பார்த்த காட்சிகள் முற்றிலும் வேறானவை. இஸ்லாமியர் அதிகம் வசிக்கும் அல்மாட்டி நகரின் பிரபலமான சுற்றுலா தலம் ஒரு #தேவாலையம். அதற்கு அடுத்த நிலையில் தான் அங்குள்ள #மசூதி இருக்கிறது. தேவாலயம் முதன்மை பெறக் காரணம் அதன் கலாச்சாரப் பாரம்பரியம். அங்கு மதம் அடுத்த நிலை தான்.

#Zenkovs_Cathedral எனும் Ascension Cathedral இரஷ்ய பேரரசின் காலத்தில் (1904 - 1907) கட்டப்பட்டது. கட்டிடக் கலைஞர் #Andrei_Zenkov வால் இது கட்டப்பட்டதால் அவரின் பெயரிலேயே இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்த தேவாலயம் முழுவதும் மரத்தால் கோர்த்து கட்டப்பட்ட இரஷ்ய பாரம்பரிய கட்டிடக்கலையை கொண்டது. மரத்தால் கட்டப்பட்ட உயரமான தேவாலயங்களில் இது முதன்மையானதும் கூட. பனி சூழ்ந்த பகலில் அதன் அழகு சொற்களால் சொல்ல இயலாது. தேவாலயத்தின் உள்ளே எத்தனை எத்தனை வண்ணங்கள். பெரும் பெரும் சுவர் ஓவியங்களும், கண்ணாடி ஓவியங்களும், நேர்த்தியான வடிவமைப்புகளும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதன் கட்டுமானம் பூகம்பத்தை தாங்கும் வகையில் தனித்துவமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. ஒரு முறை அந்நகரத்தில் ஏற்பட்ட பூகம்பத்திலும் உயிர் பிழைத்து இன்றும் அதே கம்பீரத்தோடு நிற்கிறது தேவாலயம். இந்த ஆலயம் இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் வழிபடும் இடமாக உள்ளது.

அதிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது அவ்வூரின் பெரிய மசூதி. 1999ல் தான் கட்டப்பட்டுள்ளது. தேவாலயத்தை விட பிரம்மாண்டமாக புதிய தொழில் நுட்பத்தோடு கட்டியிருக்கலாம். ஆனால் அப்படி கட்டவில்லை. ஒப்பீட்டளவில் அந்த தேவாலயத்தை விட மசூதி சிறிய அளவிலேயே கட்டப்பட்டுள்ளது. அதோடு அதன் கட்டுமானமும் இஸ்லாமியர்களின் நிதி உதவியால் கட்டப்பட்டுள்ளது.

இஸ்லாமிய பெரும்பான்மை உள்ள நாட்டில் பார்க்கும் இடமெங்கும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. யார் #கிறிஸ்தவர், யார் #இஸ்லாமியர் என்றே தெரியவில்லை. அந்த அளவிற்கு கலந்து இருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் எல்லா குடிமக்களும் தங்கள் மதச்சார்பின்மையை அறிவிக்கலாம், நாத்திகர்களாக பதிவு செய்து கொள்ளலாம் எனும் வாய்ப்புகளும் உள்ளது. இதுவெல்லாம் அந்நாட்டில் எப்படி சாத்தியமானது. ஒன்றே ஒன்று தான். அது சோவியத் அந்நாட்டிற்கு கொடுத்த கொடை. அதன் மூலம் பரவலாக்கப்பட்ட கல்வி அதில் முக்கியப் பங்கு வகித்தது. கல்வி வந்தால் #சாதி, #மதம் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்கும்.

#அல்மாட்டி நகரில் மட்டும் 7000 இந்திய மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள். அதில் 95% வட இந்திய மாநிலத்தவர். நம்மை விட GDPயில் குறைந்த நாடு, ஆனால் அங்கே கல்விக்கு அவ்வளவு வாய்ப்பு. ஆனால் நம்மூர் GDP சதவிகித அடிப்படையில் மிக அதிகம். ஆனால் அது அதானிக்கும் அம்பானிக்கும் மட்டும் தான் பெரிய வாய்ப்பாக உள்ளது.

இங்கே என்ன நடக்கிறது? பல லட்சம் கோடிகள் நகர் மேம்பாட்டிற்கு கொட்டப்பட்டு, தனி விமான நிலையம் வரை கட்டப்பட்டுள்ள #அயோத்தியில் இன்று வரை ஒரு நல்ல மருத்துவமனை கூட கிடையாது. உடல் நிலை சரியில்லை என்றால் #லக்னோ செல்லவேண்டும் என்று அம்மக்கள் சொல்கிறார்கள். நல்ல பள்ளிக்கூடமோ, ஒரு மருத்துவக்கல்லூரியோ, பொறியியல் கல்லூரியோ எதுவும் கிடையாது. படித்தால் நீ எப்படி மசூதியை இடிக்க வருவ... அங்கே எப்படி கோவில் கட்ட வருவ... என்று சொல்லாமல் சொல்வது போல் உள்ளது இன்றைய இந்தியாவின் நிலை
😢