Showing posts with label பாலியல் கொடுமை. Show all posts
Showing posts with label பாலியல் கொடுமை. Show all posts

Wednesday, September 11, 2024

குண்டர்கள் நீங்கள்தான் வாய்க்கொழுப்பு சூர்யா

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி மக்களவை உறுப்பினர் தோழர் சு.வெங்கடேசன் மீது அவதூறு செய்து கைதாகி இப்போதும் ஜாமீனில் உலவிக் கொண்டிருக்கும் எஸ்.ஜி.சூர்யா எனும் பாஜகவின் திமிர் பிடித்த ஆணவ சங்கி, கம்யூனிஸ்டுகள் மீது விஷம் கக்கியிருக்கிறான்.


தொழிலாளர்களின் உரிமைகளை நசுக்கிக் கொண்டிருக்கும் சாம்சங் நிறுவனத்துக்கு எதிராக அந்நிறுவன தொழிலாளர்கள், உழைக்கும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமான சி.ஐ.டி.யு தலைமையில் சங்கம் அமைத்து போராடி வருகிறார்கள்.

தொழிலாளர் நலத்துறை, காவல்துறை ஆகியோரோடு கூட்டணி வைத்துக் கொண்டு சாம்சங் நிர்வாகம் அடக்குமுறையை ஏவி விட்டுள்ளது.

முதலாளிகள் போடும் எலும்புத் துண்டுகளுக்காக வாலாட்டும் பாஜக கட்சியின் சூர்யா, போராடும் தொழிலாளர்களை கம்யூனிஸ்ட் குண்டர்கள் என்று கொச்சைப் படுத்தியுள்ளான்.

அந்த நாலு கால் பிராணிக்கு குண்டர்கள் யாரென்று சொல்ல வேண்டியுள்ளது.

குஜராத்திலும் மும்பையிலும் கோவையிலும் முசாபர் நகரிலும் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறியாட்டம் ஆடி ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று  அவர்களின் உடமைகளை அழித்த காவிக் கயவர்கள்தான் குண்டர்கள்.

நாடோடி இனச்சிறுமி ஆசிபாவை கோயிலுக்குள் வைத்து கூட்டு  பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்த அயோக்கியர்களும் அவர்களை விடுதலை செய்ய தேசியக் கொடியோடு ஊர்வலம் சென்ற பாஜக எம்.எல்.ஏ க்களும் கட்சியினரும்தான் குண்டர்கள். 

மணிப்பூரில் சிறுபான்மை இன மக்களை கொன்று குவித்து பெண்களை அவமானப்படுத்திய உங்கள் ஆட்களும் முதலமைச்சரும்தான் குண்டர்கள். 

மாட்டின் பெயரில் தொடர்ந்து அப்பாவிகளை கொன்று கொண்டிருக்கும் பாஜக, சங் பரிவாரத்தை சேர்ந்தவர்கள்தான் குண்டர்கள்.

பிள்ளையார் ஊர்வலம் என்ற பெயரில் குடித்து கூத்தடித்து சென்று கொண்டிருக்கிறார்களே அவர்கள்தான் குண்டர்கள்.

திருமணம் மீறிய உறவுப் பிரச்சினைகளுக்காக பல சங்கிகள் கொல்லப் படும் சூழ்நிலையில் அதனை மதப் பிரச்சினையாக திசை திருப்புகிற ஆட்டுக்காரன், எச்.ராசா, எஸ்.ஆர்.சேகர், கரு,நாகராஜன், முருகானந்தங்கள், எஸ்.ஜி.சூர்யா போன்ற அயோக்கிய சங்கிகள்தான் குண்டர்கள்.

இந்த குண்டர்கள் கூட்டத்தின் தலைவர்கள்தான் மோடியும் அமித்ஷாவும்.

தொழிலாளர்களின் உரிமைகளை மட்டுமல்ல, தொழில் நிறுவனத்தையும் பாதுகாக்கும் காவல் அரணாக திகழ்வது இடதுசாரி தொழிற்சங்க இயக்கங்களே. 

எல்.ஐ.சி யை பாதுகாக்கும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் ஒரு சின்ன உதாரணம்.

தொழிற்சங்க இயக்கத்தை கொச்சைப்படுத்தும் கேவலமான ஜந்து சூர்யாவே உங்கள் காவிக்கூட்டம் சார்பில் பி.எம்.எஸ் என்று ஒரு சங்கம் வைத்துள்ளீர்களே, அந்த ஆணி தேவையற்றதுதானே! கலைத்து விடவும். 

Sunday, August 18, 2024

கொல்கத்தா கொடுமை- மம்தாவே பொறுப்பு

 


கொல்கத்தாவில் நடந்த கொடூரம் நம்மை பதற வைக்கிறது. நிர்பயாவை எப்படி சித்திரவதை செய்தார்களோ, அதை விட மோசமான சித்திரவதைக்கு அந்த இளம் மருத்துவர் உள்ளாகியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஒரு ரௌடிக் கலாச்சாரத்தை உருவாக்கி வைத்துள்ள மம்தாவே இச்சம்பவத்திற்கு முழு முதல் பொறுப்பு.  ஒரே ஒரு குற்றவாளி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளான். அவனைத் தவிர இன்னும் ஏராளமான குற்றவாளிகள் உள்ளனர் என்பது இறந்த பெண்ணின் சடலம் சொல்லும் செய்தி.

ஆனால் மற்றவர்களை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதால் அந்த மருத்துவ மனை போராட்ட களமானது. 

போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது நூற்றுக்கணக்கான ரௌடிகள் தாக்குதல் நடத்தி அராஜகம் செய்ததும் அவர்கள் வந்ததும் போலீஸ் ஒளிந்து கொண்டதும், மிகப் பெரிய குற்றத்தின் பின்னணியில் இருப்பது திரிணாமுல் காங்கிரஸ் குண்டர்கள்தான் என்பது தெளிவாகிறது.

ஆர்ப்பாட்டம்  நடத்துவதை விட்டு விட்டு தன் கட்சியில் உள்ள ரௌடிகள், பொறுக்கிகள், திருடர்களை வெளியேற்றட்டும்.

ஆனால் அதை மம்தா செய்ய மாட்டார்.

ஏன்?

அவர் கட்சியே காணாமல் போய் விடும்.

Tuesday, October 17, 2023

குற்றவாளிகளை பாதுகாக்க விசாரணை?

 


       

புது டெல்லி நோய்டாவிற்குப் பக்கத்தில்  நித்தாரி என்றொரு சின்ன ஊர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது. நோய்டாவே உத்தரப்பிரதேசம்தான்

 பல வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவையே அதிர வைத்தது.

 அந்த ஊரில் உள்ள பெண் குழந்தைகள், இளம் பெண்கள் காணாமல் போகத் தொடங்கினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு பணக்காரன் வீட்டின் பின்னே இருந்த கழிவுநீர் வாய்க்காலில் ஒரு எலும்புக் கூடு கிடைக்கிறது. அது காணாமல் போன ஒரு சிறுமியுடையது என்று தெரிய வருகிறது.

 அந்த செல்வந்தன் வீட்டை சோதனை செய்கையில் மேலும் பல எலும்புக் கூடுகள். அந்த பணக்காரன் மோனிந்தர் சிங் பாந்தர் என்பவனும் அவனது வேலையாள் சுரேந்தர் கோலி என்பவனும் கைது செய்யப்படுகிறார்கள். வழக்கு சி.பி.ஐ வசம் செல்கிறது.

 கொலை, பாலியல் வன் கொடுமை, ஆள் கடத்தல் ஆகியவை மட்டும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அல்ல. அதையும் தாண்டி அதிர்ச்சிகரமான ஒன்றும் உண்டு.

 ஆம். அது நர மாமிசம் சாப்பிட்டதான குற்றச்சாட்டு.

 கடத்தி கொல்லப்பட்டவர்களின் உடல்களை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். இதனை அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

 இருவருக்கும்  மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவர்களின் கருணை மனுக்கலை பரிசீலிக்க அநியாயமான கால அவகாசம் எடுத்துக் கொண்டதாக சொல்லி உச்ச நீதிமன்றம் இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விடுகிறது.

 நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இவர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளது.

 ஏன்?

 இவர்கள்தான் குற்றவாளிகள் என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணைக்குழு தவறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய தவறியுள்ளது. குற்றவாளி சுரேந்தர் கோலி சொன்னதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மற்ற சாட்சியங்களை சேகரிக்க தவறி விட்டது. விசாரணைக்குழு படு அலட்சியமாக இந்த வழக்கை கையாண்டுள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்ய விசாரணைக்குழுவின் அலட்சியம்தான் காரணம்.

 மேலே சொன்னதுதான் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கம்.

 சி.பி.ஐ ஒரு பொறுப்பான அமைப்பு என்று கருதப்படுகிறது.

 ஆனால் அதன் செயல்பாடு அதற்கு நேர் மாறாக இருந்துள்ளது. குற்றவாளிக்கு ஆதரவாக, குற்றவாளியை பாதுகாக்கவே அப்படி அலட்சியமாக செயல்பட்டதா என்று சந்தேகம் வருகிறது.

 பாதிக்கப்பட்டவர்கள் நிலை?

 அவர்கள் கிடக்கிறார்கள் கழுதைகள், அவர்கள் பாதிக்கப்பட்டதோ, அவர்களின் வலியோ எல்லாம் முக்கியமில்லை.  அவர்கள் ஒன்றும் இந்த அமைப்பில் செல்வாக்கானவர்கள் கிடையாதே! குற்றவாளிகள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து என்ன கிடைக்கும்? ஐயா, எனக்கு நீதியே வேண்டாம் என்று வெறுத்து ஒதுங்கி போக வைக்குமளவுதானே இன்று நீதி பரிபாலணம் மாறி இருக்கிறது.

 சாதாரண நடவடிக்கை தாமதமானாலே குற்றவாளிகள் திமிர்த்தனத்தோடு அலைவார்கள்! இப்படி அலட்சியமாக அவர்களை பாதுகாப்பது போல நடந்து கொண்டால் இன்னும் மோசமாகத்தான் போவார்கள். குழந்தையை கொன்றவன் பிணையில் வெளி வந்து தன் அம்மாவையே கொன்றானே, அது போலத்தான் நடக்கும். நாமும் இப்படி கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், அதனால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொண்டே.

 நாட்டையே அதிர வைத்த ஒரு வழக்கில் அலட்சியம் காண்பித்த அந்த விசாரணை அதிகாரிகள், குற்றவாளிகளை விட கேடு கெட்டவர்கள். மொத்தத்தில் நீதி என்பதை கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்கள்.

 ஒரே ஒரு விஷயம்தான் ஆறுதல்.

 அலகாபாத் நீதிமன்றம் இக்குற்றவாளிகளை பெண்களின் பாதுகாவலர்கள், குழந்தைகளின் பாதுகாவர்கள் என்றெல்லாம் அடைமொழி கொடுத்து எந்த பதவியும் கொடுக்கச் சொல்லி பரிந்துரைக்கவில்லை. அப்படிப்பட்ட கேலிக் கூத்துகள் எல்லாம் நடக்கும் நாடுதானே நம் இந்திய நாடு! சாத்வி பிராக்யா சிங் தாகூர் ஞாபகம் இருக்கிறதல்லவா!

Tuesday, August 22, 2023

என்ன நடக்குது குஜராத் ஹைகோர்ட்டில்?

 


குஜராத்தில் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளான ஒரு பெண், அக்கொடுமை மூலம் உருவான கர்ப்பத்தை கலைக்க அனுமதி கோரிய வழக்கை அவசர வழக்காக உச்ச நீதிமன்றம் எடுத்துக் கொண்டது. கருவின் தன்மை குறித்தும் கருக்கலைப்பு பாதுகாப்பானதா என்று அறியவும் மருத்துவ சோதனைக்கும் ஆணையிட்டது. 

அப்பெண்ணின் மனு மீதான விசாரணையை தள்ளிப் போட்டு பின்பு நிராகரிக்கவும் செய்திருந்தது குஜராத் உயர் நீதிமன்றம்.

அதனால்தான் பிரச்சினை உச்ச நீதிமன்றத்துக்கும் வந்தது.

உச்ச நீதிமன்றத்துக்கு வழக்கு வந்ததும் குஜராத் உயர் நீதிமன்றம் தானாகவே அந்த வழக்கை எடுத்துக் கொண்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை "குழந்தை பிறந்ததும் அதை நீ வளர்க்கிறாயா அல்லது அரசின் பொறுப்பில் கொடுக்கிறாயா? " என்று கேட்டுள்ளது.

"பாலியல் வங்கொடுமைக்கு ஆளான பெண் அந்த கர்ப்பத்தை சுமக்க வேண்டும் என்பது எவ்வளவு பெரிய வலி தெரியுமா! என்னதான் நடக்குது குஜராத் உயர் நீதிமன்றத்தில்?"

என்று உச்ச நீதிமன்றம் குஜராத் உயர் நீதிமன்றத்தை சாடியுள்ளது.

பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளின் மாநிலம் பிற்போக்குத்தனமாகத்தானே இருக்கும்!

Thursday, July 20, 2023

பாஞ்சாலிகளும் திரௌபதியும் . . .

 

கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக்
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்.
‘ஐயகோ’ வென்றே யலறி யுணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர,
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக, மொய்த்தவராய்,
‘என்ன கொடுமையிது’வென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்

மகாபாரத புனைவுக் கதையின் ஒரு பகுதியை "பாஞ்சாலி சபதம்" ஆக பாரதி எழுதினான். அதிலே துச்சாதனன் பாஞ்சாலியை அரசவைக்கு இழுத்து வரும் காட்சிதான் மேலே உள்ளது. பாரதி எழுதியதை படிக்கையிலேயே நெஞ்சம் பதைபதைக்கிறது.

புனைவை விட மோசமான நிகழ்வாக மணிப்பூரில் பழங்குடியின பாஞ்சாலிகளுக்கு அராஜகம் நிகழ்ந்துள்ளது.

"நெட்டை மரங்களென நின்று புலம்பினர்" என்று பாரதி மக்களை சாடினான்.

இந்தியாவின் முதல் குடிமகள், பழங்குடியினத்தின் முதல் குடியரசுத் தலைவர் என்ன செய்கிறார்.

நெட்டை மரமென புலம்பும் உரிமை கூட அற்றவர். பீஷ்மரும் துரோணரும் விதுரரும் போல வேடிக்கை மட்டுமே அவரால் பார்க்க இயலும்.

அவரது பெயரும் திரௌபதி என்பது மிகப் பெரிய நகை முரண். 

எரி தழல் கொண்டு வா

 


இது பொறுப்ப தில்லை தம்பி     
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்திழந்தான்.
அண்ணன் கையை எரித்திடுவோம்

-         பாஞ்சாலி சபதத்தில் பாரதி

 

நல்ல வேளை, நான் அந்த காணொளியை பார்க்கவில்லை. ப்ளர் செய்யப்பட்ட புகைப்படங்களே  மணிப்பூரில்  நிகழ்ந்த அராஜகத்தை புரிய வைத்தது.

 

கொடுமையைச் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும். வேடிக்கை பார்த்தவர்களை சிறைக்குத் தள்ள வேண்டும் என்றெல்லாம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் திருமதி குஷ்பூ ட்வீட்டியிருந்தார்.

 


யாரெல்லாம் குற்றவாளிகள்?

 

 பெண்களை இழிவு படுத்திய   வெறி பிடித்த ஜென்மங்கள்.

 அரசியல் ஆதாயத்துக்காகவும்   பழங்குடி மக்களின் நிலங்களை   அதானி உள்ளிட்ட முதலாளிகளுக்கு   அள்ளிக் கொடுக்கவும் கலவரத்தைத்  தூண்டி விட்ட,அதிகாரத் தரகர்கள், அதான் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

 அநீதியை அனுமதித்த முதல்வர்,

வேடிக்கை பார்த்த உள்துறை அமைச்சர்,

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிடும் வரை

உறக்கத்தில் மூழ்கிப்போன கையாலாகாத டிமோ

 இவர்கள் அத்தனை பேரும்தான் நடந்த கொடூர சம்பவத்திற்கு பொறுப்பு. பாரதி சொன்னது போல் எரிதழல் கொண்டு பொசுக்கிட வேண்டியவர்கள்.

 சரிதானே குஷ்பு மேடம்?

 

Sunday, May 7, 2023

"குஜராத் ஸ்டோரி" எடு நரேந்திரா

 


32,000 பெண்கள் கேரளாவிலிருந்து சிரியாவுக்கு கடத்தப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் இணைந்தார்கள் என்றொரு கட்டுக்கதையை அடிப்படையாகக் கொண்டு கேரளா ஸ்டோரி என்றொரு திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது. பிரதமர் பதவியில் இருப்பவர் அதற்கு கூவி கூவி விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்.

இன்றைக்கொரு செய்தி வெளி வந்துள்ளது.

கேடி பில்லா முதலமைச்சராகவும் கில்லாடி ரங்கா உள்துறை அமைச்சராகவும் இருந்த குஜராத் மாநிலத்தில் ஐந்தாண்டுகளில் மட்டும் நாற்பதாயிரம் இளம் பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர் என்று கேடிஷா தலைமையில் உள்ள அமைச்சகத்தின் ஒரு பிரிவான தேசிய குற்ற ஆவண மையம் வெளியிட்டுள்ள அறிக்கை சொல்லும் உண்மை இது. அவர்கள் வேறு மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு பாலியல் தொழிலுக்காக விற்கப் படுகின்றனர் என்று சொல்கிறார் ஒரு போலீஸ் அதிகாரி. 


காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி என்றெல்லாம் பொய்ப் பிரச்சாரம் செய்து படம் எடுக்க வைத்து அதற்கு கேடு கெட்ட விளம்பரமும் செய்து வருகின்ற "வெறும் நரேந்திரா" வே உமது மாநிலத்தின் உண்மைச் சம்பவத்தை வைத்து "குஜராத் ஸ்டோரி" எடுப்பாயா நரேந்திரா?

Thursday, March 24, 2022

வேலூர் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது

 


கடந்த வாரம் வேலூரில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அதன் விபரங்களை இன்று ஆங்கில இந்து நாளிதழில் வெளியிட்டிருந்தார்கள். 

காட்பாடியிலிருந்து வேலூர் நோக்கி இரவுக்காட்சி திரைப்படம் முடித்து வந்த ஒரு பெண் மருத்துவரை ஒரு கும்பல் ஷேர் ஆட்டோவில் கடத்தி கூட்டுப் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்கள். அந்த பெண் மருத்துவர் பீகாருக்கு சென்று மின்னஞ்சல் மூலமாக புகார் அளித்த பின்பு நடவடிக்கை எடுத்ததில் நான்கு இளைஞர்கள், இருபத்தி இரண்டு வயதுக்கு உட்பட்டவர்கள், மட்டுமல்ல, 18 வயதுக்கும் உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தனை பேரும் போதையிலிருந்ததாக சொல்கிறார்கள்.  கைது நடவடிக்கை நல்லது. ஆனால் இந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. வேலூரில் இது போன்ற சம்பவங்கள் நடந்தது கிடையாது. இதனை தவிர்த்திருக்க முடியுமா?

முடியும் என்றுதான் சொல்வேன்.

டாஸ்மாக்கை மூடினாலே பாதி குற்றங்கள் குறையும்.  டாஸ்மாக்கால் கிடைக்கும் வருவாயை விட சமூக அமைதி என்பது மிக முக்கியம்.

இன்னொன்று காவல்துறையின் அலட்சியம்.

முன்பெல்லாம் நள்ளிரவு எங்கேயாவது வெளியூர் போய் விட்டு ஆட்டோவில் வந்தால் காவல்துறை வண்டியை நிறுத்தி சோதனை செய்யும். இதற்காகவே பல ஆட்டோக்காரர்கள் சத்துவாச்சாரி என்றால் வர மாட்டோம் என்று கூட சொல்வார்கள். 

எடப்பாடி ஆட்சிக்கு வந்தது முதல் காவல்துறைக்கு அலட்சியமும் மெத்தனப் போக்கும் வந்து விட்டது. இப்போதும் அந்த போக்கு தொடர்கிறது என்பதுதான் யதார்த்தம். 

15 நாட்களுக்கு முன்பாகக் கூட என் மகனை இரவு 11.30 மணிக்கு ரயிலேற்றி விட்டு ஆட்டோவில் வரும் போது காவல்துறை கேட்டால் காண்பிப்பதற்கு என்று எல்.ஐ.சி ஐ.டி கார்ட், PAN CARD எல்லாம் பத்திரமாய் வைத்திருந்தேன். சில்க் மில் ஸ்டாப், க்ரீன் சர்க்கிளில் இரண்டு இடம், சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியரகம் என நான்கு இடங்களில் போலீஸ் இருந்தாலும் யாரும் யாரையும் கண்டுகொள்ளவில்லை.

இதில் ஏதாவது ஒரு இடத்திலாவது காவலர்கள் அந்த ஆட்டோவை சோதித்திருந்தால் இந்த சம்பவத்தை தவிர்த்து அந்த பெண்ணை காத்திருக்க முடியும். தமிழ்நாட்டின், வேலூரின் மானத்தையும் கூட.

தமிழ்நாட்டு முதல்வர் காவல்துறை மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். 

Monday, December 20, 2021

நிஜமென்றால் நல்லதுதான்

 


தேசிய குற்ற ஆவண ஆணையம் 2020 ஆண்டில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களைப் பற்றிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 2019 ல் பதிவான குற்றங்களின்  எண்ணிக்கை  51,56,158 என்றால் 28 % உயர்வோடு  66,01,285 குற்றங்கள் பதிவாகி உள்ளதாய் இவ்வறிக்கை சொல்கிறது.

 அதே நேரம் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2019 ல் 4,06,326 ஆக இருந்தது 8.3 % குறைந்து 3,71,503 ஆக உள்ளதென்றும் 

 குழந்தைளுக்கு எதிரான குற்றங்கள் 2019 ல் 1,48,090 ஆக இருந்தது 13.2 % குறைந்து  1,28,531  ஆக உள்ளதென்றும் சொல்கிறது   இந்த புள்ளி விபரம் .

 பாலியல் வன் கொடுமை வழக்குகளில் 31 % வழக்குகளில் மட்டுமே தண்டனை கிடைக்கிறது என்ற நிலை நீடிப்பது நல்லதல்ல. காவல்துறை வழக்குகளை அலட்சியமாக கையாள்கிறது என்பதன் அடையாளம் இது.

 பிகு : இந்த அறிக்கையை மேலோட்டமாக பார்த்த போதே மோடி வகையறாக்களின் ஒரு டூபாக்கூர் அம்பலமானது. அது என்ன?

 நாளை மாலை வரை காத்திருங்கள்

 

Friday, November 19, 2021

அபத்தமான தீர்ப்பு அகற்றப்பட்டது

 


கடந்தாண்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு அபத்தமான தீர்ப்பை அளித்தது.

ஒரு சிறுமியை ஒரு கிழவன் பாலியல் சீண்டல் செய்தான் என்று போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில்

அந்த சிறுமி ஆடைகள் அணிந்திருந்ததால், நேரடியான தொடுதல் இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி. 

நல்ல வேளையாக அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தற்காலிக நீதிபதியாக இருந்த அந்த அம்மையாரை நிரந்தர நீதிபதியாக்காமல் பதவியிலிருந்து அகற்றினர்.

நேற்று உச்ச நீதிமன்றம் நாக்பூர் தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அது அபத்தமான ஒன்று என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆடைகள் இருந்ததா, நேரடி தொடுதல் இருந்ததா இல்லையா என்பதெல்லாம் முக்கியமே இல்லை, பாலியல் சீண்டல் நோக்கம் இருந்ததா என்பது மட்டுமே முக்கியம்"

என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

குற்றவாளிகள் சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிக்க அனுமதிக்கப் படக் கூடாது. 

Tuesday, March 2, 2021

விவேக் தீர்ப்பே மேல் ஜட்ஜய்யா

 


மைனர் பெண்ணை பாலியல் கொடுமை செய்தவனுக்கு போக்ஸோ சட்டத்தின் கீழ் தண்டனை தருவதற்குப் பதிலாக அந்தப் பெண்ணுக்கு 18 வயது நிரம்பியதும் திருமணம் செய்து கொண்டால் உதவ தயாராக இருப்பதாக கீழ் மட்டத்தில் இருக்கிற மாஜிஸ்டிரேட் சொன்னாலே அது மிகப் பெரிய அராஜகம். ஆலமரத்தடி கட்ட பஞ்சாயத்தை விட மோசமான ஒன்று.

 ஆனால் அதையே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியே சொன்னால் கேட்பதற்கே அது எவ்வளவு நாராசமாக உள்ளது!

 ஒரு பாலியல் குற்றவாளிக்கு தலைமை நீதிபதி சட்டத்தை மீறி இரக்கம் காண்பிக்க வேண்டிய தேவை என்ன?

 மகாபாரதக் கதையே உங்களால் மாறி விடும் போல இருக்கே யுவர் ஆனர்!



 இப்படிப்பட்ட தீர்ப்பிற்கு விவேக் அளித்த தீர்ப்பே மேல் என்று சொல்ல வைத்து விட்டீர்களே யுவர் ஆனர்.

 ஒரு சின்ன டவுட் ஜட்ஜய்யா

 உங்களுக்கு முன்பாக தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாயை பாலியல் புகாரில் விடுவித்ததால் மற்ற பாலியல் குற்றவாளிகளுக்கும் அதே சலுகையை காண்பிக்கிறீர்களோ?

 

Saturday, January 9, 2021

அங்க மாடாத்தான்யா பொறக்கனும்!

 


பாலியல் வன் கொடுமைகளின் மாநிலமான உத்திரப் பிரதேசத்தில் இரண்டு சம்பவங்கள்.

மாலை ஆறு மணிக்கு கோயிலுக்கு போன பக்தையை கோயில் அர்ச்சகரும் இன்னும் இருவரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார்கள்.

(அந்த பெண் தனியாக கோயிலுக்கு போனதுதான் தவறு என்று அம்மாநில மகளிர் ஆணையத் தலைவி சொல்லியுள்ள கொடுமை வேறு விஷயம்)

பாதுகாக்கப்பட்ட உயிரனமாக அறிவிக்கப் பட்டுள்ள கங்கை டால்பினை கொடூரமாக கொன்றுள்ளார்கள்.

அந்த மாநிலத்தில் மாடுகளைத்தவிர வேறு யாருக்கும் பாதுகாப்பில்லை.

எனவே உ.பி மாநில மனிதர்களே, ஏதாவது ஆபரேஷன் செய்து மாடாக மாற முடியுமா என்று முயலுங்கள்.

\

Monday, October 12, 2020

ஆரம்பிச்சுட்டாங்கய்யா, சி.பி.ஐ மோசடியை ஆரம்பிச்சுட்டாங்க . . .



 ஹாத்ராஸ் பாலியல் வன்கொடுமை மற்றும் கொடூரக் கொலை வழக்கை மொட்டைச் சாமியார் எப்போது சி.பி.ஐ க்கு மாற்றினாரோ, அப்போதே வழக்கின் மூடு விழா தொடங்கி விட்டது.

இன்று காலை நாளிதழில் பார்த்த செய்தி அதனை உறுதிப் படுத்தி விட்டது.

ஹாத்ராஸ் வழக்கு மாற்றப்பட்டவுடன் சி.பி.ஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அதனை தனது இணைய தளத்தில் பகிர்ந்து கொண்டது.

கூட்டுப் பாலியல் வன் புணர்ச்சி, கொலை முயற்சி மற்றும் கொலை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் இருந்துள்ளது.

கொஞ்ச நேரம்தான்.

எங்கிருந்து என்ன அழுத்தம் வந்ததோ?

சி.பி.ஐ அந்த F.I.R ஐ தன் இணைய தளத்திலிருந்து நீக்கி விட்டது. மோசடி விசாரணையின் முதல் கட்டம் இது.

அடுத்தடுத்த மோசடிகளையும் பார்க்கத்தானே பார்க்கத்தானே போகிறோம்!


Tuesday, October 6, 2020

இவர்கள் வீட்டுப் பெண்களென்றாலும் இப்படித்தான்?



 ஆசிபா கொடூரமாக கொல்லப்பட்ட போது “ இந்த சின்ன விஷயத்தை பெரிது படுத்தினால் சுற்றுலா மூலம் வரும் வருமானம் பாதிக்கப் படும்” என்று திருவாய் மலர்ந்தார் “போய்ச் சேர்ந்த அருண் ஜெய்ட்லி”

 குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டுமென்று அப்போது ஆளும் கூட்டணியில் இருந்த பாஜகவினர் ஒரு எம்.எல்.ஏ தலைமையில் தேசியக் கொடியை உயர்த்திக் கொண்டு ஊர்வலம் போனார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போலீஸை நீதிமன்றத்திற்குள் வர விடாமல் வக்கீல்கள் கலவரம் செய்தார்கள்.

 உ.பி யில் ஹத்ராஸ் கொடூரத்தை “ஒரு சின்ன விஷயத்தை அரசியல் ஆதாயத்திற்காக காங்கிரஸ் பெரிது படுத்துகிறது” என்று சொல்கிறார் மொட்டைச் சாமியார்.

 கைது செய்யப்பட்டவர்கள் சந்தீப், ராம், லவ்குஷ், ரவி என்ற போதிலும் இரண்டு இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டதாக வதந்தியை பரப்புகின்றார்கள் காவிக்கயவர்கள்.

 பிராம்மணர்கள், தாகூர்கள் என்று இரண்டு ஜாதியினர் சேர்ந்து மகாபஞ்சாயத்து நடத்தி உள்ளார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை முற்றுகை இட்டுள்ளார்கள்.

 காவிகளை விடுதலை செய்வதற்காகவே புதிதாக சிப் பொறுத்தப் பட்டுள்ள சி.பி.ஐ யிடம் வழக்கு சென்றுள்ளது.

 அந்தப் பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாகவில்லை என்று உ.பி ஏ.டி.ஜி.பி முதலில் சொன்னார். முதலில் அனுமதிக்கப்பட்ட மருத்துவமனையும் அவ்வாறே சொல்வதாக இன்று காலையில் நாளிதழில் படித்தேன்.

 அப்படி என்றால் அந்த பெண்ணின் சடலத்தை அவசரம் அவசரமாக உறவினர்களை பூட்டி வைத்து நள்ளிரவில் எரிக்க வேண்டிய அவசியம் என்ன? மறு போஸ்ட் மார்ட்டம் நடக்காமல் இருப்பதற்குத்தானே!

 இதை அரசியலாக்காதீர்கள் என்கிறார் தமிழக பாஜகவின் பலியாடு முருகன்.  அதே நேரத்தில் அவர் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட அமைப்போ “காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர் அந்த கொடுமையை செய்ததாக “  போஸ்டர் ஒட்டி, பேனர் போட்டு இழிவான பொய் அரசியல் செய்கின்றனர்.

 இது எங்களுக்கு கொண்டாட்டம் என்று மோனிஷ் என்றொருவன் நேற்று காலையில் பின்னூட்டம் போடுகிறான்.

 நடந்த தவறை மூடி மறைத்து குற்றவாளிகளை பாதுகாக்க நினைக்கும் அத்தனை அயோக்கியர்களுக்கும் ஒரு கேள்வியை கேட்க வேண்டியுள்ளது.

 இதை கேட்க கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அவர்களுக்கு பிரச்சினையின் தீவிரம் புரிய வேண்டுமென்றால் வேறு வழியில்லை.

 “உங்கள் வீட்டுப் பெண்கள் இப்படி பாலியல் வன் கொடுமைக்கு உள்ளானாலும் இது சின்ன விஷயம், அரசியலாக்காதீர், கொண்டாட்டம் என்று சொல்லி குற்றவாளிகளை பாதுகாப்பீர்களா?”

 உங்களால் பதில் சொல்ல முடியாது.

 ஆனால் எங்களால் ஒன்று மட்டும் சொல்ல முடியும்.

 அப்போதும் நீதி கேட்டு உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம்.

பிகு : இரக்கமே இல்லாத சங்கிகளுக்கும் அவர்களை மூளையே இன்றி ஆதரிப்பவர்களுக்கும் மேலே உள்ள படத்தை இன்னொரு முறை பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

அந்த படம் இறந்து போன மனிஷாவின் உடைக்கப்பட்ட முதுகெலும்பு

Sunday, October 4, 2020

சங்கிகளின் கீழ்த்தர உ(பு)த்திகள்

 


சங்கிகளால் மூளைச் சலவை செய்யப்பட்ட ஒருவரின் முக நூல் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்டை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



ஒரு பிரச்சினையை எப்படியெல்லாம் திசை திருப்ப முடியும் என்ற கேவலமான உத்திகள் எல்லாம் சங்கிகளுக்கே உரியது. இந்த வழக்கில் குற்றவாளிகள் இஸ்லாமியர்களாக இருந்தாலும் அவர்களும் கடுமையான தண்டனைக்கு உரியவர்கள்தான். பிறகு இந்த பதிவில் என்ன பிரச்சினை உள்ளது என்று கேட்கிறீர்களா?

ஆமாம். பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது.

உண்மையிலேயே காவல்துறையால் கைது செய்யப்பட்ட நான்கு அயோக்கியர்களின் பெயர் என்ன தெரியுமா?

சந்தீப், ராம், லவ்குஷ், ரவி.

இப்போது புரிந்ததா சங்கிகளின் கீழமை புத்தி!

இப்படிப்பட்ட பொய்யான செய்திகளை கொஞ்சம் கூட மூளையை பயன்படுத்தாமல் நம்பி பகிர்ந்து கொள்கிற மூடர்கள்தான் மோடியின் மூலதனமாக இருக்கிறார்கள். 

இது மட்டுமல்ல, மொட்டைச் சாமியார் ஒரு இந்து துறவி என்பதால்தான் எல்லோரும் சின்ன விஷயத்தை பெரிது படுத்துகிறார்கள். 

இப்போது

ஹத்ராஸில் உள்ள பிராம்மணர்கள் மற்றும் தாகூர்கள் என்று இரண்டு ஜாதிக்காரர்களும் மஹா பஞ்சாயத்து நடத்தி நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளார்கள். 

உபி யில் மஹாபஞ்சாயத்து என்றாலே அது கலவரத்துக்கான அடிக்கல் நாட்டு விழா என்பதும் நினைவுக்கு வந்து தொலைக்கிறது.  முசாபர்நகர் கலவரத்தையும் அதையொட்டி "கலவரங்கள் நடந்தால் எங்கள் வெற்றி தொடரும்" என்று கொரோனா கொண்டான் அமித் ஷா சொன்னதையும் மறக்க முடியுமா? 

மேலே படத்தில் உபி யில் மொட்டைச் சாமியார் காலத்தில் நடைபெற்ற கலவரங்களின் காட்சிகள். இது ஹத்ரஸிலும் அரங்கேறலாம் . . .

ஹத்ராஸ் மட்டுமல்ல உ.பி யில் உள்ள தலித் மக்கள் முழுதுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.

ஆனால் ஒன்று

இப்பிரச்சினையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்குமா என்பது சந்தேகமே!

ஆம்.

விசாரணை சி.பி.ஐ க்கு ஒப்படைக்கப்பட்டு விட்டது. 

மொட்டைச் சாமியாருக்கு பாகுபலி காட்சி

 



மொட்டைச் சாமியார் கீழே உள்ள பாகுபலி திரைப்படக் காட்சியை தானும் பார்த்து தன் மாநிலத்தில் உள்ள அனைத்து ஆண்களுக்கும் (குறிப்பாக சங்கிகளுக்கு) காவல்துறையினருக்கும் சிறப்புக் காட்சி நடத்திக் காண்பிக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்.




இந்த புகைப்படமும் உபியில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களும்தான் அதை மூடி மறைக்க பாஜக செய்து வரும் சில்லறைத்தனங்களும் (அதைப் பற்றி தனியாக எழுத வேண்டும்) இந்த யோசனைக்கான காரணம்.



மொட்டைச்சாமியார் மட்டுமல்ல, எந்த ஆட்சியாளரானாலும் சரி, காங்கிரஸ் கட்சியினர் உட்பட அனைவருக்கும் இது பொருந்தும். 

Saturday, October 3, 2020

பாலியல் வன்கொடுமை - சங்கி பார்முலா

 பாலியல் வன் கொடுமைகளை சங்கிகள் எப்படி அணுகுவார்கள் என்பதற்கான ஃபார்முலா கீழே உள்ளது.



ஆளிற்கு ஏற்றார்போல, இடத்திற்கு ஏற்றார் போல சங்கிகளின் நீதி மாறும். அதைத்தான் அவர்கள் மனு நீதி என்று பீற்றிக் கொள்கிறார்கள். இத்தனை கொடூரங்கள் தொடரும் போதும் கூட கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் மொட்டைச் சாமியார் போல வருமா என்று முட்டு கொடுக்கிறார்கள் மானங்கெட்ட கயவர்கள். 

Thursday, October 1, 2020

பேயரசு ஆட்சியில் மாட்டுக்குத்தான்

 


மோடி, அமித் ஷாவை விட, நேற்று கோர்ட்டால் பூரண கும்ப மரியாதையோடு விடுதலை செய்யப்பட்ட அத்வானி வகையறாக்களை விட மிகப் பெரிய கொடூரன் மொட்டைச் சாமியார்.

பாஜக எம்.எல்.ஏ தன் மகளை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி விட்டார் என்று நியாயம் கேட்டு வந்த தந்தையை லாக்கப்பில் அடித்துக் கொன்ற உத்தமன்.

உத்தரப் பிரதேச மாநிலம், பாலியல் வன் முறைகளின் களமாக மாறிய போதும் பசுவிற்கு பூஜை செய்து ஆண்களை (பாஜகவைச் சேர்ந்த) பொலி காளைகளாக திரிய அனுமதித்த பசு நேசன்.

இப்போது இன்னொரு கொடுமை. 

ஒரு பெண் பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கப்படுகிறாள். அவளது முதுகெலும்பு உடைக்கப்படுகிறது. நாக்கு அறுக்கப்படுகிறது. அவள் இறந்து போகிறாள். அவளது உறவினர்களை ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டு சடலத்தை போலீஸே எரித்து விடுகிறது.

பாஜக ஆட்சியின் லட்சணம் இதுதான் என்று சொன்னால் அவர்களை உள்ளே தூக்கிப் போட்டு விடுவார் மொட்டைச் சாமியார்.

இந்த கொடுமையை எல்லாம் எந்த ஒரு ஊடகமும் பேசாது. சுஷாந்த் தற்கொலையை விட இந்தியாவில் வேறெந்த பிரச்சினையும் அவர்களுக்கு முக்கியமே கிடையாது. 

ஆமாம், அந்த ஆட்சி மனிதர்களுக்கானது அல்ல. மாடுகளுக்கானது.

பாஜக கட்சியே மனிதர்களுக்கான கட்சி கிடையாதே. அங்கே இருப்பவர்கள் கூட யாரும் மனிதர்கள் கிடையாதே!

Saturday, March 21, 2020

குற்றவாளிகளை விட மோசமான . . .


அதனால் என்ன வேண்டுமானாலும் ?????



நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப் பட்டது. மரண தண்டனை தொடர்பாக விவாதங்கள் நடந்து வருகிறது. பொதுவாக மரண தண்டனை அவசியமில்லை என்ற கருத்து இருந்தாலும் பாலியல் வன் கொடுமை வழக்குகளில் அதுவும் நிர்பயா போன்ற, பெரம்பலூர் நந்தினி போன்ற எண்ணற்ற வழக்குகளில் மரண தண்டனை அளிப்பதில் தவறில்லை என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்த வழக்குகளில் குற்றவாளிகள் வெளிப்படுத்திய கொடூரம் அவ்வளவு மோசமானது. இந்த வழக்கின் ஒரு குற்றவாளி தற்கொலை செய்து கொள்ள, பதினெட்டு வயது நிரம்பவில்லை என்பதால் இன்னொருவன் விடுதலையாகி விட்டான்.

பாலியல் குற்றங்களை தடுக்க ஏராளமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் உள்ளது.

பெண்களை சக மனுசியாக மதிக்க குழந்தைப் பருவத்திலிருந்தே ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டியது மிக முக்கியமான நடவடிக்கை.

இந்த பதிவில் நான் சொல்ல விரும்புவது வேறு ஒரு விஷயம்

தூக்கு தண்டனையை தவிர்க்க குற்றவாளிகளின் வழக்கறிஞர் எல்லா உத்திகளையும் பயன்படுத்தினார். அவரது எல்லா முயற்சிகளும் தோற்றுப் போன பின்பு அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி கொல்லப்பட்ட பெண்ணையே குற்றவாளியாக்குகிறார்.

அந்தப் பெண் ஏன் இரவில் வெளியே வர வேண்டும்? ஏன் ஆண் நண்பரோடு வெளியே வர வேண்டும். அதனால்தான் இந்த பிரச்சினை என்று கூசாமல் பேசினார்.

பாலியல் தொழிலில் ஈடுபடுபவராக இருப்பினும் அவரது விருப்பம் இல்லாமல் அவரை கட்டாயப்படுத்த முடியாது என்று சட்டம் இருப்பது அந்த வக்கீலுக்கு தெரியாது போல! No Means No என்பது தெரியாதா?

இரவில் ஆண் நண்பரோடு வந்தால் அதற்காக இவரது கஸ்டமர்ஸ் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?

தறுதலைகளுக்காக வாதாடி விட்டு பாதிக்கப்பட்டவர் மீது பழி போடுவது படு கேவலம். குற்றவாளிகளை விட பெரிய அயோக்கியனாக அவரது வக்கீல் இருக்கிறார்.




Saturday, March 14, 2020

கொலைக்கு தூண்டிய யோகி சீ க்கு ????


பாலியல் வன் கொடுமைகளுக்கு இந்தியாவின் தலை நகராக திகழ்கின்ற உத்திர பிரதேச மாநிலம் உனாவ் தொகுதியின் பாஜக சட்ட மன்ற உறுப்பினர் குல்தீப் சிங் செனகருக்கு சி.பி.ஐ சிறப்பு நீதி மன்றம் பத்தாண்டு கடுங்காவல் தண்டனை அளித்துள்ளது.

செனகரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணின் தந்தையை காவல் நிலையத்தில் கொலை செய்த வழக்கில் கொடுக்கப் பட்ட தீர்ப்பு இது.

இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.

தன் மகளுக்கு நீதி வேண்டும் என அந்த தந்தை மாநில முதல்வர் யோகிசீ வீட்டின் முன்பாக தீக்குளிக்க முயல்கிறார்.

அந்த நபரை தகாத வார்த்தைகளில் திட்டி, பொய்யர் என்றெல்லாம் ஏசி விட்டு கைது செய்யச் சொன்னதும் யோகிசீ தான்.

லாக்கப்பில் மரணம் அதற்குப் பிறகுதான் நிகழ்கிறது.

அந்த தந்தை தன் மகளுக்கு நியாயம் கேட்டு முதன் முதலில் வந்த போதே யோகிசீ நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். தீக்குளிக்கும் அளவிற்கு சென்ற பிறகும் தன் கட்சியின் பொறுக்கி எம்.எல்.ஏ விற்கு சாதகமாகவே இருந்துள்ளார்.

இந்த வழக்கின் முதல் குற்றவாளியாக சி.பி.ஐ யோகிசீ யைத்தான் முன்னிறுத்தி இருக்க வேண்டும்.

காவி ஆட்சியில் எந்த நேர்மையும் இருக்காதே!