Showing posts with label பேராசை. Show all posts
Showing posts with label பேராசை. Show all posts

Saturday, April 15, 2023

முடியலை சின்ன டாக்டரய்யா

 



முதலில் இந்த காணொளியை பார்த்து விடுங்கள்.

 


கீழேயுள்ள ஓவியத்தைப் பாருங்கள்.

 


பத்தாண்டுகள் முன்பே இப்படத்தை பார்த்துள்ளேன்

 

உலகின் சிறந்த ஆளுமைகள் நூறு பேரை உள்ளடக்கியது இந்த ஓவியம்.

 

இந்தியாவிலிருந்து மகாத்மா காந்தியும் அன்னை தெரசாவும் இருப்பார்கள்.

 பொதுவுடமை இயக்கத் தலைவர்கள் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், மாவோ

 புரட்சித்தலைவர்கள் கேஸ்ட்ரோ, சேகுவாரா

அலெக்ஸாண்டர், நெப்போலியன் போன்ற வரலாற்று  வீரர்கள்,

 எலிசபெத் ராணி, மார்க்கரெட் தாட்சர், போன்ற பெண் ஆளுமைகள்,

 ஷேக்ஸ்பியர் போன்ற படைப்பாளிகள்,

 முகமது அலி, மைக் டைசன் போன்ற விளையாட்டு வீரர்கள்.

 சார்லி சாப்ளின், மார்லன் பிராண்டோ, சார்லஸ் பிரான்ஸன், ப்ரூஸ் லீ, ஜாக்கி சான், மர்லின் மன்றோ போன்ற திரை ஆளுமைகள்,

 ஐன்ஸ்டீன் போன்ற அறிவியலாளர்,

 ஆப்ரஹாம் லிங்கன், யாசர் அராபத் , பில் கிளின்டன் போன்ற அரசியல் தலைவர்கள்.

 இன்னும் எத்தனையோ பேர் இருக்கும் ஓவியத்தில் என் படமும் இருக்கும் என்று சொல்ல எவ்வளவு .................... இருக்க வேண்டும்!

 குடிசைகளை கொளுத்தி மரங்களை வெட்டியதைத் தவிர வேறென்ன கிழித்து உள்ளீர்கள் சின்ன டாக்டரய்யா?

 இப்படியெல்லாம் நீங்கள் பேசுவீர்கள் என்று தெரிந்திருந்தால் அந்த ஓவியர், இந்த ஓவியத்தையே வரைந்திருக்க மாட்டார்.