Showing posts with label புறக்கணிப்பு. Show all posts
Showing posts with label புறக்கணிப்பு. Show all posts

Thursday, November 3, 2016

மோடியின் " லட்டுக்கு பதிலா ஜிலேபி" மொமண்ட்

இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை நிறுவனம் வழங்கும் சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருதிற்கு ஹிந்துஸ்தான் டைம்ஸ் மூத்த பத்திரிக்கையாளர் அக்சயா முகுல் தேர்ந்தெடுக்கப்பட்டார். மோடி விருது வழங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

"மோடியின் வலதுசாரி சிந்தனைகளையும் அவரது மோசமான நடவடிக்கைகளையும் எதிர்ப்பவன் நான். அவரோடு ஒரே மேடையில் அமர்ந்து விருது வாங்குவதோ, அப்போது புன்னகைப்பது போன்று போட்டோவுக்கு போஸ் கொடுப்பதோ என்னால் முடியாது" 

என்று சொல்லி அந்த விழாவை முகுல் புறக்கணித்து விட்டார். அவருக்கு பாராட்டுக்கள்.

அவர் விழாவில் கலந்து கொள்ளாதது பற்றி மோடியின் மைன்ட் வாய்ஸ் என்னவாக இருக்கும்.

"என்னைப் பிடிக்கலை, என் கொள்கையைப் பிடிக்கலை, என்னோட நடவடிக்கையையெல்லாம் பிடிக்கலை ன்னு சொன்னதைக் கூட ஏத்துப்பேன். என் கூட போட்டோ எடுத்துக்க முடியாதுன்னு சொன்னீங்களே, அதைத்தான் என்னால தாங்கவே முடியலை"