Showing posts with label இஸ்ரேல். Show all posts
Showing posts with label இஸ்ரேல். Show all posts

Monday, October 14, 2024

இந்தியர்கள் செத்தாலும் இஸ்ரேல் பக்கம்தானா மோடி?

 


இஸ்ரேலின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. லெபனானில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையின் வளாகத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கிறது.

நேற்று இஸ்ரேல் ராணுவத்தின் டாங்கிகள் அந்த வளாகத்தின் சுற்றுச்சுவர் கதவுகளை தகர்த்து உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. ஒரு அமைதிப் படையின் மீது தாக்குதல் நடத்துவது என்பது சர்வதேச விதிகளுக்கு எதிரானது. தீவிரவாத இயக்கங்கள் கூட செய்யத் துணியாத, தயங்குகிற ஒரு வேலையை இஸ்ரேல் ராணுவம் செய்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளருக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஒரு மிரட்டல் வீடியோ அனுப்பியுள்ளார். அந்த மிரட்டல் வீடியோவில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படை லெபனானை விட்டு வெளியேறாவிட்டால் அதன் மீது தாக்குதல் நடத்தி முற்றிலுமாக அழித்து விடுவேன் என்று சொல்லியுள்ளார்,

இஸ்ரேல் குரைக்கும் நாய் அல்ல, கடிக்கும் நாய்.

நெதன்யாகு தான் மிரட்டியது போல செய்யக்கூடிய ஆசாமிதான்.

இதிலே மோடி எங்கே வருகிறார் என்ற கேள்வி எழலாம்.

லெபனானில் செயல்படும் ஐ.நா அமைதிப்படையில் 20 நாடுகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் உள்ளனர்.  இந்திய ராணுவ வீரர்கள் மட்டும் 903 பேர் உள்ளனர். இஸ்ரேல் தாக்கினால் அவர்களும் செத்துப் போவார்கள்.

மோடிக்கு இது ஏற்புடையதுதானா?

மோடி அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட மாட்டார் என்பதுதான் சோகமான யதார்த்தம்.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பாலஸ்தீனம் உபட இஸ்ரேலின் மண்ணில் கால் வைக்கக் கூடாது என்று இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

இத்தடைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் 125 நாடுகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இத்தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தது இரண்டு நாடுகள். ஒன்று அமெரிக்கா.

இன்னொன்று.

ஆம். அது இந்தியாதான்.

இஸ்ரேல் என்ன அராஜகம் செய்தாலும் அதற்கு வால் பிடித்துக் கொண்டிருக்கும் நாடாக இந்தியாவை மாற்றி விட்டது மோடியின் அரசு.

இப்படிப்பட்ட நிலையில் இந்திய வீரர்களின் உயிரைப் பற்றியெல்லாம் கவலைப்படக் கூடிய மனிதப் பிறவியா மோடி?

அப்படிப்பட்ட கவலையெல்லாம் இருந்திருந்தால் உளவுத்துறை எச்சரித்தும் 44 வீரர்களை புல்வாமாவில் சாகவிட்டிருப்பாரா?

Thursday, October 3, 2024

இஸ்ரேல் தெனாவட்டு ஏன்?

இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் பார்த்த புகைப்படம் . . . 



இஸ்ரேலின் அராஜகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 

பாலஸ்தீனத்தை கிட்டத்தட்ட அழித்து விட்டது.

லெபனானின் மீது வெறித் தாக்குதலை நடத்திக் கொண்டே இருக்கிறது.

பாலஸ்தீன, லெபனான் இயக்கத் தலைவர்களை இரான் மண்ணில் தாக்கி இரான் மண்ணை போர் வலையில் இழுத்து விட்டது.

அதற்கான எதிர்வினையை இரான் செய்கிற போது அதை காரணமாகக் கொண்டு இரானையும் அழிக்கப்பார்க்கிறது.

"லெபனானின் இஸ்லாமியக் குடியரசு நாட்டிற்குள் நுழைய முடியாத பகுதி என்று இஸ்ரேலுக்கு எதுவுமே கிடையாது" 

என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூ ஆணவமாகச் சொல்கிறார்.

இந்த ஆணவம் எங்கிருந்து வருகிறேன்.

மேலே உள்ள புகைப்படம் ஒரு சோற்றுப் பதம்.

இரான் அனுப்பிய ஏவுகணையின் மீது இஸ்ரேலியர்கள் நின்று கொண்டு அதை ஏதோ ஒரு காமெடி பொருள் போல நினைக்கிறார்கள் என்பதை அவர்களின் முக பாவனையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

போர் பற்றியும் அதன் தீய விளைவுகள் பற்றியோ ***அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் பெரிதாக தெரியாது. ஏனென்றால் அவர்கள் தாக்குபவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் கிடையாது. 

அழிவைப் பார்த்திருந்தால் இஸ்ரேல் மக்கள் போருக்கு எதிராக குரல் கொடுத்திருப்பார்கள். அப்படி எதுவும் இல்லாததால் இப்படி தெனாவெட்டாகத்தான் போஸ் கொடுப்பார்கள். 

பிகு:   ***  இரண்டாவது உலகப் போரின் போது பியர்ல் ஹார்பர் தாக்குதல், செப்டம்பர் 11 இரட்டை கோபுர தாக்குதல் தவிர அமெரிக்கா அதன் வரலாற்றில் எந்த தாக்குதலையும் சந்தித்ததே இல்லை. 

Monday, May 20, 2024

இரான் ஜனாதிபதி மரணம் சதியா?

 


இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட்டார்.

ஹெலிகாப்டர் விபத்து என்ற செய்தி கிடைத்த போது அவர் நலமுடன் திரும்ப வாய்ப்பு குறைவு என்றே நினைத்தேன். ராஜசேகர் ரெட்டி, பிபின் ராவத் ஆகியோர் கண் முன்னே வந்து போனார்கள்.

நடந்தது விபத்துதானா?

அவர் மீது இரண்டு நாடுகளுக்கு கோபம் உண்டு.

அமெரிக்கா நிரந்தர பகை நாடு. போதாக்குறைக்கு உக்ரைன் மண்ணிலிருந்து ரஷ்யா மீது அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் போரில் அவர் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்துள்ளார். ஆயுதங்கள் வேறு அனுப்பியுள்ளார். அணுசக்தி சோதனையும் முடியும் தருவாயில் உள்ளது. இரானுடன் உறவு கொண்டு ஒரு ஒப்பந்தத்தை நிறைவு செய்தமைக்கு இந்தியாவை வேறு அமெரிக்கா மிரட்டியுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது அராஜகத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் மீது சில நாட்கள் முன்பாகத்தான் இரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

மூன்று ஹெலிகாப்டர்கள் சென்றுள்ள போது இவர் சென்ற ஹெலிகாப்டர் மட்டும் விபத்துக்குள்ளானது அது சதியோ என்ற சந்தேகத்தை தருகிறது.

இஸ்ரேலா? அமெரிக்காவா? அல்லது இருவரும் இணைந்தா?

பதில் கிடைக்காத மர்ம மரணங்களில் ஒன்று கூடுகிறது என்பதுதான் உண்மை.

Thursday, May 16, 2024

இஸ்ரேல்னா கொயட்டா மோடி?

 


இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கொடுத்து விட்டு பாலஸ்தீன நகர் ராஃபாவில் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த ஐ.நா.சபை வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அதிலே பலர் இறந்து போயுள்ளனர்.  இந்திய ராணுவ அதிகாரியாக இருந்து ஐ.நா பாதுகாப்புப் படையில் இணைந்த அனில் காலே என்ற இந்திய குடிமகனும் கொல்லப்படவர்களில் ஒருவர்.

ஐ.நா மீது நடத்தப்பட்ட தாக்குதலையோ அதிலே இந்தியர் கொல்லப் பட்டதையோ கண்டித்தோ

இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தோ

இந்தியப் பிரதமரோ புத்திசாலி மந்திரி என்று முட்டாள் சங்கிகள் அளந்து கொண்டிருக்கிற ஜெய்சங்கரோ வாய் திறக்கவே இல்லை.

"எங்க உதவியோடதான் எதிர்க்கட்சி தலைவர்களை, ஊடகவியலாளர்களை உளவு பார்த்தாய், ஏதாவது பேசினால் நடப்பதே வேறு. கொயட்டா இருக்கனும்"

என்று இஸ்ரேல் அந்த 56 இஞ்ச் மாகோழையை (மாவீரனுக்கு எதிர்ப்பதம் மாகோழை. இதை நான்தான் கண்டுபிடித்தேன் என்று ஜெயமோகன் மாதிரி உரிமை கொண்டாட மாட்டேன்) மிரட்டி விட்டது போல.

அதனால்தான் அனைவரும் கொயட்டா இருக்காங்க . . .


Sunday, October 29, 2023

இந்திய அரசின் துரோகம் ...

 


பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் அராஜக தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு, அத்து மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா ஓடி ஓளிந்திருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் பற்றி தீர்மானத்தில் எதுவும் இல்லாததால் வாக்களிக்கவில்லை என்றொரு விளக்கம் வேறு கொடுத்துள்ளது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலா இஸ்ரேலின் அராஜகத்திற்கு துவக்கப்புள்ளி?

பல்லாண்டுகளாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திக் கொண்டிருக்கிற அராஜகம், இஸ்ரேலால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள், பாலஸ்தீனக்குழந்தைகள், அழிக்கப்பட்ட சொத்துக்கள் ஆகியவை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஹமாஸின் மீது மட்டும் பழி சொல்வது அயோக்கியத்தனமானது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்பது என்ற இந்தியாவின் பாரம்பரியத்தை குழி தோண்டி புதைக்க ஆரம்பித்தவர் வாஜ்பாய்.

இப்போது அதனை டிமோ செய்து முடித்து விட்டார்.

இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகிறார். அனைவரையும் உளவு செய்வதற்கான கருவிகள் வாங்குகிறார். கோடிக்கணக்கான ரூபாய் இந்திய கஜானாவிலிருந்து போகிறது. அதிலே எத்தனை சதவிகிதம் தரகர்கள் மூலம் பாஜகவிற்கு வருகிறதோ!

அந்த எலும்புத்துண்டுகளுக்காக இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கும் உலக அமைதிக்கும் செய்துள்ள துரோகம் இந்திய நாட்டிற்குத்தான் களங்கம் . .. 

Sunday, October 8, 2023

விழித்துக் கொண்ட நியாயவான்களே!

 


இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம் என்று உலகெங்கும் பல நியாயவான்கள் (மணிப்பூர் மக்களை கைவிட்ட டிமோ உட்பட)  என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

நல்லது. 

இத்தனை நாள் உறக்கத்தில் இருந்தவர்கள் இப்போதாவது விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.  உங்கள் உறக்கத்தை முற்றிலுமாக கலைக்க நல்ல டீயோ, காபியோ குடித்து விட்டு (டிமோ கோமியம்தான் குடிப்பார் என்றால் அது அவரின் விருப்பம்) ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் இது நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தது என்பதை கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்பாவிகள் யார் கொல்லப்பட்டாலும் யாரால் கொல்லப்பட்டாலும் தவறுதான்.

இன்று இஸ்ரேலிய மக்களின் இறப்பிற்காக கதறி அழுகிறவர்கள் யாராவது இஸ்ரேலால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களுக்காக கண் கலங்கியதாவது உண்டா?

பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டே  இருக்கிற இஸ்ரேல் மீது சிறு விமர்சனமாவது செய்ததுண்டா?

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான தோழர் அ.முத்துகிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட ஒரு படத்தை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த கதையாக பாலஸ்தீனம் எப்படி இஸ்ரேலால் சுருக்கப்பட்டது என்பதை படம் பார்த்து உணருங்கள்.

தோழர் முத்து கிருஷ்ணன் இன்னொரு கேள்வியையும் எழுப்பி இருந்தார். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த உளவுத்துறை என்று புகழப்படுகிற இஸ்ரேலின் உளவுத்துறைக்கு ஹமாஸின் தாக்குதல் பற்றி ஏன் தெரியவில்லை என்று கேட்டு அதற்கு ஒரு ஊகத்தையும்சொல்கிறார்.

செல்வாக்கு முற்றிலும் சரிந்து போய், நீதி மன்றத்தோடு மோதிக் கொண்டிருக்கிற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவுக்கு தன் மீதான பிரச்சினைகளை திசை திருப்ப ஹமாஸின் தாக்குதல் தேவைப் பட்டிருக்குமோ என்பது அவரது ஊகம்.

அதனை நாம் நிராகரிக்க முடியாது. 2019 தேர்தலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்தும் கூட புல்வாமாவில் சி.ஆர்.பி.ஃஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த கொடூரர்களின் ஆட்சியில் அல்லவா நாம் வாழ்கிறோம்!

இஸ்ரேலுக்காக இதயம் துடிக்கிற நியாயவான் கனவான்களே (நீங்கள் அப்படிப்பட்ட அடைமொழிகளுக்கெல்லாம் அருகதை அற்றவர்கள் என்ற போதிலும்) கீழே உள்ள படத்தை பாருங்கள்.


பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக 1994 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் அவர்கள்.

அந்த ஒப்பந்தத்தில் பாலஸ்தீனர்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டார் என்று அப்போது யாசர் அராபட் விமர்சிக்கப்பட்டார். 

அந்த அற்ப ஒப்பந்தத்தைக் கூட நிறைவேற விடாத பெருமை இன்றைய இஸ்ரேல் பிரதமர் நெத்ன்யாஹூ வுக்கே உண்டு.

உங்கள் மனிதாபிமானம் உண்மை என்றால் குறைந்தபட்சம் அந்த ஒப்பந்தத்தையாவது அமலாக்கச் சொல்லுங்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலை வெளியேறச்சொல்லுங்கள்.