Showing posts with label கங்கை. Show all posts
Showing posts with label கங்கை. Show all posts

Monday, November 3, 2014

ரஜனிகாந்த் தூய்மையற்றவரா? சொல்லுங்கள் பொன்னார்



பாஜக பற்றி ஒரு நாளாவது எழுதாமல் இருக்கலாம் என்றால் விட மாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்களே, என் செய்வேன்?
 http://www.tamilnetonline.com/wp-content/uploads/2013/09/14-pon-radhakrishnan-rajinikan.jpg
பாஜக கங்கை போன்றது. ரஜனிகாந்த், வாசன் என்று யார் வந்து சேர்ந்தாலும் தூய்மையாகி விடுவார்கள் என்று மாண்புமிகு மத்திய மந்திரி பொன்னார் சொல்லியுள்ளார்.


பாஜக கங்கை போன்றது என்பதை ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளலாம். மனிதர்கள் குடிப்பதற்கோ, குளிப்பதற்கோ லாயக்கில்லாத அளவிற்கு மாசு படிந்துள்ள நதி கங்கை என்பதை யாராலும் மறுக்க முடியாது. அது போலவே மாசடைந்த மனிதர்கள், மாசு படிந்த சிந்தனை உள்ள, மனிதர்கள் வசிக்க லாயக்கில்லாத கட்சி பாஜக என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலத்தை பொன்னார் கொடுத்துள்ளார். அவருக்கு எனது நன்றி.
 

சரி பாஜகவில் இணைந்தால் தூய்மையடைந்து விடுவார்கள் என்று சொல்கிறீர்களே, அப்படியானால் ரஜனிகாந்த் தூய்மையற்றவர், பாவம் செய்தவர், எங்களிடம் வந்தால் அவரது பாவங்கள் விலகி தூய்மையாகி விடுவார் என்றுதானே சொல்கிறீர்கள்?

ரஜனிகாந்த் ரசிகர்களே பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் சூப்பர் ஸ்டாருக்கு பாஜக கொடுக்கும் மரியாதையை……