Showing posts with label தரகுப்புயல். Show all posts
Showing posts with label தரகுப்புயல். Show all posts

Thursday, November 27, 2025

ஜி.கே.வாசன் காட்டில இனிமே 😝😝😝😝😝


ஜி,கே.வாசன் கட்சிக்கு மிகப் பெரிய சம்பவம் இனிமேல்தான் நடக்கவுள்ளது. 

ஆமாம்.




அகில உலக தரகுப்புயல், செல்லுமிடங்களில் எல்லாம் சீரழிவை உருவாக்கிய, அரசியலுக்கு வரும் முன்னே ரஜினியை அரசியலில் இருந்து துரத்திய த.அ.மணியன் வாசன் கட்சியில் சேர்ந்து விட்டாராம்.

ஏதோ அப்பாவோட பழைய பெருங்காய டப்பியை வச்சு ஒரு எம்.பி சீட் ஓசில வாங்கி பாஜகவுக்கு ஜால்ரா அறிக்கை கொடுத்துக்கிட்டு இருந்தாரு வாசன்.

இனிமே தரகுப்புயல் ஐயா, அந்த கட்சியை சர்வ நாசம் செய்யாமல் இருக்க மாட்டாரு!

ஆனா தரகுப்புயல் ஐயா, நீங்க போயிருக்க வேண்டிய இடம் த.வெ.க. அநேகமா வாசனை முடிச்ச பின்னாடி அங்கே போவீங்களோ?

Tuesday, July 18, 2023

ஐ! த.அ.ம நரி ஊளையிட்டுருச்சு


தரகுப்புயல் தமிழருவி மணியன் ஆட்டுக்காரனோடு கை கோர்த்து விட்டார். இனி அரசியலில் ஈடுபட மாட்டேன் என்ற சபதத்தை ஒரு லட்சத்து ஐம்பத்தி எட்டாயிரத்து முன்னூற்று அறுபத்தி நான்காவது முறையாக மீறி விட்டு ஆட்டுக்காரனை ஆதரிக்க வந்துள்ளார்.

 


ஏற்கனவே ஊதிப் பெருக்கப்பட்ட ஆட்டுக்காரனின் பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்து நடுத்தெருவில் நிறுத்தி விட்டுத்தான் தரகுப்புயல் ஓய்வார். 

Wednesday, April 27, 2022

குடி கெடுக்கும் கூட்டணி

 





மேலே உள்ள படங்கள்  என்னவென்று புரியவில்லையா? 

கீழே உள்ள படம்தான் மேலே உள்ளவையும்.



பெரும் பொய்யன் மாரிதாஸ் ஒரு நச்சுப்பாம்பு. தரகுப்புயல் தமிழருவி மணியனோ ஒரு நரி.

கோட்சேவை கொண்டாடுகிற, மகாத்மா காந்தி படுகொலையை நியாயப்படுத்தும் மாரிதாஸும் காந்திய மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொழில் நடத்தும் தரகுப்புயலும் இணைந்தால் என்னென்ன நாச வேலைகளை அரங்கேற்றுவார்களோ? கேடு கெட்ட கூட்டணி இது.

தரகுப்புயலை முதன் முதலில் ஒன்பது வருடங்களுக்கு முன்பு கண்டித்து எழுதினேன். 

கீழே அந்த பதிவின் தலைப்பிலேயே இணைப்பை அளித்துள்ளேன்.

தரமிழந்து போன தமிழருவி மணியனுக்கே ஒரு திறந்த மடல்

அந்த  பதிவிற்கு கடுமையான எதிர்வினைகள் வந்தன. ஆனால் காலம் நான் சொன்னதுதான் சரி என்பதை நிரூபித்து விட்டது. (பல சந்தர்ப்பங்களிலும் என் மதிப்பீடு சரியாகத்தான் இருந்துள்ளது. மற்றவர்களுக்குத்தான் புரிந்து கொள்ள கால தாமதமாகிறது) 

(அந்த பதிவை புதுவையிலிருந்து வெளி வந்த "நமது மனசாட்சி" என்ற பத்திரிக்கை பாமரன் என்ற பெயரில் வெளியிட்டதும் ஏனய்யா எனது பெயரை வெளியிடவில்லை என்றதற்கு அந்த டுபாக்கூர் ஆசிரியர் மனசாட்சியில்லாமல் பதில் சொன்னதும் நினைவுக்கு வந்தது)

கடைசியாக தரகுப்புயலுக்கு ஒரு கேள்வி

தகதகன்னு மின்னறீங்களே. புது இடத்தில கவனிப்பு பலமோ!!!!

Saturday, March 26, 2022

தரகுப்புயலின் அடுத்த அஜெண்டா ஆட்டுக்காரர்?

 


"எனக்கு எண்ட் கார்டே போட முடியாது. த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா" என்று அடுத்த அஜெண்டாவுடன் புறப்பப்பட்டு விட்டார் தரகுப் புயல் த.அ.மணியன்.

ஆமாம்.

சென்னை இலக்கிய விழா என்று சங்கிகள் நடத்தும் சாங்கியத்தில் 20,000 புக் புகழ் ஆட்டுக்காரர் தலைமை தாங்குகிறார்.



அதிலே "காந்தி, காந்தியம், காந்தியைத் தாண்டி" என்று உபன்யாசம் செய்யப் போகிறார் தரகுப்புயல்.

காந்தியை கொன்னவனுங்க மத்தியில நீ காந்தியைப் பத்தி என்னய்யா பேசப் போறே?

ரகினிகாந்தை முதல்வராக்க முடியாததால் ஆட்டுக்காரரை முதல்வராக்க களம் இறங்கப் போகிறதா தரகுப்புயல்!

மானங்கெட்டவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள்.

பிகு: இந்த அழைப்பிதழில் இன்னொரு காமெடி உள்ளது. முடிந்தால் இரவு, இல்லையேல் நாளை எழுதுகிறேன்


Thursday, March 4, 2021

ஐயகோ, இனி தமிழகம் என்னாகுமோ?

 


தமிழகத்தின் ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் குறைந்தபட்சம் ஒரு லட்சம் உறுப்பினர்களை, உறுதியான செயல் வீரர்களாக கொண்டுள்ள தரகுப்புயல் ஐயா அவர்களின் இயக்கம் தமிழக சட்டப்பேரவை தேர்தலை புறக்கணித்தால் தேர்தலின் நிலை என்ன ஆகும்? 

அவரது ஆதரவில்லாமல் எந்த கட்சியால் வெற்றிக்கனியை கொய்ய முடியும்?

ஐயா, தேர்தல் களத்திலிருந்து விலகினால், அவரது இயக்க உறுப்பினர் அல்லாத சாமானிய வாக்காளர்கள் மட்டும் எவ்வாறு வாக்களிக்க இயலும்? 

அப்படியென்றால் தேர்தல் வாக்குப் பதிவு சதவிகிதம் பூஜ்ஜியமாக அல்லவா இருக்கும்!

இப்படி ஒரு நிலைமை வரலாமா ஐயா!



தமிழகத்தின் நலன் கருதி நீங்கள் மீண்டும் அரசியல் களம் புக வேண்டும். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். பழைய பன்னீர்செல்வமாக, சாரி, பழைய தரகுப்புயலாக  நீங்கள் மீண்டும் வர வேண்டும். 

ஏனென்றால்

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

முன்பொரு பதிவில் சொன்னதையே மீண்டும் சொல்கிறேன்..

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.


.

.

எங்களின் பொழுது போக்குக்கான கைப்பிள்ளையே நீங்கதானே!