Tuesday, April 14, 2020

தெரிஞ்சா மோடி சொல்ல மாட்டாரா?


இன்றைய பிரதமரின் உரை இரு விதங்களில் ஏமாற்றம்.

.ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான். தமிழகம் ஏற்கனவே  மக்கள் மீது கவலை கொண்டவர்களுக்கு அவர்கள் பிரச்சினைகளுக்கான தீர்வு இப்போதும் இல்லை என்ற ஏமாற்றம். என்ன எதிர்பார்ப்பு என்பதை கேரள மாநில நிதியமைச்சர் தோழர் தாமஸ் ஐசக் அவர்களின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால்


ஊரடங்கை நீட்டிப்பதன்றி வேறுவழியில்லை.

3வார அனுபவங்களிலிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

1)விரிவான பரிசோதனையில்லாத ஊரடங்கு பயன்தராது.

2)வருமான ஆதரவில்லையேல் ஊரடங்கை கடைபிடிப்பது குறையும்

3)மத்திய அரசின் கூடுதல் உதவி இல்லையெனில் மாநிலங்கள் நெருக்கடியைச் சந்திக்கும்- கேரள நிதியமைச்சர்.
ஆனால் இது எது பற்றியும் வழக்கம் போல மோடி கவலைப்படவே இல்லை. அடுத்தவருக்கு உதவுங்கள் என்ற உபதேசத்தோடு நிறுத்திக் கொண்டு விட்டார்.
மோடி மோகிகளுக்கும் ஏமாற்றம்தான். கை தட்டல், விளக்கேற்றல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக தங்களுக்கு புதிதாக என்ன டாஸ்க் கொடுப்பார் என்றும் அதை எப்படி பிரம்மாண்டமாக நிறைவேற்றி கொரோனா வைரஸை மூன்றாவது முறையாக அழிக்கலாம், என்னனென்ன அறிவியல் விளக்கங்கள் அளிக்கலாம், நாசாவை எப்படி மீண்டும் காமெடி பீஸாக்கலாம் என்று திட்டமிட்டவர்களுக்கும் நிச்சயம் ஏமாற்றம்தான்.
பல புதிய அறிவாளிகளை இழந்து விட்டோமே!


No comments:

Post a Comment