Showing posts with label வணிகம். Show all posts
Showing posts with label வணிகம். Show all posts

Tuesday, January 6, 2026

அசிங்கம் மோடிக்கு அல்ல, இந்தியாவிற்கு

 


"மோடி நல்ல மனுசன்தான், நல்ல பையன்தான். நான் கோபமா இருக்கேன்னு தெரியும். அதனால் என்னை குஷிப்படுத்த ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்யை படிப்படியா குறைச்சுட்டான்"

இது டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பத்திரிக்கையாளர்களிடம் பேசியது.

"ஆமாம் அது உண்மைதான். அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் வினய் காத்ரா, நீங்கள்தான் உங்கள் ஜனாதிபதியிடம் எப்படியாவது மத்யஸ்தம் செய்து கூடுதல் வரி விதிப்பு 25 % ஐ நீக்கச் சொல்ல வேண்டும். அவர் சொன்னது போலவே ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்வதை குறைத்து விட்டோம்."

இது அமெரிக்க செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரஹாம் அதே பத்திரிக்கையாளர் சந்திப்பினல் சொன்னது.

இது பற்றி கருத்து தெரிவிக்க வெளியுறவுத்துறை மறுத்து விட்டதாம். இந்த லட்சணத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பெரிய அப்பாடக்கர் என்று வேறு சங்கிகள் கதையளப்பார்கள்.

ட்ரம்ப் இப்படி மீண்டும் மீண்டும் திமிரோடு பேசுவது மிகப் பெரிய அசிங்கம், 

வெ.மா.ரோ.சூ.சொ இல்லாத மோடிக்கு அது அசிங்கமாக தோன்றாமல் இருக்கலாம். ஆனால் அது இந்தியாவுக்குத்தான் பெரிய அசிங்கம்.

மோடியை பிரதமராக வைத்துள்ளதைத் தவிர பெரிய அசிங்கம் இந்தியாவிற்கு இருக்கிறதா என்று கேட்கிறீர்களா?

அதுவும் சரிதான் 

 

Saturday, September 19, 2020

Paytm அம்பயர்கள் !!!!!

 என் மகன் சொன்ன தகவல் இது.



ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் துவங்கியுள்ளது.

தமிழ் வர்ணனையில்  வர்ணனை செய்பவர் கூறியுள்ளார்.

"அம்பயர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னேன். அடுத்த நொடியே என் காதுக்கு ஓலை வந்து விட்டது. பேடிஎம் அம்பயர்கள் என்று சொல்ல வேண்டும் என்று"

அம்பயர்களுக்கு ஸ்பான்ஸர் பேடிஎம் நிறுவனமாம்.

ஒரு விளையாட்டின் மூலம் முதலாளிகள் எவ்வளவு கல்லா கட்ட முடியுமோ அதற்கான அத்தனை வாய்ப்புக்களையும் தருவதாக ஐ.பி.எல் லை வடிவமைத்துள்ளார்கள். 

இன்னும் எந்த அளவிற்குச் செல்வார்களோ?

Monday, August 8, 2016

பாம்பு வளர்த்தால் பல லட்சம் லாபம்


பாம்பு வளர்ப்பில் மாதம் ஒரு இலட்சம் சம்பாதிக்கலாம்...!

ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு போல் பாம்பு வளர்ப்பும் ஒரு மிகப்பெரிய தொழிலாக தற்போது உருவெடுத்து வருகிறது.

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் ஒரு தொழிலாகவும் கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்துவருகிறது.

‘ சிநேக் இந்தியா பார்ம் ’ என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை:

நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன்.

ஆரம்பத்தில் நிறைய தடுமாற்றங்களை சந்தித்தேன். 

பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன்.

அதை பின்பற்றியதிலிருந்து மாதம் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வருமானமாக பெற முடிகிறது.

இன்று தமிழகம் முழுவதிலும் பலர் இதுபற்றிய விவரங்களை பெற்று பாம்பு பண்ணை தொடங்க ஆலோசனை கேட்ட வண்ணம் உள்ளனர்.

பண்ணை வைக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு எனது பண்ணையிலிருந்தே குட்டிகளை தந்து உதவுகிறேன்.

இதற்கு ஆகும் செலவு

5 ஜோடி பாம்பு குட்டிகள் ரூ.10,000,

25 வெள்ளை எலிகள் (தீவனம்) ரூ.2,000,

கொட்டாய் செலவு ரூ.10,000,

பாம்பு முட்டையை பொரிக்க உதவும் இன்குபேட்டர் ரூ.60,000

ஒரு லட்சம் ரூபாய்க்கும் குறைவான முதலீட்டில் ஆறே மாதங்களில் 5 லட்ச ரூபாய்வரை வருமானம் பெற வாய்ப்பு உள்ளது.

குட்டிகளைத் தேர்வு செய்யும் முறை:

குட்டிகளுக்கு பார்வைத் திறனும், கேட்கும் திறனும் உள்ளதா, நல்ல கடிக்கும் திறன் உள்ளதா என கவனித்து வாங்க வேண்டும்.
3 மாதத்துக்கு மேல் உள்ள குட்டிகளை தேர்வு செய்வதே புத்திசாலித்தனம்.
ஏனென்றால் அப்போதுதான் அவை அதிகமாக இறக்காது.
குட்டிகளை வெயில் படாத இடமாக பார்த்து வளர்க்க வேண்டும்.
5 ஜோடி பாம்புகள் வளர்ந்த பின் ஒவ்வொரு ஜோடியில் இருந்தும் மாதத்துக்கு 200 மில்லி விஷம் கிடைக்கும்.

1 லிட்டர் பாம்பு விஷத்தின் இன்றைய சர்வதேச விலை ரூ.1 லட்சம்.

ஒவ்வொரு பாம்பும் தன் வாழ்நாளில் 20 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும். 

இந்த ஐந்து ஜோடி பாம்புகளே 200 லிட்டர் விஷத்தை உற்பத்தி செய்யும்.
இதன் மூலம் 2 கோடி ரூபாய் வரை சம்பாதிக்கலாம்.

மேலும் ஒவ்வொரு ஜோடி பாம்பும் மூன்று மாதத்துக்கு ஒருமுறை 30 முட்டைகள் வரை இடும்.
அவற்றை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தால் வருடத்துக்கு 4 முறை என்று ஆண்டொன்றுக்கு 600 பாம்பு குட்டிகள் கிடைக்கும்.

அவற்றை விற்பனை செய்வதன் மூலம் ரூ.60 லட்சம் சம்பாதிக்கலாம்.

கேட்கவே தலை சுற்றுகிறதா?
இது தவிர பாம்பின் தோல், மாமிசம் ஆகியவற்றையும் நல்ல விலைக்கு விற்கலாம்.

ஆகவே குறைந்த முதலீட்டில் நிறைந்த லாபத்தை பெற எங்களை அணுகுங்கள்.
நிறைய பணத்தை அள்ளுங்கள்.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
S.வரதராஜ்,

A12/219,விவேகானந்தர் தெரு,

துபாய் குருக்கு சந்து,

துபாய் மெயின்ரோடு,

துபாய்.

(ஸ்ஸப்ப்பாப்ப்ப்பபா... உங்களை நம்ப வைக்க எவ்வளவெல்லாம் எழுத வேண்டி இருக்கு.

" சதுரங்கவேட்டை " படத்தை பாத்துட்டுமா இன்னும் இந்த கதையை சீரியஸா படிச்சிட்டு இருக்கீங்க....
இப்படி ஒரு புருடா விட்டாலும் பணத்தை கொண்டு வந்து கொட்ட ஒரு பேராசை பிடித்த கூட்டமே இருக்கு)

பின்குறிப்பு:

ஒட்டக முட்டையை பொரிப்பது பற்றி அடுத்த கட்டுரை வெளியாகும்.
அதையும் தெரிந்துகொண்டு லட்சக்கணக்கில் பணத்தை அள்ளுங்கள்.

அப்ரம் வரட்டா.
எனக்கு நிறைய ஜோலி இருக்கு.....
முக்கியமான பின் குறிப்பு:
வாட்ஸப்பில் வந்தது இது. சுவாரஸ்யம் குறையக் கூடாது என்பதற்காக சதுரங்க வேட்டை படத்தை முதலில் போடாமல் கடைசியில் போட்டுள்ளேன். நாளை ஒரு சீரியஸான பதிவு வருகிறது. ஆமாம் ஜெயமோகன் மேட்டர்தான். அது வரை கொஞ்சம் சிரித்துக் கொள்ளுங்கள்.

Tuesday, April 21, 2015

அட்சய திருதியையும் ஆடித் தள்ளுபடிகளும்




கடந்த சில வருடங்களாகத்தான் ஆடித் தள்ளுபடி விற்பனையும் அட்சய திருதியை விற்பனையும் கொடி கட்டிப் பறக்கிறது.

ஆடித் தள்ளுபடி விற்பனை என்பதிலாவது சிறு நேர்மை இருப்பதாகக் கருதுகிறேன். திருமணக் காலம் இல்லாத ஆடி மாதத்தில் மந்தமாக இருக்கும் விற்பனையை வேகப் படுத்துவதற்காக என்ற காரணத்தை வணிகர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதே போல பழைய ஸ்டாக்கை ஆடித்தள்ளுபடியில் தள்ளி விட்டு விட்டால் தீபாவளி சமயத்தில் புதிய உருப்படிகளை விற்க முடியும் என்பதும் இதில் உள்ளது. வியாபாரம் என்பதைத் தவிர ஆடித் தள்ளுபடிக்கு எந்த புனித வண்ணமும் பூசப் படுவதில்லை. விலை உயர்த்தி தள்ளுபடி செய்வார்கள் போன்றவை வேறு விஷயம்.

ஆனால் அட்சய திருதியைக்கு சொல்லப்படுகிற காரணங்கள் இருக்கிறதே அதுதான் ரொம்ப ஓவர்.

கொஞ்சம் பட்டியல் பார்க்கலாமா?

எல்லா கதைகளும் மிகப் பெரிய கதையான மகாபாரதத்தின் உப கதைகள்தான்.

அன்றுதான் வியாசர் மகாபாரதம் எழுத ஆரம்பித்தார்.

அன்றுதான் சூரியன் தருமனுக்கு அட்சயப் பாத்திரம் கொடுத்தார்.

வறுமையிலிருந்த குசேலன் கொண்டு வந்த ஒரு பிடி அவலை வாங்கி அவரை கிருஷ்ணன் பணக்காரனாக மாற்றிய நாள்.

கௌரவர் சபையில் பாஞ்சாலி துகிலுரியப்பட்ட வேளையில் கிருஷ்ணன் புடவை கொடுத்த நாள்.

இவற்றைத் தவிர கங்கை பூமிக்கு வந்த நாள், பரசுராமர் பிறந்தநாள் போன்ற பில்ட் அப்களும் உண்டு.

அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் நமக்கு நல்லது, தங்கம் பெருகும் என்ற மாயையை உருவாக்கி நகைக்கடைகளில் கூட்டத்தை கூட்டி விட்டார்ர்கள்.

எத்தனை விளம்பரங்கள், எத்தனை தொலைபேசி அழைப்புக்கள், குறுஞ்செய்திகள், வழவழப்பு காகிதத்தில் பல வண்ணத்தில் அச்சடித்த பிரசுரங்கள், கடிதங்கள் என்று நம்முடைய தங்கத்தின் இருப்பை அதிகரிக்க வேண்டும் என்று நகைக்கடைக்காரர்கள் நம் மீது எவ்வளவு கரிசனமாக இருக்கிறார்கள்!

சிறு வயதில் புத்தகங்களின் பக்கங்களுக்கு இடையில் மயிலிறகு வைத்தால் அது குட்டி போடும் என்று நம்பினோம். அது போன்றதொரு நம்பிக்கையை   அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால்  அது அதிகரிக்கும் என்று நகைக்கடைக்காரர்கள் உருவாக்கி விட்டார்கள்.

சிறு வயதில் ஏமாந்தால் தவறில்லை.