Wednesday, April 15, 2020

அரசின் கடமைகள் என்ன மோடி?



மக்களுக்கு 7 கடமைகள்... அரசாங்கத்திற்கு என்ன கடமை?

பிரதமர் நரேந்திரமோடிக்கு சீத்தாராம் யெச்சூரி கேள்வி

புதுதில்லி, ஏப்.14- மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நாட்டு மக்கள் பின்பற்றுவதற்காக 7 கடமைகளை அறிவித்தள்ளார்: ஆனால் மக்களை காப்பதற்கு அரசாங்கம் என்ன கடமைகளை ஆற்றப் போகிறது என்பதை அவர் கூறவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செய லாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார்.

செவ்வாயன்று பிரதமர் நரேந்திரமோடி உரைக்குப் பின்னர் தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏ.கே.கோபாலன் பவனிலிருந்து இணையதளம், சமூக ஊடகங்கள் வாயிலாக செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, கடந்த 3 வார சமூக முடக்க காலத்தில், மிக நீண்ட தூரம் நடந்தே பயணிக்க வேண்டிய நிலைமை, பல பகுதிகளில் உள்ள ஏழை மக்களுக்கு உரிய உதவிகளை செய்யாதது, வேலையிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 339 பேரின் உயிர் பறிக்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டார்.மேலும் அவர் கூறியதாவது:

அரசு என்ன செய்யப் போகிறது?

நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக அமல் படுத்தப்பட்டு வந்த சமூக முடக்கம் ஏப்ரல் 14 உடன் முடிவுக்கு வரும் நிலையில், இதனால் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த ஏழைகள், விளிம்பு நிலை மக்கள் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இதனால் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் உரிய நிவாரண நடவடிக்கைகளை எடுத்திடும் என்று ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார்கள்.

பிரதமர் தன்னுடைய தொலைக்காட்சி உரையில், சமூக முடக்கத்தை மேலும் விரிவாக்கி விட்டு அக்காலத்தில் மக்கள் அமல்படுத்த வேண்டிய பணிகள் என்னென்ன என்று ஏழு கடமை களைப் பட்டியலிட்டிருக்கிறார். எனினும், இது தொடர்பாக அரசாங்கம் என்ன செய்ய இருக்கிறது என்று துல்லியமாக அவர் எதையும் கூற வில்லை.

சமூக முடக்கத்தின் கடந்த மூன்று வார கால அனுபவங்கள், நம் நாட்டு மக்களில் கணிசமானவர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பசி-பஞ்சம்-பட்டினி பரவியிருக்கிறது என்பதையே காட்டியிருக்கின்றன. வருமான வரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் கருணைத் தொகையாக 7500 ரூபாய் உடனடியாக அளித்திட வேண்டியதும், அனைவருக்குமான பொது விநி யோக முறையில் அத்தியாவசியப் பொருள்களை அனைத்துத் தேவைப்படும் மக்களுக்கும் அளிக்க வேண்டியதும் கட்டாயமாகும். சமூக முடக்கத்தால் பட்டினிச் சாவுகள் ஏற்படாத நிலையை மத்திய அரசாங்கம் உத்தரவாதப்படுத்திட வேண்டும்.

இதுவரை 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பில் அறிவித்திருப்பது மிகவும் குறைவாகும். இந்தத்தொகை நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதத்திற்கும் குறைவேயாகும். உலகின் பல நாடுகள் இத் தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்பதற்காகக் கணிசமாள அளவிற்கு நிதித் தொகுப்பினை அளித்திருக்கின்றன. இந்தியா, குறைந்தபட்சம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாவது இதற்காக செலவிட வேண்டும். நிதியமைச்சர் சில பிரிவினருக்கு உத்தரவாதம் அளித்த ரொக்க டெபாசிட் கூட அனைவருக்கும் போய்ச் சேரவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மாநிலங்கள் முன்னணியில் இருக்கின்றன. அவைகளுக்கு நிதியளித்து உதவிட வேண்டியது தேவை. மாநிலங்களுக்குத் தாரா ளமாக நிதி உதவியினைச் செய்திட வேண்டும். அப்போதுதான் அவற்றால், நிவாரண முகாம் களில் முறையான வசதிகள் செய்து தருவதற்கும், அங்கே தங்கியிருக்கும் கோடானு கோடி மக்க ளுக்கு உணவு அளித்திடவும் முடியும். மாநிலங்களுக்கு அளிக்கப்படும் கடன் (borrowings) உச்சவரம்பை உயர்த்திட வேண்டும்.

வேலை இழப்புகள் ஏராளம்

எந்தத் தொழிலாளரும் வேலைநீக்கம் செய்யப் படக் கூடாது என்று பிரதமர் வேண்டுகோள் விடுத்தி ருக்கிறார். ஆனால், வெறும் வேண்டுகோள்கள் போதுமானதல்ல. நாடு முழுதும் மிகப்பெரிய அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வேலை இழப்புகள் மீதும் மூன்று மாதங்களுக்கு ஊதிய வெட்டு செய்யப்படாமலும் இருந்திட கால நீட்டிப்பை உத்தரவாதம் செய்திட,  தேவையான நிதி உதவியைச் செய்திட வேண்டும்.

இது அறுவடைக் காலம். அரசாங்கம், விவ சாயிகளுக்கு, அவர்களின் உற்பத்திச் செலவினத்தோடு ஒன்றரை மடங்கு விலை நிர்ணயித்து அவர்களிடமிருந்து கட்டாயமாகக் கொள்முதல் செய்வதை உத்தரவாதப்படுத்திட வேண்டும். மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் வேலை இல்லை  என்பது மிகவும் சங்கடமான ஒன்று. இச்சட்டத் தின்கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கிற அனை வருக்கும் – அவர்கள் வேலை செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும்சரி – அவர்களின் ஊதியங்கள் அளிக்கப்பட வேண்டும்.

பரிசோதனை எங்கே?

சமூக முடக்கக் காலத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டு இத்தொற்று எங்கே அதிகமான அளவில் இருக்கிறது என்று அடையாளம் கண்டு, அந்தப் பகுதியைத் தனிமைப்படுத்திட வேண்டும். சோதனை செய்வது என்பது உலகிலேயே நம் நாட்டில் மிகவும் குறைவான அளவிலேயே இருக்கிறது.

உரிய பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப் படாததால், நம் மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் கடுமையாகப் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விஷயமாகும். கடந்த மூன்று வாரங்களில் இவர்களுக்கு உரிய அளவில் உபகரணங்கள் அளிக்கப்படவில்லை. சோதனை செய்யப்படுவதும், இவர்களுக்கு உரிய அளவில் பாதுகாப்பு உபகரணங்கள் அளிக்கப்படுவதும் போர்க் கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண் டும். 

கொரோனா வைரஸ் தொற்றையும் கூட சிலர் சமூக மற்றும் மதவெறித் தீயை விசிறிவிடுவதற்காக முயற்சிகள் மேற்கொண்டிருப்பதைக் கண்டித்திட பிரதமர் முன்வராதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இதுபோன்ற சீர்குலைவு முயற்சிகள் ஏற்படாது என்று அரசாங்கம் உத்தர வாதம் அளித்திட வேண்டும். கொரோனா வைரஸ் தொற்றுக் எதிரான போராட்டத்தை, நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டுத்தான் முறியடித்து வெற்றி பெற முடியும்.

அரசாங்கம் ஏப்ரல் 20 அன்று நிலைமைகளை மறு ஆய்வு செய்திடும் என்றும், அதன் பிறகு தளர்த்துவது சம்பந்தமாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மீளவும் அவர்கள் வீடுகளுக்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதி களைச் செய்து தர வேண்டும்.

இப்பிரச்சனைகள் அனைத்தையும் உடனடியாகப் பரிசீலத்து, தேவையான வழிகாட்டுதல்களைப் பிறப்பித்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கட்சியின் அரசியல் தலைமைக் குழு சார்பிலும் இதுதொடர்பான அறிக்கை வெளி யிடப்பட்டது.

நன்றி - தீக்கதிர் 15.04.2020

No comments:

Post a Comment